என் மலர்

  செய்திகள்

  தஞ்சை அருகே விபத்து- அரசு பஸ் மோதி 2 தொழிலாளிகள் பலி
  X

  தஞ்சை அருகே விபத்து- அரசு பஸ் மோதி 2 தொழிலாளிகள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தஞ்சாவூர்:

  தஞ்சை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளிகள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

  இன்று காலை நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு;-

  தஞ்சை அருகே மடிகை கிராமம் பள்ளிக்கூட காலனி தெருவை சேர்ந்தவர் கூத்தையன் (வயது 48). கூலி தொழிலாளி.

  அதே பகுதி அம்பலக்கார தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (50). விவசாய கூலி தொழிலாளி.

  இந்த நிலையில் நண்பர்களான கூத்தையனும், முத்துசாமியும் இன்று காலை 6 மணியளவில் டீ குடிக்க கடைவீதிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழியாக பட்டுக்கோட்டையில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற அரசு பஸ் வந்தது. அந்த சமயத்தில் திடீரென கூத்தையனும், முத்துசாமியும் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி ரோட்டில் கீழே விழுந்தனர்.

  அப்போது அரசு பஸ் சக்கரம் அவர்கள் 2 பேர் மீதும் ஏறியது. இதில் கூத்தையன், முத்துசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

  அரசு பஸ் மோதி 2 பேர் பலியானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர்.

  பின்னர் இந்த விபத்து பற்றி தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  அரசு பஸ் மோதி 2 தொழிலாளிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×