என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சூலக்கல் மாரியம்மன் கோவிலில் குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறாம்.
    அற்புதங்கள் பல நிகழ்த்தி, அரிய வரங்கள் தரும் அன்னையாகத் திகழ்கிறாள். சூலக்கல் மாரியம்மன்.

    அது என்ன சூலக்கல்?

    கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த காலம். அப்போது காவடிக்கா நாடு என்ற பகுதி கண்ணப்பநாயனார் வம்சாவளியில் வந்தவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இங்கு புரவிப்பாளையம் பகுதியில் உள்ள கிராமம்தான் "சூலக்கல்'.

    இங்கு கோயில் அமைந்ததற்குக் காரணம் என்ன?

    அக்காலத்தில் பசுமையான மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இக்கிராமத்திற்கு. சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவர்.
    வேலாயுதம்பாளையம் எனும் கிராமத்தில் இருந்த ஒருவரது பசுக்களை மேய்ச்சலுக்கா வேலைக்காரச் சிறுவன் இப்பகுதிக்கு ஓட்டி வருவது வழக்கம்.
    ஒரு சமயம் அப்பசுக்கள் பொழியும் பால் அளவு குறைந்துகொண்டே வந்தது அவரை கவலையில் ஆழ்த்தியது. ஒருநாள் வனத்துக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை மறைந்திருந்து கவனித்தார்.

    அப்போது அப்பசுக்கள் கூட்டமாய் ஓரிடத்தில் கூடி நின்று பால் பொழிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபத்தின் உச்சகட்டத்தில் பசுக்களை தடியால் அடித்துக் விரட்டினார்.

    பயந்து ஓடிய ஒரு பசுவின் கால் (குளம்பு) ஒரு சுயம்வின் மேல் பதிந்து ரத்தம் வழிந்தது. பயந்துபோன அவர் அவ்விடத்தை கூர்ந்து கவனித்தபோது சுயம்பு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்டு அங்கு ஒரு பெண்தெய்வம் எழுந்திருளிப்பதை உணர்ந்தார். தன்செயலுக்காக வருந்தினார்.

    அன்றிரவு பசுவின் உரிமையாளரின் கனவில் அம்பிகை தோன்றி, "சுயம்புவாகத் தோன்றி உள்ளது மாரியம்மனாகிய நான் தான். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டி என்னை வழிபடுங்கள்!' என்று கட்டளை இட்டார். சூலத்திற்கு அருகில் கல் இருந்ததால் அந்த இடம் சூலக்கல் என்ற பெயரினை பெற்றது. அங்கு மாரியம்மன் குடி கொண்டிருந்ததால் "சூலக்கல் மாரியம்மன்' என்றே அழைக்கப்பட்டார்.

    சுயம்புவை வையமாக வைத்து கருவறையும் மகா மண்டபமும் கட்டி முடித்தனர். அருகில் விநாயகருக்கும் தனிச் சன்னதி அமைத்து பூஜை செய்யத்துவங்கினர்.1994ம் /ஆண்டு புதியதாக அம்மன் சிலை செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்னை அமர்ந்த நிலையில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில், வலது கைகளில் உடுக்கையும் சுத்தியும்; இடது கைகளில் சூலமும் கபாலமும் ஏந்தி எழில் கோலத்தில் அருள்பாலிக்கிறார். வடக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது. பொதுவாக பெண காவல் தெய்வங்கள் வடதிசை நோக்கி இருப்பதை பழங்கால மரபு "வடக்கு வாயிற் செல்வி' என சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம்.



    கருங்கற்களால் கட்டப் பெற்ற கருவறையும் மகாமண்டபமும் நாயக்க மனனர் காலத்திய கட்டடக் கலையை நினைவூட்டுகிறது. சன்னதியின் வெளிப்பிராகரத்தில் மேற்குப் பகுதியில், சுதையால் ஆன மூன்ற குதிரைகளும் கிழக்குப் பகுதியில் இரண்டு குதிரைகளும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. இக்குதிரைகளை அடுத்து "மாவிலங்கம்' எனும் தல விருட்சம் உள்ளது. அம்மை நோயையும், கண்நோயையும் தீர்ப்பதில் கண்கண்ட தெய்வமாய் திகழ்கிறாள், சூலக்கல் மாரியம்மன். அவளது அபிஷேக தீர்த்தத்தை கண்நோய் கண்டவர்கள் தங்கள் கண்களில் இட்டு குணம் பெறுகின்றனர்.

    குழந்தைப்பேறு, இல்லாதவர்களின் அம்மனை வேண்டி, தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பிராரத்தனை செய்தால், அவர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேறுகிறாம். குழந்தை பிறந்தவுடன் அம்பிக்கு நேர்த்திக் கடன் செலுத்தவும் அவர்கள் தவறுவதில்லை. காலை 5.30 முதல் மதியம் 1 மணி வரையிலும் பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 78 மணி வரையிலும் திறந்திருக்கும். இவ்வாலயத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்தநாள்கள்.

    தமிழ் வருடப் பிறப்பு, ஆடி அமாவாசை, கார்த்திகை பிறப்பு, ஆடி அமாவாசை, காத்திகை தீபாவளி, தைப்பொங்கல் ஆகிய விசேஷ தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அமாவாசையன்றும் திரளான பக்தர்கள் பூஜைகளில் பங்கேற்கின்றனர்.

    இத்தலத்தின் தலையாய திருவிழா தேர்த்திருவிழாகும். சித்திரை மாதம் கடைசி செவ்வாயன்று பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இதனை நோன்பு சாற்றுதல் என்பர்.பூச்சாட்டுதலுடன் தொடங்கும் இதனை நோன்பு சாற்றுதல் என்பர். அன்றிலிருந்து ஏழாம் நாள் கிராம சாந்தி எனும் நிலத்தூய்மை செய்யப்படுகிறது. பின் சப்பரம், சிம்மவாகனம், குதிரைவாகனம், அன்ன வாகனம் என ஆறு நாட்களுக்கு தினமும் காலையும் மாலையும் அம்மன் திருவீதி உலா வருவாள். இரவு திருவீதி உலா தொடங்கும் முன்பு ஊஞ்சல் பூஜை நடைபெறும்.

    நோன்பு சாற்றிய 15ம் நாள் மாவிளக்கு வரிசைகளும், பொங்கல் பொங்கி நிறைந்திருக்கும். காட்சியும் கண்டுகொள்ளாக் காட்சியாகும். அன்றைய தினம் மாலையில் அம்மனுக்கத் திருக்கல்யாணம் நடத்துவர். வியாழன் முதல் சனி வரை திருத்தேர் வடம் பிடிக்கப்படும். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஆடி அமைந்து வரும் அழகே தனிதான். ஜாதி பேதமின்றி அனைத்து இனத்தவரும் இணைந்து தேர் வடம் பிடித்து இழுப்பது கொங்கு மண்ணின் மரபாகும்.

    சனிக்கிழமை தேர் நிலையடைந்த இரவே, தேர்வலம் வந்த அதே வீதிகளில் அம்மன் மீண்டும் உலா வந்து அருள்பாலிப்பாள். இத் தேர்க்கால் பார்த்தல் எனப்படும். அடுத்தநாள் ஞாயிறன்று மஞ்சள் நீராட்டு, மகா அபிஷேகத்துடன் விழா இனிதே நிறைவு பெறும்.
    கிராமங்களில் இம்மாதிரி ஒற்றுமையோடும் நல் இணக்கத்தோடும் வாழ வழிவகை செய்யும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    பொள்ளாச்சியில் இருந்து வடக்கிபாளையம் வழியாகப் பயணித்தால் 11கி.மீ தொலைவில் சூலக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் பாளையத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. டவுன் பஸ் வசதி உண்டு.
    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் உள்ளது மிகவும் பழமைவாய்ந்த சவுரிராஜப் பெருமாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் உள்ளது சவுரிராஜப் பெருமாள் கோவில். பழமைவாய்ந்த இந்த ஆலயத்தின் மூலவர் பெயர் நீலமேகப்பெருமாள் என்பதாகும். உற்சவர் திருநாமமே சவுரிராஜப் பெருமாள். தாயார் திருநாமம் கண்ணபுரநாயகி.

    சில முனிவர்கள் இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தனர். சாப்பாடு, தூக்கத்தை பொருட்படுத்தாது தவம் செய்து வந்ததால், அவர்களின் தேகம் மிகவும் மெலிந்து நெற்கதிர்களைப் போன்று காணப்பட்டது.

    இந்த நேரத்தில் உபரிசிரவசு என்ற மன்னன், தனது படையுடன் அந்த வழியாக வந்து கொண்டிருந்தான். அவன் மகாவிஷ்ணுவிடம் ‘அஷ்டாட்சர மந்திரம்’ கற்றவன். மன்னனுக்கும், அவனது படை வீரர்களுக்கும் பசி ஏற்பட்டது. அவர்கள் தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை, நெற்கதிர்கள் என்று நினைத்து அவர்களை வாளால் வெட்ட முயன்றனர். இதனைக் கண்ட மகாவிஷ்ணு, சிறுவன் வேடம் தரித்து வந்து மன்னன் மற்றும் அவனது படைவீரர்களுடன் போரிட்டார்.

