என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ‘விரதம்’ என்றால் ‘நோன்பு’ என்று பொருள். உடலை வருத்திக்கொண்டு உள்ளத்தை இறைவன் பால் செலுத்தி நம் கோரிக்கைகளை சொல்வதன் மூலம் நற்பலன்கள் கிடைப்பதை புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
    ‘விரதம்’ என்றால் ‘நோன்பு’ என்று பொருள். உடலை வருத்திக்கொண்டு உள்ளத்தை இறைவன் பால் செலுத்தி நம் கோரிக்கைகளை சொல்வதன் மூலம் நற்பலன்கள் கிடைப்பதை புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    உண்ணாவிரதம் இருந்தும் நம் கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துரைப்பதற்கு பெயர் ‘உபவாசம்’ என்பதாகும். நம் ஜாதகத்தின்படி எந்த தெய்வத்தின் அருளைப் பெற விரும்புகிறோமோ, அந்த தெய்வத்திற்கு உகந்த திருநாளில், விரதம் இருந்து பால், பழம் மட்டும் சாப்பிட்டு மற்ற ஆகாரங்கள் எதுவும் உண்ணாமல் கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தோ பிரார்த்தனை செய்தால், நம் வாழ்வில் ஏற்பட்ட இடையூறுகள் அகலுகின்றன என்பதை நம் முன்னோர் கண்டறிந்துள்ளனர்.

    விநாயக பெருமானுக்கு சதுர்த்தியில் விரதமும், கந்தப் பெருமானுக்கு சஷ்டியில் விரதமும், சிவபெருமானுக்கு சிவராத்திரியில் விரதமும், அம்பிகைக்கு நவராத்திரியில் விரதமும், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி விரதமும், நமது பாவபுண்ணியத்தை பதிந்து வைக்கும் சித்திரகுப்தனுக்கு சித்ரா பவுர்ணமி விரதமும், அனுமனுக்கு அனுமன் ஜெயந்தி விரதமும் நாம் மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம்.

    அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், நம் கோரிக்கைகளை சொல்வதற்கு  உகந்த நாட்களாக சில நாட்களை தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார்கள். தெய்வங்களிடமும் குறிப்பிட்ட நாட்களில் நம் கோரிக்கைகளை சொன்னால், உடனடியாக அது நிறைவேறுகிறது என்பதை அனுபவத்தில் காணலாம்.

    அங்ஙனம், கோரிக்கை சொல்லும் நாளில், வீட்டை மெழுகி கோலமிட்டு, பூஜையறையில் பஞ்சமுக விளக்கேற்றி, நைவேத்ய பொருள் வைத்து பகல் முழுவதும் விரதமாக இருந்து காலையிலும், மாலையிலும், பக்தி பாடல்களை பாடி அதன் பிறகு நமது கோரிக்கைகளை இறைவனிடம் எடுத்துரைத்தால், இல்லத்தில் இனிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். திருமணம் ஆகாத பெண்கள், மழலை கிடைக்காத தம்பதியர், வேலை கிடைக்காத ஆண்கள், விரும்பிய தொழில் அமைய நினைப்பவர்கள், போதிய பொருளாதாரம் வேண்டுபவர், பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்க நினைப்பவர்கள், அத்தனை பேருக்கும் வியக்கும் விதத்தில் வாழ்வை அமைத்து தருவதில் முதன்மையானது விரதங்கள்தான்.

    கிரகங்கள் பலம் இழந்திருந்தால், அந்த கிரகத்திற்குரிய நாளில் வாரம் ஒரு நாள் விரதமிருக்கலாம். இதில் வெள்ளிக்கிழமை விரதம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே நேரத்தில் சுக்கிரன் ஜாதகத்தில் பகை கிரகமாக இருந்தால், வெள்ளிக்கிழமை துதிப்பாடல்களை பாடி அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த ஜாதக

    அமைப்பு உள்ளவர்கள் விரதத்தை வேறொரு நாளில் மாற்றிக் கொள்வதே நல்லது. குருவருள் பெற வியாழக்கிழமை பலரும் விரதமிருப்பதை பார்த்திருப்பீர்கள். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதால் அன்று விரதமிருப்பவர்கள் ஆலயத்திற்கு சென்று குருவை நேரடியாக தரிசித்து வந்தால், சீரும்  சிறப்பும் வந்து சேரும்.

