search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "96"

    • கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.
    • இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

     விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தை இயக்கி பிரபலமான இயக்குநர் பிரேம் குமார். தமிழ் சினிமாவில் தெய்வீக காதல் கதையை கூறிய திரைப்படங்களில் 96 திரைப்படம் முக்கியமானவை.

    அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படம் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.

    'கார்த்தியின் 27'-வது படமான இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் வரவேற்பை பெற்றநிலையில், இப்படம் இந்தாண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 

    • ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர்.
    • கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    90 காலக்கட்டத்தில் அனைத்து பெண்களுக்கும் கனவு காதலனாக இருந்தவர் அரவிந்த்சாமி, இவர் ரஜினியின் தளபதி படத்தில் கலெக்டராக நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர். அதை தொடர்ந்து இவர் ரோஜா படத்திலும் நடித்து பெயர் பெற்றார்.

    பின்னர் பம்பாய், மின்சார கனவு, இந்திரா என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருபவர்.

    மேலும் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் வலம் வரும் அரவிந்த் சாமிக்கு விபத்து ஏற்பட்டது. அதன் பின்னர் சில காலங்கள் ஓய்வில் இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். தனி ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்த சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது.

    தொடர்ந்து தலைவி படத்தில் எம்ஜிஆராகவும், சிங்கப்பூர் சலூன் படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். அடுத்ததாக கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மெய்யழகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்க சூர்யாவின் 2D நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

    இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அரவிந்த்சாமியின் 54வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1999 ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை லேசா லேசா படத்தின் மூலம் ஆரம்பித்தார்.
    • திரிஷா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    1999 ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை லேசா லேசா படத்தின் மூலம் ஆரம்பித்தார். அதற்கு முன் மாடலிங் துறையில்  மிஸ் சென்னை பட்டத்தை வென்றார். இன்று மே 4 அவரது 41 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் திரிஷா.

    20 வருடங்களுக்கு மேல் ஒருவர் கதாநாயகியாக திரைத்துறையில் இருப்பது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ், தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

    சாமி, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு, ஆதி, பீமா, குருவி, அபியும் நானும் போன்ற பல பிளாக் பஸ்டர் படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை வென்றார்.

    அதைத்தொடர்ந்து விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஜெஸ்ஸி கேரக்டரில் மக்கள் மனதில் இன்றும் நிலைத்துள்ளார். 96 திரைப்படத்தின் மூலம் ஜானுவாக வலம் வந்து மக்கள் மனதை கொல்லையடித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார்.

     கடந்த ஆண்டு வெளிவந்த லியோ படத்தில் விஜயுக்கு ஜோடியாக நடித்தார், தற்பொழுது அஜித் நடிக்கும் விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

    அடுத்தடுத்து பல பிராமாண்டமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரிஷா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பு நிறுவனமான லைகா, ஸ்டூடியோ கிரீன், சன் டிவி, சன் பிக்சர்ஸ் ஆகியோர் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    96 படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது குறித்த இளையராஜாவின் கருத்து சர்ச்சைக்குள்ளாகிய நிலையில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, என்னவானாலும் தான் இளையராஜாவின் ரசிகன் என்று கூறியிருக்கிறார்.
    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தின் வெற்றிக்கு படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் முக்கிய காரணமாக அமைந்தன. படத்தில் இளையராஜாவின் பிரபல பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள்.

    இதுபற்றி இளையராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில், எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

    இந்த நிலையில், படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு என்னவானாலும் இளையராஜாவின் ரசிகன் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அந்த வீடியோவில் இளையராஜா இசையமைத்து தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த கண்மணி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலின் பின்னணி இசையை வாசிக்கிறார்.

