என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- இந்த எளிய பரிகாரத்தை செய்பவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
- உங்களையும் உங்கள் வீட்டையும் எந்த ஒரு துஷ்ட சக்திகளும் அண்டாதவாறு காக்கும்.
நமது வாழ்க்கையின் தேவைக்காக வீடு, வாகனம் மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது நமது நெருக்கமான உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் பொறாமை பார்வை மற்றும் கண்திருஷ்டிகளுக்கு ஆளாக நேர்கிறது.
சக்திதேவி எனப்படும் அம்மன் வழிபாடு நமக்கு ஏற்படும் எத்தகைய தீய பாதிப்புகளையும் உடனடியாக நீக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்தில் வருகின்ற ஏதேனும் ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை தினத்தில், உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கின்ற ஏதேனும் ஒரு அம்பாள் கோயிலில் இருக்கின்ற அம்பாள் விக்கிரகத்திற்கோ அல்லது துர்க்கை அம்மன் கோயிலில் இருக்கும் துர்க்கை அம்மன் விக்கிரகத்திற்கோ சிகப்பு நிற புடவையை சாற்றி வழிபடுவதால் வெகு சீக்கிரத்தில் உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க என்ற ஒரு எளிய பரிகாரமாக இருக்கிறது.
இந்த எளிய பரிகாரத்தை செய்பவர்களுக்கு தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் கண் திருஷ்டிகள் நீங்கி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மேன்மை உண்டாகும். உங்களையும் உங்கள் வீட்டையும் எந்த ஒரு துஷ்ட சக்திகளும் அண்டாதவாறு காக்கும்.
- கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக முகூர்த்த காலம் உள்ளது.
- கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலை ஏற்படுத்திவிடும்.
யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும்.
இந்த உலகில் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழப் பணம் இன்றியமையாத ஒன்று. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதுதான் வள்ளுவரின் வாக்கு. வருமானம் குறைகிறபோது தேவைக்குக் கடன் வாங்குவது இயல்பு. ஆனால், அந்தக் கடன் வெறும் பொருளாதாரச் சுமையாக மட்டும் இல்லாமல் மனதில் நிம்மதியில்லாத சூழலையும் ஏற்படுத்திவிடும்.
கடன் பட்டுவிட்டால் அதை அடைக்கும்வரை யாருக்கும் நிம்மதியிருக்காது. ஒரு சிலர் கடன் வாங்கிக் கடன் அடைப்பது என்னும் பழக்கத்திலும் இருப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் தவிர்க்க முடியாத சுழலில் சிக்கியதுபோல நம்மை ஆழ்த்திவிடுகிறது. கடன்பட்டு அதை அடைக்கமுடியாமல் வருந்துகிறவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. அதுவே மைத்ர முகூர்த்தம்.
மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன?
அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும் அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் `மைத்ர முகூர்த்தம்' எனப்படுகின்றன.
பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை. அசுவினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. கேது பகவான் ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடனை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை.
எனவேதான் கேதுவுக்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம் கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார். அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனிபகவானுக்குரியது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே, அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக உழைப்பும் நம் முயற்சியும் இணைந்து நமக்கு நவகிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும் என்பதுதான் இதன் தாத்பர்யம்.
``பொதுவாக அசுவினி நட்சத்திரம் உதிக்கும் நாளில் வரும் மேஷ லக்னம் மற்றும் அனுஷ நட்சத்திர நாளில் வரக்கூடிய விருச்சிக லக்னம் வரும் நேரங்களில் ஒரு முகூர்த்தம் ஏற்படும். அதுவே மைத்ர முகூர்த்தம் எனப்படுகிறது. மைத்ர முகூர்த்தம் என்பது ஒருவருக்குப் பணத்தால் ஏற்படக் கூடிய மன சஞ்சலங்களுக்கு விடிவுகாலம் தரும் முகூர்த்த காலம். யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும். அப்படி இந்த மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரமும் விருச்சிக லக்னமும் கூடிய மைத்ர முகூர்த்தம் இன்று வாய்த்துள்ளது.