    மன்னனால் அந்தச் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் மன்னன், தான் கற்றிருந்த அஷ்டாட்சர மந்திரத்தை சிறுவன் மீது ஏவினான். ஆனால் அந்த மந்திரம், சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைக் கண்ட மன்னன், தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து மன்னிப்புக் கேட்டான். விஷ்ணுவும் அவனை மன்னித்து நீலமேகப் பெருமாளாக காட்சி தந்தார். மன்னனின் வேண்டுதல் படி இந்தத் தலத்தில் எழுந்தருளினார். பிறகு மன்னன், தேவ சிற்பியான விஸ்வகர்மாவைக் கொண்டு இங்கு கோவில் கட்டியதாக தல வரலாறு தெரிவிக்கிறது.


    இந்த ஆலயத்தின் மேலும் சில சிறப்புகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    சவுரிராஜப் பெருமாள் :

    ஒரு சமயம் இந்த ஆலயத்தின் அர்ச்சகராக இருந்த ஒருவர், இறைவனுக்கு சாத்தியிருந்த மாலையை தன் காதலிக்கு சூட்டிவிட்டார். அந்த நேரத்தில் மன்னரும் ஆலயத்திற்கு வந்தார். அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் மாலை இல்லை. எனவே தன் காதலிக்கு சூட்டிய மாலையையே, மன்னருக்கும் சூட்டிவிட்டார். ஆனால் அந்த மாலையில், அந்தப் பெண்ணின் கூந்தல் முடி இருந்ததைக் கண்ட மன்னன், ‘மாலையில் இவ்வளவு பெரிய முடி எப்படி வந்தது?’ என்று கேள்வி எழுப்பினான்.

    விழி பிதுங்கிப்போன அர்ச்சகர், ‘பெருமாளின் தலையில் இருந்த முடிதான் அது’ என பொய் சொல்லிவிட்டார்.

    மன்னருக்கு பலத்த சந்தேகம். ‘நான் பெருமாளின் திருமுடியைப் பார்க்க வேண்டும்’ என்றார்.

    மறுநாள் கோவிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக கூறி அப்போதைக்கு அர்ச்சகர் தப்பித்துக் கொண்டார். ஆனால் மறுநாள் மன்னனிடம், பெருமாளின் தலை முடியை காட்டியாக வேண்டுமே. சுவாமிக்கு திருமுடி இல்லை என்பது உறுதியாகும் பட்சத்தில் அர்ச்சகரின் நிலை என்ன?

    கலங்கிப் போன அர்ச்சகர், அன்று இரவு முழுவதும் பெருமாளின் சன்னிதியிலேயே இருந்து, தன்னைக் காத்தருளும்படி இறைவனை வேண்டினார்.

    மறுநாள் மன்னர் கோவிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்து கொண்டே சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட, பெருமாள் திருமுடியுடன் காட்சி தந்தார். பக்தனுக்காக இப்படி காட்சி தந்த இறைவன், ‘சவுரிராஜப் பெருமாள்’ என்று பெயர் பெற்றார். இவர் இத்தலத்தில் உற்சவராக தலையில் முடியுடன் காணப்படுகிறார். அமாவாசை அன்று திருவீதி உலா செல்லும் போது மட்டுமே பக்தர்கள், இறைவனின் திருமுடியை தரிசிக்க முடியும்.

    சக்தியை இழந்த கருடன் :



    தன் தாயை மீட்பதற்காக தேவேந்திரனிடம் இருந்து அமிர்தத்தைப் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார் கருடன். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தைத் தான் கொண்டு வருவதை எண்ணி அவர் மனம் கர்வம் கொண்டது. அந்த கர்வத்துடன், திருக்கண்ணபுரம் ஆலயத்தின் மேலே பறந்து சென்றபோது, அவரது சக்திகளை இழந்து கடலில் விழுந்தார். தவறை உணர்ந்த கருடன், இத்தல இறைவனிடம் மன்னிப்பு வேண்டியதுடன், கடலுக்குள் இருந்த ஒரு மலையின் மீது பெருமாளை நினைத்து தவம் இருந்தார். விஷ்ணு அவரை மன்னித்து, தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார். மாசி மாத பவுர்ணமி தினத்தில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது.

    மும்மூர்த்தி தரிசனம் :

    இத்தல இறைவன் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் பிரயோகச் சக்கரத்துடன் அருள்கிறார். அவருக்கு அருகில் கருடன், வணங்கிய கோலத்தில் இருக்கிறார். வைகாசி பிரமோற்சவத்தின் போது, சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருவார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

    விபீஷ்ணனைத் தனது தம்பிகளில் ஒருவராக ஏற்றுக்கொண்ட ராமபிரான், அவனுக்கு இந்த ஆலயத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்தார். அமாவாசை தோறும் உச்சிகால பூஜையில் பெருமாள், விபீஷ்ணனுக்கு நடையழகு காண்பித்தருளும் நிகழ்வு நடக்கிறது. இந்த ஆலயத்தை நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    முனையதரையன் பொங்கல் :


    நாகை மாட்டம் பகுதியை முனையதரையன் என்பவர் மேற்பார்வை பார்த்து வந்தார். அவர் தினமும் திருக்கண்ணபுரம் பெருமாளை வணங்கிவிட்டு உணவு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். பெருமாளுக்கு சேவை செய்ய பணத்தை செலவு செய்ததால், முனையதரையனால், மன்னனுக்கு கப்பம் கட்ட முடியவில்லை. இதனால் முனையதரையன் கைது செய்யப்பட்டார். அன்று மன்னனின் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, முனையதரையனை விடுவிக்கும்படி சொல்லவே, மன்னன் அவரை விடுவித்தான்.

    இரவு வீடு திரும்பிய முனையதரையனுக்கு அரிசி, பருப்பு, உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தாள் அவரது மனைவி. அவர் அதை பெருமாளுக்கு மானசீகமாக நைவேத்தியம் படைத்து விட்டு சாப்பிட்டார். மறுநாள் திருக்கண்ணபுரம் ஆலய அர்ச்சகர் கோவிலை திறந்தபோது, மூலவரின் வாயில் பொங்கல் ஒட்டியிருப்பதைக் கண்டார். அது முனையதரையன் படைத்த பொங்கல் என்று இறைவன் அசரீரியாக மக்களுக்கு தெரிவித்தார். இதையடுத்து கோவிலில் இரவு பூஜையின் போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் வந்தது. இதனை ‘முனையதரையன் பொங்கல்’ என்றே சொல்கிறார்கள்.
    தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் பிரசித்திப்பெற்றது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் பிரசித்திப்பெற்றது. தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

    அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ‘மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்’ என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம் தருகிறார். ஸ்ரீ ராமநவமி விழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு :

    இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.

    முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.

    அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா’ என பாடியுள்ளார்.



    ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.

    அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.

    அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார். இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.

    சரயுபுஷ்கரணி :

    தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயமான வடுவூர் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

    பிரபையில் காளிங்கநர்த்தன கண்ணபிரான் உபய நாச்சியாருடன் விளங்குகிறார். பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிரில் கண்ணாடி அறையும் பெரிய திருவடி (கருட) சன்னிதியும் மேற்கு நோக்கி உள்ளன. மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் சுவரையொட்டி வரிசையாக மூலவர்களாக விக்னேசுவரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் முதலியன ஆழ்வார்கள் உள்ளனர். இதையொட்டியுள்ள தெற்கு நோக்கிய சன்னிதிக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயாருடன் மூலவராகவும், ஸ்ரீ கோபாலன் ருக்மணி சத்யபாமாவுடன், உற்சவராகவும் காட்சி தருகிறார்.

    அர்த்த மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்ணாடியினுள்ளே கோதண்டராமரின் பிரதிபிம்ப சேவை கிடைக்கும். ஆலய தல விருட்சம் வகுள மரம் ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    சித்திரை மாதம் அட்சயதிரிதியை, ஆடிமாதம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி மாதம் ஸ்ரீ ராமநவமியையொட்டி புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அமைவிடம் :

    வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.
    உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் கம்போடியா நாட்டில் உள்ள ‘அங்கோர் வாட்’ என்று அழைக்கப்படும் பிரமாண்ட கோவில்.
    உலகின் மிகவும் பிரமாண்டமான ஆலயம், கம்போடியா நாட்டில் உள்ளது. உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இந்த ஆலயம் ‘அங்கோர் வாட்’ என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட கோவில், கலை பொக்கிஷம் என்று போற்றப்படும் அங்கோர் வாட் ஆலயத்தை, தமிழ் மன்னர் ஒருவர் கட்டியிருப்பது தான் ஆச்சரியமான தகவல். ஆம்.. இந்த ஆலயத்தை இவ்வளவு அற்புதமாக கட்டி முடித்த பெருமை இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனையேச் சாரும். போரில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த இந்த இடத்தை, சூரியவர்மன் அழகானக் கோவிலாக மாற்றியிருக்கிறார்.

    இந்தக் கோவிலானது சுமார் 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்றுச்சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால், அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடப் பணி நிறைவு பெறுவதற்கு, 27 ஆண்டு கள் ஆகியிருக்கிறது. இந்த ஆலயம் கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்து விட்டார்.

    இரண்டாம் சூரியவர்மன் கட்டியபோது, அது ஒரு வைணவக் கோவிலாக இருந்ததாகவும், ஆறாம் ‘ஜெயவர்மன்’ ஆட்சிக்கு வந்த பிறகு, புத்தக் கோவிலாக மாற்றம் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. இன்றுவரை இது புத்த ஆலயமாகவே விளங்கி வருகிறது. அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்தக் கோவில் அமைந்திருப்பதால், பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்ச்சுகீசிய துறவியால் மீண்டும் இந்த ஆலயம் வெளியுலகிற்கு தெரியவந்தது.

    இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு, கம்போடிய தேசியக்கொடியில் ‘அங்கோர் வாட்’ கோவிலை பொறித்துள்ளது. எந்த ஒரு கேமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது என்பதே, இந்த ஆலயத்தின் பிரமாண்டத்தை பறைசாற்றும். இரண்டாம் ‘சூரியவர்மன்’ இந்த இடத்தை கைப்பற்றியவுடன், இந்த ஆலயத்தைக் கட்டியிருக்கிறார். இந்த இடம் தான் அவரது ஆட்சியில் தலை நகரமாக செயல்பட்டிருக்கிறது.



    இந்தக் கோவிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம். திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இதுபோன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என சில பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில், 27 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    நடுவில் இருக்கும் 5 கோவில்களை, ஒரு அகழியும், மூன்று மண்டபங்களும் சூழ்ந்துள்ளன. மேற்கில் இருந்து வரும்போது அகழியின் மேல் அமைந்துள்ள நீண்ட பாலத்தின் வழியாக முதலாவது வெளி மண்ட பத்தை அடையலாம். முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம், தாமரை வடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர், நடனமாடும் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுவரின் வெளிப்புறத்தில் தூண்களோடு கூடிய பல கணிகள், தேவதைகள் மற்றும் விலங்குகளின் மீது அமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் தேவதைகளின் உருவங்கள் காணப்படுகின்றன.

    முதல் மண்டபத்தில் இருந்து நீண்ட வழி மூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச் சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து செல்லும்படி அமைந்துள்ளது. இரண்டாவது மண்டபத்தின் உட் சுவர்களில் வரிசையாக புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த தளத்தின் மீது அமைந்திருப்பதுடன், மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோவில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம், கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    மன்னனின் மனம் போல உயர்ந்து நிற்கும் இந்தத் திருக்கோவில், கடந்த 200 ஆண்டுகளாக வழி பாடின்றி இருக்கிறது. தற்பொழுது ஜப்பான், ஜெர்மன் காரர்கள் திருப்பணி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் இப்போது காட்சியகத்தில் இருக்கின்றன.
    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு வடமேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னூர் என்ற இடத்தில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்.
    சிவாலயங்களில் காலைசந்தி எனப்படும் காலை நேர ஆராதனை, காலை ஆறு மணியளவில் நடைபெறுவது வழக்கம். ஆனால் பொன்னூரில் விடியற்காலை 4.30 மணிக்கே காலை பூஜைகள் நடைபெறுகிறது. அங்கு மட்டும் முன்கூட்டியே இந்த காலைசந்தி பூஜை நடைபெறுவதற்கான காரணம் ஏதும் இருக்கிறதா? என்று கேட்டதில், ‘ஆம்’ என்றனர்.

    அது என்ன கதை என்று பார்ப்போம்.

    பொன்னூரில் உள்ளது ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் ஆபத்சகாயேஸ்வரர் என்பதாகும். அக்னி தேவருக்கு அருள்பாலித்ததால் ‘அக்னீசுவரர்’ என்றும், பாண்டவருக்கு காட்சி கொடுத்ததால் ‘பாண்டவேசுவரர்’ என்றும், ரதிதேவிக்கு கருணை புரிந்ததால் ‘ரதீசுவரர்’ என்றும் பல்வேறு பெயர்களால் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பெரியநாயகி. திரு அன்னியூர் என்று புராணங்களில் அழைக்கப்படும் இந்த ஊர், தற்போது பொன்னூர் என்றே குறிப்பிடப்படுகிறது.

    ஆலய அமைப்பு

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே உள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம். இந்த தீர்த்தத்தை காமசரஸ், சூரியபுஷ்கரணி, வருண தீர்த்தம் என்ற பெயர்களிலும் அழைக்கிறார்கள். கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தத் தீர்த்தத்தில் நீராடி, இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் பாவங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள். தவிர, அரிச்சந்திரன், பாண்டவர், ரதிதேவி முதலியோர் இத்திருக்குளத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டு, தங்களின் பாவங்கள் கரைந்து, நலம் பல பெற்றதாக தல புராணம் கூறுகிறது.

    கோவிலின் அழகிய முகப்பைக் கடந்தவுடன் விசாலமான பிரகாரம் நம்மை வரவேற்கும். அங்கே தனிமண்டபத்தில் உள்ள நந்தியம்பெருமானையும், பலி பீடத்தையும் காணலாம். அதைக் கடந்ததும் மகா மண்டபத்தில் நாம் நுழையலாம். இந்த மண்டபத்தின் வலது புறம் இறைவி ப்ருஹந்நாயகியின் சன்னிதி உள்ளது. இறைவியின் இன்னொரு பெயர் பெரிய நாயகி. இறைவி நான்கு கரங் களுடன் நின்ற கோலத்தில் புன்னகைத் தவழ, தென்முகம் நோக்கி அருள்பாலிக்கும் அழகே அழகு. இறைவியின் சன்னிதிக்கு முன்பாக வும், பலிபீடமும் நந்தியும் இருக்கிறது. கருவறை நுழைவுவாசலின் வலதுபுறம் காமாட்சி அம்மன் திருமேனி உள்ளது.

    மகாமண்டபத்தின் தென்புறம் நால்வர் திருமேனிகளும், கிழக்கே சனீஸ்வரன், நாகர், சூரியன், பைரவர் திருமேனிகளும் உள்ளன. இறைவனின் அர்த்த மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் கொலுவிருக்க, அடுத்து உள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியில், சுயம்பு லிங்கமாய் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கருவறை நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகர் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

    சூரிய பூஜை :

    மயனின் மகளைத்தான் சூரியன் மணந்து கொண்டான். தன் மகளை இழிவுபடுத்தியதால், மயன் சூரியனின் கையை வெட்டினான். கை வெட்டுண்ட சூரியனைப் பார்த்து அவனது மனைவி கதறினாள்; கண்ணீர் விட்டாள். தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் சென்று வேண்டினாள். இழந்த தன் கணவனின் கையை மீண்டும் பெறுவதற்கு வழி சொல்லுமாறு மன்றாடினாள்.

    அவரோ, பூலோகத்தில் இருக்கும் திருஅன்னியூர் சென்று, அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அத்தலத்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் இழந்த கையை சூரியன் மீண்டும் பெறலாம் எனக் கூறினார். அதன்படி, சூரியனும், அவர் மனைவியும் திருஅன்னியூர் வந்தனர். ஆலயத்தின் எதிரே உள்ள தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும் இறைவியையும் வழிபட்டனர். சூரியன் தனது கையை மீண்டும் பெற்றார்.

    இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரியன் ஆண்டுதோறும், பங்குனி மாதம் 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஐந்து நாட்களும் தனது பொற்கதிர்களால் இறைவனை ஆராதித்து வருகிறார். காலை 6 மணி அளவில் இத்தலத்து இறைவனை சூரியன் வழிபடும் காட்சியைக் காண பக்தர்கள் கூடுவார்கள். இதனால் அந்த ஐந்து நாட்களும் காலை 4.30 மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு, இறைவனுக்கும் இறைவிக்கும் காலை நேர ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. பின் காலை ஆறு மணிக்கு சூரியன் இறைவனை தன் குளுமையான பொற்கதிர்களால் பூஜை செய்யும் காட்சி தொடங்குகிறது. இந்த அற்புதமான சூரிய பூஜையை, அந்நாட்களில் தினசரி ஏராளமான பக்தர்கள் தரிசித்து பரவசம் அடைவது இன்றும் கண்கூடாகக் காணும் காட்சியாகும்.


    ஆபத்சகாயேஸ்வரர், பெரியநாயகி,

    பரிகார தெய்வங்கள் :

    மேற்குப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், மகாலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசவர் சன்னிதியும் தலவிருட்சமான எலுமிச்சை மரமும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆதி தட்சிணாமூர்த்தி திரு மேனிகளும், மேற்கு திசையில் லிங்கோத்பவரும், வடக்குத் திசையில் துர்க்கையம்மனும் அருள்பாலிக்கின்றனர்.

    தினசரி காலை, சாயரட்சை, அர்த்த சாம பூஜை என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம் இது. பிரதோஷம், ஆண்டு பிறப்பு, திருவாதிரை, பொங்கல், தீபாவளி, கார்த்திகை ஞாயிறு ஆகிய நாட்களில் இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இத்தலத்து இறைவி பெரியநாயகி. பெண்களின் மனம் கவர்ந்த நாயகி. பெண்களின் குறைகளை தீர்த்து வைப்பதில் நிகரற்றவள் என பக்தர்கள் கூறுகின்றனர். குழந்தை இல்லாத பெண்கள் இத்தலத்து இறைவியிடம் வந்து மனமுருக வேண்டி, ஆராதனை செய்துவிட்டு செல்கின்றனர். அடுத்த ஆண்டே அவர்களுக்கு குழந்தைபேறு கிட்டுகிறது என்கின்றனர் பக்தர்கள்.

    தங்களது குழந்தைகளுடன், மீண்டும் வரும் பெண்கள், இறைவிக்கு கைநிறைய வளையல்களைக் கொண்டு வந்து, அதை இறைவிக்கு அணிவித்து நன்றி தெரிவித்து வழிபட்டு செல்கின்றனர். அவர்கள் மனமும் மகிழ்வில் நிறைகிறது.

