எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான்.. அஜித் தந்தை மறைவுக்கு விஜய்யின் தந்தை உருக்கம்

நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான் என்று உருக்கமாக பகிர்ந்துக் கொண்டார்.
எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான்.. அஜித் தந்தை மறைவுக்கு விஜய்யின் தந்தை உருக்கம்
Published on

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்தார். அவர் கூறும்போது, நடிகர் அஜித்குமாருடைய தந்தை மறைவு செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான். அந்த இழப்பு ஒரு மகனுக்கு எந்த அளவுக்கு இழப்பாக இருக்கும் என்பது அனைத்து பிள்ளைகளுக்கும் தெரியும். அப்படி அந்த தந்தையை இழந்து தவித்து கொண்டிருக்கும் அஜித்துக்கு மன ஆறுதலை தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com