    கந்த சஷ்டியில் ஆறு நாட்களும் விரதமிருப்பவர்கள், அறுபடை வீடு கொண்டு அழகனின் அருளுக்கு பாத்திரமாகலாம். சஷ்டியில் விரதமிருந்தால், போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாறும். தேய்பிறை அஷ்டமியில் விரதமிருந்து சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், பணமழையில் நனையும் வாய்ப்பு கிட்டும்.

    பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தீஸ்வரரை வழிபட்டால், பெருமைமிக்க வாழ்வையும், ராம நவமியில் ராமரை நினைத்து வழிபட்டால் இல்வாழ்க்கை சிறப்பாகவும் அமையும். பொதுவாக, எல்லா மாதங்களிலும் ஏதாவது ஒரு நட்சத்திரம் அல்லது திதி சிறப்பானதாக கருதப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக மூலமுதற்கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானை விரதமிருந்து வழிபட்டு வந்தால், வெற்றி மீது வெற்றி உங்களுக்கு வந்து சேரும்.
        
    ஆவணி மாதம் வருகிற வளர்பிறையில் சதுர்த்தி திதி வரும் போது ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்பாகக் கூறுவர். சதுரம் என்றால் நான்கு பக்கங்களிலும் பூர்த்தியானது. எனவே, வாழ்க்கையில் நமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக மாதந்தோறும் வரும் சதுர்த்தியில் கூட விநாயகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டு வந்தால், மங்கல வாழ்வு அமையும். விநாயகர் வழிபாடு எல்லோரும் செய்யக்கூடிய எளிய வழிபாடாகும். 
    பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை விரதம் இருந்து வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம்.
    பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தி ஞானம் உடையவர்கள். நல்ல குணம் மிகுந்தவர்கள். எதிலும் நீதி, நியாயம் பார்ப்பவர்கள். வாக்கு தவற மாட்டார்கள். தன்னைப்போல் பிறரும் இருக்கவேண்டும் என விரும்புபவர்கள். தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள்.

    சிலர் யோசனை முறையில் தீவிர நாட்டம் உடையவராக இருப்பர். பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்நட்சத்திரத்தின் முழுமையான நாழிகை 52. இந்நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை விரதம் இருந்து வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம். பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம். அறிவிற் சிறந்த முன்னோர்கள் நம் தேசத்தின் முக்கியமான சாஸ்திர கருத்துக்களை அழகாக, அய்யப்பப் பூஜை வழிபாட்டு முறையில் வைத்துள்ளார்கள்.

    சபரிமலைக்குச் சென்று செய்யும் அய்யப்பப் பூஜையானது. அனைத்து வழிபாடுகளையும், சாஸ்திர விஷரங்களையும் உள்ள டக்கியதாக இருக்கிறது. பண்டிதர்கள் அறிந்த விசயத்தைப் பாமரரும் அறியும் வண்ணம் அழகாக இந்த பூஜையில் நம் பெரியோர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஓர் அற்புதமான வாழிபாட்டு முறையைக் காண்பது அரிது.

    ஐயப்பன் வழிபாட்டில் பல தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன. மாலை போட்டுக் கொண்டு 48 நாட்களுக்கு விரதம் இருத்தல், நாள் தோறும் வழிபடுதல், உணவு கட்டுப்பாடு முதலிய பல விஷயங்கள் உள்ளன. சபரிமலைக்கு பக்தியோடு கிளம்பிச் செல்லுதல், பார்ப்பவர்களை எல்லாம் சுவாமி என்று அழைத்தல், பெண்களை மாளிகைபுரம் என்று கூறுதல் என நம்முடைய பாவனை மாறுவதை கவனிக்கவேண்டும்.

    அய்யப்பனுக்கு தர்ம சாஸ்தா என்று பெயர். ஐயப்பனின் ஒரு கை வரமளிக்கிறது. மற்றொரு கையில் சின்முதிரை இருக்கிறது. கட்டை விரல் பரமாத்மாவாகிய கடவுளைக் குறிக்கிறது. ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவாகிய உயிரைக் குறிக்கிறது. ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து விட்டால் நிம்மதி தானாக ஏற்படும்.

