என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- இந்த கோவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்றது.
- சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோவில்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. மேற்கு பார்த்து அமைந்த சிவன் கோவில் இது, இந்த பழமையான சிவன் கோவில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று. இந்த கோவிலின் மூலவர் கைலாசநாதர், தாயார் கற்பகாம்பாள் அருள் பாலிக்கிறார்கள். இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது.
இத் தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாள லிங்கம் சன்னதியாகும், மகா மண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்ப்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்தப் பாதாள லிங்கத்திற்குப் பச்சைக் கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடும் என்பது நம்பிக்கை
இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது.
தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு பேருந்துகள் மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், இரயில் நிலையத்திலிருந்தும், பத்து நிமிடங்களுக்கு ஒரு நகரப் பேருந்து வீதம் தாரமங்கலத்துக்கு இயக்கப்படுகிறது.
கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை,7.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கியச் சிறப்பு தினங்களில் முழு நேரமும் நடை திறந்திருக்கும்.
- தங்களின் கோரிக்கைகள் நிறைவேற மக்கள், நாகர் சிலையை இங்கே வைத்து வணங்குகிறார்கள்.
- ஜோதிட ரீதியாக நாகத்தால் ஏற்படும் பிரச்சினைகளை 'சர்ப்ப தோஷம்' என்கிறார்கள்.
கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், மகாபாரதத்தின் மகா ஞானியான விதுரருடன் தொடர்புடைய ஒரு விசித்திரமான கோவில் உள்ளது. மகாபாரத யுத்தம் வராமல் இருப்பதற்காக விதுரர் கொடுத்த ஆலோசனையை, கவுரவர்களின் மன்னனான திருதராஷ்டிரர் புறக்கணித்தார். அதன் விளைவு, பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட குருசேத்திரப் போர். எண்ணிலடங்காத மரணங்களையும், துன்பங்களையும் அளித்த பிறகே போர் முடிவுக்கு வந்தது.
இந்தப் போரில் பங்கேற்காத விதுரர், கிருஷ்ணரின் ஆலோசனைப்படி தனது மனதை அமைதிப்படுத்துவதற்காக தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அவர் இறுதியாக இந்தப் பகுதியில் உள்ள மைத்ரேய ரிஷியின் ஆசிரமத்தில் குடியேறியதாக கூறப்படுகிறது. அங்கு ரிஷியின் ஆலோசனைப்படி, விதுரர் 'அஸ்வதா' (அத்தி மரம்) மரக்கன்றுகளை நட்டு, அதை வணங்கும் நடைமுறையைத் தொடங்கினார்.
அதை அவர் தனது கடைசி நாள் வரை தொடர்ந்தார். இங்கு அமைந்த கோவில் 'விதுராஷ்வதா கோவில்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு அஸ்வதா மரத்தின் தண்டு இருப்பதை இன்றும் காணலாம். இந்த ஆலயத்தில் நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடும் வழக்கம் பிரசித்திப் பெற்றது. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற மக்கள், நாகர் சிலையை இங்கே வைத்து வணங்குகிறார்கள்.
இப்படி வைக்கப்பட்ட நாகர் சிலைகளின் எண்ணிக்கையே இங்கு பல ஆயிரங்களைத்தாண்டும். இங்குள்ள புனிதமான அத்தி மரத்தின் கீழ்தான் இந்த நாகர் சிலைகள் வைத்து வணங்கப்படுகின்றன. ஜோதிட ரீதியாக நாகத்தால் ஏற்படும் பிரச்சினைகளை 'சர்ப்ப தோஷம்' என்கிறார்கள். பாம்புகளுக்கு தீங்கு விளைவிப்பவர்கள், கடந்த கால வாழ்க்கையை சர்ப்பதோஷத்தோடு முடித்தவர்களுக்கு, தற்போது குழந்தை பாக்கியம் கிடைப்பது கடினம் என்கிறது, ஜோதிடம்.