    அக்னி பகவான் :

    இத்தலத்தின் தல விருட்சம் எலுமிச்சை மரம். இந்த எலுமிச்சை மரத்தடியில் அமர்ந்துதான், இறைவன் அக்னி பகவானுக்கு அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு. அந்த கதை என்ன?

    இந்திரனும், பிரம்மாவும் சிவபெருமானை நோக்கி பல தவங்கள் செய்தனர். யாகங்கள் செய்தனர். ஒரு முறை யாக குண்டத்தில் இருந்த உணவை, ருசியாக இருந்தது என்பதால் அக்னி பகவான் அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டார். இதனால் அக்னி பகவானை நோய் பற்றிக்கொண்டது. அவரது உடல் மெலிந்து போனது. அக்னி பகவானின் மனைவி சுவாகா தேவி, தேவர்களின் குருவான பிரகஸ்பதியிடம் சென்று, தன் கணவனின் நிலையை எடுத்துக்கூறினாள்.

    பிரகஸ்பதி கூறியபடி திரு அன்னியூர் வந்தனர் இருவரும். தீர்த்தத்தில் நீராடி இறைவனையும், இறைவியையும் வழிபட்டனர். இறைவன் தலவிருட்சமான எலுமிச்சை மரத்தடியில் எழுந்தருளி அக்னி தேவனுக்கு அருள்புரிந்து, அவரது நோயை குணமாக்கினார். எலுமிச்சை மரத்தடியில் எழுந்தருளியதால் இறைவன் ‘விகு சாரண்யேசுவரர்’ எனப் பெயர் பெற்றார். இவர் ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தனி மண்டபத்தில் கீழ்திசை நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு வடமேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பொன்னூர் என்ற இந்த தலம்.
    திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆயிரத்தம்மன் ஆலயம். ஆயிரம் கண் உடையவள் என்பதால் இந்த அம்மன் ‘ஆயிரத்தம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.

    பல்லாண்டு காலத்திற்கு முன்பு இந்த அம்மன், பட்டாளத்து லயனில் (தற்போது உள்ள சமாதானபுரம்) ஒரு ஓலைக்குடிசையில் குடிகொண்டு இருந்தாள். அப்போது இந்தப் பகுதியில் கொடிய தொற்று நோய் பரவியது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் பீதியடைந்தனர்.

    இதனையடுத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அம்மனை வேண்டி பொங்கலிட்டு, தொற்று நோயில் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டி வழிபட்டனர். அங்கு வாழ்ந்து வந்த மக்களில் பெரும்பாலானோர் பட்டாளத்து வீரர்கள் ஆவார்கள். அவர்களும் அம்மனை வழிபடுவதற்காக கோவிலுக்குச் சென்றனர். இதனால் பட்டாளத்து வீரர்களால் அணிவகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் கோபம் கொண்ட அஹ்னிதுரை என்ற நவாப், பட்டாளத்து வீரர்களை அழைத்து ‘ஏன் அணிவகுப்புக்கு வரவில்லை?’ என்று கேட்டான்.

    அதற்கு வீரன் ஒருவன், ‘இந்தப் பகுதியில் பரவியுள்ள நோய் தீர வேண்டி அம்மனுக்கு பொங்கல் வைக்க சென்றிருந்தோம். அதனால் அணிவகுப்புக்கு வர இயலாமல் போய் விட்டது’ என்றான்.

    அதை கேட்டு ஆத்திர மடைந்த துரை, அம்மனின் திருமேனி மீது சுடுமாறு உத்தரவிட்டான். இதனால் அம்மன் சிலையின் கைகள், கால்கள், இடுப்பு பகுதி நொறுங்கி போய் விட்டது. மறுநாள் துரைக்கும், அவனது குடும்பத்தினருக்கும் கொடிய நோய் ஏற்பட்டு மிகுந்த கஷ்டத்திற்கு ஆளானார்கள்.



    இதனால் பயந்துபோன துரை, தான் செய்த தவறை மன்னித்து விடுமாறும், தனது குடும்பத்தினரை காப்பாற்றுமாறும் அன்னையை வேண்டினான். மனம் இரங்கிய அம்மன், துரையின் குடும்பத்தினரை நோயில் இருந்து காப்பாற்றினாள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அம்மனின் சக்தி அனைவருக்கும் தெரியவந்தது.

    சில காலம் கழித்து, பாளையங்கோட்டையில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அந்த ஆலயத்தின் கன்னி மூலையில் அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

    இதற்கிடையில் ஆயிரத்தம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அதில் பின்னம் அடைந்த அம்மன் சிலையே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனுக்கு புதியதாக சிலை செய்ய வேண்டும் என்று மக்கள் எண்ணி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஆனால் அருள் வாக்கு கூறிய அம்மன், தான் இப்படியே இருக்க விரும்புவதாக தெரிவித்ததால் மக்கள் மேற்கொண்டு எந்த பணியையும் செய்யவில்லை.

    இதையடுத்து புதியதாக செய்யப்பட்ட அம்மன் சிலை, சிவன் கோவிலில் (திரிபுராந்தீஸ்வரர் கோவில்) வைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்தம்மன் கோவிலில் தற்போதும் நொறுங்கிய நிலையில் உள்ள அம்மனின் சிலையே வழிபாட்டில் இருக்கிறது.

    இக்கோவிலில் தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் பூஜைகள் நடைபெறுகிறது. இக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் பத்தாவது நாள் அன்று, இக்கோவில் மற்றும் அருகில் உள்ள 12 அம்மன் கோவில்களில் இருந்து சப்பரங்கள் வீதி உலா வரும்.

    கர்நாடக மாநிலம் மைசூர், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் ஆகிய ஊர்களுக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா பாளையங்கோட்டையில் கோலாகலமாக நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.
    வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது.
    வடக்கே காசி, தெற்கே தென்காசி, நடுவில் சிவகாசி ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. சிவகாசியில் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது. சிவன் காசியில் இருந்து வந்து தங்கிய இடம் என்பதால், இந்த திருத்தலம் ‘சிவன் காசி’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே நாளடைவில் ‘சிவகாசி’ என்று உருப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

    காசி லிங்கம் :

    பொதிகை மலைப் பகுதியில் உள்ள தென்காசியில் சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வர, தன் மனைவியுடன் சென்றான். கங்கையில் புனித நீராடி ஒரு காராம் பசு மீது லிங்கத்தை ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி சென்றான்.

    பலநாள் பயணம் செய்து வரும் வழியில், தற்போது சிவகாசி நகரம் உள்ள இடத்தில் தங்கினான். அப்போது சிவகாசி வில்வ வனக் காடாக இருந்தது. மறுநாள் அரசனின் மனைவிக்கு பயணம் செய்ய முடியாதபடி உடல்நிலை மோசமானது. உடன் வந்த காராம் பசுவும், மன்னனுடன் வர மறுத்தது. இதனால் சிவலிங்கத்தை தென்காசிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உருவானது.

    இதையடுத்து மன்னன், காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை வில்வ வனக் காட்டிலேயே பிரதிஷ்டை செய்தான். அந்த சிவலிங்கமே காசி விஸ்வ நாதர் என்று அழைக்கப்படுகிறது. அரிகேசரி பராங்குச மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னர்கள், இந்தக் கோவிலில் மண்டபங்கள், பிரகாரம், தீர்த்தம், சுற்றுமதில், ரத வீதிகளை அமைத்து திருப்பணிகளைச் செய்தனர்.

    இந்துக்கள் அனைவரும் தன் வாழ்வில் ஒரு நாளேனும் காசி யாத்திரை சென்று வர வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். ஆனால் இன்றைய நவீன வசதி படைத்த காலத்திலும் கூட பலரால் காசிக்கு சென்று வர முடிவதில்லை. அப்படிப்பட்டவர்கள், சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதரை வணங்கி வழிபட்டாலே போதுமானது. காசியில் வழிபட்ட பலனைப் பெறலாம்.



    இந்த ஆலயத்தில் காசி விஸ்வநாதருடன், விசாலாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இறைவனையும், இறைவியையும் சேர்த்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும். பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் பிரதோஷ நாட்களில் இந்த ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிவகாசியில் கோவிலைக் கட்டிய பராங்குச மன்னன், தன் தவ வலிமையில் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. துறவு நிலைக்குப் பின்னர், மன்னன் பராசரர் என்று அழைக்கப்பட்டான்.

    தினமும் ஆகாய மார்க்கமாகச் சென்று, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு, திரும்பும் வழியில் சிவகாசி விஸ்வநாதரையும் வணங்கி விட்டு, பின்னர் தென்காசி செல்வதை பராசரர் வழக்கமாக வைத்திருந்தார். விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், தொடர்ந்து 11 வாரங்கள் சிவகாசி காசி விஸ்வநாதரை வணங்கினால், அவர்களின் பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    சிவகாசிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, பல ஊர்களைச் சேர்ந்த வணிகர்கள் வியாபாரம் தொடர்பாக வந்து போனார்கள். அவர்கள் இங்குள்ள விஸ்வநாத சுவாமியை வழிபாடு செய்ய தவறுவதில்லை. அவர்களின் தொழில் வளம் பெருக, இந்த இறைவனே காரணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இன்றும் தொழில் வளம் பெருக, வணிகர்கள் பலரும் விஸ்வநாதரை 11 வாரம் தொடர்ச்சியாக வழிபட்டு சிறப்பு பெற்று வருகின்றனர்.

