search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake Aadhaar"

    • சார்பதிவாளர் முத்து மாரியப்பன் விண்ணப்பத்தில் உள்ள வாரிசு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்களை இணையத்தில் சரி பார்த்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் முத்துராஜ் என்பவரின் சொத்துகளை அவரது மனைவி பொன்செல்வி (வயது55) என்பவர் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு விண்ணப்பம் வந்திருந்தது.

    பெயர் மாற்றம்

    சார்பதிவாளர் முத்து மாரியப்பன் விண்ணப்பத்தில் உள்ள வாரிசு சான்றிதழ் மற்றும் ஆதார் எண்களை இணையத்தில் சரி பார்த்தார். அப்போது பத்திரப் பதிவுக்காக குறிப்பிட ப்பட்டிருந்த முத்துராஜின் மகள் பாலசவுந்தரி என்பவரின் ஆதார் எண்ணை சரிபார்த்ததில் அதில் வேறொருவரின் பெயர் வந்தது.

    போலி ஆதார்

    இதனால் சந்தேகம் அடைந்த சார் பதிவாளர் நடத்திய விசாரணையில், பாலசவுந்தரிக்கு பதிலாக முப்புலிவெட்டியை சேர்ந்த நட்டார் மனைவி ஒளி முத்தம்மாள் என்பவரை அழைத்து வந்தது தெரிந்தது.

    இதையடுத்து சார்- பதிவாளர் அளித்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )சுதேசன், சப்- இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதில் போலி ஆதார் கார்டு மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற புதியம்புத்தூர் மேல மடத்தை முத்துராஜ் மனைவி பொன் செல்வி, அவரது மகன் சுமன்ராஜ், தூத்துக்குடி சேர்ந்த முத்துராஜா மனைவி சசி பாலா (28), பத்மநாபன் மனைவி பொன்சுமதி, புதியமுத்தூர் மேல மடத்தைச் சேர்ந்த பொன்னுத்தாய் (75), முப்புலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் மனைவி ஒளி முத்தம்மாள் (39) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ×