search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "33 சதவீதம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
  சித்ரதுர்கா:

  கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா, கோலார் உள்பட சில இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

  இந்த தேர்தல் வெறுப்பு, கோபம் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலுக்கும், அன்பு, பாசம் மற்றும் சகோதரத்துவத்துக்கும் இடையேயான போர். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்ற பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்துக்கும், வறுமை கோட்டுக்கு கீழே வாழும் ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்கிலும் ரூ.3.6 லட்சம் (வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு) செலுத்தப்படும் என்ற காங்கிரஸ் வாக்குறுதிக்கும் இடையேயான போர்.

  அனில் அம்பானிக்கும், சாதாரண மக்களுக்கும் இடையேயான போர். 5 வருட அநியாயங்களுக்கும், காங்கிரசின் ‘நியாய்’ (குறைந்தபட்ச வருமானம்) திட்டத்துக்கும் இடையேயான போட்டி. திருடர்களுக்கும், கவுரவமான மக்களுக்கும் இடையேயான போட்டி.

  விவசாயி, தொழிலாளர், வேலையில்லாதவர் வீட்டு வாசல்களில் காவலாளி நிற்பதை பார்த்திருக்கிறீர்களா? அனில் அம்பானி வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள். இந்த காவலாளி 15 முதல் 25 பணக்காரர்களின் வீடுகளில் மட்டுமே காவலுக்கு இருக்கிறார். கடனை செலுத்தாத விவசாயிகளை சிறையில் அடைக்கிறார். ஆனால் அனில் அம்பானியை சிறையில் அடைப்பதில்லை.

  நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று ஏன் எல்லா திருடர்களும் மோடி என்ற துணைப்பெயரை கொண்டிருக்கிறார்கள்? இன்னும் இதுபோல எத்தனை மோடிகள் வருவார்களோ நமக்கு தெரியாது. ரபேல் விவகாரத்தில் காவலாளி நிச்சயம் திருடர் தான். பிரதமர் மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று கூறியதை, அமித்‌ஷா சும்மா தேர்தலுக்காக சொன்னது என்று சொல்கிறார்.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் நடவடிக்கையாக மகளிருக்கு சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி முறையில் மாற்றம் செய்யப்படும். ஒருமுனை வரியாக மாற்றுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள். இந்திய பொருளாதாரத்தையும், மக்களையும் சீரழித்த கப்பர் சிங் டாக்ஸ் (ஜி.எஸ்.டி.) வரிமுறைக்கு முடிவுகட்டப்படும்.

  இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். #LokSabhaElections2019 #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. #GST #GSTCouncilMeeting
  புதுடெல்லி:

  நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
   
  வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

  இதற்கிடையே, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி மந்திரிகள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார்.  ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலை எளிமைப்படுத்துவது பற்றியும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  இந்நிலையில், 33 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

  இதில், 7 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைக்கவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்கவும் முடிவாகியுள்ளது.

  இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கவும், 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும், தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். #GST #GSTCouncilMeeting
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் ஹாக்கி அணியினருக்கான தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்கும் 33 வீராங்கனைகள் இன்று தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். #HockeyIndia #WomensHockeyTeam #NationalCamp
  புதுடெல்லி:

  ஹாக்கி இந்தியா சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பயிற்சி மையத்தில் வரும் 12ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெண்களுக்கான தேசிய பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் வீராங்கனைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  இதுபற்றி தலைமை பயிற்சியாளர் கூறுகையில், ‘தேசிய முகாமிற்கான குழு தொடர்ந்து நீடிக்கிறது. அதேசமயம், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய சில இளம் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

  இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். மூன்று வாரம் நடைபெற உள்ள இந்த தேசிய முகாமில், வீராங்கனைகளின் உடற்திறனை மேம்படுத்தும் வகையிலான பயிற்சிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்’ என்றார். #HockeyIndia #WomensHockeyTeam #NationalCamp

  ×