என் மலர்

  நீங்கள் தேடியது "assam flood"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
  • நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு வலியுறுத்தல்.

  அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலரது உயிரை எடுக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரையில் நீடிக்கிறது.

  ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது .

  இந்நிலையில், மாவட்ட விரைவுப் பதில் குழுக்களை அமைக்கவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

  இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி மறஅறும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
  • அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்.

  அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  பிரம்மபுத்திரா மற்றும் பராக் ஆறுகள் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து 32 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

  அசாமில் வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொள்ளும் எங்கள் சகோதர சகோதரிகளுடன் என் எண்ணங்கள் உள்ளன. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல்கள்.

  காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அசாமில் பெய்து வரும் பலத்த மழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 4 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood
  கவுகாத்தி:

  அசாம் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  ஹோஜய், கிழக்கு கர்பி அங்லாங், மேற்கு கர்பி அங்லாங், கோலாகோட், கரிம்கஞ்ச், ஹைலகண்டி மற்றும் கச்சார் மாவட்டங்களில் உள்ள சுமார் 3.87 லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சுமார் 668 கிராமங்களில் உள்ள ஆயிரத்து 912 ஹெக்டேர் விளைநிலங்கள் மழையில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பல்வேறு நகரங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.  கவுகாத்தி நகரின் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பத்திரமாக மீட்டு 178 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பேரிடர் மீட்புக் குழுவினர் செய்து வருகின்றனர்.

  கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு மேற்பட்டோர் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். #AssamFlood
  ×