என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் தலைவாஸ்"

    • தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரை ஒப்பந்தத்தில் இருந்து தூக்குவது இது 6-வது முறையாகும்.
    • புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி 10-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது.

    புதுடெல்லி:

    12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை டெல்லி ஆகிய நகரங்களில் கடந்த 3 மாதங்கள் நடந்தது. இதில் கடந்த 31-ந் தேதி நடந்த இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணி, புனேரி பால்டனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி (6 வெற்றி, 12 தோல்வி) 10-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளர் உரிய நேரத்தில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. கடந்த சீசனில் நியமனம் செய்யப்பட்ட அவர் ஒரே ஆண்டில் கழற்றி விடப்பட்டுள்ளார். தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரை ஒப்பந்தத்தில் இருந்து தூக்குவது இது 6-வது முறையாகும்.

    இந்த சீசனில் தொடக்கத்திலேயே தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் கபடியில் இருந்து ஓய்வு பெற தயார் என்று அவர் உடனடியாக மறுத்தார். தங்களது இறுதி லீக் ஆட்டம் முடிந்ததும் தமிழ் தலைவாஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பாலியான் அணி நிர்வாகம் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை முன் வைத்தார். அணி தேர்வு, பயிற்சி, திட்டமிடுதல் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்திலும் தனக்கு முழு சுதந்திரம் வழங்கப்படவில்லை. தகுதியான வீரர்களை தவிர்த்து விட்டு முழு உடல் தகுதியற்ற வீரர்களுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இதனை ஆமோதித்த கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் அணியின் பகுப்பாய்வாளர் தான் பெரும்பாலான முடிவுகளை எடுத்தார் என்று கூறினார்.

    போட்டி முடிந்த பிறகு இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் மறுத்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்த தமிழ் தலைவாஸ் அணி நிர்வாகம், தற்போது தலைமை பயிற்சியாளர் சஞ்சீவ் பால்யானின் பதவியை பறித்து இருக்கிறது.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அணி 44-43 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 12-வது தோல்வியாகும்.

    மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி 50-32 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    • ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • தமிழ் தலைவாஸ் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை தொடும்.

    புரோ கபடி 'லீக்' போட்டியின் 4-வது மற்றும் கடைசி கட்ட ஆட்டங்கள் டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    12 அணிகள் பங்கேற்று உள்ள இந்த போட்டியில் 'லீக்' முடிவில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு நுழையும்.

    புனே, டெல்லி ( தலா 26 புள்ளிகள்) முதல் 2 இடங்களை பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு நுழைந்தன. அதை தொடர்ந்து தெலுங்கு டைட்டன்ஸ் (20 புள்ளி) , பெங்களூரு, மும்பை (தலா 18 ) பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதுவரை 5 அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 3 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    இதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அரியானா , ஜெய்ப்பூர் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன. அந்த அணிகளுக்கு 2 ஆட்டம் எஞ்சி உள்ளன.

    குஜராத், தமிழ் தலைவாஸ், பாட்னா, உ.பி. தலா 12 புள்ளிகளுடன் உள்ளன. தமிழ் தலைவாசுக்கும், உ.பி.க்கும் ஒரு போட்டியே உள்ளன. குஜராத், பாட்னாவுக்கு 2 ஆட்டம் இருக்கிறது. பெங்கால் 10 புள்ளியுடன் உள்ளது. அந்த அணிக்கு 2 ஆட்டம் உள்ளது.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தனது கடைசி 'லீக்' ஆட்டத்தில் பெங்கால் வாரியர்சை இன்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் சந்திக்கிறது.

    இந்த ஆட்டத்தை தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் நிறைவு செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி கடந்த 4 ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்தது. தமிழ் தலைவாஸ் அணி கடந்த செப்டம்பர் 12-ந்தேதி ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் 46-36 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை வீழ்த்தி இருந்தது.

    தமிழ் தலைவாஸ் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 14 புள்ளிகளை தொடும். குஜராத், உ.பி. அணிகள் விளையாடும் ஆட்டத்தை பொறுத்து பிளேஆப் சுற்று வாய்ப்பு இருக்கிறது. மற்ற ஆட்டங்களில் மும்பை-ஜெய்ப்பூர் (இரவு 8.30 மணி), அரியானா-குஜராத் (இரவு 9.30 மணி) மோதுகின்றன.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

    புதுடெல்லி:

    12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 37-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 11-வது தோல்வியாகும்.

    மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-29 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது.

    • தமிழ் தலைவாஸ் அணி தனது 13-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்சை நேற்று எதிர் கொண்டது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    சென்னை:

    12 அணிகள் பங்கேற்று உள்ள 12-வது புரோ கபடி லீக்கின் 3-வது கட்ட போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும் 18 ஆட்டத்தில் விளையாட வேண்டும். 'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    சென்னை நகரை மையமாக கொண்ட தமிழ் தலைவாஸ் அணி தனது 13-வது ஆட்டத்தில் பாட்னா பைரேட்சை நேற்று எதிர் கொண்டது. இதில் தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாசுக்கு கிடைத்த 6-வது வெற்றியாகும். இதன் மூலம் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு முன்னேறியது. 7 போட்டியில் தோல்வியை தழுவியது.