இந்த சர்ப்ப தோஷத்தை போக்கி, குழந்தை பாக்கியம் தரும் தலமாக, விதுராஷ்வதா ஆலயம் மாறியிருக்கிறது. நாக பிரதிஷ்டை செய்யப்படும்போது, அந்த சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுகிறார்கள்.
- நர்த்தன விநாயகருக்கு இனிப்பு நைவேத்தியம் வைத்து வழிபட்டால் இழந்தவற்றை பெறலாம்.
- வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டால் தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.
நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்தியம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.
அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.
சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.
கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.
இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.
வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
- ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒரு மரம் உள்ளது.
- இனி 12 ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...
உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது.
பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி 12 ராசிகளுக்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...
மேஷம் - செஞ்சந்தனம் மரம்,
ரிஷபம் - அத்தி மரம்,
மிதுனம் - பலா மரம்,
கடகம் - புரசு மரம்,
சிம்மம் - குங்குமப்பூ மரம்,
கன்னி - மா மரம்,
துலாம் - மகிழ மரம்,
விருச்சிகம் - கருங்காலி மரம்,
தனுசு - அரச மரம்,
மகரம் -ஈட்டி மரம்,
கும்பம் - வன்னி மரம்,
மீனம் - புன்னை மரம்.
அவரவர் ராசி நட்சத்திரத்திற்கும் உண்டான விருட்சங்களை தன் நட்சத்திரம் வரும் நாளில் கோவிலில் அல்லது வீட்டு தோட்டங்களில் தன் கைப்பட நட்டு வணங்கி வளர்த்து வர பலவித கர்ம தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகமாகும்.
- இந்த ஊர் ‘தாய்மங்கலம்’ என்று அழைக்கப்பட்டு, பின்னர் ‘தாயமங்கலம்’ என்று மருவியது.
- கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார்.
சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு செல்லும் சாலையில் 26 கிமீ தொலைவில் உள்ளது தாயமங்கலம். கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார். சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.
கோயிலில் கொடிமரம் உள்ளது. தலமரமாக வேப்ப மரம் உள்ளது. அம்மன் கன்னித் தெய்வமாக இருந்து சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் தருபவராகவும் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த ஊர் 'தாய்மங்கலம்' என்று அழைக்கப்பட்டு, பின்னர் 'தாயமங்கலம்' என்று மருவியது.
இப்பகுதி விவசாயிகள் அறுவடை செய்த தானியங்களை அம்மனுக்கு முதலில் காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் மகசூல் பெருகும் என்பது நம்பிக்கை. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கோயிலுக்கு வந்து தீர்த்தம் பெறுகின்றனர். தீர்த்தத்தை பருகுவதால் அம்மை நோய் விரைவில் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள்.
திருமண வரம் வேண்டும் இளம்பெண்கள், தாலிப்பொட்டை அம்மன் காலடியில் வைத்து வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் அம்மனை வணங்கி, கோயிலில் உள்ள வில்வம் மற்றும் வேப்ப மரங்களில் தொட்டில் கட்டி செல்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு அங்கபிரதட்சணம் செய்தும், பால்குடம் எடுத்தும், கரும்புத்தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டோர் ஆயிரம்கண் பானை எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும் வழிபடுகின்றனர்.
- ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
- உங்கள் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். இனி நட்சத்திரத்திற்குரிய மரங்கள் பற்றி பார்ப்போம்...
