என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நடப்பாண்டில் 5வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை:  90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
    X

    நடப்பாண்டில் 5வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை: 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

    • இந்தாண்டில் முதல் முறையாக ஜுன் மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
    • 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது.

    இதையடுத்து இந்த அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் முதல் முறையாக ஜுன் மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.

    பின்னர் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இதன் அடிப்படையில் மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக ஜூலை 5-ந்தேதியும், 3-வது முறையாக ஜூலை 20-ந்தேதியும் 4-வது முறையாக ஜூலை 26 ஆம் தேதியும் நிரம்பியது.

    இந்நிலையில், ஒகேனக்கல் காவேரி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று காலை நடப்பாண்டில் 5-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

    இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×