search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "75 சதவீதம் வாக்குப்பதிவு"

    அசாம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Assampanchayatpolls #Assampanchayatsecondphase
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் உள்ள 251 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 1304 பஞ்சாயத்து அமைப்புகள், 1304 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும் 13 ஆயிரத்து 40 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 5 மற்றும் 9 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.

    அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வுடன் சட்டசபையில் கூட்டணியாக செயல்படும் அசாம் கனபரிஷத் கட்சி இந்த தேர்தலை தனியாக சந்திக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

    இங்குள்ள 16 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 899 பதவிகளுக்கு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சுமார் 81.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.



    இந்நிலையில், மீதமுள்ள 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 169 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 895 பஞ்சாயத்து அமைப்புகள்,  895 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும்  8950 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிகளுக்கு இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இன்றிரவு எட்டுமணி நேர நிலவரப்படி, சுமார் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 900 வாக்குச்சாவடிகளில் கடைசி நேரத்துக்கு பின்னரும் வாக்குப்பதிவு நடைபெற்றதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ஹெச்.என்.போரா தெரிவித்தார். இதனால், வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குறிப்பாக, இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. கச்சார், கரிம்கஞ்ச், நல்பாரி மாவட்டங்களுக்கு உட்பட்ட 8 வாக்குச் சாவடிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இங்கு வரும் 11-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இருகட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் வரும் 12-ம் தேதி எண்ணப்பட்டு, அன்று பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகும். #Assampanchayatpolls #Assampanchayatsecondphase
    ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    போபால்:

    ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணியினர் வெள்ளி பதக்கம் வென்றனர். இந்த அணியில் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த முஸ்கான் கிரார் இடம் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தையில் பங்கு பெற்று இந்தியாவுக்கு வெள்ளி வென்று தந்த முஸ்கான் கிராருக்கு ரூ.75 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்த அணியில் இடம் பிடித்த முஸ்கான் கிராருக்கு ம.பி. அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். #AsianGames2018 #Muskarkirar #ShivrajSinghChauhan
    திண்டுக்கல்லில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஒரே நாளில் 75 தலைமறைவு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்களையும், கோர்ட்டுகளில் ஜாமீன் கேட்டு வெளி வந்து பின்னர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர்களையும் பிடிக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் நகர் வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும போலீசாரைக் கொண்ட தனிப்படையினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீசார் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்தும், வாகன ரோந்து மேற்கொண்டும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் போலீசாரால் தேடப்பட்டு வந்த 75 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவிக்கையில், மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவர்களது முகவரி மற்றும் பெயர் விபரங்களை கொண்டு சோதனை நடத்தப்பட்டது.

    தற்போதுள்ள முக அமைப்புக்கும் தலைமறைவான பாது இருந்த அமைப்புக்கும் மாறுபாடு தென்பட்டது. இதனையடுத்து அனைத்து விபரங்களையும் சரிபார்த்த பிறகு தலைமறைவு குற்றவாளிகள் என உறுதி செய்யப்படடது. இவர்களில் பலர் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் ஆவார்கள். தொடர்ந்து இது போன்ற ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். #tamilnews
    எஸ்.வாழவந்தி அருகே 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி அந்த பசுமாட்டை மீட்டனர்.
    மோகனூர்:

    நாமக்கல் மாவட்டம் எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மலையாளன் (வயது 45). விவசாயி. இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த பசு மாட்டை நேற்று காலை 10.30 மணியளவில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் அருகே இருந்த 75 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக பசுமாடு கால்தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் கொஞ்சம் தண்ணீர் இருந்தது. பசுமாடு விழுந்ததை அறிந்த மலையாளன் சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்,பக்கத்தினரும், எஸ்.வாழவந்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்புச்செழியனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை மீட்பு குறித்து ஆலோசித்தனர்.

    பின்னர் இது குறித்து நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நிலைய அலுவலர் பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை கயிற்றால் கட்டினார்கள். பின்னர் பெரிய ஏணியை கயிற்றுடன் கிணற்றுக்குள் இறங்கினார்கள். அந்த ஏணியின் உதவியுடன் பசுமாட்டை கிணற்றுக்குள் இருந்து வெளியே கயிறு மூலம் இழுத்தனர்.

    சுமார் அரை மணி நேரம் முயற்சிக்கு பிறகு பசுமாட்டை ஏணி உதவியுடன் வெளியே மீட்டனர். கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டின் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அந்த காயத்துக்கு கால்நடை டாக்டர் சிகிச்சை அளித்தார். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பாராட்டினார்கள். 
    ×