    இந்த நிம்மதி உருவாக்கி, நிலைத்து நீடிக்க பூசம் நட்சத்திரக்காரர்கள் தவறாமல் தர்ம சாஸ்தாவான அய்யப்பனை கெட்டியாக பிடித்துக் கொண்டு வழிபட வேண்டும். தர்மத்தை கற்று கொடுப்பவர் தான் அய்யப்பன். மெய்ஞானத் தைக் கற்றுக் கொடுப்பவர் அய்யப்பன். பூச நட்சத்திரக்காரர்கள் ஐயப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.
    சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும்.
    சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆவார். சிவபெருமானை நாம் ஆலயங்களில் சென்று வழிபடும் பொழுது லிங்க வடிவமாகத் தான் வழிபடுகின்றோம். பொதுவாக சிவலிங்க விரத வழிபாட்டை, சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமைகளில் தவறாமல் செய்வது மிகவும் நல்லது. திருவாதிரை நட்சத்திரம் அன்றும் தொடர்ந்து வழிபடுவது நற்பலனைத் தரும். அவ்வாறு வழிபட சிவன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது, முதலில் கணபதியை வழிபட வேண்டும். பிறகு அறுபத்து மூவரை வழிபட்டு, அடுத்ததாக நந்தியை தரிசித்த பிறகே, சிவலிங்க வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி வழிபட்டால் தான் உரிய விதத்தில் பலன் உடனடியாகக் கிடைக்கும்.

    சிவலிங்கத்தை பீடம், லிங்கம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தரையில் இருந்து மேலே எழும்பி லிங்கத்தை தாங்கி நிற்கும் பகுதி ‘பீடம்’ ஆகும். இது எல்லா வடிவங்களிலும் இருக்கும். பாணம் அல்லது லிங்கம் என்பது உருளை வடிவத்தில் இருக்கும். பீடத்தில் இருந்து நீர் விழும் பகுதி ‘நாளம்’ எனப்படும். பொதுவாக லிங்கத்தின் தன்மையைப் பொறுத்து, அசையும் லிங்கம், அசையா லிங்கம் என்று இரு வகையாகப் பிரிக்கலாம்.

    மொத்தத்தில் சிவலிங்க விரத வழிபாடு என்பது சிறப்பான வழிபாடு. ஒரே சிவலிங்கத்தில், 1008 லிங்கங்கள் அமையப் பெற்றதை ‘சகஸ்ர லிங்கம்’ என்று அழைப்பார்கள். இது சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ளது. 108 சிவலிங்கங்கள் வரிசையாக அமைந்தது தஞ்சை அருகில் உள்ள பாபநாசத்தில் உள்ளது. தினமும் சிவாயநம, ஓம் நமசிவாய, சிவசிவ என்று எத்தனை முறை சொல்லி வழிபடுகின்றோமோ, இந்த அளவிற்கு செல்வாக்கு விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். திங்கட்கிழமை வழிபட்டால் மங்கலங்கள் உருவாகும்; சந்ததி தழைக்கும்; சந்தோஷம் பிறக்கும்; எண்ணியது நடக்கும்.

    சிவனை வழிபடும் பொழுது இரு கரங்களையும் மேல்நோக்கி தலைக்குமேல் உயர்த்தி “சிவாயநம” அல்லது “ஓம் நமசிவாய” என்று சொல்லி சிவலிங்கத்தை வழிபட்டால் மன அமைதியோடு வாழ இயலும். சிவ தரிசனத்தையும், இறை ஆராதனைகளையும் முடித்த பிறகுதான் ஆலயத்தை வலம் வர வேண்டும். ஆலயத்தை 1, 3, 5 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் வலம் வரவேண்டும். பிரகாரத்தைச் சுற்றி வந்து முடிக்கும் பொழுது, கொடிமரத்தின் முன்பாக அனைத்து தெய்வங்களையும் மனதில் நினைத்துக் கொண்டு நமது வேண்டுதலைச் சொல்லி வணங்கினால் நினைத்தது நிறைவேறும்.

