என் மலர்

  நீங்கள் தேடியது "சேப்பாக் சூப்பர் கில்லீஸ்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நெல்லை அணியில் அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.
  • பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது.

  நெல்லை:

  ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நெல்லை சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின.

  முதலில் ஆடிய நெல்லை அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய சூரியபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் குவித்தனர்.

  இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில், கேப்டன் கவுசிக் காந்தி, ஜெகதீசன் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஜெகதீசன் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ராதாகிருஷ்ணன் ஒரு ரன்னிலும், சசிதேவ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

  அவர்களைத் தொடர்ந்து கவுசிக்குடன் இணைந்த சோனு யாதவ் அதிரடியாக ஆடினார். அவர் 23 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். சதீஷ் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கேப்டன் கவுசிக் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி 2 சிக்சருடன் இந்த இலக்கை எட்டினார்.

  பரபரப்பான கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஹரிஷ் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் பவுண்டரி, 3வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4வது பந்தில் சிக்சர், கடைசி பந்தில் 4 ரன்கள் எடுக்க, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் எடுத்து சமன் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

  முதலில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் செய்தது. அதிசயராஜ் வீசிய அந்த ஓவரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 ரன் சேர்த்தது. இதையடுத்து சூப்பர் ஓவரை எதிர்கொண்ட நெல்லை அணி, 10 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
  • அதிரடியாக ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார்.

  நெல்லை:

  ஆறாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கியது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

  முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் தொடக்க ஆட்டம் நடைபெறுகிறது. இதில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.

  நெல்லை அணியின் ரஞ்சன் பால் (7), பாபா அபராஜித் (2), பாபா இந்திரஜித் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் துவக்க வீரர் சூரியபிரகாஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சஞ்சய் யாதவ் பவுண்டரி, சிக்சர் என அதிரடி காட்டினார். இருவரும் அரை சதம் கடக்க, அணியின் ஸ்கோர் வெகுவாக உயர்ந்தது.

  சூரியபிரகாஷ் 62 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து ஆடிய சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் விளாசினார். அவர் 47 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த ரன்னை எட்டினார்.

  இதனால் நெல்லை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அஷிதேஷ் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் சந்தீப் வாரியர், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், ஹரீஷ் குமார் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

  இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டி.என்.பி.எல். முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
  • ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

  சென்னை:

  2022ம் ஆண்டுக்கான டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி வரும் 23-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

  கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக ரசிகர்கள் போட்டிகளை காண முடியாத நிலையில், இந்த ஆண்டு பல்வேறு ஏற்பாடுகளுடன் பிரமாண்டமான நெல்லை கிரிக்கெட் மைதானத்தில் போட்டி தொடங்குகிறது.

  முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

  இந்நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்களின் பட்டியல் டி.என்.பி.எல் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கெளசிக் காந்தி கேப்டனாக செயல்படவுள்ளார். மேலும் அந்த அணியில் அலெக்சாண்டர், அருண், அருண் குமார், ஹரிஷ் குமார், ஜெகதீசன், ஜெகன்நாத் ஸ்ரீனிவாஸ், கவுசிக் காந்தி, நிலேஷ் சுப்பிரமணியம், பிரசித் ஆகாஷ்,ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜய் குமார், கார்த்திக், மதன் குமார் ஆகிய 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  இந்த தொடரின் இறுதிப் போட்டி கோவையில் ஜூலை 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மதுரை அணியுடனான தோல்வி குறித்து பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் கருத்து தெரிவித்துள்ளார். #TNPL2018 #CSG #MP
  நெல்லை:

  டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மதுரையிடம் வீழ்ந்து 2-வது தோல்வியை தழுவியது.

  நெல்லையில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்எடுத்தது.

  கே.கவுசிக் 21 பந்தில் 37 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), கஜீத் சந்திரன் 29 பந்தில் 37 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), நிலேஷ் சுப்பிரமணியன் 28 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி) எடுத்தனர். முருகன் அஸ்வின், சன்னிகுமார் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும், அலெக்சாண்டர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பின்னர் விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் 127 ரன்னில் (ஆல்அவுட்) ஆனது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 26 ரன்னில் தோற்றது.

  கார்த்திக் அதிகபட்சமாக 28 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்), கங்கா ஸ்ரீதர் ராஜூ 24 ரன்னும் (3 பவுண்டரி), முருகன் அஸ்வின் 17 பந்தில் 22 ரன்னும் (1பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரகீல்ஷா, வருண் சக்கரவர்ததி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டும், கவுசிக் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் திருச்சி வாரியர்சிடம் தோற்றது. போட்டி முடிந்த பிறகு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சன்னிகுமார் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது அணியின் முடிவு. எங்களது பந்துவீச்சு பலம் வாய்ந்தது. இதனால் தான் எதிர் அணியை 153 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினோம். எங்களது பேட்டிங் தான் சிறப்பாக அமையவில்லை. ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் இன்னும் சற்று நம்பிக்கையோடு விளையாடி இருக்க வேண்டும்.

  அதேநேரத்தில் மதுரை அணி பந்துவீச்சாளர்கள் திறமையாக பந்து வீசினார்கள்.

  எங்களது பந்துவீச்சும், பீல்டிங்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பேட்டிங்கில் தான் இன்னும் முன்னேற்றம் தேவை. அடுத்தப்போட்டியில் நாங்கள் திறமையை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  டி.என்.பி.எல். வரலாற்றில் மதுரை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இந்த வெற்றி குறித்து அந்த அணி வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியதாவது:-

  இந்த வெற்றியை பெருமையாக கருதுகிறேன். முதல் ஆட்டத்தில் நிறைய தவறுகள் செய்தோம். இந்த ஆட்டத்தில் நம்பிக்கையோடும், கனவோடும் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். இதை தக்க வைத்துக்கொள்வோம்.  சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருந்தது. ரகீல்ஷாவுடன் இணைந்து சிறப்பாக பந்துவீசியது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்தர போட்டிகளில் நிறைய அனுபவம் பெற்றவர் என்பதால் அவரிடம் இருந்து நான் சிறப்பானவற்றை கற்றுக்கொள்ள முயற்சித்தேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது 3-வது ஆட்டத்தில் காரைக்குடி காளையுடன் வருகிற 21-ந்தேதி மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. மதுரை அணி 3-வது போட்டியில் ஜோன்ஸ் டூட்டி பேட்ரியாட்சை 22-ந்தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டம் திண்டுக்கல்லில் நடக்கிறது.

  இன்று ஓய்வு நாளாகும். நாளை நடைபெறும் 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் கோவை கிங்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #CSG #MP
  ×