search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bishop"

    ஜலந்தர் பி‌ஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #KeralaNuns #bishop
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் அங்குள்ள கான்வென்டில் பணிபுரிந்து வருகிறார்.

    அவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அதே கான்வென்டில் பணிபுரியும் 5 கன்னியாஸ்திரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த பி‌ஷப்பை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து பி‌ஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

    இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் 5 பேரும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அந்த கன்னியாஸ்திரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை ஏற்க மறுத்துவிட்டனர். தங்களை பழிவாங்கவும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நெருக்கடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    இதனால் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கன்னியாஸ்திரிகளுக்கு ஜலந்தர் திருச்சபை தலைவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகளில் ஒருவரான நீனா ரோஸ், திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும், திருச்சபை மரபை மீறி செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார். வருகிற 26-ந் தேதிக்குள் ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க தலைவரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறி உள்ளார்.

    இதற்கிடையே இடமாற்றம் செய்யப்பட்ட 5 கன்னியாஸ்திரிகளும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு ஏற்கனவே பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். அதேபோல பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான கன்னியாஸ்திரியும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.  #KeralaNuns  #bishop
    கேரள மாநிலத்தில் பிராங்கோ முல்லக்கல்லை கைது செய்ய வலியுறுத்தி போராடிய கன்னியாஸ்திரி மீது தேவாலயம் எடுத்திருந்த ஒழுங்கு நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. #Kerala #KeralaNun
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

    பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, சமீபத்தில் கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டு தற்போது அக்டோபர் 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    பாதிரியார் கைது செய்யப்பட்ட உடனே, கன்னியாஸ்திரிகளின் காலவரையற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இதையடுத்து நேற்று காலை கொச்சியில் இருந்து வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்திருந்தது. எந்த வித எழுத்துப்பூர்வ அறிவிப்பும் இன்றி வாய்மொழியாக தன்னை தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என நிர்வாகம் தெரிவித்ததாக லூசி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்தது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரி லூசி கலப்புரா மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தேவாலய நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. #Kerala #KeralaNun 
    கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து கோட்டயம் பாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. #BishopFrancoMulakkal
    கோட்டயம்:

    கேரள மாநில கன்னியாஸ்திரி கற்பழிப்பு தொடர்பாக பேராயர் பிராங்கோ முல்லக்கல் (வயது 54) கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பாலாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். அதேநேரம் பேராயருக்கு ஜாமீன் கேட்டு அவரது வக்கீல்களும் முறையிட்டனர். இதில் பேராயரை ஜாமீனில் விட மறுத்த நீதிபதி, அவரை 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இந்தநிலையில்,  பேராயரின் 2 நாள் போலீஸ் காவல் இன்று  மதியத்துடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிராங்கோவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டித்து  உத்தரவிட்டது. இதையடுத்து பாலா நகரில் உள்ள சிறைச்சலையில் அவர் அடைக்கப்பட உள்ளார்.

    இதற்கிடையே கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. #BishopFrancoMulakkal
    கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியாரை கைது செய்ய வலியுறுத்தி போராடிய கன்னியாஸ்திரியை மீண்டும் பணியில் சேர்க்க வயநாடு தேவாலயம் மறுப்பு தெரிவித்துள்ளது. #Kerala #KeralaNun
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவரை பிராங்கோ முல்லக்கல் என்ற பாதிரியார் 13 முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியின் புகாரை ஏற்று பாதிரியாரை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

    பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கன்னியாஸ்திரிகள் பலர் கேரள உயர்நீதிமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சமீபத்தில் கேரள பாதிரியார் கைது செய்யப்பட்டு 3 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



    இதையடுத்து கன்னியாஸ்திரிகளின் காலவரையற்ற போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் கலந்துகொண்ட கன்னியாஸ்திரிகளில் ஒருவரான லூசி கலப்புரா, வயநாடு மாவட்டத்தில் உள்ள சிரோ மலபார் கதோலிக்க தேவாலயத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இதையடுத்து இன்று காலை கொச்சியில் இருந்து வயநாடுக்கு வந்த கன்னியாஸ்திரி லூசியை தேவாலய பணிகளில் ஈடுபட வேண்டாம் என சர்ச் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக கன்னியாஸ்திரி லூசி, எந்த வித எழுத்துப்பூர்வமான அறிவிப்பும் அளிக்காமல், காரணங்களும் சொல்லாமல், தேவாலய பணிகளில் ஈடுபட கூடாது என வாய்மொழியாக மட்டுமே கூறி, தம்மை வெளியேற்றிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    தேவாலய நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. #Kerala #KeralaNun 
    கேரளாவில் கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான பிராங்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிஷப்பாக இருந்த பிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் புகார் கூறினார்.