    சிவலிங்கத்திற்கு வில்வ அர்ச்சனை மிகவும் உகந்தது. வில்வத்தால் அர்ச்சித்தால் பாவங்கள் தீரும். பணவரவு கூடும். வீட்டில் சிவலிங்கம் வைத்து சிவபூஜை செய்பவர்கள் புறத் தூய்மையோடு, அகத்தூய்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    அசையும் லிங்கம் என்பவை மண், உலோகம், ரத்தினம், மரம், கல், மாவு, மஞ்சள் போன்றவற்றால் செய்யப்படும். சுயம்புலிங்கம் என்பது தானே தோன்றியது. இவை நிலையாக இருக்கக் கூடியவை. இவை தவிர அரிசி, சாதம், களிமண், பசுஞ்சாணி, வெண்ணெய், ருத்ராட்சம், சந்தனம், தர்ப்பம், பூ போன்றவற்றால் ஆன லிங்கங்கள். இவை வழிபாடு முடிந்ததும் அந்தந்த பொருட்களுடன் சேர்க்கப்படும். அசையா லிங்கங்கள் என்பவை கோவில்களில் நிலையாக இருக்கும் கற்சிற்பங்கள்.

    எந்தெந்தப் பொருட்களால் ஆன லிங்கங்கள் என்னென்ன பலன் கொடுக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். மன உறுதி, உடல் உறுதி பெற மாவால் செய்த லிங்கத்தையும், நல்ல உணவு கிடைத்து பசிப்பிணி அகல சாதத்தால் செய்த லிங்கத்தையும், ஞானம் பெருக ருத்ராட்ச லிங்கத்தையும், நீண்ட ஆயுள் கிடைக்க பூவால் ஆன லிங்கத்தையும் வழிபாடு செய்யலாம். இன்னும் எத்தனை, எத்தனையோ லி ங்கங்கள் இருக்கின்றன. மரகத லிங்கத்தை மனதார வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும்.

    இத்தனை வகை லிங்கங்களில் நமக்கு ஏற்ற லிங்கத்தைத் தேர்ந் தெடுத்து, பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ஆயுள் நீடிக்கும். நோய் நீங்க கரும்புச் சாறு அபிஷேகமும், பயம் நீங்க பழச்சாறு அபிஷேகமும், இனிய குரல் வளம் கிடைக்க தேன் அபிஷேகமும், லட்சுமி கடாட்சம் ஏற்பட சந்தன அபிஷேகமும், நினைத்தது நிறைவேற சுத்தமான தண்ணீர் அபிஷேகமும், வசீகரம் பெற மஞ்சள் தூள் அபிஷேகமும், ராஜ யோக வாழ்வு அமைய அன்னாபிஷேகமும் செய்து வழிபட்டால் நல்லது.
    ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.

    நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.

    அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் - நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா... அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.

    குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
    வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து அவர்களை பூஜிப்பது வாழ்வில் பல்வேறு நன்மைகளை தரும்.
    வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் அன்றைய தினத்தில் மகான்களுக்கு விரதம் இருந்து பூஜிப்பது சிறந்த விடயமாகும். குருக்கள் மக்களை நல்வழிப்படுத்தி இறைரீதியான பரிகாரங்களை உபதேசிப்பதால் மகான்களை குருவாக நினைத்து வியாழக்கிழமையில் இந்த விரங்களை அனுஷ்டிக்கின்றோம்.

    மேலும் இந்த விரத அனுஷ்டிப்பின் போது மௌனமாக தியானிப்பதன் மூலம் மனதில் உள்ள கோரிக்கைகளை மகானின் பதம் சமர்ப்பிக்கலாம். சில இஸ்லாமிய தர்ஹாக்களில் வியாழக்கிழமை மிக விசேட தினமாக அனுஷ்டிக்கப்படுவதற்கு காரணம், அந்த தர்ஹாவில் ஒரு இஸ்லாமிய மகான் நிச்சயமாக அடங்கி இருப்பார் என்பது ஆகும்.

    மேலும் எமது மனதில் எந்த ஒரு மகானுக்கோ அல்லது சித்தர்களுக்கோ முன்னுரிமை இருந்தால் அவர்களை நினைத்து வியாழக்கிழமைகளில் பூஜப்பது, விரதம் இருப்பது சிறந்த பலனைத் தரும். 
    ஒருநாள் வசிஷ்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளை பற்றிக் கூறினார். இந்த நோன்பு குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒருநாள் வசிஷ்ட முனிவர், தன்னிடம் வந்த முசுகுந்த சக்கரவர்த்திக்கு முருகனுக்குரிய நோன்புகளை பற்றிக் கூறினார். வாரத்தின் 7 நாட்களில் வெள்ளிக்கிழமை செய்யப்படும் நோன்பு சிறப்பானது. இது முருக கடவுளுக்கு உரிய நோன்பாகும். இந்நோன்பை நோற்றுப் பகீரதன் தன் அரசை மீண்டும் பெற்றான்.