உங்கள் கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கவலைப் படவேண்டாம். உங்கள் கையில் இருக்கும் பணம் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு சிறுதொகையை எடுத்துக் கொள்ளுங்கள். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி 10 ரூபாயாக இருந்தாலும் சரி. அந்தப் பணத்தை ஒரு கவரில் வைத்து, நீங்கள் யாருக்குத் தர வேண்டுமோ அவரின் பெயரை அந்தக் கவரில் எழுதிவிடுங்கள். வங்கிக் கடனாக இருந்தால் வங்கியின் பெயரை எழுதிவிடுங்கள். பின்பு அந்தக் கவரை சுவாமிபடம், பூஜை அறை அல்லது நீங்கள் வழக்கமாகப் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள்.
பின்பு வீட்டில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்துக்கு அல்லது சிவலிங்கம் போன்ற சிறு மூர்த்தங்கள் இருந்தால் அதற்கு சிறிது அரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்து ஏதேனும் ஒரு பூ சாத்தி வழிபடுங்கள். குறைந்தது ஐந்து நிமிடம் சுவாமிக்கு முன்பாக அமர்ந்து சிவபுராணம் அல்லது கோளறுபதிகம் பாடுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த தெய்வ ஸ்லோகத்தைப் பாடி ஆராதியுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்களின் விருப்பமும் வேண்டுதலுமான செல்வ வளம் அதிகரிக்க இறைவன் அருள்புரிவார். அதனால் விரைவிலேயே உங்கள் கடன்கள் அடையும். நீங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும்போது எடுத்துவைத்த அந்தச் சிறு தொகையையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இது உங்களின் விருப்பத்துக்கும் பிரயாசைக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் என்பதை உணருங்கள்.
- ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்தும் சுப பலனாக நடைபெற புதனும் மூன்றாமிடமும் வலிமை பெற வேண்டும்.
- ஜோதிடத்தில் இளைய சகோதர, சகோதரியால் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது.
காசு, காமம், சொத்து என்ற மூன்று தீய சக்திகளே உலகில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம். சொத்தினால் உருவாகும் எல்லைத் தகராறு ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை உலக நாடுகளுக்கே இருக்கும் போது தனி மனிதனுக்கு இல்லாமல் போகுமா?மண் ஆசையும் சகிப்புத்தன்மையும் இல்லாத வரை இது தொடர்கதையாகவே இருக்கும். சொத்து மற்றும் ஆவணங்களால் எழும் கருத்து வேறுபாட்டில் பலர் உயிரைக் கூட இழக்கத் தயங்குவதில்லை.
மனிதர்களின் நிகழ் கால மற்றும் எதிர்கால தேவைக்கான அனைத்து தகவல்களுக்கும் எழுத்துப் பூர்வமான ஆதாரமே ஆவணங்கள். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஆவணங்களைப் பற்றிக் கூறுமிடம் லக்னத்திற்கு மூன்றாமிடம் என்றாலும் ஆவணங்களுக்கான காரக கிரகம் கால புருஷ மூன்றாம் அதிபதியான புதன் பகவான்.
மூன்றாம் அதிபதி மற்றும் மூன்றில் நின்ற கிரகங்களின் வலிமையை பொறுத்தே ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான சாதக பாதகங்கள் நிகழ்கின்றன.
ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்தும் சுப பலனாக நடைபெற புதனும் மூன்றாமிடமும் வலிமை பெற வேண்டும்.
மூன்றாமிடமும் புதனும் வலிமை குறைந்து ராகு/கேதுக்களின் சம்பந்தம் பெறும் போது ஆவணங்களால் ஏற்படும் அசுப பலன்கள், மன உளைச்சலை சற்று மிகைப்படுத்தலாகவே தருகிறது. ஜாதகத்தில் புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு பூர்வீகச் சொத்தின் மூலம் கையெழுத்து மாற்றம் ,சர்வே எண் திருத்தம், எல்லைத் தகராறு, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற சொத்து தொடர்பான ஆவணங்களால் தீராத, தீர்க்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.
ஜோதிடத்தில் இளைய சகோதர, சகோதரியால் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது. மூன்றாம் பாவகக்காரர் செவ்வாய். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம். நமது ஜோதிட முன்னோடிகள் தீர்க்க தரிசிகள். மூன்றாமிடத்தால் ஒருவருக்கு அசவுகரியம் என்றால் சகோதரத்தாலும், ஆவணத்தாலும், சொத்தாலும் மட்டுமே வரும் என்று எவ்வாறு ஆனித்தரமாக வரையறுத்துள்ளார்கள். ஆக மூன்றாமிடம் வலுவிலந்தவர்களுக்கு சகோதரத்தால் ஆவணத்தால் சகாயமற்ற பலன் ஏற்படுகிறது.
