search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "96 Telugu Remake"

    ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்குக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் இடையேயான மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. #96TheMovie #96TeluguRemake
    விஜய்சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படம் ரிலீஸ் அன்றே பைனான்ஸ் சிக்கல் முதல் தயாரிப்பாளர் இல்லாமல் நூறாவது நாள் கொண்டாடியது வரை பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.

    தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கு படத்தில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணிகளில் ஒன்று, இசை.



    படத்தின் தெலுங்கு ரீமேக்கில், தமிழ்ப் படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரை மாற்றிவிட்டு, தெலுங்கு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைக்கலாம் எனத் தயாரிப்பாளர் கூறிவருகிறார்.

    இதனால், ‘தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு மற்றும் இயக்குனர் பிரேம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ எனவும் செய்திகள் வருகின்றன. அனேகமாக இயக்குனர் மாற்றப்படலாம் என்கிறார்கள். #96TheMovie #96TeluguRemake #Sharwanand #Samantha #PremKumar #GovindVasantha

    பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பு விரைவில் உருவாகவிருக்கும் நிலையில், அதுகுறித்த பரவிய வதந்திக்கு பிரேம் குமார் விளக்கமளித்துள்ளார். #96TheMovie #96TeluguRemake
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் 96. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ‌ஷர்வானந்த்தும் நடிக்கிறார்கள்.

    பிரேம் குமாரே தெலுங்கிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். 96 படத்தில் கதை 22 ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்து கதை பயணித்ததால் அதற்கேற்ப நடிகர்களை தேர்வு செய்து இருந்தார்கள். விஜய் சேதுபதி, திரிஷாவின் சிறு வயது கதாபாத்திரங்களில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கவுரி கி‌ஷன் ஆகியோர் நடித்து இருந்தனர்.



    ஆனால் தெலுங்கு பதிப்பில் கதையின் பிளாஷ்பேக் 2009-ஆம் ஆண்டுடன் நின்றுவிட உள்ளதாகவும், அதாவது பள்ளிக்காதலுக்குப் பதிலாக கல்லூரி காதலை படமாக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. எனவே ‌ஷர்வானந்த், சமந்தா இருவரும் தங்கள் இளமைத் தோற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர் என்றும் கூறப்பட்டது.

    இந்த செய்திக்கு பிரேம் குமார் விளக்கம் அளித்துள்ளார். ‘96 தெலுங்கு ரீமேக்கில் சமந்தாவுக்காக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழில் இருந்த பள்ளிக்காதல் தான்’ என்று கூறி உள்ளார். #96TheMovie #96TeluguRemake #PremKumar #Sharwanand #Samantha

    ×