    கோவிந்த் வசந்தாவின் பெருந்தன்மையான இந்த கருத்தை வரவேற்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    தனது பாடல்களை ‘96’ படத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளையராஜா, அப்படி செய்வது இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனத்தை காட்டுவதாக கூறினார்.
    இளையராஜா இசையமைத்த பாடல்கள் கச்சேரிகளில் பாடப்பட்டு வந்தன. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தனது பாடல்களை அனுமதி இல்லாமல் மேடை கச்சேரிகளில் பாடக்கூடாது என்று அறிவித்தார். மீறி பாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

    வெளிநாடுகளில் இளையராஜா இசையில் உருவான பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடி வந்தார். அவருக்கும் இளையராஜா நோட்டீசு அனுப்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் திரைக்கு வந்த சில படங்களில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. விஜய் சேதுபதி, திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘96’ படத்திலும் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்தி இருந்தார்கள். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.



    அந்த படத்தில் “எனது பாடல்களை பயன்படுத்தியது தவறு. அந்த காலத்துக்கு தகுந்தாற்போன்ற பாடலை இசையமைத்து இருக்கலாமே. இது அவர்களின் இயலாமை மற்றும் ஆண்மை இல்லாத்தனம்” என்று சாடினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவின் கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பின.

    இந்த நிலையில் ‘96’ படத்தில் பணியாற்றிய ஒருவர் ‘96’ படத்தில் நாங்கள் பயன்படுத்திய இளையராஜாவின் ஒவ்வொரு பாடலுக்கும் அனுமதி பெறப்பட்டது. அந்த பாடல்களுக்கு ராயல்டியும் கொடுக்கப்பட்டது என்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 96 படத்திற்கு தெலுங்கில் விருது கிடைத்துள்ளது. #96TheMovie #VijaySethupathi #Trisha
    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பல விருதுகளையும் வென்று வணிக ரீதியான வெற்றியும் பெற்றது. 

    சமந்தா, சர்வானந்த் நடிக்க ‘96’ தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார்.



    1992-ல் தனது முதல் படமான ‘பிரமேபுஸ்தகம்‘ என்னும் படத்தை இயக்கும்போது ஸ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார். ஸ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும் ‘கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha #PremKumar

    ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் இடையேயான மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #96TheMovie #96TeluguRemake
    விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர் இல்லாமல் நூறாவது நாள் கொண்டாடியது வரை பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

    தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று, இசை.



    படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை மாற்றிவிட்டு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் எனத் தயாரிப்பாளர் கூறிவருகிறார்.

    இதனால், ‘தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு மற்றும் இயக்குனர் பிரேம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ எனவும் செய்திகள் வருகின்றன. அனேகமாக இயக்குனர் மாற்றப்படலாம் என்கிறார்கள். #96TheMovie #96TeluguRemake #Sharwanand #Samantha #PremKumar #GovindVasantha

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். #96Movie #GouriKishan
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு காரணம், இளவயது கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகை தேர்வும் அவர்களது கச்சிதமான நடிப்பும் தான். 

    ஆதித்யா பாஸ்கரும் கவுரி கி‌ஷனும் விஜய்சேதுபதியாக, திரிஷாவாக மாறி நடித்திருந்தனர். இருவரும் தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் கவுரி கி‌ஷனை மலையாள திரையுலகம் அழைத்துள்ளது. 



    துசார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கவுரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். ‘அனுகிரஹித்தன் அந்தோனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுரி கி‌ஷன் இணைந்துள்ளார். இதனை கவுரி கி‌ஷன் உறுதி படுத்தியுள்ளார். இந்தப் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `96' படத்தின் 100 நாள் வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய பார்த்திபன், `96' படத்தின் அந்த ஒரு காட்சிக்காக காத்திருந்ததாக கூறினார். #96TheMovie #VijaySethupathi
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம் குமார் உட்பட `96’ படத்தின் பிரபலங்கள் பங்கு பெற்றனர். அவர்களுடன் திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

    விழாவில் பேசிய பார்த்திபன், 

    ‘காதலிக்கிறதுக்கு காதலியோ, காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். ‘யமுனை ஆற்றிலே’ பாடலோட ஒரிஜினல் பதிப்பைவிட இந்த படத்துல அந்த பாட்டு எப்போ வரும் என்றுதான் காத்துக் கொண்டு இருந்தேன். அந்த காட்சியை பார்த்த பிறகு இயக்குனருடைய காலை தொட்டு கும்பிடணும் என்று நினைத்தேன். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு” என்று விஜய் சேதுபதியையும் திரிஷாவையும் மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்கச் சொன்னார்.



