search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "engineer home"

    • மதுரையில் என்ஜினீயர் வீட்டில் 23 பவுன் நகைகள் கொள்ளை போனது.
    • திலகர் திடல் போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை

    மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் மனோஜ் (வயது 24). பொறியியல் பட்டதாரி. மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு முதல் மாடியில் மனோஜ் குடும்பத்தினர் தூங்கினர். அப்போது மர்மநபர்கள் வீடுபுகுந்து பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டனர்.

    மனோஜ் காலை எழுந்து வந்து பார்த்த போது பீரோவில் இருந்த நகைகளை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திலகர் திடல் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காரமடை அருகே பட்டப்பகலில் கடப்பாரையால் கதவை பெயர்த்து என்ஜினீயர் வீட்டில் 19 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    காரமடை:

    காரமடை புத்தூர் மூனுகட்டியூர் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 35). இவர் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் என்ஜினீயராக உள்ளார்.

    நேற்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட்கள் வாங்கிய பின்னர் வீட்டுக்கு மாலை புறப்பட்டனர்.

    வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு பெயர்த்து எடுக்கப்பட்டு திறந்த கிடந்தது. அதிர்ச்சியடைந்த கோபால்சாமி உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 2 கைக்கடிகாரங்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. இது தவிர அவரது தம்பி மோகனசுந்தரம் என்பவரது வீட்டில் லேப்- டாப், கேமிரா, செல்போன் உள்ளிட்ட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் கொள்ளை போனது.

    இது குறித்து கோபால்சாமி காரமடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு மேப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் வந்து விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் கதவை கடப்பாரையால் பெயர்த்து எறிந்து கொள்ளைடிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததது.

    கோபால்சாமி குடும்பத்துடன் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிக்கலாம் என்று போலீசார் கூறினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    என்ஜினீயர் வீட்டை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கருப்பாயூரணி மீனாட்சி காட்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி செல்வராணி (வயது 33). ரவிக்குமார் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 1-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு தேனிக்குச் சென்றனர். நேற்று வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து 10 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகுமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    ×