நட்சத்திர மரங்கள்:
அஸ்வதி- ஈட்டி மரம்,
பரணி-நெல்லி மரம்,
கார்த்திகை-அத்திமரம்,
ரோகிணி-நாவல்மரம்,
மிருகசீரிடம்- கருங்காலி மரம்,
திருவாதிரை-செங்கருங்காலி மரம்,
புனர்பூசம்-மூங்கில் மரம்,
பூசம்- அரசமரம்,
ஆயில்யம்- புன்னை மரம்,
மகம்-ஆலமரம்,
பூரம் -பலா மரம்,
உத்திரம்-அலரி மரம்,
அஸ்தம்- அத்தி மரம்,
சித்திரை- வில்வ மரம்,
சுவாதி -மருத மரம் ,
விசாகம்- விலா மரம்,
அனுஷம்- மகிழ மரம்,
கேட்டை-பராய் மரம்,
மூலம்- மராமரம்,
பூராடம்- வஞ்சி மரம்,
உத்திராடம்- பலா மரம்,
திருவோணம்- எருக்க மரம் ,
அவிட்டம்-வன்னி மரம்,
சதயம்-கடம்பு மரம்,
பூரட்டாதி- தேமமரம்,
உத்திரட்டாதி- வேம்பு மரம்,
ரேவதி-இலுப்பை மரம்.
- முறையற்ற பாகப்பிரிவினை போன்ற சொத்து தொடர்பான ஆவணங்களால் தீராத, தீர்க்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.
- ஜோதிடத்தில் இளைய சகோதர, சகோதரியால் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது.
மனிதர்களின் நிகழ் கால மற்றும் எதிர்கால தேவைக்கான அனைத்து தகவல்களுக்கும் எழுத்துப் பூர்வமான ஆதாரமே ஆவணங்கள். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஆவணங்களைப் பற்றிக் கூறுமிடம் லக்னத்திற்கு மூன்றாமிடம் என்றாலும் ஆவணங்களுக்கான காரக கிரகம் கால புருஷ மூன்றாம் அதிபதியான புதன் பகவான்.
மூன்றாம் அதிபதி மற்றும் மூன்றில் நின்ற கிரகங்களின் வலிமையை பொறுத்தே ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான சாதக பாதகங்கள் நிகழ்கின்றன.
ஒருவருக்கு ஆவணங்கள் தொடர்பான அனைத்தும் சுப பலனாக நடைபெற புதனும் மூன்றாமிடமும் வலிமை பெற வேண்டும்.
மூன்றாமிடமும் புதனும் வலிமை குறைந்து ராகு/கேதுக்களின் சம்பந்தம் பெறும் போது ஆவணங்களால் ஏற்படும் அசுப பலன்கள், மன உளைச்சலை சற்று மிகைப்படுத்தலாகவே தருகிறது. ஜாதகத்தில் புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு பூர்வீகச் சொத்தின் மூலம் கையெழுத்து மாற்றம் ,சர்வே எண் திருத்தம், எல்லைத் தகராறு, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற சொத்து தொடர்பான ஆவணங்களால் தீராத, தீர்க்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.
ஜோதிடத்தில் இளைய சகோதர, சகோதரியால் பற்றிக் கூறும் மூன்றாமிடமே ஆவணங்களைப் பற்றியும் கூறுகிறது. மூன்றாம் பாவகக்காரர் செவ்வாய். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம்.நமது ஜோதிட முன்னோடிகள் தீர்க்க தரிசிகள். மூன்றாமிடத்தால் ஒருவருக்கு அசவுகரியம் என்றால் சகோதரத்தாலும், ஆவணத்தாலும், சொத்தாலும் மட்டுமே வரும் என்று எவ்வாறு ஆனித்தரமாக வரையறுத்துள்ளார்கள். ஆக மூன்றாமிடம் வலுவிலந்தவர்களுக்கு சகோதரத்தால் ஆவணத்தால் சகாயமற்ற பலன் ஏற்படுகிறது.
எத்தனையே குடும்பங்களில் பூர்வீகச் சொத்தை பிரிக்கும் போது சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாட்டால் சொத்துடன் சகோதர, சகோதரிகளும் பிரிவதை அனுபவத்தில் பார்க்கிறோம். இவர்களுக்கு மூன்றாமிடம் பலவீனமாக இருப்பதுடன் புதனுக்கு ராகு, கேதுக்களின் சம்பந்தமும் இருக்கும். ஜனன கால ஜாதகத்தில் நான்காமிடம், நான்காம் அதிபதி, செவ்வாய் வலிமை பெற்று இருந்தாலும் புதன்,ராகு/கேது சம்பந்தம் இருந்தால் சொத்துக்களால் பயனடைய முடியாத வகையில் ஆவணங்கள் தொடர்பான பிரச்சினை தலை விரித்து ஆடும்.
