search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agent"

    • பண்டிகை காலங்களில் நடத்தப்படும் சிறப்பு குலுக்கலில் ஒரு லாட்டரி டிக்கெட்டே அதிக விலைக்கு விற்கப்படும்.
    • திடீரென அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டரை தூக்கியெறிந்து உடைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் அரசு மூலமாகவே விற்கப்படுகின்றன. புத்தாண்டு, ஓணம் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் நடத்தப்படும் பம்பர் குலுக்கல் மிகவும் பிரபலமாகும்.

    அதில் வாடிக்கையாளர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகம் மற்றும் கேரளாவுக்கு சுற்றுலா வரக்கூடிய வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கிச் செல்வார்கள்.

    பரிசுத்தொகை கோடி, லட்சம், ஆயிரம் என வழங்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். இவ்வாறு லாட்டரி சீட்டுகளை வாங்கிய தன் மூலம் அதிக பரிசுத் தொகையை பெற்று பலரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.

    பண்டிகை காலங்களில் நடத்தப்படும் சிறப்பு குலுக்கலில் ஒரு லாட்டரி டிக்கெட்டே அதிக விலைக்கு விற்கப்படும். அப்படிப்பட்ட நேரத்தில் கஷ்டப்பட்டவர்கள் குழு வாக ஒன்றிணைந்து லாட்டரி சீட்டை வாங்குகிறார்கள். அப்படி வாங்கி லட்சக்கணக்கில் பரிசுத்தொகையை வென்றவர்களும் இருக்கிறார்கள்.

    சமீபத்தில் துப்புரவு தொழில் செய்யும் 11 பெண்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு குலுக்கலில் அதிகத்தொகை கிடைத்தது. குலுக்கலில் ஏராளமானோருக்கு பரிசு வழங்கப்படுவதால் எப்படியும் பரிசு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பலர் சிறப்பு குலுக்கலின்போது லாட்டரி சீட்டுகள் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

    அப்படி லாட்டரி சீட்டுகளை வாங்கியபடி இருந்த ஒருவர், குலுக்கலில் தனக்கு பரிசு விழாத ஆத்திரத்ததில் லாட்டரி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியிருக்கிறார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    பத்தினம்திட்டா மாவட்டம் நாரங்கனம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது45). லாட்டரி ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் இவர், லாட்டரி சீட்டுகளை வாங்குவதற்காக மாவட்ட லாட்டரி அலுவலகத்திற்கு வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ வந்து சென்றிருக்கிறார்.

    இந்நிலையில் அவர் சட்டை அணியாமல் காவி வேட்டி மட்டும் அணிந்தபடி அரை நிர்வாண கோலத்தில் மாவட்ட லாட்டரி அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், திடீரென அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பிரிண் டரை தூக்கியெறிந்து உடைத்தார்.

    மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார். அது மட்டுமின்றி அலுவலகத்துக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டர் விடுத்தார். கிருஷ்ண குமாரின் இந்த செயலால் லாட்டரி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பெண் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்ட கிருஷ்ணகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதிர்ஷ்ட குலுக்கலில் தனக்கு பரிசு விழாத ஆத்திரத்தில் லாட்டரி அலுவலத்தை கிருஷ்ணகுமார் அடித்து உடைத்து சூறையாடியது தெரியவந்தது.

    இதையடுத்து கிருஷ்ண குமார் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்பு அவர் கோர்ட்டில் அஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

    • இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி நடித்துள்ள படம் ஏஜென்ட்.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஏஜென்ட்' . இந்த படத்தில் சாக்‌ஷி வைத்யா, மம்முட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ், சுரேந்தர் டூ சினிமா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ரசூல் எல்லோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு வக்கந்தம் வம்சி கதை எழுதியுள்ளார்.


    ஏஜென்ட்

    பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை, தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனும் கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் வெளியிட்டனர்.

    அதே நேரத்தில் தெலுங்கில் அகிலும் மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியும் இதன் டீசரை வெளியிட்டனர். இப்படத்தின் இந்தி பதிப்பு டீசரும் தற்போது வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.



    துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டு என்று தாராபுரத்தில் டிடிவி தினகரன் பேசினார். #dinakaran #opanneerselvam #CentralGovernment

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். தாராபும் தொகுதிக்கு உட்பட்ட தளவாய் பட்டினத்தில் திறந்த வேனில் அவர் பேசியதாவது:-

    தமிழக மக்களின் நலன் காக்க மத்திய அரசை எதிர்க்கவும் சற்றும் யோசிக்காதவர் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பா. ஜனதா அலை வீசிய போதும் தமிழகத்தில் அம்மாவிற்கு 37 எம்.பி.க்களை வெற்றி பெறச்செய்தவர்கள் நம்தமிழக மக்கள். தமிழக நலனுக்கு எதிரான மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவைகளை எதிர்த்தவர் அம்மா. ஆனால் எட்டு வழிச்சாலை விவசாயிகளை பாதிக்கும் என தெரிந்தும் அதை எதிர்க்க துணிவில்லாமல் மோடி அரசின் ஏஜெண்டாக இந்த அரசு செயல்படுகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் பன்னீர்செல்வம் மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்பட்டதால் பொதுச் செயலாளர் சசிகலாவால் அப்புறப்படுத்தப்பட்டார்.

    சசிகலாவால் பதவிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட்டு உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ளார். 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைத்து முதல்வர் ஆனாரா? கொங்கு மண்டலம் எப்போதும் நமக்கு ஆதரவு தரும் பகுதியாகும் 90 சதவீத தொண்டர்கள் நம்முடன் உள்ளனர்.


    ஆர்.கே. நகரில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகளை கீழே தள்ளி விட்டு அமோக வெற்றி பெற்றோம். அதனைப் போல திருவாரூர், திருப்பரங்குன்றத்திலும் குக்கர் சின்னம் அமோக வெற்றி பெறும். தமிழக அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி தவிக்கின்றனர். கோர்ட்டில் தண்டனை பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சண்முகவேல், மாவட்ட அவைத்தலைவர் நரேந்திரன், மாநில வழக்கறிஞர் அணி துணை பொது செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலாராணி உட்பட ஏராளமானேர் கலந்து கொண்டனர். #dinakaran #opanneerselvam #CentralGovernment

    ×