search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ducati India"

    • சிறப்பு சலுகை பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும்.
    • இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு குறுகிய காலத்திற்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 10-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி டுகாட்டி ஃபிளாக்ஷிப் அட்வென்ச்சர் டூரர் மாடலான, மல்டிஸ்டிராடா வி4 மற்றும் பனிகேல் வி4 சார்ந்த ரோட்ஸ்டர் மாடல், ஸ்டிரீட்ஃபைட்டர் வி4 மாடல்களுக்கு ரூ. 4 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர மான்ஸ்டர், ஸ்டிரீட்ஃபைட்டர் வி2 மற்றும் மல்டிஸ்டிராடா வி2 போன்ற மாடல்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

     

    இத்தாலி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தியாளர் டுகாட்டி, இந்த பலன்கள் அனைத்தும் ஸ்டோர் கிரெடிட் ஆக சேர்க்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில், பயனர்கள் இந்த தொகையை கொண்டு டுகாட்டி ஆடை, பயனர் வாங்கும் மோட்டார்சைக்கிளுக்கான அக்சஸரீக்களை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என்று டுகாட்டி இந்தியா அறிவித்து இருக்கிறது. சமீபத்தில் தான் டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது மான்ஸ்டர் எஸ்பி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 15 லட்சத்து 95 ஆயிரம் என்று துவங்குகிறது. இது அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட ரூ. 3 லட்சம் வரை அதிகம் ஆகும்.

    டுகாடி இந்தியா சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்த பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிளில் அதிரடி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. #ducati #bike



    டுகாடி இந்தியா நிறுவனம் தனது புதிய ரக மோட்டார்சைக்கிள் பேனிகேல் வி-4 ஆர் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புது டுகாடி பேனிகேல் வி-4 ஆர் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடலாகும். இந்தியாவில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வெறும் ஐந்து யூனிட்களே வழங்கப்படுகின்றன.

    ரேசிங் பைக் மாடலான டுகாடி பேனிகேல் வி-4 ஆர் 998 சி.சி. திறன் கொண்டது. இதில் வி-4 மோட்டார் பம்ப் உள்ளது. இது 221 ஹெச்.பி. மற்றும் 15,250 ஆர்.பி.எம். மற்றும் 112 என்.எம். (நியூட்டன் மீட்டர்) 11,500 ஆர்.பி.எம். செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது.

    இந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக மோட்டோ ஜி.பி. என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரேடியல் மவுன்ட் செய்யப்பட்ட நான்கு பிஸ்டன் பிரெம்போ கேலிபர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மோட்டார்சைக்கிளில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.



    இதில் ஏ.பி.எஸ்., மல்டி லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல், லாஞ்ச் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவிலான மின்னணு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பந்தய மைதானத்துக்கான இந்த மோட்டார் சைக்கிளை சாதாரண சாலையில் ஓட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்தய களத்தில் மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் டுகாடி பேனிகேல் வி-4 ஆர் சீறிப் பாயலாம்.

    இந்தியாவில் டுகாடி பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ.51.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி, மும்பை, பூனே, சென்னை, ஆமதாபாத், பெங்களூரு, கொச்சி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட விற்பனை மையங்களில் பேனிகேல் வி-4 ஆர் மோட்டார்சைக்கிள் முன்பதிவு செய்யப்படுகிறது.

    டுகாட்டி பேனிகேல் வி-4 ஆர் விநியோகம் அடுத்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என டுகாடி இந்தியா தெரிவித்துள்ளது.
    ×