எத்தனையே குடும்பங்களில் பூர்வீகச் சொத்தை பிரிக்கும் போது சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாட்டால் சொத்துடன் சகோதர, சகோதரிகளும் பிரிவதை அனுபவத்தில் பார்க்கிறோம். இவர்களுக்கு மூன்றாமிடம் பலவீனமாக இருப்பதுடன் புதனுக்கு ராகு, கேதுக்களின் சம்பந்தமும் இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் நான்காமிடம், நான்காம் அதிபதி, செவ்வாய் வலிமை பெற்று இருந்தாலும் புதன்,ராகு/கேது சம்பந்தம் இருந்தால் சொத்துக்களால் பயனடைய முடியாத வகையில் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை தலை விரித்து ஆடும்.
இது ஒருபுறம் இருக்க கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிலர் மூன்றாமிடத்தால் தமக்கு ஏற்படப் போகும் அசவுகரியத்தை உணராமல் உடன் பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்து விட்டு பின் நாட்களில் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். மூன்றாமிடம் பலவீனத்துடன் புதன் + சனி +ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வாழ்வாதாரத்தையே அசைக்கும் விதமாகவே இருக்கிறது.
சுய ஜாதகத்தில் செவ்வாய்க்கு ராகு/ கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். அல்லது மூலப் பத்திரம், ஈசி இவற்றின் மூலம்வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள்.
அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தம் இல்லாத சொத்தை போலிப் பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாறுவது அல்லது புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள். அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது. என்றாலும் இன்றும் பல போலி பத்திர வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஜாதகத்தில் சூரியன் + ராகு சம்பந்தம் இருப்பவர்களின் சொத்து கோவில், சர்ச், மசூதி போன்றவற்றின் அருகில் இருக்கும்.
அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஒரையில் 21 பேருக்கு இட்லியுடன் எள் சட்னி தண்ணீருடன் தானம் தரவும். (48 வாரம்) அல்லது செவ்வாய் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- திருச்செங்கோட்டில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது காளிப்பட்டி முருகன் கோவில்.
- கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.
முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளையொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம். ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு! என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்.
இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர். பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம்.
இந்த கோவிலில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலானவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் மை பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.
வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்த சாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.
- பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும்.
- எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும்.
விசாக நட்சத்திரமன்று முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணையில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லனயாவும் நடைபெறும். பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி, வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.
பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் வெற்றி யாகம்.
சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் சந்தித்தவர்களெல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் இனிய சந்ததிகள் பிறகும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் எம பயங்கள் தீரும். மாம்பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வ நிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் திக்கெட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.
அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்த னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சரும நோய் அததனையும் தீர்ந்தும் போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார் போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேனாலே அபிஷேகம் செய்து பார்த்தால் தித்திக்கும் சங்கீதம் விருத்தியாகும். சங்காலே அபிஷேகம் செய்து பார்த்தால் சகலவித பாக்யமும் நமக்கு கிடைக்கும்.
- விநாயகர் வழிபாட்டுடன் யாகம் தொடங்கியது.
- சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது கெம்பநாயக்கன்பாளையம். இங்கு டேம் ரோட்டில் கொருமடுவு என்ற இடத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு வருடம்தோறும் திருமண தடை நீக்கும் பார்வதி யாகம் நடைபெற்றது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடமாக நடைபெறவில்லை. இந்த வருடம் வழக்கம்போல கோயிலின் முன்பாக பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டு இருந்தது. அந்தப் பந்தலில் ஆயிரக்கணக்கான இளம் பெண்களும் வாலிபர்களும் தனித்தனியாக அமர வைக்கப்பட்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று காலை 26-வது ஆண்டு விழாவும் திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம் நடைபெற்றது.
நேற்று விநாயகர் வழிபாட்டுடன் யாகம் தொடங்கியது. தீக்குண்டம் வளர்க்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓதினார்கள். நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மற்றும் முன்னோர் சாபம் உட்பட அனைத்து தோஷங்களும் விலக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலும் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திருமண தடை நீங்க ஈரோடு, கோவை திருப்பூர், சேலம் மற்றும் தமிழ்நாடு அளவிலும், வெளி மாநிலத்தில் இருந்து ஆண்களும் பெண்களுமாக சுமார் 2000 பேர் இதில் கலந்து கொண்டார்கள்.
- யார் பெயரில் சொத்து வாங்குவது என்பது மிக முக்கியம்.
- இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.
பலர் சொத்து வாங்கும் போது சுய ஜாதகத்தை பரிசீலிப்பது இல்லை. யார் பெயரில் சொத்து வாங்குவது என்பது மிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் புதன் + சனிக்கு ராகு/கேதுக்கள் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் பினாமி பெயரில் சொத்து வாங்கக் கூடாது. ஒருவரின் தார்மீக அடிப்படை உரிமையைத் தட்டிப் பறித்து நிர்கதியாக நிற்க வைப்பதே இந்த கிரக கூட்டணிகளின் வேலை. பினாமி பெயரில் சொத்து வாங்கும் பலருக்கும் இதே நிலை தான்.
சுய ஜாதகத்தில் 4, 8, 11-ம் பாவகங்களுக்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் விபரீத ராஜ யோகத்தால் பினாமி சொத்து கிடைக்கும். அதை அனுபவிக்கும் பாக்கியமும் உண்டாகும். ஜனன கால ஜாதகத்தில் 4,8,12-ம் பாவகங்களுக்கு சம்பந்தம் இருந்தால் விபரீத ராஜ யோகத்தால் பினாமி சொத்து கிடைக்கும். அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது. குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு கை நழுவிப் போகும் அல்லது யாருக்கும் பயன்படாத, பயன்படுத்த முடியாத சொத்தாகவே பல தலைமுறைக்கு இருக்கும்.
மேற்கண்ட நிலை மாற கோட்சார குருவின் சம்பந்தம் 4,8,12-ம் இடங்களுக்கு கிடைக்கும் காலங்களில் தொடர்ந்து 27 பஞ்சமிகள், மாலை வேளையில் சிவன் சன்னதியில் சிகப்பு திரி கொண்டு மண் அகலில் இலுப்பெண்ணெய் தீபம் 9 ஏற்றி மனமுருகி வேண்டி வந்தால் பரிகாரம் முடிவதற்குள் பலன் கை மேல். இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.
மேலே கூறப்பட்ட அனைத்து நிலைகளும் பலரை நீதிமன்ற படி ஏற வைக்கிறது. பலர் வழக்கை நடத்த முடியால் சொத்தை இழக்கிறார்கள். இவர்கள் காஞ்சிபுரம் வழக்கீஸ்வரர் கோவில் சென்று வழிபட நியாயமான வழக்குகள் வெகு விரைவில் சாதகமாகும். காஞ்சிபுரம் காந்தி வீதியில் உள்ள இக்கோவிலில் வழக்குகளில் சிக்கி நிம்மதி இழந்தவர்கள் சிறப்பு பூஜை செய்தால் வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், 'வழக்கறுத்தீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது.
- சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்...
சுய ஜாதகத்தில் செவ்வாய்க்கு ராகு/ கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். அல்லது மூலப் பத்திரம், ஈசி இவற்றின் மூலம்வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள்.
அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தம் இல்லாத சொத்தை போலிப் பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாற்றுவது அல்லது புறம் போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள்.
அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது. என்றாலும் இன்றும் பல போலி பத்திர வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஜாதகத்தில் சூரியன் + ராகு சம்பந்தம் இருப்பவர்களின் சொத்து கோவில், சர்ச், மசூதி போன்றவற்றின் அருகில் இருக்கும். அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும்.
சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஒரையில் 21 பேருக்கு இட்லியுடன் எள் சட்னி தண்ணீருடன் தானம் தரவும். (48 வாரம்) அல்லது செவ்வாய் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவும் என்கிறார்கள் ஜோதிடர்கள். இதற்கு சாகா மூலி என்ற பெயரும் உண்டு.
இந்தக் கிழங்கில் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. வீட்டிற்கும் நமக்கும் ஏற்படும் திருஷ்டி, தோஷங்களைப் போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம் முதலான மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள்.