இது ஒருபுறம் இருக்க கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிலர் மூன்றாமிடத்தால் தமக்கு ஏற்படப் போகும் அசவுகரியத்தை உணராமல் உடன் பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்து விட்டு பின் நாட்களில் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். மூன்றாமிடம் பலவீனத்துடன் புதன் + சனி +ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை வாழ்வாதாரத்தையே அசைக்கும் விதமாகவே இருக்கிறது.
சுய ஜாதகத்தில் செவ்வாய்க்கு ராகு/ கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். அல்லது மூலப் பத்திரம், ஈசி இவற்றின் மூலம்வேறு யாராவது சொத்தின் மேல் உரிமை கொண்டாடுவார்கள்.
அதாவது முறையான ஆவணங்கள் இல்லாத ஒரு சொத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது அல்லது சம்பந்தம் இல்லாத சொத்தை போலிப் பத்திரங்கள் தயாரித்து விற்பவர்களிடம் சொத்து வாங்கி ஏமாறுவது அல்லது புறம் போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள். அரசின் சட்ட திட்டங்களால் போலி பத்திர சொத்து விற்பனை தற்போது குறைந்துள்ளது. என்றாலும் இன்றும் பல போலி பத்திர வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதே போல் ஜாதகத்தில் சூரியன் + ராகு சம்பந்தம் இருப்பவர்களின் சொத்து கோவில், சர்ச், மசூதி போன்றவற்றின் அருகில் இருக்கும்.
அதனால் சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்து கொண்டே இருக்கும். சொத்தால், முறையான ஆவணம் இன்மையால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையான சனி ஒரையில் 21 பேருக்கு இட்லியுடன் எள் சட்னி தண்ணீருடன் தானம் தரவும். (48 வாரம்) அல்லது செவ்வாய் காலை 6 மணி முதல் 7 மணி வரையான செவ்வாய் ஓரையில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்து (27 எண்ணம்) 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 48 வாரம் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
- குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.
திட்டை திருத்தலம் கோயிலும் எதிரே திருக்குளமும் என அழகுற அமைந்துள்ளது. ஒருவருக்கு திருமணம் நடக்கவேண்டுமெனில் குருவின் பார்வை வேண்டும். குருவருள் வேண்டும். குருவருள் இருந்தால்தான் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். இதைத்தான் புராணமும் தெரிவிக்கிறது.
ஆனானப்பட்ட உமையவள், சிவனாரை மணம் புரிய வேண்டினாள். குரு பார்வை வேண்டும் என்பதை அறிந்தாள். திட்டை எனும் திருத்தலத்துக்கு வந்தாள். தேவ குருவான பிரகஸ்பதியை மனதார நினைத்து தவம் புரிந்தாள். இதன் பலனாக குருவின் பார்வை கிடைக்கப்பெற்றாள். சிவனாரைத் திருமணம் புரிந்தாள் என விவரிக்கிறது புராணம்.
திருமண தோஷம் இருக்கும் பெண்களுக்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும். வயது தாமதித்துக்கொண்டே இருந்தால், இந்த கோவிலுக்கு சென்று வரலாம். விரைவில் திருமண யோகமும், குழந்தை யோகமும் கிடைக்கும். வியாழன் பார்வை இருந்தால் தொழில் முன்னேற்றம் காணலாம் என்றும் கூறப்படுகிறது.
- உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார்.
- உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிதேவதை சிவபெருமான் ஆவார்.
உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் மிகுதியான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்தாறாவது நட்சத்திரமாக உத்திரட்டாதி நட்சத்திரம் வருகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை மகா ஈஸ்வரனாக இருக்கும் சிவபெருமான் ஆவார். சனி பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் மிகுந்த பொறுமை குணமும், கடினமாக உழைப்பவர்களாகவும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானின் முழுமையான நல்லருளை பெறுவதற்கு வருடத்திற்கு ஒரு முறை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.
