search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Actress kushboo"

  ஓட்டுப்பதிவு கருவியில் இருந்து பாம்பு வெளியான சம்பவம் குறித்து, மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். #kushboo #PMModi

  சென்னை:

  வாக்குப்பதிவின்போது ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் (விவிபேட்) கோளாறு ஏற்பட்டு பல பகுதிகளில் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

  நேற்று கேரளாவின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

  கண்ணூரு தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களித்துக் கொண்டு இருந்த போது திடீரென விவி பேட் இயந்திரத்தில் இருந்து சிறிய அளவிலான பாம்பு வெளியில் வந்தது. இதை பார்த்த வாக்காளர்கள் கூச்சலிட்டனர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

  விவிபேட் இயந்திரத்தில் பாம்பு இருந்தது சர்ச்சையானது. காங்கிரசின் முன்னாள் அமைச்சர் சசி தரூர் இதுபற்றிய செய்தியை பகிர்ந்ததோடு இந்திய ஜனநாயகத்தில் இதுதான் முதல் முறை என்று குறிப்பிட்டு இருந்தார்.

  இந்த பதிவை தனது டுவிட்டரில் பதிந்த நடிகை குஷ்பு மோடி ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிவிட்டார். இதற்கு சமூக வலை தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.

  விவிபேட் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததற்கு கூடவா மோடியை விமர்சிக்க வேண்டும்? மோடி இயந்திரத்தையோ பாம்பையோ சப்ளை செய்தாரா? என்ற ரீதியில் குஷ்புவை விமர்சித்து வருகிறார்கள்.


  ஆனால் குஷ்புவோ தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தன்னுடைய ஒரு படத்தை பகிர்ந்து இது விமர்சகர்களுக்கான பிரத்தியேக படம் என்று குறிப்பிட்டுள்ளார். #kushboo #PMModi

  ஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனை தொடர்பு கொண்டு நடிகை குஷ்பு பாராட்டினார்.
  ஈரோடு:

  ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த மாணவர் முகமது யாசினை பலரும் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

  இதை பார்த்த நடிகை குஷ்பு தனது மானேஜர் மூலமாக ஈரோட்டுக்கு தொடர்பு கொண்டு மாணவனின் பெற்றோரிடம் செல்போனில் பேசினார். உங்கள் மகனின் நேர்மை மகத்தானது. அவனுக்கு படிப்பு செலவுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். எவ்வளவு பணம் வேண்டும்? என்று கேட்டார்.

  அதற்கு மாணவனின் தந்தை பாட்ஷா ‘‘என் மகனை அரசு பள்ளியில்தான் சேர்த்துள்ளேன். அவனது படிப்பு செலவுக்கு பணம் தேவைப்படாது. அவனை தொடர்ந்து அரசு பள்ளியில்தான் படிக்க வைக்க விரும்புகிறேன். உதவி செய்வதாக கூறிய உங்களுக்கு நன்றி’’ என்று கூறினார்.  எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காத மாணவனின் பெற்றோருக்கு குஷ்பு மீண்டும் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். மேலும் மாணவன் முகமது யாசினுடனும் போனில் பேசி அவனையும் பாராட்டி வாழ்த்து கூறினார்.

  மாணவனின் தந்தை பாட்ஷா சைக்கிளில் துண்டு, லுங்கி போன்ற துணிகளை எடுத்து சென்று விற்று வருவது குறிப்பிடத்தக்கது.
  மோடி 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.4343 கோடி செலவு செய்து இருப்பதற்கு நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். #ModiGovernment #Modi #Advertisement #Congress #Kushboo
  சென்னை:

  மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில்கல்சாலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கிழ் பிரதமர் நரேந்திரமோடி அரசு இதுவரை விளம்பரத்திற்கு செய்த செலவு எவ்வளவு என்று மனுதாக்கல் செய்து இருந்தார்.

  அதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சக அலுவலகம் தெரிவித்த பதிலில் பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி.

  இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2017 டிசம்பர் 7 வரை), டி.வி., இன்டர்நெட், ரேடியோ, டிஜிட்டல் சினிமா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரெயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது.

  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு நடிகையும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

  மோடி 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.4343 கோடி செலவு செய்து இருக்கிறார். காமராஜர் ஒவ்வொரு பைசாவையும் ஏழைகளின் கல்விக்காக செலவு செய்தார். மோடி அவரது சொந்த எக்காளத்தால் வீழ்ச்சி அடைவார்.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Congress #Kushboo #Modi
  ×