பெரும்பாலான வீடுகளில் இந்த கிழங்கை திருஷ்டிக்காக வீடுகளில் கட்டி தொங்க விடுகின்றனர். வராந்தாவின் மேல் தளத்திலோ அல்லது நிலவரையின் நடுப்பகுதியிலோ இதனை கட்டி வைப்பதால் வீட்டிற்குள் எந்தவித விஷமுள்ள ஜந்துக்களும், சிறிய பூச்சிகளும் கூட வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதன் வாசம் அவைகளுக்கு பிடிப்பதில்லையாம். உங்கள் வீட்டில் எந்த வகையான விஷ பூச்சிகளும் வராமல் இருப்பதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முக்கியமாக பில்லி, சூனியம், ஏவல் போன்ற எத்தகைய தீய சக்திகளும் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்த கிழங்கு அதனை உட்கிரகித்து தன்னை தானே தற்கொலை செய்து கொண்டு அழிந்து விடும். அதாவது கொடிகள் வளராமல் காய்ந்துவிடும். இதனால் அந்த வீட்டில் இருப்போர் பல பிரச்சனைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். பின்னர் அதற்குரிய பரிகாரங்கள் மேற்கொண்டு அல்லது பூஜைகள் செய்து விட்டு புதியதாக ஒரு கிழங்கை வாங்கி இதே போல் கட்டி வைத்து விடலாம்.
மாறாக உங்கள் வீட்டில் தீய சக்திகளன்றி நல்ல சக்திகள் இருக்குமேயானால் இந்த கிழங்கு முளைவிட்டு பசுமையான கொடிகளாக வளரக்கூடியது. மிகவும் அழகாக காட்சியளிக்கும். பசுமை தன்மை இருக்கும் வரை உங்கள் இல்லம் மகிழ்ச்சிகரமான இல்லமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதன் விசித்திரமான தோற்றம், வித விதமான தோற்றம் காரணமாக இதனை கட்டி தொங்க விட்டால் அதன் நிழல் கருடன் பறப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும். இதனால் பாம்புகள் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். ஆகாயத்தில் கருடன் பறப்பது போன்ற தோற்றமுடையதால் இந்த பெயர் பெற்றது என்று கருதப்படுகிறது.
வீட்டில் திருஷ்டி முழுவதும் கழிந்துவிடும். இல்லத்தில் பொன்னும் பொருளும் சேரும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
1. ஒருவருக்கு ஏழாம் அதிபதி தசாபுத்திகள் நடப்பில் இருந்து, கோச்சாரத்தில் குரு ஏழாம் இடத்தை, ஏழாம் அதிபதியை பார்க்கும் பொழுது திருமணமாகும்.
2. இரண்டாம் அதிபதியின் தசாபுத்திகள் நடைபெறும் காலத்தில், களத்திர ஸ்தானத்தோடு குரு தொடர்பு கொள்ளும்பொழுது திருமணமாகும்.
3. எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் சுக்கிர தசா, புத்திகளில் திருமணமாகும். சாத்தியக் கூறுகள் மிகுதி.
4.ஏழாம் அதிபதி ராகு ,கேதுக்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால், ராகு, கேதுக்களின் தசா புத்திகள் திருமணத்தை நடத்தித் தரும்.
5. ஏழாமிடத்தில் ராகு கேதுக்கள் இருந்தால், தான் நின்ற களத்திர ஸ்தானத்து பலன்களை ராகு ,கேதுவே எடுத்துச் செய்யும்.
6. விரைவில் குழந்தை பெற்று குடும்பம் அமையக்கூடிய, நட்சத்திர சாரத்தை, ராகு கேது பெற்றிருந்தாலும், அந்த காலகட்டங்களிலும் சிலருக்கு திருமணம் நடக்கும்.
7. களத்திர ஸ்தானாதிபதியின், நட்சத்திர சாரம் வாங்கிய கிரகத்தின் தசா,புத்திகளும் திருமணத்தை நடத்தி தரும்.
8. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியின் தசா புத்திகளும் சிலருக்கு திருமணம் நடத்தும்.
- இந்த விதிகளின்படி பெரிய பாதிப்பு இல்லாத களத்திர தோஷத்திற்கு திருமணம் நடக்கும்.திருமண வாழ்க்கை பாதிப்பைத் தராது. பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.