    இந்த ஆலயத்தில் துர்க்கை அம்மன், வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், விநாயகர், நடராஜர், மீனாட்சி அம்மன், வீரபத்திரர், பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு தனித் தனி சன்னிதிகள் உள்ளன.
    திருநெல்வேலியில் குறுக்குத்துறை அருகே கருப்பூந்துறை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அழியாபதி ஈசன் சமேத சிவகாமி அம்பாள் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
    திருநெல்வேலியில் குறுக்குத்துறை அருகே கருப்பூந்துறை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது அழியாபதி ஈசன் சமேத சிவகாமி அம்பாள் ஆலயம். கோரக்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலய இறைவனுக்கு, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு வீரபாண்டிய மன்னனால் ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    கற்கோட்டையாக விமானத்துடன் கூடிய கருவறையும், அர்த்த மண்டபம், மகா மண்ட பம், வசந்த மண்டபம், மணி மண்டபம், உள்பிரகார சுற்று, வெளிப்பிரகார சுற்று என பெரிய ஆலயமாக திகழ்கிறது. ஆலயத்தின் முகப்பில் ‘காருண்ய தீர்த்தகுளம்’ இருந்ததாகவும், அதில் இருந்துதான் இறைவனின் அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். காலப்போக்கில் வெளிப் பிரகாரங்களும், காருண்ய குளமும் அழிந்து விட்டாலும், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவை மட்டும் எஞ்சியபடி இருக்கின்றன.

    இந்த ஆலயத்தை சுற்றிலும் எங்கு பார்த்தாலும் வில்வ மரங்களும், வயல் வெளிகளும் சூழப்பட்டு பசுமையாக காட்சி அளிக்கிறது. பிரம்ம மரமான அத்தி மரமே ஆலயத்தின் தல விருட்சமாக அமைந்துள்ளது. வீரபாண்டிய மன்னனுக்கு பின்னர் இந்த ஆலயம் சுமார் 80 வருடங்களுக்கு முன்பு அமாவாசை சித்தர் என்பவரால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனால் அவரது சமாதியும் ஆலயத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

    இத்தல இறைவனான அழியாபதி ஈசன், கோபுர விமானத்துடன் கூடிய கருவறையில் அமர்ந்துள்ளார். மகா மண்டபத்தில் சிவகாம சுந்தரி அம்பாள் தனி கோபுர விமானத்துடன் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருப்பதால், ‘சவுந்தரி’ என்ற பெயரும் அம்பிகைக்கு உண்டு. தென்மேற்கு திசை நோக்கி ஈசனை தரிசித்த வண்ணம் கொடியிடை வளைத்து நின்ற கோலத்தில் அன்னை தரிசனம் தருகிறாள். அன்னையின் கடைக்கண் பார்வை ஈசனுக்காக ஏங்குகிறதா அல்லது ஈசனது பார்வை சிவகாமியின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறதா என்பது போன்ற அற்புதமான காட்சியை இங்குதான் காண இயலும்.

    ஈசனின் கருவறையின் முகப்பில் இருபுறமும் விநாயக பெருமானும், முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். மணி மண்டபத்தின் முகப்பில் துவார பாலகர்களும், வெளிப்பிரகாரத்தில் சுவாமிக்கு வலப்பக்கத்தில் தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், பின்புறத்தில் கன்னிமூல விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர், பூதநாத சாஸ்தா, பகவதி அம்பாள் அனைவரும் விமானத்துடன் கூடிய தனித்தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றனர். நாக தெய்வங்களுக்கு தனிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு இடப்புறமாக சண்டிகேஸ்வரரும், பைரவரும் தனித்தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில் இருந்து அருள்புரிகின்றனர்.

    தட்சன், தான் நடத்திய யாகத்தின்போது ஈசனை அழைக்காமலும், அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகம் கொடுக்காமலும் அவமதித்தான். இதனால் கோபம் கொண்டு வெகுண்டெழுந்த ஈசன், பைரவராக மாறி தட்சனின் தலையை கொய்து விட்டு தாமிரபரணி கரையோரம் உள்ள மேலநத்தம் என்ற இடத்தில் உக்கிரமாக தவம் மேற்கொண்டார். அவருடைய உக்கிரமான தவத்தின் காரணமாக நத்தம் பகுதிக்கு அருகே உள்ள கருப்பூந்துறை, கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் வரையான வயல்பகுதிகள் யாவும் தீக்கிரையாகியது. (குறுக்குத்துறை அருகே உள்ள வயல்கள் யாவும் கருகியதால் கரிக்காதோப்பு, கருங்காடு, கருப்பூந்துறை என்று இன்றும் அழைக்கப்படுகிறது).

    அக்னியின் நாக்குகள் தன்னுடைய உக்கிரத்தை அதிகப்படுத்தி கருங்காடு வரை சென்றது. இன்னும் அதிக உக்கிரம் அடைந்தால் திருநெல்வேலி வயல் பகுதிகள் யாவும் அழிந்து விடும் என்பதால், கருங்காடு பகுதியில் தீயின் சீற்றம் அதிகம் பரவாமல் இருப்பதற்காக பரவா எல்லைநாதர் தோன்றி ஈசனின் உக்கிரத்தை கட்டுப்படுத்தினார். (இன்றும் கருங்காட்டில் பரவா எல்லைநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 1000 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது என்று வரலாறு தெரிவிக்கிறது.

    ஈசனின் உக்கிரமான தவத்தின் காரணமாக வயல் பகுதிகள் யாவும் தீக்கிரையாகி பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த கோரக்க மகரிஷி, ஈசனை வழிபட முயன்றார். ஈசன் அக்னீஸ்வரராக இருப்பதை கண்டு தனது ஞான திருஷ்டியின் மூலம் அவருடைய உக்கிரத்தின் காரணத்தை அறிந்தார். உடனடியாக அக்னீஸ்வரரை சாந்தப்படுத்துவதற்காக நேர் எதிரில் கிழக்கு முகமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார். சித்தர்கள் அனைவரும் பவுர்ணமி அன்று ஒன்று சேர்ந்து அழியாபதி ஈசனாருக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடத்தி அக்னீஸ்வரரை சாந்தமாக் கினர்.

    தட்சனை அழித்து உக்கிரவடிவில் காட்சியளித்த சிவனே, மேலநத்தம் பகுதியில் மேற்கு முகமாக அமர்ந்து அக்னீஸ்வரராகவும், நெல்லையம்பலத்தை அழியாமல் காத்து பக்தர்களுக்காக அவதாரம் எடுத்த சாந்த மூர்த்தியே, நேர் எதிரே கிழக்கு முகமாக அமர்ந்து முக்தி அளிக்கும் அழியாபதி ஈசனாகவும் அருள்பாலிக்கின்றனர்.

    இவ்வாலயத்தில் முக்கிய திரு விழாக்களாக சித்திரை முதல்நாள், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி திருக்கல்யாணம், திருக் கார்த்திகை, தை மாதப்பிறப்பு, மாசி மகா சிவராத்திரி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுகிறது. இது தவிர தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கிறது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

    மகா சிவராத்திரி அன்று சூரிய பகவான், அதிகாலையில் தனது கதிர்களால் ஈசனது கருவறையில் ஒளிவீசுவார். இந்த ஆலயம் தீபம் ஏற்றுவதற்கு என்றே உள்ள பிரதானமான ஆலயம். இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் அகல் தீபம் ஏற்றிய பின்னர்தான் ஈசனையே வழிபடுகிறார்கள். கோரக்க மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகச்சிறப்பான லிங்கம் இவ்வாலயத்தில் உள்ளது. ஆலயத்திற்கு நுழையும் வழியில் அத்தி மரமும், வில்வ மரமும் ஒன்றுக்குள் ஒன்று பொதிந்து ஒரே மரமாக இருப்பதும் அதிசயமாகும். இந்த ஆலயத்தில் 7 வியாழக்கிழமைகள் தொடர்ந்து பூஜை செய்து சித்தர்களின் அருளை பெறலாம்.

    திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து மீனாட்சிபுரம், சி.என்.கிராமம் வழியாகவும், திருநெல்வேலி டவுனில் இருந்து குறுக்குத்துறை, நத்தம் ரோடு வழியாகவும் இந்தக் கோவிலுக்கு செல்லலாம். ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.
    பூரியை ஆட்சி செய்து வந்த இந்திர தையுமா என்ற மன்னனால், பூரி ஜெகந்நாதர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தைப் பற்றிய மேலும் சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
    இந்தியாவின் புனித தலங்களில் நான்கு மிக முக்கியமானவை. அவை துவாரகை, பத்ரிநாத், ராமேஸ்வரம் மற்றும் பூரி. இதில் பூரி ஜெகந்நாதர் ஆலயமானது, வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. பூரியை ஆட்சி செய்து வந்த இந்திர தையுமா என்ற மன்னனால், பூரி ஜெகந்நாதர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயம் காலவெள்ளத்தில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் கூட அந்த இடத்தில் பலகோவில்கள் கட்டப்பட்டன.

    அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. பின்னர் கி.பி.12-ம் நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசர்களால் தற்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த சோடகங்கன், ராஜேந்திரச் சோழனின் வழி வந்தவன் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலைக் கட்ட கங்கையில் இருந்து கோதாவரி வரையான சாம்ராஜ்யத்திற்கு உட்பட்ட மக்களின் 12 ஆண்டுகால வரிப்பணத்தை செலவிட்டிருக்கிறார்கள். இந்த ஆலயத்தைப் பற்றிய மேலும் சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

    மனிதனுக்கு பொறுமை வேண்டும் :

    இந்திர தையுமா என்ற மன்னன் பூரியை ஆண்டு வந்தான். சிறந்த பக்திமானான அவனது கனவில் தோன்றிய பெருமாள், தனக்கு ஒரு கோவில் எழுப்பும்படி கூறினார். மேலும், கடலில் மிதந்து வரும், ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்கும்படியும் தெரிவித்தார். கனவில் இறைவன் சொன்னதை, தனக்கான உத்தரவாகவே எண்ணிய மன்னன், தன்னுடைய காவலர்களை பூரி கடற் கரைப் பகுதியில் காவலுக்கு நிறுத்தி வைத்தான். ‘கடலில் ஏதாவது பொருள் மிதந்து வந்தால், அதை எடுத்து வரும்படி உத்தரவிட்டான்’.