    கன்னியாஸ்திரியின் பாலியல் புகார் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கோட்டயம் போலீசார் முன்னிலையில், 19-ம் தேதி ஆஜராகினார். வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என பிராங்கோ கூறியதாக தகவல்கள் வெளியானது.

    பாலியல் புகாரில் சிக்கியது தொடர்பாக பிராங்கோ முல்லக்கல் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார் என வாடிகன் சபை அறிவித்திருந்து.

    தொடர்ந்து மூன்று நாளாக பிராங்கோ முல்லக்கலிடம் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். எர்னாகுளாத்தில் கைது செய்யப்பட்ட அவர், கோட்டயம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது பிராங்கோ முல்லக்கல் தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக போலீசாரிம் கூறினார்.



    இதைத்தொடர்ந்து, சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோட்டயம் அழைத்துச் செல்லப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    நீதிமன்ற விசாரணையின்போது, பிரான்கோ முல்லக்கல்லின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, அவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.. #KeralaNun #FrancoMulakkal #Kerala
    கன்னியாஸ்திரி பிஷப் மீது கற்பழிப்பு புகார் கூறியதால் சட்டப்பூர்வ விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று போப் ஆண்டவருக்கு பிஷப் கடிதம் அனுப்பியுள்ளார். #Keralanun #Jalandharbishop

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, ஜலந்தரில் பி‌ஷப்பாக பணியாற்றி வரும் பிராங்கோ முல்லக்கல் மீது கற்பழிப்பு புகார் கூறி உள்ளார். அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால் அவர் அதுபற்றி போலீசில் புகார் செய்தார். மேலும் போப் ஆண்டவர் அலுவலகத்திற்கும் பி‌ஷப் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடிதம் எழுதினார்.

    இதைதொடர்ந்து ஜலந்தர் பி‌ஷப்பை விசாரணைக்கு வருகிற 19-ந்தேதி ஆஜராகும் படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இதுபற்றி பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல் கூறும்போது தன்மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணைக்கு அஜராகி தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என்றார். மேலும் அவர் தனது பி‌ஷப் பொறுப்புகளையும் மூத்த பாதிரியாரிடம் ஒப்படைத்துள்ளார்.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல், வாடிகனில் உள்ள போப் ஆண்டவருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் எந்த தவறும் செய்யவில்லை. என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து பி‌ஷப் பொறுப்பில் இருந்து விலகி பொறுப்புகளை ஒப்படைத்து உள்ளேன். சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க நான் முடிவு செய்துள்ளேன். அதன்படி 19-ந்தேதி நடைபெறும் போலீஸ் விசாரணையில் பங்கேற்க உள்ளேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் 5 கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டுள்ளதால் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவும் பெருகி வருகிறது. கிறிஸ்தவ அமைப்புகள், இந்து, முஸ்லிம் அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். பாதிரியார்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நேற்று கொச்சி பகுதியை சேர்ந்த திரளான மாணவ, மாணவிகள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். தேவைப்பட்டால் சாலைக்கு வந்து போராடவும் தாங்கள் தயார் என்று மாணவர்கள் அறிவித்தனர்.

    மேலும் சமூக சேவகி கவுரி அம்மா நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்றார். அவர் கூறும்போது கேரள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கன்னியாஸ்திரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களை பற்றி என்ன கூறுவது? பி‌ஷப்பை கைது செய்வதில் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. இதற்காக பொதுமக்களை திரட்டி போராடுவோம் என்றார். இன்றும் உண்ணா விரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பாலியல் புகார் கூறி உள்ள கன்னியாஸ்திரியின் சகோதரி தலைமை தாங்கினார். பலரும் திரண்டு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். #Keralanun #Jalandharbishop

    கேரள மாநிலம் கோட்டையம் காவல்நிலையத்தில் கிறிஸ்தவ பிஷப் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, கேரள மாநிலம் கோட்டயம் காவல்நிலையத்தில் பிஷப் ஒருவர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கன்னியாஸ்திரியை பணியிடமாற்றம் செய்ததால் தம்மை பழிவாங்கும் நோக்கில் கன்னியாஸ்திரி தம் மீது புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாஸ்திரி மீது பிஷப் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Kerala
    ×