என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
உடுமலை அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்புக்கான தொகை வழங்க ரூ. 15.75 கோடி ஒதுக்கீடு
- நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.
- 5.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கப்பட்டது.
மடத்துக்குளம் :
உடுமலை அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு, கரும்புக்கான தொகை வழங்க 15.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறுகையில், நடப்பாண்டு கரும்பு அரவை, ஒரு லட்சம் டன் எட்டியுள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு கிரையத்தொகைக்காக, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அங்கத்தினர்களுக்கு, 15.75 கோடி ரூபாய் வழி வகை கடன் வழங்கியதற்காக கரும்பு பயிடுவோர் சங்கம், திருப்பூர், கோவை, திண்டுக்கல் விவசாயிகள் சார்பிலும், ஆலை நிர்வாக குழு, தமிழக அரசுக்கும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்றார்.
Next Story






