search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caraccident"

    • 4-வது விபத்தால் மக்கள் அச்சம்
    • வேகத்தடைகளை 2 கார் டிரைவர்களும் கவனிக்கவில்லை

    கோவை:

    கோவை-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

    ஏற்கனவே பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து இறந்தனர்.இதனால் மேம்பாலம் தற்காலிகமாக முடப்பட்டு விபத்தை தடுப்பதற்கான பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன.

    ஆனால்,வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். தொடர்ந்து 3 பேர் பலியானதால், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் (தடுப்புகள்) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி ரோட்டில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் 2 கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றது.

    அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றபோது அங்கிருந்த வேகத்தடைகளை 2 கார் டிரைவர்களும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது.

    இதனால் திடீரென பிரேக் பிடித்ததில் 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில் காரில் பயணித்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து திருச்சி சாலை மேம்பாலத்தில் 4 விபத்துகள் எற்பட்டுள்ளது. இது கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குஜராத்தில் மாயமான ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் ஒரு கால்வாயில் இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளன. #GujaratCanalAccident
    சூரத்:

    குஜராத் மாநிலம் டாப்பி மாவட்டம் கப்புரா கிராமத்தைச் சேர்ந்த ஜீவன் கமீத்(65), ஷர்மிளா(62), தர்மேஷ்(41), சுனிதா(36), ஊர்வி(6) ஆகியோர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி காணாமல் போனதாக அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

    இந்நிலையில், சூரத் அருகே உள்ள மதி கிராமத்தில் நேற்றிரவு போலீசார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கால்வாய் ஒன்றில் கார் விழுந்து  கிடந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து மீட்புப்படையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர், காரை மீட்டனர். அதில் 5 பேரின் சடலங்கள் மிகவும் அழுகிய நிலையில் இருந்துள்ளன. இதனையடுத்து போலீசார் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது, அவர்கள் குடும்பத்துடன் பர்தோலி பகுதியில் உள்ள கோவிலுக்கு பிரார்த்தனைக்காக சென்றதாகவும்,  திரும்பி வரும்போது இந்த துயரச் சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் உறவினர்கள் கூறியுள்ளனர்.  #GujaratCanalAccident 
    ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயணிகள் வந்த சொகுசு கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். #JKAccident
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சந்திரகோட்டில் இருந்து ராஜ்கார் பகுதிக்கு இன்று காலை ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. அதில் 14 பேர் பயணம் செய்துள்ளனர். ரம்பான் மாவட்டம் குண்டா மோத் பகுதியைக் கடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராத விதமாக, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த வாகனம், 500 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்தது.

    இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார், மீட்புப்படையினருடன் விரைந்தனர். இவ்விபத்தில் 2 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேலும் 3 பேர் படுகாயமுற்றனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். #JKAccident

    டெல்லியில் சொகுசு கார் ஒன்றின் மீது குப்பைத்தொட்டி தவறி விழுந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #DelhiAccident
    புதுடெல்லி:

    டெல்லியின் ரோகிணி பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அருகில் சொகுசு காரில் சுமித்(29), அவரது தாயார்  ரித்து (59), மனைவி ருச்சி(27) மற்றும் சுமித்தின் வயது 3 மகன் ஆகியொர் சென்றுகொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக குப்பை வண்டி ஒன்றில் இருந்த குப்பைத்தொட்டி சாலையில் சென்றுக் கொண்டிருந்த இவர்கள் காரின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து நேற்றிரவு 1 மணி அளவில் நடைபெற்றது.

    இந்த விபத்தில் சுமித், ருச்சி மற்றும் ரித்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமித்தின் மகன் கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    விபத்து ஏற்பட்டதும் குப்பை வண்டியின் ஓட்டுனர் தப்பி சென்றுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக அந்த ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் கமிஷ்னர் எஸ் டி மிஷ்ரா தெரிவித்துள்ளார்.  #DelhiAccident

    ×