search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "H Raja Hydrocarbon project"

    தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்ள தி.மு.க. மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பது சரியல்ல என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். #BJP #HRaja #HydroCarbon
    மன்னார்குடி:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன் ஆகியோர் வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பூத்கமிட்டி அமைக்கும் பணி ஆலோசனை வழங்கினர். இன்று 2-வது நாளாக ஒரத்தநாடு தொகுதியில் ஆய்வு நடத்தினர். பின்னர் இருவரும் மன்னார்குடிக்கு வந்தனர்.

    அப்போது பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமரின் தனிநபர் கழிவறை, இலவச கேஸ் இணைப்பு, இலவச வீடு கட்டும் திட்டம், பயிர்கடன் திட்டம், மருத்துவ காப்பீடு ஆகிய திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை ரூ.2.50 மத்திய அரசு குறைத்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் குறைக்கவேண்டும்.

    இந்து கோவில்களின் வருமானத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லை. வருமானத்தில் 18 சதவீதம் தான் தொகுப்பூதியமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மீதி தொகையை வருமானமில்லாத நலிவுற்ற கோவில்களின் வளர்ச்சிக்காக செலவிடவேண்டும்.

    தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மேற்கொள்ள தி.மு.க. மற்றும் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்ப்பது சரியல்ல. ஹைட்ரோ கார்பன் எடுக்க டி.போர்வெல் என்ற முறையில் எடுக்க அனுமதித்துள்ளது. இதனால் நிலத்தடிநீர் குறைவதற்கோ, விவசாயம் பாதிக்கும் என்றோ அச்சப்பட தேவையில்லை.திருமுருகன் காந்தியை ஸ்டாலின் சந்தித்தது சரியல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #HRaja #HydroCarbon
    ×