என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ban extend"

    • பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இரு நாடுகள் இடையே மோதல் வெடித்தது.
    • இந்த மோதல் இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டியது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து மே 7-ம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

    இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பும் ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்த மோதல் இருதரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவை எட்டியது.

    இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வான்பரப்பை பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 24-ம் தேதி வரை தடை விதித்தது. இந்த தடை ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, இந்திய வான்பரப்பிற்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைய அடுத்த மாதம் 24-ம் தேதி வரை தடை விதித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    • குட்கா, பான் மசாலா தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
    • உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.

    உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாக கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமல்படுத்தியது.

    இந்த தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், குட்கா, பான் மசாலா மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    2026ம் ஆண்டு மே 23 வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு ஆணையர் புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார்.

    • இந்த அமைப்பு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
    • நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு மீதான தடையை உள்துறை அமைச்சகம் நீடித்தது.

    புதுடெல்லி:

    காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்பு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது குரல் எழுப்பி வருகின்றனர்.

    பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை சட்டத்துக்குப் புறம்பான அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அத்துடன், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

    இதற்கிடையே, நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடை வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    ×