    நான்கைந்து நாட்களுக்குப் பிறகு, கடலில் ஒரு பெரிய மரக்கட்டை மிதந்து வந்தது. காவலர்கள் அதை எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த தலைசிறந்த தச்சர் ஒருவரிடம், அந்த மரத்தில் சிலை செய்யும் பணியை மன்னன் ஒப்படைத்தான். அவர் அந்த மரத்தில் உளியை வைத்தவுடன், அந்த உளி உடைந்து போனது. தொடக்கமே அபசகுணமாக இருந்ததால், மன்னன் வருத்தம் கொண்டான்.



    அப்போது பெருமாள், ஒரு முதிய தச்சர் வேடத்தில் அங்கு வந்தார். ‘மன்னா! 21 நாட்களில் சிலை செய்யும் பணியை முடித்துத் தருகிறேன். ஆனால் நான் வேலை செய்யும் அறையை யாரும் திறக்கக்கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். அரசனும் ஒப்புக்கொண்டான்.

    15 நாட்களுக்கு தொடர்ச்சியாக உளி சத்தம் கேட்டபடி இருந்தது. எனவே அரசன், வேலை மும்முரமாக நடப்பதாக எண்ணி அந்த அறை பக்கம் போகவில்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு எந்த சத்தமும் இல்லை. இதனால் ‘தச்சர் தூங்கி விட்டாரோ’ என்று எண்ணிய அரசன், அறைக்கதவை திறந்தான்.

    அங்கே பெருமாள் பெரிய உருவம் எடுத்து நின்றார். ‘மனிதனுக்கு பொறுமை வேண்டும். மூன்று நாட்கள் சத்தம் இல்லாமல் இருந்ததால் அவசரப்பட்டு கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோவிலில் நீ ஸ்தாபனம் செய்யும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். இருப்பினும் அதையே பிரதிஷ்டை செய்துவிடு. இந்தக் கோவிலுக்கு வருபவர்கள், இந்தச் சிலைகளைப் பார்த்து, பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளட்டும்’ என்று கூறி மறைந்தார்.

    அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா தேவி ஆகியோரின் சிலைகள் இருந்தன. அதை அரசன் பிரதிஷ்டை செய்தான்.

    உயரமான கருவறை விமானம் :

    பூரி ஜெகந்நாதர் ஆலயம், கடற்கரைக் கோவில் என்பதால், கடலில் நீராடிய பிறகே இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும். கடற்கரையில் மார்க்கண்டேஸ்வரர் கோவில் இருக்கிறது. கடலில் நீராடிவிட்டு, முதலில் மார்க்கண்டேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் அங்குள்ள பாண்டவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனுமன் தீர்த்தம் போன்றவற்றில் நீராடிவிட்டு தான் ஜெகந்நாதரை தரிசிக்க வேண்டும்.

    ஆயத்திற்கு இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோவிலுக்குச் செல்ல நான்கு வாசல்கள் இருக்கின்றன. சிங்கவாசல், குதிரை வாசல், யானை வாசல், புலிவாசல். இவற்றை அந்தப் பகுதி மக்கள் ‘சிம்ஹதுவார், ஹஸ்துவார், ஹாஸ்திதுவார், வியாக்ரதுவார்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாசலும் பிரமிடு போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருக் கிறது. இந்த ஆலயத்தில் உள்ள ஒரு கோபுரம் 713 அடி உயரம் கொண்டதாகும். ஒடிசாவிலேயே இந்த கோபுரம்தான் மிகவும் உயரமானது. இது ராஜகோபுரம் இல்லை. மூலவர் ஜெகந்நாதரின் கருவறை விமானம் ஆகும்.



    56 வகை பிரசாதங்கள் :

    பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையில் ஜெகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் ரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பலராமர் 6 அடி உயரமும், ஜெகந் நாதர் 5 அடி உயரமும், சுபத்ரா 4 அடி உயரமும் இருக்கிறார்கள். இவர்கள் முறையே வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங் களில் காட்சி தருகின்றனர். இவர்கள் மூவரின் சிலையும் மரத்தால் செய்யப்பட்டவை.

    இந்த உருவங்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதியதாக உருவாக்கப்படுகின்றன. கருப்பு நிறமும், பெரிய கண்களும் கொண்ட ஜெகந்நாதர், சாம வேதத்தைக் குறிக்கும் விஷ்ணுவின் சொரூபம் ஆவார். வெண்மை நிறமும், தாமரைக் கண்களும் கொண்ட பலராமர், ரிக் வேதத்தைக் குறிக்கும் சிவனின் சொரூபமாக விளங்குகிறார்.

    மஞ்சள் நிறமும், தாமரைக் கண்களும் கொண்ட சுபத்ரா, யஜூர் வேதத்தைக் குறிப்பவராகவும், சக்தியின் அம்சமாகவும் திகழ்கிறார். இங்குள்ள இறைவனுக்கு 56 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்கும் இந்த நைவேத்தியம் முக்கியமானது. பல பானைகளில் சாதம், குழம்பு, கூட்டு போன்றவை நைவேத்தியமாக படைக்கின்றனர். இந்த நைவேத்தியங்கள்தான், அந்த ஆலயத்தில் முக்கிய பிரசாதமாக விற்பனை செய்யப்படுகிறது.

    மூன்று தேர்கள் :

    பூரி ஜெகந்தாதர் ஆலயத்தில் ஆனி மாதத்தில் நடை பெறும் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த தேர்கள் ஆண்டு தோறும் புதியதாக உருவாக்கப்படுகின்றன. நந்திகோஷ் அல்லது கருடத்வஜா என்று அழைக்கப்படும் ஜெகந்நாதரின் தேர், 45 அடி உயரம் கொண்டது. 16 கலைகளைக் குறிக்கும் வகையில், 16 சக்கரங்கள் இருக்கும். நான்கு வேதங்களைக் குறிக்கும் விதத்தில் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். தேர் வடத்திற்கு, சங்கசூடா என்று பெயர்.

    பலராமரின் தேர் ‘தலத்வஜ்’ என்று அழைக்கப்படுகிறது. இது 44 அடி உயரம் கொண்டது. 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வகையில் 14 சக்கரங்கள் இருக்கும். நான்கு வேதங்களும், நான்கு குதிரைகளாக இருக்கும் இந்த தேரின் வடத்திற்கு வாசுகி என்று பெயர்.

    ‘தரவதவானா’ என்பது சுபத்ராதேவியின் தேர் பெயராகும். இதன் உயரம் 43 அடி. 12 மாதங்களைக் குறிக்கும் வகையில் 12 சக்கரங்களைக் கொண்டது. ஸ்வர்ணசூடா என்பது இந்தத் தேர் வடத்தின் பெயர். இந்த தேர் சிவப்பு மற்றும் கருப்பு நிறத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது, திருப்பெருமங்கலம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கிறது, ‘வன்றொண்டரீசர்’ ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது, திருப்பெருமங்கலம் என்னும் அழகு கொஞ்சும் சிறிய கிராமம். இந்தக் கிராமத்தின் தெற்கு எல்லையில் அழகுற அமைந்திருக்கிறது, ‘வன்றொண்டரீசர்’ ஆலயம். பல நூற்றாண்டுகளை கடந்த இந்த ஆலயம், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவில் முகப்பைக் கடந்ததும் விசாலமான பிரகாரம். வலது புறம் இறைவி அபிராமி அன்னையின் சன்னிதி உள்ளது. இறைவி தென்முகம் நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். நந்தியும் பலிபீடமும் முன்னே இருக்க, அதற்கு அடுத்தாற்போல் அர்த்த மண்டபம் இருக்கிறது. இதனைக் கடந்தால் இறைவன் வீற்றிருக்கும் கருவறையை அடையலாம்.

    கருவறையில் இறைவன் வன்றொண்டரீசர் லிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் சண்டீசர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் நுழைவு வாசலைக் கடந்தவுடன், முகப்பில் முருகன், விநாயகர் திருமேனிகள் உள்ளன. பிரகாரத்தின் மேற்குப் பகுதியில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் சன்னிதி உள்ளது. இவர் இறைவனுக்காக தன்னையே அழித்துக் கொண்டவர்.

    அந்த தல வரலாறு என்ன என்று பார்ப்போம்..

    விவசாயத்தை தொழிலாகக் கொண்ட வேளாளர் குடியில், ஏயர்கோக்குடி என்பது ஒரு பிரிவு. இவர்கள் சோழ மன்னர்களிடம் பரம்பரை பரம்பரையாக சேனாதிபதியாக இருந்து வந்துள்ளனர். ஏயர்கோன் என்பது சிறந்த சேனைத் தலைவனுக்கு மன்னன் வழங்கும் பட்டமாகும். கலிக்காமர் சிறந்த சிவனடியார். சிவனடியார்களைப் பேணுவதில் அவருக்கு நிகர் அவரே!