வாரந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, இனிப்பு அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, வழிபட்டு வர வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படுவதை காணலாம். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமானையும், அம்பாளையும் வழிபட்டு வர உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.
தினமும் நீங்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக சனிபகவானின் வாகனமாகிய காகங்களுக்கு சிறிது உணவை வைத்த பிறகு சாப்பிடுவதால், சனீஸ்வர பகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைத்து அதனால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகரிக்கும். ஏதேனும் சனிக்கிழமை தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை மட்டும் இனிப்புகளை தானம் செய்வது நன்மை பயக்கும்.
கோவில்களில் 2, 4, 6 போன்ற இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்கும் பசுமாடுகளுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டை வாழைப்பழங்களை, சிறிது தேன் தடவி உணவாக கொடுப்பதன் மூலம் உங்கள் நட்சத்திரத்திற்கு மிகுதியான அதிர்ஷ்டங்கள் உண்டாக செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாகும்.
- திருமணம் நடைபெற காலதாமதம் ஏற்படுவதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் பரிகாரம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெறுவது உறுதி.
செவ்வாய் தோஷம் காரணமாக சிலருக்கு திருமணம் நடைபெறக் காலதாமதம் ஏற்படக்கூடும். அதற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். செவ்வாய் தோஷ பரிகாரங்கள் பல வகைகளில் செய்யப்படுகின்றன.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதி நாளில் விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்து விரதம் இருப்பதால் நல்லவை நடைபெறும்.
41 செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை எழுந்து நீராடி சிவந்த ஆடை உடுத்தி, செவ்வாய் கிரகத்திற்கு செண்பகப்பூ, சிவப்பு அலரி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். விரதம் பூர்த்தி செய்யும் நாள் ஐந்து பேருக்கு விருந்து அளிக்க வேண்டும். அவர்களுக்கு சிவப்பு நிறத்தில் ஆடைகள், செம்புச் சொம்பு, தம்ளர் மற்றும் தாம்பூலத்துடன் தட்சணையும் அளித்து அவர்களை வணங்கி ஆசிபெற வேண்டும்.
செவ்வாய் தோஷமுள்ள பெண்ணுக்கு திருமணம் தடங்கலாகிக் கொண்டே வந்தால் வளர்பிறையில் வரும் செவ்வாய்க்கிழமையில் பரிகாரம் செய்ய வேண்டும். அந்த பரிகாரத்தை நாமே நம் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை நீராடி சிவந்த ஆடை உடுத்தி மாங்கல்யத்தை தெய்வத்தின் முன் மஞ்சள் சரட்டில் கோர்த்து வைத்து வணங்கி எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமை முழுவதும் மாங்கல்யத்தை அவிழ்க்க கூடாது. மறுநாள் காலை நீராடி நெற்றியில் குங்குமமிட்டு தெய்வத்தை வணங்கி மாங்கல்யத்தை அவிழ்த்து ஏதாவது ஓர் ஆலயத்தின் உண்டியலில் சிறிது காணிக்கை சேர்த்து சமர்ப்பித்து விட வேண்டும். சிவந்த ஆடையை யாருக்காவது தானம் செய்துவிட வேண்டும்.
இவ்விதம் செய்தால் திருமணம் தடையின்றி விரைவாக நடைபெற்று விடும்.
- பிரத்தியங்கிரா தேவியை வழிபட வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.
- எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.
கஷ்டம் விலக...
மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார பிரச்சனைகள் நீங்கும்.
மாதுர் தோஷம்
பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள், தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள், தாய் வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும். இவர்கள் பௌர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.
கண்திருஷ்டி போக்க..
கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு, தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும். எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டுபூஜை அறையில் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
வழக்கில் திருப்பம்
பல தலை முறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையான ராகு வேளையில் பிரத்தியங்கிரா தேவியை வழிபட வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.