    `காதலே காதலே’ பாடலின் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டனர். “இதுதான் படத்துடைய கிளைமாக்ஸ்” என்றார் விஜய் சேதுபதி. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Parthiban

    பார்த்திபன் பேசிய வீடியோவை பார்க்க:

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். #96TheMovie #VijaySethupathi
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

    இதில் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் பிரேம் குமார், கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணிதரன், பி.எஸ்.மித்ரன், லெனின் பாரதி மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


    துக்ளக் படத்தை இயக்கும் டெல்லி பிரசாத்

    இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, 

    `இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக்’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.' என்றார்.



    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும், திரிஷாவும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Thuglak

    விஜய்  சேதுபதி பேசிய வீடியோவை பார்க்க:

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படம் 100 நாட்களை கடந்த நிலையில், இதனை படக்குழு பிரம்மாண்ட விழாவாக எடுத்து கொண்டாடுகிறது. #96TheMovie #VijaySethupathy #Trisha
    கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெறும் படங்களின் ஆயுளே அதிகபட்சம் 2 அல்லது 3 வாரங்கள் தான் என்ற நிலை உருவாகிவிட்டது. பைரசி, தியேட்டர் எண்ணிக்கை குறைவு, அதிக படங்கள் உருவாகுவது போன்ற காரணங்களால் பெரிய ஹீரோக்களின் படங்களே 50 நாட்களை தொடுவதில்லை.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 96. பள்ளி பருவத்தில் உண்டாகும் முதல் காதலை நெகிழ்ச்சியுடன் கூறி இருந்த 96 படம் டிவியில் ஒளிபரப்பான பின்னரும் கூட ரசிகர்களிடையே வரவேற்பு குறையவில்லை. கடந்த ஜனவரி 10-ந் தேதி 96 படம் 100 நாட்களை தொட்டுவிட்டது.



    அதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். தர்மதுரை, விக்ரம் வேதா வரிசையில், விஜய் சேதுபதிக்கு 3-வது 100 நாட்கள் படமாக 96 அமைந்துவிட்டது. #96TheMovie #VijaySethupathy #Trisha

    பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பு விரைவில் உருவாகவிருக்கும் நிலையில், அதுகுறித்த பரவிய வதந்திக்கு பிரேம் குமார் விளக்கமளித்துள்ளார். #96TheMovie #96TeluguRemake
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ‌ஷர்வானந்த்தும் நடிக்கிறார்கள்.

    பிரேம் குமாரே தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். 96 படத்தில் கதை 22 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து கதை பயணித்ததால் அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து இருந்தார்கள். விஜய் சேதுபதி, திரிஷாவின் சிறு வயது கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கி‌ஷன் ஆகியோர் நடித்து இருந்தனர்.



    ஆனால் தெலுங்கு பதிப்பில் கதையின் பிளாஷ்பேக் 2009-ஆம் ஆண்டுடன் நின்றுவிட உள்ளதாகவும், அதாவது பள்ளிக்காதலுக்குப் பதிலாக கல்லூரி காதலை படமாக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. எனவே ‌ஷர்வானந்த், சமந்தா இருவரும் தங்கள் இளமைத் தோற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

    இந்த செய்திக்கு பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். ‘96 தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்காக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழில் இருந்த பள்ளிக்காதல் தான்’ என்று கூறி உள்ளார். #96TheMovie #96TeluguRemake #PremKumar #Sharwanand #Samantha

    ×