    இத்தலத்துக்கு அருகே உள்ள கஞ்சாளுர் எனும் ஊரில் மானக் கஞ்சாற நாயனார் என்பவர் இருந்தார். இவர், அரசர்களுக்கு தலைமை தளபதியாக பதவி வகிக்கும் குடியைச் சேர்ந்தவர். இவரும் சிவபெருமான் மேல் அளவற்ற பற்றும் பாசமும் கொண்டவர். சிவனடியார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாத பெருங்குணம் படைத்தவர். இவருக்கு ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்கு நல்ல இடத்தில் மணம் முடிக்க எண்ணிய கஞ்சாற நாயனார், கலிக்காமரின் குணத்தையும், குடும்பத்தையும் பற்றி அறிந்தார்.

    பின்னர் அவருக்கே தன் மகளை மணமுடிக்க எண்ணிய கஞ்சாறர், திருப்பெருமங்கலத்தில் உள்ள பெரியோர்கள் ஆசியுடன் திருமணத்தை நிச்சயம் செய்தார். திருமணத்தை மணமகள் வீட்டில் நடத்துவதென முடிவாயிற்று. மாப்பிள்ளையும் ஊர்வலமாக வந்து திருமண வீட்டை அடைந்தார். மானக் கஞ்சாற நாயனார் சிவனடியார் எது கேட்பினும் கொடுக்கக் கூடிய குணநலன் கொண்டவராயிற்றே!

    அவரை சோதிக்க எண்ணிய சிவ பெருமான் முனிவர் வேடம் பூண்டார். திருமண வீட்டை அடைந்தார். முனிவரைக் கண்ட கஞ்சாற நாயனார் மனம் மகிழ்ந்து, மணப்பெண்ணை அவர் காலில் விழுந்து வணங்கச் செய்தார். தந்தையின் சொல்லைத் தட்டாத அந்தப் பெண்ணும், அப்படியேச் செய்தார்.

    தன் காலில் விழுந்த பெண்ணை, ‘மங்களம் உண்டாகட்டும்’ என்று வாழ்த்திய முனிவரின் பார்வை, அவளது அழகிய நீண்ட கூந்தலின் மீது பதிந்தது. ‘நாயனாரே! நான் அணிந்துள்ள முப்புரிநூல் தலைமுடியினால் ஆனது. இப்பெண்ணின் நீண்ட கூந்தல் நம் பஞ்சவடிக்கு உதவும்’ என்றார் முனிவர்.

    சிவனடியார் கேட்பதில் உடனடியாக தரும் கஞ்சாற நாயனார், தனது உடைவாளை எடுத்து மணப் பெண் கோலத்தில் இருந்த தனது மகளின் நீண்டக் கூந்தலை அறுத்தார். மணப்பெண்ணும் மறுப்பேதும் சொல்லவில்லை. கைகொள்ளாத நீண்ட, அறுபட்ட கூந்தலை எடுத்து முனிவரிடம் தருவதற்காக அவர் இருந்தப் பக்கம் திரும்பினார் நாயனார்.

    ஆனால் அங்கே முனிவர் இல்லை. நாயனார் திகைத்தார். வானில் சிவபெருமான் உமையொரு பாகனாய் காட்சி தந்தார். ‘சிவனடியார் மேல் நீ காட்டும் அன்பை, இந்த உலகுக்கு உணர்த்தவே நாம் உன்னை சோதித்தோம்’ என அசரீரி ஒலித்தது. மணப்பெண்ணின் கூந்தல் முன்னிலும் பொலிவுடன் திகழ்ந்தது.

    கலிக்காம நாயனார், அந்தப் பெண்ணை மணம் முடித்து, நல்வழியில் இல்லறம் நடத்தினார். சிவபெருமானுக்காக தன் கூந்தலைக் கொடுத்த பெண் தன் மனைவியாக அமைந்ததில் அவருக்கு ஏக மகிழ்ச்சி. இப்படி கலிக்காமர், சிறந்த சிவபக்தியுடனும், தன் பக்திக்கு மிஞ்சிய மனைவி கிடைத்ததிலும் மகிழ்ச்சியுற்று இருந்த நேரத்தில்தான் அந்த சம்பவம் நடைபெற்றது.



    தம்பிரான் தோழர் என அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூரில் அவதரித்த பரவையாரை மணந்தார். பின்னர், அவருக்குத் தெரியாமல் திருவொற்றியூரில் அவதரித்த சங்கிலியாரையும் மணந்து கொண்டார். பரவையார் சுந்தரரின் மறுமண செய்தி கேட்டு கோபம் கொண்டார். அவரது கோபத்தைத் தீர்க்க சுந்தரர் பலரை தூது அனுப்பியும், பரவையாரின் சினம் தணியவில்லை.

    இறுதியில் தன் தோழரான சிவபெருமானிடம், பரவையாரின் சினம் தீர்க்க தூது போகும்படி வேண்டினார். சிவபெருமானும் இருமுறை பரவையாரைத் தேடிச் சென்றார். தூது வந்தது சிவபெருமான் என்றுணர்ந்த பரவையார், சினம் தவிர்த்து சுந்தரருடன் இணைந்தார்.

    இந்தச் செயலைக் கேள்விப்பட்டார் கலிக்காமர். சிவபெருமானை தூது அனுப்பிய சுந்தரரின் மேல் கடுங்கோபங் கொண்டார். கலிக்காமருடைய சினத்தை அறிந்தார் சுந்தரர். அவரது சினத்தை தணித்தருளும்படி சிவபெருமானிடம் வேண்டினார். சம்பந்தருக்கு பாலைக் கொடுத்தும், அப்பருக்கு சூலைக் கொடுத்ததும், சுந்தரருக்கு ஓலைக் கொடுத்தும் ஆட்கொண்ட பெருமான் கலிகாமருக்கு சூலைக் கொடுத்தார்.

    சூலை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கலிக்காமர், தன் நோய் குணமாக இறைவனை வேண்டினார். ‘அன்புக் கொண்டனே! உன் சூலை நோயை என் தொண்டன் சுந்தரன் வந்து தீர்ப்பான்’ என சிவபெருமான் அருளினார். ஆனால் கலிக்காமரோ அந்த செய்தியால், உள்ளம் நொந்தார்.

    ‘அடியவனாகிய என் நோயை நீர் குணப்படுத்தாது, உம்மை ஒரு வேலையாள் போல் வேலை வாங்கிய ஒருவன் வந்து குணப்படுத்துவதா? அதைவிட நான் இறப்பதே மேல்’ என்று கூறிய கலிக்காமர் தன் உடைவாளை எடுத்து, தன் வயிற்றைக் கிழித்து, தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

    சுந்தரர் வருவதை அறிந்து கலிக்காமரின் மனைவி, அவரது உடலை மறைத்து வைத்துவிட்டு சுந்தரரை வரவேற்று உபசரித்தாள். ‘கலிக்காமர் எங்கே? அவரது சூலை நோயை குணப்படுத்த வந்துள்ளேன்’ என்றார் சுந்தரர். கலிக்காமரின் மனைவியோ நடந்ததை அறிந்தால் சுந்தரர் வருந்துவார் என்பதற்காக ‘அவர் உறங்குகிறார்’ என்றாள்.

    ‘நான் அவரைக் காண வேண்டும்’ என்று சுந்தரர் கூறவே, வேறு வழியின்று கலிக்காமரின் சடலத்தை கொண்டுவந்து அவரிடம் காட்டினாள் அவர் மனைவி.

    உண்மையை உணர்ந்த சுந்தரர் ‘இவருடன் நானும் செல்வேன்’ என உடை வாளை எடுத்தார்.

    மறுகணம் இறைவன் திருவருளால் கலிக்காமர் உயிர் பெற்று எழுந்தார். இருவரும் ஆரத் தழுவி மனம் மகிழ்ந்தனர் என்பது வரலாறு.

    இந்த ஏயர்கோன் கலிக்காமருக்குத்தான் இந்த ஆயத்தில் தனிச் சன்னிதி உள்ளது.

    இறைவனின் கருணையை உலகுக்கு உணர்த்திய ஏயர்கோன் கலிக்காமரையும் தன் தொண்டனுக்கு உயிர் கொடுத்த வன்றொண்டரீசரையும் தரிசிக்க நாமும் ஒருமுறை திருப்பெருமங்கலம் சென்று வரலாமே!

    நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மேற்கே இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது, திருப்பெருமங்கலம் என்ற இந்த தலம்.
    மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்துவிடுகிறோம். இது பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக் கோவில் ஆகும்.
    மலேசியாவில் அமைந்திருக்கும் முருகர் கோவில், முருகர் சிலையால் மட்டுமல்ல அதன் புகழ்- பெருமைகளாலும் உயர்ந்து நிற்கிறது. மலேசிய முருகரை பார்த்து ரசிக்கும் நாம், அங்கே அமைந்திருக்கும் பழமையான பினாங்கு கோவிலை மறந்துவிடுகிறோம். இது பழமையான கோவில் மட்டுமல்ல... பாம்பும், புகையும் சூழ்ந்த விசித்திரமானக் கோவிலும் கூட.

    பினாங்கு தீவில், சன்கை குளாங் பகுதியில் தான் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. சீன கட்டிடக்கலையில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவில், 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சூர் சோ காங் என்ற மன்னரின் நினைவாக இந்தக் கோவிலை கட்டியிருக்கிறார்கள். காங் மன்னர் பாம்புகளுக்கும், பூச்சிகளுக்கும் கரிசனம் காட்டியவர். அரண்மனைகளில் அவருடன் சேர்ந்து பாம்புகளும், பூச்சிகளும் வாழ்ந்ததாக ஒரு வரலாறு கூறப்படுகிறது.