    தமிழ் தலைவாஸ் அணியின் வெற்றிக்கு கேப்டன் அர்ஜூன் தேஷ்வால் முக்கிய பங்கு வகித்தார். அரியானாவுக்கு எதிராக கடந்த 3-ந்தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அவர் தமிழக ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அதேபோல நேற்றும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    அர்ஜூன் தேஷ்வால் 26 புள்ளிகளை எடுத்தார். இதன் மூலம் புரோ கபடி லீக் போட்டி வரலாற்றில் 71-வது முறையாக (127 ஆட்டம்) 'சூப்பர் 10' எடுத்து சாதனை படைத்து 3-வது இடத்தை பிடித்தார். அவர் பவன் ஷெராவத்தை முந்தினார். பவன் 70-வது தடவை (142) 'சூப்பர் 10' எடுத்தார். பர்தீப் நர்வால் 88 முறையும் (190 ஆட்டம்), மனீந்தர் சிங் 80 தடவையும் (164), சூப்பர் 10 புள்ளிகளை பெற்று முதல் 2 இடங்களில் உள்ளன.

    தமிழ் தலைவாஸ் அணியின் மற்ற வீரர்களில் நரேந்தர் 6 புள்ளியும், ஆசிஷ், நிதேஷ்குமார் தலா 5 புள்ளியும், ஹிமான்சு 3 புள்ளியும் எடுத்தனர்.

    தமிழ் தலைவாஸ் சென்னையில் வெற்றியுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது. நேரு உள்விளையாட்டு அரங்கில் அந்த அணி 4 ஆட்டங்களில் விளையாடி இரண்டில் (அரியானா, பாட்னா) வெற்றி பெற்றது. இரண்டு போட்டியில் (மும்பை, பெங்களூரு) தோற்றது.

    தமிழ் தலைவாஸ் தனது 14-வது ஆட்டத்தில் புனேயை வருகிற 11-ந்தேி எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் டெல்லியில் நடக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி மீண்டும் அரியானாவை வீழ்த்தி 11-வது வெற்றியை பெற்றது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்சை-அரியானா அணிகளும், 9 மணிக்கு நடக்கும் 2-வது ஆட்டத்தில் புனே-மும்பை அணிகளும் மோதுகின்றன.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • பாட்னா பைரேட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜூன் தேஷ்வால் அதிகபட்சமாக 26 புள்ளிகள் எடுத்தார். இதன்மூலம் தமிழ் தலைவாஸ் 6வது வெற்றியை பதிவு செய்தது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • பெங்களூரு புல்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி அடைந்தது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 33-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி 8-வது இடத்தில் உள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • அரியானா ஸ்டீலர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நேற்று இரவு நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிரமபட்டனர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர்கள் அதன்பின் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 45-33 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • ஜெய்ப்பூர் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், யு மும்பை அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய யு மும்பை அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், யு மும்பை அணி 42-24 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் யு மும்பை அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • ஜெய்ப்பூர் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.

    ஜெய்ப்பூர்:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 37-28 என்ற புள்ளிக்கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • போட்டியின் முதல் பாதியிலேயே உ.பி. யோதாஸ் 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
    • நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு உ.பி. யோதாஸ் பெற்ற இந்த வெற்றி அணிக்கு வலு சேர்த்துள்ளது.

    ஜெய்ப்பூரில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில், உ.பி. யோதாஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை 39-22 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    போட்டியின் முதல் பாதியிலேயே உ.பி. யோதாஸ் 15-10 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது.

    உ.பி. யோதாஸ் அணியின் சுமித் சங்வான் 5 புள்ளிகள், மகேந்தர் சிங் மற்றும் அஷு சிங் ஆகியோர் தலா நான்கு புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர்.

    தமிழ் தலைவாஸ் அணியில், நிதேஷ் குமார் அதிகபட்சமாக ஏழு புள்ளிகள், அர்ஜுன் தேஷ்வால் குறைந்தபட்சமாக இரண்டு புள்ளிகள் எடுத்தனர் .

    நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு உ.பி. யோதாஸ் பெற்ற இந்த வெற்றி அணிக்கு வலு சேர்த்துள்ளது.  முன்னதாக கடைசி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் தோல்வி கண்டது குறிபிடத்தக்கது.

    • 12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது.
    • 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

    12-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 2-ம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது.

    இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே டைட்டன்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவில் டைட்டன்ஸ் அணி 22-10 என வலுவான நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியிலும் டைட்டன்ஸ் அணியின் ஆதிக்கமே தொடர்ந்தது.

    இறுதியில்  43-29 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

    முன்னதாக நடப்பு தொடரில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடங்கிய தமிழ் தலைவாஸ் அந்த அணியை 38-35 என்கிற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது.

    இந்நிலையில் தற்போதைய வெற்றியின் மூலம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி சீசனின் முதல் தோல்விக்கு பழிவாங்கியது.

    ×