    ஒரு காலத்தில் நாரதமுனிவர் விநாயகரிடம் வந்தார். ஏழு முனிவர்களைக் காட்டிலும் உயர்ந்தவராக தான் ஆவதற்கு என்ன செய்யவேண்டுமென கேட்டார். அதற்கு விநாயகர், முருகனுக்குரிய கார்த்திகை நோன்பினை நோற்கும்படி சொல்லியருளினார். அந்நோன்பை இயற்றுபவர் பரணிநாள் பகலில் நீராடவேண்டும். ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும். வெள்ளை ஆடை அணிய வேண்டும். கார்த்திகை நாள் காலையில் நீராட வேண்டும். நாணல் புல்லில் இரவில் படுக்க வேண்டும். முருகன் திருவடிகளையே உறக்கமின்றி நினைத்திருக்க வேண்டும்.

    இந்த முறைப்படியே நாரதமுனிவர் நோன்பிருந்தார். ரோகிணி நாள் அன்று முனிவர்களோடு சேர்ந்து உணவு உண்டார். இவ்வாறு பன்னிரெண்டு ஆண்டுகள் நோன்பிருந்தார். முருகன் அருளால் ஏழு முனிவர்களை காட்டிலும் உயர்ந்தவர் ஆனார்.

    இதுபோல கார்த்திகை நோன்பு இருந்தவர்கள் பலர். அவர்கள் முருகனின் அருளால் மேன்மைகள் பலவற்றை அடைந்தனர். முருகனுக்குரிய நோன்புகளுள் சஷ்டியும் ஒன்று. ஐப்பசி மாதம் சுக்லபட்சப் பிரதமை நாள் முதலாக 6 நாட்கள் முறையாக நீராட வேண்டும். உண்ணாதிருக்க வேண்டும். மோதகம் செய்து படைத்து முருகனை வழிபட வேண்டும். இதுவே சஷ்டி நோன்பு ஆகும்.
    சாய்பாபாவின் விரத வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. இந்த விரதத்தை முறையாக கடைபிடித்தால் நம் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
    சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி நவவித பக்தியாலும் அவரை ஆராதிக்கலாம்.

    பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.

    கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது.

    கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று, அவற்றில் 10 தேங்காய்களை ‘துனி’ (அணையா நெருப்பு) முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு நிவேதிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும். நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம்.
    தைப்பூசத்திருநாளில் விரதம் இருந்து எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும்.
    முருகப்பெருமானை வழிபடக்கூடிய தினங்களில் தைப்பூசம் விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. முருகனின் அருளைப்பெற தைப்பூசம் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். தைப்பூசத்திருநாளில் விரதம் இருந்து எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் வறுமை போக்கும், தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும், ஆரோக்கியம் அளிக்கும், வாழ்வு வளம் பெறச் செய்யும்.

    விரதம் இருப்பது எப்படி?

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து உத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும்.

    அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.

    தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார். இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் வரும்.

    கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும்.

    தொழில் மேன்மை உண்டாகும். தைப் பூசம் அன்று குழந்தை களுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம் 
    முருகப்பெருமானை வழிபடக்கூடிய தினங்களில் தைப்பூசம் விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. முருகனின் அருளைப்பெற தைப்பூசம் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
    21-1-2019 தைப்பூச விழா

    முருகப்பெருமானை வழிபடக்கூடிய தினங்களில் தைப்பூசம் விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. தை மாதம் பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி திதி கூடி வரும் நாளை தைப்பூசம் என்று நாம் கொண்டாடுகிறோம்.

    முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். சிவபெருமான் சிதம்பரம் திருத்தலத்தில், வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், முனிவர்களுக்கு ஆகியோருக்கு ஆனந்த தரிசனத்தைக் காட்டி அருளிய தினம் தைப்பூசம் என்பதால் சிவனுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால், தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.