    இப்படி பாம்புகளுடன் அதிகமாக பொழுதைக் கழித்த காங் மன்னர், 65 வயதில் இறந்துவிட்டார். அதற்கு பிறகு தான் இந்த பாம்புக் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதை புத்த துறவி ஒருவர் கட்டி முடித்திருக்கிறார். மன்னரின் நினைவாக கட்டப்பட்டதால், நன்கொடை பலவழிகளில் இருந்தும் வந்திருக்கிறது. முதலில் காங் கோட்டையாக கட்டப்பட்ட இந்த இடம், பாம்புகளின் படையெடுப்பால் பாம்புக் கோவிலாக மாறிவிட்டது. அதனால் காங் மன்னர் சிலையுடன், பாம்புகள் தங்குவதற்கும், தொங்குவதற்கும் ஏற்ற வசதிகளையும் செய்திருக்கிறார்கள். இதனால் கோவில் முழுக்க பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கின்றன.



    பாம்பு நீச்சல் குளம் :

    கோவிலுக்குள் நுழைந்ததுமே ஒரு பிரமாண்ட மண்டபம் இருக்கிறது. அதில் அமர்ந்தபடி தான் வழிபாடு நடக்கிறது. பக்தர்கள் வழிபடுகையில் அவர்களை நோக்கி பாம்புகள் ஊர்ந்து வருகிறது. அப்படி நிகழ்ந்தால், நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இந்த நிகழ்வு எல்லா சமயங்களிலும் நிகழ்வதில்லை.

    ஒருசில பக்தர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்குமாம். இங்கு வழிபட்டவுடன் கோவிலுக்கு பின்புறத்தில் இருக்கும் பாம்பு குளத்திற்கு பக்தர்கள் செல்கிறார்கள். அதில் கொடிய விஷமுள்ள பாம்புகள் வாலை சுருட்டியபடி படுத்திருக்கின்றன. உலகில் இருக்கும் அதிபயங்கரமான விஷப்பாம்புகளை, இந்த நீச்சல் குளத்தில் பார்க்கலாம். ஆனால் அவை அனைத்தும் விஷம் நீக்கப்பட்ட பாம்புகள்.

    ஆம்! 1950-ம் ஆண்டு வரை இந்தக் கோவிலில் விஷப்பாம்புகள் வளர்க்கப்பட்டன. ஆனால் தற்போது விஷம் நீக்கப்பட்ட பாம்புகளே இருக்கின்றன. இருப்பினும் பாம்பு கடித்து பக்தர்கள் இறந்த செய்தி பழைய வரலாற்றிலும் இல்லை. ஏன்.. இப்போதும் கூட பாம்புகள், பக்தர்களைப் பார்த்து கோபத்துடன் சீறியதாகவும் செய்தி இல்லை. அந்தளவிற்கு பாம்புகளை காங் மன்னர் வளர்த்திருப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.



    புகை சூழ்ந்த கோவில் :

    நீச்சல் குளம், மரக்கிளை என கோவில் முழுக்க பாம்புகள் படர்ந்திருந்தாலும், அவை தூங்குவதற்காக பிரத்யேக ஸ்டாண்ட் அமைப்புகளை கோவில் நிர்வாகம் அமைத்திருக்கிறது. இரும்பு கம்பிகளை சுருள் வடிவில் வளைத்து, பாம்பு தூங்கும் இடமாக மாற்றி இருக்கிறார்கள். காலை முதல் மாலை வரை அங்கும் இங்குமாக சுற்றித்திரியும் பாம்புகளின் எண்ணிக்கை, இரவில் குறைந்து விடுகிறதாம். அதற்கான மர்மம் என்ன என்பது இதுவரை விளங்காமல் இருக்க, பினாங்கு கோவிலை மேலும் மர்மமாக்குகிறது.. ஊதுபத்தி புகை மண்டபங்கள்.

    கோவிலை பாம்புகள் நிறைத்திருப்பது போல, புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. புத்தமத வழிபாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஊதுபத்தி கலா சாரம், பினாங்கு கோவிலிலும் பின்பற்றப்படுகிறது. அதனால் பாம்புகளுக்கு இணையாக புகை மண்டலமும் சூழ்ந்திருக்கிறது. எந்நேரமும் கோவில் புகைமூட்டமாக இருப்பதால், பினாங்கு கோவிலை... 'பினாங்கு வானம்' என்றும் அழைக்கிறார்கள். இதுதவிர 'அசூர் மேகம் நிரம்பிய கோவில்' என்றும் சிறப்பிக்கிறார்கள்.

    பாம்புகள் பக்தர்களை கடிக்காமல் இருக்க, கோவில் நிர்வாகத்தினர், ஊதுபத்தி புகைகளை பயன்படுத்துவதாகவும், புகையினால் பாம்புகள் மயங்கி கிடப்பதாகவும் ஒருசிலர் புகார் தெரிவித்தாலும், பாம்பு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணமே இருக்கிறது. காங் மன்னரின் பிறந்த நாள் தான், இந்த ஆலயத்தின் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த சமயங்களில் இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், இந்தியா என பல நாடுகளில் இருந்து பக்தர்கள் குவிகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக திருவிழா சமயங்களில் விஷப் பாம்புகளும் குவிவதுதான் ஆச்சரியம்.

    என்ன தான் பாம்புக் கோவிலாக இருந்தாலும், பாம்புகளை கையில் தூக்கவோ, தொடவோ பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஏனெனில் பாம்புகளை பாதுகாக்கவும், பக்தர்களை பாதுகாக்கவும் ஏராளமான சட்டத்திட்டங்களை கோவில் நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது.
    திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பழமை வாய்ந்த சிவந்தியப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் பழமை வாய்ந்த சிவந்தியப்பர் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவன் திருநாமம் ‘சிவந்தியப்பர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம் வழியடிமை கொண்ட நாயகி. தலவிருட்சம் வில்வம். தல தீர்த்தம் வாண தீர்த்தம் அருவி (பாணதீர்த்தம்).

    முன்காலத்தில் சிவந்தியப்பர் என்ற சிற்றரசர் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தார். சிறந்த சிவ பக்தரான அவர், தன்னுடைய நிர்வாகம் திறம்பட இருக்கவும், மக்களின் வாழ்க்கை சிறக்கவும் தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பகுதியில் சிவ ஆலயம் ஒன்று அமைக்க வேண்டும் என்று எண்ணினார். அதன்படி இந்தத் தலத்தில் சிவலிங்கம் ஸ்தாபனம் செய்து கோவில் எழுப்பினார்.

    இதையடுத்து மன்னனின் பெயராலேயே, இறைவனும் அழைக்கப்படலானார். இங்கு வீற்றிருக்கும் இறைவன், அரசர் போல இருந்து மக்களைக் காப்பார் என்று கூறப்படுகிறது. எனவே அரசருக்குச் செய்யும் மரியாதைப் போலவே, சிவலிங்கத்தின் மீது தலைப்பாகை சூட்டி அலங்கரிக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்துள்ளது. ஆனால் இப்போது இந்த முறை வழக்கத்தில் இல்லை.

    தெற்கு நோக்கிய சன்னிதியில் வீற்றிருக்கிறார் ‘வழியடிமை கொண்ட நாயகி’. இந்த அன்னையை வேண்டிக் கொண்டால், வாழும் காலம் சிறப்பாக இருக்கும். மேலும் வாழ்க்கைக்குப் பின் வரும் முக்தி நிலையையும் அடைய முடியும். இங்குள்ள சிவபிரானுக்கு வஸ்திரம் அணிவித்து, வில்வ இலையால் அபிஷேகம் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆலயத்தில் நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.



    சிவன் சன்னிதியின் நுழைவு வாசலில் பைரவர், அதிகார நந்தி இருவரும் எதிரெதிரே உள்ளனர். பிரகாரத்தில் ஆறுமுக நயினார் (முருகப்பெருமான்) வீற்றிருக் கிறார். இவருடன் வள்ளி - தெய்வானை உள்ளனர். பொதுவாக முருகப்பெருமானுடன் இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும் முருகருக்கு வலது பக்கமும், இடது பக்கமுமாக இருந்து பக்தர்களை பார்ப்பது போல் அமைந்திருக்கும்.

    ஆனால் இந்த ஆலயத்தில் ஆறுமுகநயினாருக்கு வலது பக்கமும், இடதுபக்கமுமாக இருக்கும் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும்படியாக நின்றபடி அருள்பாலிக்கின்றனர். இதுவேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும். பொதுவாக தட்சிணாமூர்த்தி இடது கையில் ஏடு அல்லது அக்னியை ஏந்தியபடி காட்சி தருவார். ஆனால் இந்த தலத்தில் தனது இடது கையை, காலுக்கு கீழ் இருக்கும் நாகத்தின் தலை மீது வைத்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. நாகதோ‌ஷம் உள்ளவர்கள், இந்த தட்சிணாமூர்த்தியை வேண்டிக்கொண்டால் தோ‌ஷம் விலகும் என்பது நம்பிக்கை.

    இந்த ஆலயத்தில் புரட்டாசியில் நடைபெறும் பிரமோற்சவம் சிறப்பு வாய்ந்தது. ஐப்பசியில் இறைவனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர்  தொலைவில் அமைந்துள்ளது விக்கிரமசிங்கபுரம் திருத்தலம்.
    ×