search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrestted"

    • மர்ம ஆசாமிகள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருந்தனர்.
    • போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த எலையமுத்தூர் செல்வபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 35). விவசாயி.இவர் கடந்த 10-ந்தேதி உடுமலை கச்சேரி வீதியில் உள்ள ஒரு ஓட்டலின் முன்னால் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காபி குடிக்க சென்றார்.சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்த போது யாரோ மர்ம ஆசாமிகள் அவருடைய மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றிருந்தனர்.அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ராதாகிருஷ்ணன் உடுமலை போலீஸ் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்தார்.

    இதனையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.மேலும் போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிளை திருடியவர் உடுமலையை சேர்ந்த செந்தில்குமார் (41) என்பது தெரிய வந்தது. இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைத் திருடி போலீசில் மாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது மீண்டும் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட செந்தில்குமாரிடமிருந்து ராதாகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் உள்பட 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இரண்டு பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
    • பொதுமக்கள் பேட்டரி திருடியவர்களை பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருமாநல்லூர் :

    பெருமாநல்லூர் நால்ரோட்டில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று பயணிகள் ஆட்டோவில் 3 ஆசாமிகள் வந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த இரண்டு பேட்டரிகளை திருடி ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41), திருப்பூர் சத்யாநகரை சேர்ந்த ஹக்கீம் (34), மங்கலம் சாலையை சேர்ந்த முகமது யூசுப் (31) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிமிருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான இரண்டு பேட்டரிகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்–த–னர்.

    • கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

    மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இது வரை மாநகரில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் சவுரிபாளையத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்ற திருப்பூரை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23),உடையாம் பாளையத்தை சேர்ந்த பிரதீப் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 50 போதை மாத்தி ரைகளை போலீசார் பறி முதல் செய்தனர்.பின்னர் 2 பேரையும் கோர் ட்டில் ஆஜர்படுத்தி ஜெயி லில் அடைத் தனர். தப்பி ஓடிய பீளமேடு புதூரை சேர் ந்த நித் தீஷ் என்ப வரை தேடி வருகி றார்கள். 

    ×