search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 workers died"

    • ஆண்டிபட்டியில் 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள்
    • சம்பவத்தன்று கொண்டம நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பல்லவ ராயன்பட்டி கோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு மின் மோட்டாரை இயக்கிய போது எதிர்பா ராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இது குறித்து கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். தேனி பங்களாமேடு, பாரஸ்ட் ரோடு 6-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (40). சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று கொண்டம நாயக்கன்பட்டி செக்போஸ்ட் அருகே ஜெயக்குமார் என்பரது வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி விட்டு நிற்க்காமல் சென்றது.
    • கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே உள்ள பெரிய தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எசேந்திரன் மகன் பாபு என்கிற விக்னேஷ் (வயது 20). பிரகாஷ் (20) மேல்மொணவூரை சேர்ந்தவர் சீனு (22) இவர்கள் மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தனர்.

    பைக்குகள் மீது நேற்று வேலூர் வசூர் பகுதியில் நடந்த திருவிழாவில் மேளம் அடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு வேலூரில் இருந்து 2 பைக்குகளில் ஊருக்கு புறப்பட்டு வந்தனர்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தில் வந்த போது வேகமாக வந்த வாகனம் ஒன்று 2 பைக்குகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாபு, சீனு இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். பிரகாஷ் படுகாயம் அடைந்தார்.

    இதனை நேரில் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பிரகாசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியான பாபு, சீனு ஆகியோர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக வேலூரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். 

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு;-

    தஞ்சை அருகே மடிகை கிராமம் பள்ளிக்கூட காலனி தெருவை சேர்ந்தவர் கூத்தையன் (வயது 48). கூலி தொழிலாளி.

    அதே பகுதி அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (50). விவசாய கூலி தொழிலாளி.

    இந்த நிலையில் நண்பர்களான கூத்தையனும், முத்துசாமியும் இன்று காலை 6 மணியளவில் டீ குடிக்க கடைவீதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற அரசு பஸ் வந்தது. அந்த சமயத்தில் திடீரென கூத்தையனும், முத்துசாமியும் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி ரோட்டில் கீழே விழுந்தனர்.

    அப்போது அரசு பஸ் சக்கரம் அவர்கள் 2 பேர் மீதும் ஏறியது. இதில் கூத்தையன், முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

    அரசு பஸ் மோதி 2 பேர் பலியானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

    பின்னர் இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரசு பஸ் மோதி 2 தொழிலாளிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ×