search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati sugar mill"

    • ஆலையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பாா்வையிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா்.
    • வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    உடுமலை:

    உடுமலை அமராவதி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான அரவை பணிகள் கடந்த மே 3 தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் ஆலையின் பல்வேறு பிரிவுகளை நேரில் பாா்வையிட்டு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தாா். அப்போது, நடைபெற்ற புதிய எந்திரங்கள் பொருத்தும் பணியையும் பாா்வையிட்டாா்.தொடா்ந்து, உடுமலை வட்டம், ராகல்பாவி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் பூலாங்கிணறு கூட்டுக் குடிநீா்த் திட்ட நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.

    ஆய்வின்போது மேலாண்மை இயக்குநா் சண்முகநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் ஜஸ்வந்த் கண்ணன், துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

    • ஆலை இயங்கிய நிலையில் 23 முறை பழுது ஏற்பட்டு இயக்கம் தடை பட்டுள்ளது.
    • நடப்பு ஆண்டில் பழுதில்லாமல் முழுமையாக இயங்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    உடுமலை :

    மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்ப ட்டு வருகிறது.சுமார் 63 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பழமை யான இந்த ஆலை பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயக்கப்பட்டு வருகிறது.

    உடுமலை,மடத்துக்குளம், பல்லடம்,தாராபுரம்,பழனி,நெய்க்காரப்பட்டி,ஓட்டன்சத்திரம்,குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் இந்த ஆலை யின் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆனாலும் கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவது,உரிய நேரத்தில் கரும்பு வெட்டாதது வெளி ச்சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு காரண ங்களால் அரவைக்கு தேவையான கரும்பு கிடைக்காத நிலையே உள்ளது.மேலும் கடந்த அரவைப் பருவத்தில் 86 நாட்கள் ஆலை இயங்கிய நிலையில் 23 முறை பழுது ஏற்பட்டு இயக்கம் தடை பட்டுள்ளது.இதனால் நடப்பு ஆண்டில் கரும்பு பதிவு செய்வதில் விவ சாயிகளிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை யடுத்து அமராவதி சர்க்கரை ஆலை பழுதில்லா மல் தொடர்ந்து இயங்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில் இயன்ற வரை சிறப்பான முறையில் பணிகள் நடைபெற்று ள்ளதால் நடப்பு ஆண்டில் பழுதில்லாமல் முழுமையாக இயங்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இதனையடுத்து வரும் 21ந் தேதி அரவை துவங்க திட்டமிட்டு இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது.விழாவில் அமராவதி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முக நாதன்,கரும்பு பயிரிடுவோர் சங்கத் தலைவர் சண்முக வேல், செயலாளர் ஈஸ்வரன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பாலதண்ட பாணி,வீரப்பன்,தலைமைப் பொறியாளர் பார்த்திபன், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், தலைமை ரசாயன அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது அமராவதி சர்க்கரை ஆலையில் மேற்கொள்ள ப்பட்டுள்ள பணி கள்,இன்னும் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்ட வை குறித்து விவ சாயிகள் கேட்டு தெரிந்து கொண்ட னர்.மேலும் ஆலை யில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட பாதிப்புகளைக்களை வதற்கான நட வடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.மேலும் வரும் 17ந் தேதிக்குள் பராமரிப்புப் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்துவது எனவும்,21 -ந் தேதி அரவை தொடங்குவது எனவும் திட்டமிடப்பட்டது. 

    • 8.7 முதல் 10 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் உயர்த்தப்பட்டது.
    • ரூ.10 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணிகள் துவங்கி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கட்டுப்பாட்டு பகுதிகளான உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி, நெய்க்காரபட்டி, ஒட்டன்சத்திரம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலை அங்கத்தினர்களாக 3 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர்.அவர்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் கரும்பு பதிவு செய்யப்பட்டு அரவைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கரும்பு அரவை செய்யப்பட்டு சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேவையான கரும்பு கிடைக்காதது, வறட்சி, உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் அரவைக்கு தேவையான கரும்பு கிடைப்பதிலும், பழமையான எந்திரங்களால் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தது. கடந்த ஆண்டு அரவை பருவத்தில் 94 ஆயிரம் டன் கரும்பு அரவை மேற்கொள்ளப்பட்டு 88 ஆயிரம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.