    தைப்பூச விழா மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனை 7-ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். 1008 சங்காபிஷேகம், லட்சார்ச்சனை, சாமி வீதி உலா உண்டு. அன்றைய தினம் கிராம தெய்வங்களுக்கும், பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.

    அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில், தைப்பூசம் 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இதன் 7-ம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். அப்போது முருகன், வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் ரத வீதிகளில் தேரில் பவனி வருவார். 10-ம் நாள் தெப்போற்சவம் நடைபெறும். பக்தர்கள் பல பகுதிகளில் இருந்து முரு கனுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடனாக காவடி எடுத்து வருவார்கள். தைப்பூசத் திருவிழா தான் காவடி, அலகு குத்துதல் போன்றவற்றுக்கு சிறந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் பால்காவடி, பறவைக் காவடி, தீர்த்தக் காவடி, மச்சக் காவடி, மயில் காவடி, சர்க்கரை காவடி எடுத்து வருவார்கள்.

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தைப்பூசம் 11 நாள் விழாவாக கொண்டாடப்படும். சிவபெருமான் திருவிளையாடல்களில் ‘புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை’யும் ஒன்றாகும். இதை நினைவு கூரும் விதத்தில் தைப்பூசத்தன்று பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு உவரி கடற்கரையில் இருந்து சிறிய பெட்டியில் மணலை அள்ளி, அதை தலையில் வைத்து சுமந்து கொண்டு கோவில் அருகில் கொட்டுவார்கள். இவ்வாறு செய்யும் பக்தர்களின் கோரிக்கையை சுவாமி நிறைவேற்றுவதாக ஐதீகம்.

    வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். அந்த நாளில் கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப் பூசத்தன்று அதிகாலை ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. அன்று மேட்டுக் குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வள்ளலாரின் விழாவை கொண்டாடுகின்றனர். கடல் கடந்த நாடுகளிலும் தைப்பூசம் திருவிழாவை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

    மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோலாலம்பூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகிறார்கள். அன்று கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலைக்கு அதிகாலையில் இருந்து ஊர்வலமாக நடந்து செல்வர். இதற்கு எட்டுமணி நேரம் பிடிக்கும். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும் செல்வர். சுங்கைபத்து ஆற்றில் நீராடிவிட்டு மலைக்கோவிலுக்கு படியேறி செல்வர்.

    மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள தண்ணீர் மலையிலும் விழா கொண்டாடப்படும். சிங்கப்பூரில் முருகன்கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடைபெறும். அன்று தேரோட்டம் நடைபெறும். திரளான பக்தர்கள் அலகுகுத்தி, நேர்த்திக்கடன் செலுத்துவர். தண்ணீர்மலை கோவிலில் தைப்பூச விழா 3 நாட்கள் நடைபெறும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் விமரிசையாக கொண்டாடுவர்.

    விரதம் இருப்பது எப்படி?

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து உத்திராட்சம் தரித்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும்.

    அன்று உணவு உண்ணாமல் மூன்று வேளையும் பால், பழம் சாப்பிட வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்ய வேண்டும். முருகன் கோவிலுக்கும் சென்று வழிபட்டு வரலாம்.

    தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் இன்னல் இழைத்து வந்த சூரபத்மனை முருகப்பெருமான் தேவசேனாதிபதியாக பொறுப்பேற்று அழித்து துன்பத்தை நீக்கினார். இதனால் முக்கோடி தேவர்களும் துன்பம் நீங்கி ஆனந்தம் அடைந்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கடைப்பிடித்தால் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். துன்பம் மறைந்து ஆனந்தம் வரும்.

    கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் வந்தடையும். எந்நாளும் இளமையுடன் இருப்பர். குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும்.