பாரிகாரங்கள்
பொதுவாக எந்த தோஷமாக இருந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் பாதிப்பை தராது. தோஷத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் மட்டுமே பாதிப்பைத் தரும். வீரியம் கடுமையாக இருந்தால் திருமணம் நிச்சயமான நாள் முதல் சிறு சிறு பிரச்சினை தோன்றி முடிவில் எதிர்பாராத பின் விளைவுகளைத் தரும். எனவே ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், அந்தக் களத்திர தோஷம் எந்த காலகட்டங்களில் செயல்படும், என்பதை அறிந்து, அதற்கேற்ற தசா புத்தி அமைப்புள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
அதாவது திருமணமான தம்பதிகளுக்கு குறைந்தது 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சாதகமான தசா புத்திகள் நடக்க வேண்டும். மேலும் திருமணத்திற்கு முன்னரே சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய வழிபாட்டு பரிகார முறைகளை மேற்கொள்வது நல்லது.
களத்திர தோஷமுடைய ஜாதகத்திற்கு அதே அமைப்புடைய ஜாதகத்தை பொருத்துவதே நிரந்தர தீர்வு. அத்துடன் திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வதே மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் இளம் வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் நெருங்கிய குடும்பத்து உறவாக இருப்பார்கள்.தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். வாழ்க்கைத் துணையின் மேல் அன்பும் அதிக அக்கறையும் இருக்கும்.கணவன், மனைவி இருவருக்குமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுகின்றார்கள். திருமணம் முடிந்தவுடன் தனித் குடித்தனம் செல்வார்கள். அசுப கிரக சம்பந்தம் இருந்தால் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள்.
ஏழாம் அதிபதி குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்தால் வாழ்க்கைத் துணை வசதியானவராக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமையும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். பாவகிரகங்கள் சம்பந்தம் இருந்தால் போராட்டமான வாழ்க்கை, அவமானம், பிரிவு அல்லது இழப்பு ஏற்படும்.
ஏழாம் அதிபதி சகாய ஸ்தானமான மூன்றில் நின்றால் வாழ்க்கைத் துணை வீட்டின் அருகில் இருப்பார். தெய்வ பக்தியும், ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பார். வாலிப வயதில் சீக்கிரமே திருமணம் நடக்கின்றது. சிலர் வீட்டை விட்டு வெளியேறி பெற்றவர்களை எதிர்த்து சுய விருப்ப விவாகம் புரிகின்றனர்.
ஏழாம் அதிபதி சுக ஸ்தானமான நான்கில் இருந்தால் தாய் வழி உறவில் திருமண வாய்ப்பு அதிகம். மனைவி சொல்லே மந்திரம் மீதி எல்லாம் தந்திரம் என்று வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்பட்டு வாழ்வார்கள். கணவனால் மனைவிக்கு மனைவியால் கணவனுக்கு ஆதாயம் உண்டு. குறிப்பாக குடும்ப சொத்து வெளியில் சென்று விடக் கூடாது என்பதற்காக நடக்கும் திருமணமாகும். உபய லக்னமாக இருந்தால் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்பு உண்டு. எந்த லக்னமாக இருந்தாலும் ஏழுக்குடையவன் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.
5, 7-ம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாத வரை எந்த தொந்தரவும் இருக்காது. சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்தால் எளிதாக பிரிவினை உண்டாகும்.
ஏழாம் அதிபதி ஆறாம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் நின்றால் வாழ்க்கைத் துணைக்கு நோய் பாதிப்பு உண்டாகும் அல்லது கடனால் அவஸ்தை உண்டாகும். வாழ்க்கைத்துணை ஊதாரியாக வாழ்வார். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. மிகுதியான கருத்து வேறுபாடு உண்டு. விவாகரத்தில் முடியும் வாய்ப்பு அதிகம்.
ஏழாம் அதிபதி ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதுதான் பலருடைய கணிப்பு. ஆனால் ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையின் கை ஒங்கும். பெண்ணாக இருந்தால் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்பவள். அதனால் மிகுதியான ஈகோவால் தம்பதிகள் பிரிந்து வாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன.
ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையால் திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயரும். பலருக்கு முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து, கோர்ட், கேஸ் என அழைந்து மன நோயாளியாகுவார்கள். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும் ஏழாம் அதிபதி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்றால் பூர்வ ஜென்ம பாக்கிய பலத்தால் ஆதர்ஷன தம்பதியாக வாழ்வார்கள். வாழ்க்கை துணை தைரியமானவர். அவரின் சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.
ஏழாம் அதிபதி பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நின்றால் வாழ்க்கைத் துணை சுய தொழில் செய்பவராக இருப்பார் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு பொருளாதாரத்தில் வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். சுய கவுரவம் உள்ளவராக இருப்பார்கள். நல்ல கல்வி அறிவு உண்டு. படித்த படிப்பிற்கு சம்பந்தமான தொழில் உத்தியோகம் உண்டு.
சொத்து ககம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை உண்டு. ஏழாம் அதிபதி பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு.7 ம் அதிபதி பலம் குறைந்து இருந்தால் இருதார தோஷத்தை ஏற்படுத்திவிடும்.
ஏழாம் அதிபதி பனிரென்டாம் இடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் வாழ்க்கைத் துணையால் நிறைய விரயங்களை சந்திப்பார். வரவுக்கு மீறி செலவு செய்வார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள்.
கடுமையான திருமணத் தடையை தருகிறது. பலருக்கு திருமணம் நடப்பதில்லை. திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனமாக வாழ்க்கைத் துணையை நம்பியே பிழைக்கிறார்கள்.
களத்திர தோஷமும் திருமண காலமும்
குரு பலமே திருமணத்திற்கு முக்கியம் என்பது பலரின் கருத்து. குருபலம் வந்தால் மட்டுமே திருமணம் ஆகாது என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.
ஒருவருக்கு இரண்டு வருடத்திற்கு, ஒருமுறை குருபலம் வரும். குரு பலம் இருந்தால் திருமணம் நடந்து விடும் என்றால் தசா புக்திக்கு வேலையே கிடையாது. அத்துடன் குரு பலம் மட்டுமே திருமணத்தை நடத்தி வைத்தால் 40 வயதை கடந்தும் திருமண வாழ்க்கையை சுவைக்காத முதிர்கன்னிகள், காளையர்களுக்கு ஏன் திருமணம் நடைபெறவில்லை. தசா புத்தி ஒத்துழைக்காமல் திருமணம் நடக்காது என்பது தான் அடிப்படை ஜோதிட விதி.
இந்த தோஷ அமைப்பை பெற்றவர்களுக்கு தாமதத் திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலை இருக்கும் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாதவருடன் வாழ்வது.
அல்லது சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவு இல்லாதவர்களுடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் சதா சண்டை சச்சரவுடன் வாழ்வது அல்லது ஒருவர் குறையை மற்றவர் பெரிதுபடுத்தி நிம்மதியை இழப்பது அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது அல்லது தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது அல்லது விவாகரத்து பெறுவது அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடுவது போன்ற ஏதாவது இடரைத் தந்து கொண்டே இருக்கும்.
உளவியல் ரீதியாக ஆயிரம் ஜாதகத்தை ஆய்விற்கு எடுத்துக் கொண்டால் 900 ஜாதகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கவே செய்யும். பலருக்கு களத்திர தோஷ பாதிப்பு இருந்தாலும் களத்திர ஸ்தானம் எனும் 7மிட அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே திருமண வாழ்க்கை அமையும். 7-ம் அதிபதியை கருத்தில் கொண்டு களத்திர தோஷ பாதிப்பை முடிவு செய்ய வேண்டும். ஏழாம் அதிபதி ஜாதகத்தில் கெட்டால், திருமணம் கேள்விக்குறியாகும் அல்லது சில நேரங்களில் மிக மிக தாமதமாக திருமணம் அமையும்.
களத்திர தோஷம் உள்ள ஆண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் சுக்ரனும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது.
அதேபோல் களத்திர தோஷம் உள்ள பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. இதுவே ஜோதிட சூட்சமம். இந்த சூட்சமத்தை பின்பற்றாமல் 7-ம் இடத்தில் நிற்கும் அசுப கிரகங்களை மையப்படுத்தி களத்திர தோஷம் என பலரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது நியாயமா? ஏழாம் அதிபதியும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம்.
மேலும் களத்திர தோஷம் பெண்ணிற்கு மட்டும் பார்க்க வேண்டும். ஆண்களுக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






