search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A case"

    • கடலாடி அருகே முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    முதுகுளத்தூர்

    கடலாடி தாலுகா இளஞ்செம்பூர் அருகே சின்னபொதிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாணிக்கம் (வயது 37). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மலைச்சாமி (65) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் பூ மாணிக்கம் வீட்டிலிருந்தபோது மலைச்சாமி அவரை அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பூ மாணிக்கம் இளஞ்செம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மலைச்சாமியை தேடி வருகிறார்.

    • விலை உயர்ந்த சொகுசு கார்களில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது.
    • பாதுகாவலர்களை மாறிமாறி தாக்கினர்.

    கோவை :

    கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தனியார் நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு நேற்று இரவில் சிறப்பு நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க தம்பதிகளுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டது. எனவே இதில் தம்பதிகள் பலர் பங்கேற்று மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினார்கள்.

    இந்த நிலையில் இரவு விலை உயர்ந்த சொகுசு கார்களில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் அந்த வாலிபர்களை தடுத்து நிறுத்தி, தம்பதிகளாக வந்தால் மட்டுமே அனுமதி உண்டு, இல்லை என்றால் உள்ளே செல்லக்கூடாது என்று கூறினார்கள்.

    அதற்கு அந்த வாலிபர்கள் தங்களிடம் இருந்த பணத்தை எடுத்து எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம். எங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர்களை பாதுகாவலர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அங்கிருந்த பாதுகாவலர்களை மாறிமாறி தாக்கினர்.

    இதை கண்டு ஓட்டலில் இருந்த மற்ற பாதுகாவலர்கள் அனைவரும் அங்கு வந்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மோதலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் தங்களிடம் உள்ள செல்போன் மூலம் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள்அந்த வாலிபர்கள் மற்றும் ஓட்டலில் உள்ள பாதுகாவலர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து ஓட்டல் கணக்காளர் திருப்பூரை சேர்ந்த விஷ்வபாரதி (24) எனபவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர்கள் லட்சுமணன், டேவிட், ஜான்சன், ஜெரிஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    ×