என் மலர்
நீங்கள் தேடியது "எலெனா ரைபகினா"
- ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச் போராடி தோற்றார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா, இகா ஸ்வியாடெக் நீடிக்கிறார்கள்.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரேலிய ஓபனை வென்று வரலாறு படைத்த கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) முதலிடத்திலும், ஜானிக் சினெர் (இத்தாலி) 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகிறார்கள்.
ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்து போராடி தோற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் டாப்-3 இடத்திற்குள் வருவது 2024-ம் ஆண்டு ஆகஸ்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதனால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஒரு இடம் குறைந்து 4-வது இடத்துக்கு இறங்கினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இரு ஆட்டங்களில் அரினா சபலென்கா (பெலாரஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து) நீடிக்கிறார்கள். ஆஸ்திரேலிய ஓபனில் மகுடம் சூடிய எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 2 இடங்கள் முன்னேறி தனது சிறந்த நிலையாக 3-வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்காவின் கோகோ காப் 3-ல் இருந்து 5-வது இடத்துக்கு சரிந்தார். ஆஸ்திரேலிய ஓபன் மூலம் கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக கால்இறுதியை எட்டிய அமெரிக்க 'இளம் புயல்' இவா ஜோவிச் 7 இடங்கள் உயர்ந்து 20-வது இடத்தை பெற்றுள்ளார்.
- ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
- இறுதிப்போட்டியில் சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா எதிர்கொண்டார்.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் மகளிர் ஒன்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சபலென்காவை கஜகஸ்தான் வீராங்கனை ரைபகினா எதிர்கொண்டார்.
இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரைபகினா முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனை ஒருவர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இகா ஸ்விடெக் மற்றும் எலேனா ரைபாகினா மோதினர்.
- இந்த ஆட்டத்தில் எலேனா ரைபாகினா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்விடெக் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை எலேனா ரைபகினா மோதினர்.
இந்த ஆட்டத்தில் எலேனா ரைபகினா 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இகா ஸ்வியடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
- அரை இறுதியில் எலெனா ரைபகினா (கஜகிஸ்தான்) அசரென்கா (பெலாரஸ்) மோதினர்.
- மற்றொரு அரை இறுதியில் டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா)-அலெக் சாண்ட்ரோவா (ரஷியா) மோதினர்.
மியாமி:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் எலெனா ரைபகினா (கஜகிஸ்தான்) அசரென்கா (பெலாரஸ்) மோதினர்.
இதில் ரைபகினா 6-4, 0-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதியில் டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா)-அலெக் சாண்ட்ரோவா (ரஷியா) மோதினர்.
இதில் காலின்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 31-ந் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ரைபகினா-காலின்ஸ் பலப்பரீட்சை நடத்து கிறார்கள்.
நாளை நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) , ஸ்வெரேவ் (ஜெர்மனி)-டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள்.
- மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் எலீனா ரிபாகினா, டேனியல் காலின்ஸ் மோதினர்.
- இந்தப் போட்டியில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
மியாமி:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, அமெரிக்காவின் டேனியல் காலின்சுடன் மோதினார்.
இதில் காலின்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.






