என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்.ஏ.சந்திரசேகர்"
- தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.
ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை, கரூர் கூட்டநெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணை என்று விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் விவகாரத்தில் ராகுல் காந்தி உடன்பட பல காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் நீடிக்கிறது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு விஜய் பவர் தருவதாக சொல்கிறார். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று இயக்குநரும் விஜயின் தந்தையுமான S.A. சந்திரசேகர் தெரிவித்தார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "60 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வருகின்றனர். புதிதாக யாராவது அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்றால், பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஜனநாயகன் பட பிரச்சனையில் என்ன நடக்கிறது என்பது என்னை விட மக்களுக்கு நன்கு தெரியும். கரூரில் என்ன நடந்தது என்று மக்களுக்கு தெளிவாக தெரியும்.
தவெக தலைவர் விஜய் எதற்கும் பயந்தவர் இல்லை. விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அப்படி வரலாறு உள்ள ஒரு கட்சி மற்ற கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து அந்தக் கட்சி இன்று தேய்ந்து விட்டது.
அவர்களுக்கு இன்று பவர் இல்லை. அந்த பவரை நாங்கள் கொடுக்கிறோம் என விஜய் கூறுகிறார். அந்தப் பவருக்கு காங்கிரஸ் வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாறு படைக்கும் அந்த வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.
- நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான் என்று உருக்கமாக பகிர்ந்துக் கொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்தார். அவர் கூறும்போது, நடிகர் அஜித்குமாருடைய தந்தை மறைவு செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான். அந்த இழப்பு ஒரு மகனுக்கு எந்த அளவுக்கு இழப்பாக இருக்கும் என்பது அனைத்து பிள்ளைகளுக்கும் தெரியும். அப்படி அந்த தந்தையை இழந்து தவித்து கொண்டிருக்கும் அஜித்துக்கு மன ஆறுதலை தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றார்.
- இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன.
- இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது, சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை.

எஸ்.ஏ.சந்திரசேகர்
அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன், நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குனராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார்.
விஜயை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குனர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குனராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை.
ஆனால், தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார். இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி என்றார்.
- கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கியுள்ளார்.
- பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.

கருமேகங்கள் கலைகின்றன
இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இரண்டாம் பாடலான சுத்தமுள்ள நெஞ்சம் பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
- இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

விஜய்
தற்போது, வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாகவும் அதற்காக விஜய் ஐதராபாத் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் பிறந்த நாள் மற்றும் ஆயுஷோமம் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்ளாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எஸ்.ஏ. சந்திர சேகர்
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் வலுவிழந்து விட்டது என்பதை விஜய் சிந்திக்க வேண்டும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.
மேலும், விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகிகளை மீண்டும் இணைப்பது குறித்து பலமுறை விஜய்யிடம் பேசியுள்ளேன் என்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