    சர்க்கரை கட்டுமானம் எனப்படும் கரும்பு பிழிதிறன், கடந்த 5 ஆண்டுகளாக 7.8 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. கடந்த ஆண்டு எந்திரங்கள் பழுது, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் 8.7 முதல் 10 சதவீதம் வரை சர்க்கரை கட்டுமானம் உயர்த்தப்பட்டது.

    பழமையான எந்திரங்களை புதுப்பிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சர்க்கரை ஆலையிலுள்ள எந்திரங்கள் நவீனப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இதுவரை கிரேன் வாயிலாக கரும்பு அரவைக்கு எடுக்கப்பட்டு வந்த நிலையில் 2 கோடி ரூபாய் செலவில் நவீன முறையான ரோப் வாயிலாக வாகனங்களிலிருந்து கரும்பு அரவைக்கு எடுக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    இதே போல் அரவை முதல் சர்க்கரை உற்பத்தி வரை உள்ள எந்திரங்கள் ரூ. 10 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணிகள் துவங்கி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.ஆலை நவீனப்படுத்தப்பட்டதால் சர்க்கரை ஆலையில் பிழிதிறன் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த இரு ஆண்டாக பெய்த பருவமழைகள் காரணமாக ஆலை கட்டுப்பாட்டு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ள கரும்பும் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.நடப்பாண்டு இதுவரை 2 ஆயிரம் ஏக்கரில் 80 ஆயிரம் டன் கரும்பும், அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 10 ஆயிரம் டன் கரும்பு மற்றும் பதிவு செய்யாத விவசாயிகளிடமிருந்து கொள்முதல் என ஒரு லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டு கரும்பு அரவை பணிகளை ஏப்ரல் 21-ந் தேதி துவக்க திட்டமிட்டு ஆலை புனரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலை அரவை துவக்குவதற்கு முதற்கட்டமாக ஆலையிலுள்ள பாய்லர்களில் இளஞ்சூடு ஏற்றும் விழா வருகிற 10-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஆலைக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.இதில் விவசாயிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள், அலுவலர்கள், தொழிலாளர்கள் பங்கேற்குமாறு மேலாண் இயக்குனர் சண்முக நாதன் தெரிவித்துள்ளார். 

    • நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.
    • 5.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கப்பட்டது.

    மடத்துக்குளம் :

    உடுமலை அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு, கரும்புக்கான தொகை வழங்க 15.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறுகையில், நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரையத்தொகைக்காக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களுக்கு, 15.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கியதற்காக கரும்பு பயிடுவோர் சங்கம், திருப்பூர், கோவை, திண்டுக்கல் விவசாயிகள் சார்பிலும், ஆலை நிர்வாக குழு, தமிழக அரசுக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்றார். 

    அமராவதி சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள், நான்கு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஆலை முன்பு கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தை நடத்தினர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அரசுக்கு சொந்தமான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இங்கு 50 அலுவலக ஊழியர்கள் 250 தொழிலாளர்கள் மற்றும் 70 தற்காலிக தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 4 மாதமாக அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார் எழுந்தது. இது குறித்து தொழிலாளர்கள் நிர்வாகத்திடம் கேட்டும் சம்பளம் வழங்கவில்லை. இந்நிலையில் சம்பளம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி கறுப்பு பேஜ் அணிந்து வேலை செய்தல், அலுவலகம் முன்பு தர்ணா, உள்ளிருப்பு போராட்டம், உண்ணாவிரதம் நடத்தினர்.

    தொடர்ந்து இன்று தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை முன்பு கஞ்சி தொட்டி திறப்பு போராட்டத்தை நடத்தினர். இன்று மாலைக்குள் முடிவு எட்டப்படவில்லை என்றால் உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் குடியேறும் போராட்டடம் நடத்துவோம் என்று போராட்ட கூட்டுக்குழு கூறினர்.

    டி.எஸ்.பி. ஜெய்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், ஓம்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    ×