search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "extorted"

    • பிரகாஷ் டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவர் ரத்தினபுரியில் உள்ள டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது பாருக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பிரகாஷிடம் மதுபாட்டில் வாங்கி வரும்படி கூறினர். அதற்கு அவர் டாஸ்மாக் கடை திறந்தால் தான் மது கிடைக்கும் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி மிரட்டி பிரகாஷிடம் இருந்த ரூ. 200 பணத்தை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் பார் காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற கண்ணப்ப நகரை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (30), லிங்கபூபதி (23), காமாட்சி நகரை சேர்ந்த விக்னேஷ்வரன் (26) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • 3 பேரும் சேர்ந்து ஜூஸ் குடித்து, தர்பூசணி பழங்களை வாங்கினர்.
    • நடன ஆசிரியர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

    கோவை,

    கோவை சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவர் சரவணம்பட்டி- காளப்பட்டி ரோட்டில் கரும்பு ஜூஸ் மற்றும் தர்பூசணி பழ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து ஜூஸ் குடித்தும், பழங்கள் வாங்கியும் முழு பணத்தை தராமல் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று மீண்டும் கடைக்கு வந்து பழங்கள் வாங்கி பணத்தை தராமல் இருந்தார்.இதனால் சசிகுமார் அவரை கண்டித்து அங்கிருந்து ெசல்லுமாறு கூறினார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த வாலிபர் தனது 2 நண்பர்களை அழைத்து சசிகுமார் கடைக்கு வந்தார்.

    அங்கு 3 பேரும் சேர்ந்து ஜூஸ் குடித்து, தர்பூசணி பழங்களை வாங்கினர். அதற்கான பணத்தை சசிகுமார் கேட்டார். அதற்கு அவர்கள் பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரிடம் இருந்த பணத்தை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து சசிகுமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் கணபதியை வ.உ.சி நகரை சேர்ந்த நடன ஆசிரியர் நித்திஷ்குமார் (21), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருமுருகன் (40) மற்றும் பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த மோகன் பிரசாத் (29) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சரவணம்பட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி சம்பவம் நடந்து வருகிறது.

    இதுகுறித்து போலீசார் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து உள்ளனர்.

    • செல்போன் செயலிகள் மூலம் பணத்தை பறிகொடுத்தவர்கள் 24 மணி நேரமும் புகார் செய்யலாம் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
    • எனிடெஸ்க், டீம் வியுவர் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கடந்த 1 மாதத்தில் மட்டும் சைபர்கிரைம் போலீசார் ரூ.7.10 லட்சம் மதிப்பு உடைய 50 மொபைல் போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.1.16 கோடி மதிப்பு உடைய 827 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வழங்கினார். மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களின் வங்கி விபரங்களை தெரிந்து கொண்டு நூதன முறையில் நடந்த திருட்டு வழக்குகளில், இதுவரை ரூ.32 லட்சம், பாதிக்கப்பட்டோரின் வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்தப்பட்டு உள்ளது.

    வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றுவோரிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் வங்கிகணக்கு எண், சி.வி.வி. மற்றும் ஒ.டி.பி. போன்ற விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். வேலைவாய்ப்பு செயலிகள், முதலீட்டு மென்பொருட்கள் ஆகியவை தரும் வாக்குறுதியை நம்பி முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

    அதிக வட்டி தரும் ஆன்லைன் கடன் செயலிகளிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். வங்கிகளில் இருந்து வரும் வீடியோகாலை ஏற்க வேண்டாம். செல்போனில் அப்டேட் செய்யும்படி வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.

    தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் எனிடெஸ்க், டீம் வியுவர் போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். யாரேனும் மேற்கண்ட வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 என்ற இலவச போன் நம்பருக்கும், https://www.cybercrime.gov.in இணையதள முகவரியிலும் 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×