    தொழில் மேன்மை உண்டாகும். தைப் பூசம் அன்று குழந்தை களுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்
    தைப்பூசம் அன்று விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.
    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ ஓரிரு நாள் முன்பின் தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும்.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

    கருணைக்கடலாம் சிவபெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப் பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டிக் கோலத் தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    தைப்பூசத்தன்று முருகனுக்கு விரதமிருந்து காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று விரதமிருந்து காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

    அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீயசக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

    தை மாதம் பூச நட்சத்திரமன்று, உலகெங்கும் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் ஓம் என்ற பிரணவத்தின் பொருளைப் போதித்த முருகப் பெருமானை வழிபட்டால், சேமிப்பு உயரும், செல்வாக்கு அதிகரிக்கும். ஆசைகள் நிறைவேற வேண்டு மானால், பூசத்தில் வழிபாடு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழி பாடுகள்தான். நமது ஜாதகத்தில் பாக்ய ஸ்தானாதிபதி இருக்கும் நிலையை அறிந்து, அதன் பலம் அறிந்து, நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் வளர்ச்சி கூடும். இதைக் காட்டிலும், ஒவ்வொரு மாதங்களிலும் வரும் சிறப்பு நட்சத்திரங்கள், சிறப்பு திதிகளில் அதற்குரிய தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் உடனுக்குடன் நற்பலன்களைக் காணலாம்.

    அந்த அடிப்படையில் தைப்பூசம் திருநாளில் முருகப்பெருமானை கொண்டாட வேண்டும். அன்று காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து கவசப் பாராயணங்களைப் படித்து வழிபட வேண்டும். “வேலை வணங்குவதே வேலை” எனக்கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும். பூசத்தன்று கந்தப்பெரு மானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், உலகம் போற்றும் வாழ்க்கை அமையும்.

    நடந்து செல்ல இயலாதவர்கள், உள்ளூரில் இருக்கும் சிவாலயத்திற்குச் சென்று அங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு வரலாம். பூசத்தன்று பழனிக்கு சென்று, அங்கு தங்க ரதத்தில் பவனி வரும் சண்முகநாதப் பெருமானை கோடானு கோடி பேர் தரிசித்து வருகின்றனர். குன்றக்குடி, பழனி, திருத்தணி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற ஆலயங்களுக்கும், அறுபடை வீடுகளின் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கும் பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வந்தால் இன்னல்கள் விலகி அமைதியான, வளமான வாழ்க்கை அமையும்.

    தைப்பூசத்திருநாளில் எளிய முறையிலாவது பழனி ஆண்டவரை வேண்டித் துதியுங்கள். தைப்பூச விரதம் வறுமை போக்கும், தடைகளை தகர்க்கும், குழந்தைப்பேறுகள் கிடைக்கச் செய்யும், ஆரோக்கியம் அளிக்கும், வாழ்வு வளம் பெறச் செய்யும். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து முருகப் பெருமானை வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும். இதனால் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற மூன்றுவகை சக்திகளையும் பெற்று வளமுடன் வாழலாம் என்று ஞான நூல்கள் சொல்கின்றன.

    நெல்லையில், தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்து இறைவனின் திருவருளினை பார்வதி பெற்றாள். அந்த நாள் தைப்பூசம். எனவே இந்தப் புனித நாளில் சுபகாரியங்கள் நடத்தினால் தம்பதிகள் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக கொண்டாடப்படும் விழாவாகவும் தைப்பூசத் திருநாள் அமைந்துள்ளது.

    பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். அன்றைய தினம் முழுநாளும் விரதம் இருந்து, பால், பழம் சாப்பிட்டு மாலையில் கந்தன் புகழ்பாடி, கந்தப்பம் நைவேத்யம் படைத்து, முருகப்பெருமானை வழிபட்டால் எந்த நாளும் இனிய நாளாக அமையும்.

    தைப்பூச விரத முறை :

    தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
    குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”. இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் அதனால் அறிந்து கொள்ளலாம்.
    நவகிரகங்களில் பெரும்பாலான மக்களால் அதிகம் வணங்கப்படும் ஒரு கிரகமாக இருப்பது “குரு பகவான்” ஆவார். குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”. இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் அதனால் அறிந்து கொள்ளலாம்.

    வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் மாதத்திலும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

    பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு குளித்து நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது பகவானுக்குரிய மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழைகளுக்கு  தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

    குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் நடக்கும். இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகி, சிறந்த வாழ்க்கை உண்டாகும்.
    இன்று விரதம் இருந்து முருகன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம்.
    கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

    அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

    தை மாதத்தில் வரும் கார்த்திகை விரதத்தை கடைபிடித்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். கஷ்டங்கள் தீரும். தை மாத கார்த்திகை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் மட்டும் அருந்தியும் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    இன்று விரதம் இருந்து முருகன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். 
    ×