நோய் குணமாக..
அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள், நோய்க்காக கடன்படுபவர்கள் சனிக்கிழமை குளத்து மீனிற்கு பொரி போட்டு வர விரயம் குறையும். நோய் தீரும்.
திருமண வாழ்வு
பலவருடங்களாக திருமணத்தடையை சந்திப்பவர்கள், தீர்க்க முடியாத விவாகரத்து வழக்கால் அவதிப்படுபவர்கள், திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள், வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள் ஸ்ரீ வாராஹி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும்.மங்களம் உண்டாகும்.
குலதெய்வம்
பூர்வீகம் தெரியாதவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6 - 7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குலதெய்வமாக பாவித்து வேண்டிய வரம் கேட்க குலதெய்வ அருள் கிடைக்கும். பூர்வீகம் பற்றிய தகவல் கிடைக்கும்.
- பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு.
- இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகிலிருக்கிறது மடப்புரம். இங்கு வளைந்தோடும் வைகையின் விளிம்பில் ஆக்ரோஷ அவதாரமாக நிற்கிறாள் பத்ரகாளி.
காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோக்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோக்கவேண்டியிருக்கும்.
மடப்புரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் யாருக்காவது கொடுக்கல், வாங்கல் பிரச்சனை என்றால் பெரும்பாலும் கோர்ட்டுக்கோ போலீசுக்கோ போவதில்லை. அவர்கள் நாடிவரும் கோர்ட், பத்ரகாளி கோயில்தான். காளிக்கு வலப்புறத்தில் சின்னதாக ஒரு திண்டு. இதன் பெயர் சத்தியக்கல். இரண்டு நபர்களுக்கிடையே பிரச்னை என்றால், இந்தத் திண்டில் இருவரும் சூடத்தை ஏற்றி, அணைத்து நாங்கள் தப்புச் செய்யவில்லை என சத்தியம் செய்யவேண்டும்.
பின்னர் கழுத்தில் அரளிமாலை போட்டுக்கொண்டு காளிக்கு வலப்புறமாக நிற்கும் பூதத்தைக் கட்டிப் பிடித்தபடி, நாங்கள் தப்பு செய்யவில்லை என வாக்குக் கொடுக்க வேண்டும். இங்கு யாராவது பொய்ச் சத்தியம் செய்தால் முப்பது நாட்களுக்குள்ளாக அந்த நபரைக் குறைகேட்டுவிடுமாம் காளி. சில நேரம் பொய்ச் சத்தியம் செய்தவர்கள் மடப்புரத்து எல்லையைத் தாண்டுவதற்குள்ளாகவே காளியால் தண்டிக்கப்படுவதுண்டு. இப்படித் தண்டிக்கப்படுபவர்கள் மறுபடியும் காளியிடம் வந்து காணிக்கை செலுத்திப் பரிகாரம் தேடிக்கொண்டு போவது இப்போதும் நடக்கிறது.
இங்கு நடக்கும் இன்னொரு முக்கியமான வேண்டுதல் காசு வெட்டிப் போடுவது. காளியின் முகத்துக்கு எதிரே தரையில் ஒரு பட்டியக்கல் பதித்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்திலேயே உளியும் சுத்தியலும் வைத்திருக்கிறார்கள். அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன் இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை வெட்டிப் போட்டு, அவங்களை எதுத்துக் கேக்க எனக்கு சக்தியில்லை. நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள்.
இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி, அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு வரவழைத்து விடுகிறாள். காளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது. நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் அவர்களது வீட்டில் குவா - குவா சத்தம் கேட்கிறது. வேப்பமரத்தில் கட்டப்பட்டுள்ள தாலி மற்றும் தொட்டில்களின் எண்ணிக்கை இதையெல்லாம் பறைசாற்றுகின்றன.
எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை கோயில் திறந்திருக்கிறது.






