என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- புண்ணிய நதிகளில் புனித நீராட இயலாதவர்கள் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
- இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மாசி மகம் என்பது ஒரு திருவிழா போல கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் பவுர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திர நாளில் இந்துக்களால் இந்த விழா கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது. பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் துயரப்படும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகமாகும்.
இந்த நாளில் புண்ணிய நதிகளில் புனித நீராட இயலாதவர்கள் விரதமிருந்து கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசிமகம் மகாமக விழாவாக கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கும்பகோணத்தில் மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாசிமகம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது கும்பகோணமும், அங்கு உள்ள மகாமக குளமும் தான். பாவம் போக்கும் புண்ணிய நகரமான கும்பகோணத்தில் உள்ள மகாகமகுளத்தில் மாசிமகத்தன்று பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவார்கள்.
ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் இந்த ஆண்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 25-ந் தேதியும், பெருமாள் கோவில்களில் 26-ந் தேதியும் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசி மக திருவிழாவின் மிக முக்கிய உற்சவமான மாசி மக தீர்த்தவாரி இன்று (திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு கும்பகோணம் மகாமகுளத்தில் நடைபெறுகிறது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் இருந்து சாமி புறப்பட்டு கும்பகோணம் மகா மக குளத்தை வந்தடைகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாமக குளத்தில் புனித நீராட உள்ளனர்.
விழாவை முன்னிட்டு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் கும்பகோணம் மாநகராட்சியின் சார்பில் மகாமக குளம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்பணிகள் நேற்று இரவு நிறைவடைந்தன. மேலும் மாநகராட்சியின் சார்பில் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் தீர்த்தவாரியில் கலந்து கொள்ள கும்பகோணத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வரவுள்ளதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனை முன்னிட்டு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் குமார் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மகாமக குளத்திற்கு பக்தர்கள் எளிதாக வந்து செல்வதற்காக ஒருவழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகாமக குளத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்கள் வர தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் விழா நடைபெறும் அனைத்து பகுதியும் கண்காணிக்கப்பட உள்ளது. பெண்களின் வசதிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.
புனிதம் பெறும் புண்ணிய நதிகள்
மாசி மகா மகம் அன்று யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவிரி உள்ளிட்ட 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற கும்பகோணம் வருவதாக ஐதீகம்.
+2
- இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்று கூறப்படுகிறது.
- மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.
தமிழ் மாதங்களில் விசேஷமானதாக கருதப்படுவது மாசி மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று மாசி மக தினமாகும். மகம் நட்சத்திரம் இன்று இரவு 9.30 மணி முதல் இன்று நள்ளிரவு 12.05 வரை நீடிக்கிறது.
மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் 7 ஜென்ம தோஷங்கள் நீங்கி சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம் பிக்கை. மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.
சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.
அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் அம்மா மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து திரளானோர் வழிபாடு நடத்தினர். பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரெங்கநாதரையும், மலைக்கோட்டை தாயுமான சுவாமியையும் வழிபட்டனர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் உள்ள வெள்ளி கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. அவர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
இதேபோல் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் அருகே ஓடும் மணிமுக்தா ஆற்றில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். புரோகிதர்கள் மூலம் தர்ப்பணமும் கொடுத்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் வேதாரண்யம் கடலில் புனித நீராடிய பக்தர்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடி காவிரி ஆறு பகுதிகளில் திரளான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டதோடு, இருகரை தொட்டுச்செல்லும் காவிரி ஆற்றில் புனித நீராடினார்கள்.
இதேபோல் ராமேஸ்வரர் அக்னிதீர்த்த கடலில் இன்று மாசி மகம் தினத்தை முன்னிட்டு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் குவிந்தனர். அவர்களும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டதோடு, 21 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமியை வழிபட்டனர்.
மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதிகள், நெல்லை தாமிரபரணி ஆறு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நதிகள், கோவில் குளங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
இந்த தினத்தில் பல கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் தீர்த்தவாரி நடைபெற்றது. புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி.
அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், பலர் தங்களால் இயன்ற அன்னதானம் செய்தனர். அதுமட்டுமின்றி சிவபெருமான் வருண பகவானுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்தநாளில்தான் என்பதால் மழை வளம் பெருகி, அனைவரும் சுபிக்ஷமாக இருக்க மாசிமக வழிபாடு சிறந்ததாகும்.
- இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது
- ஆயில்ய நட்சத்திரத்தன்று இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில். கேட்டவர்க்கு கேட்டதையெல்லாம் வழங்கி அருளும் வரப்பிரசாதி என்று கமலவல்லி நாச்சியாரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
அரங்கன் என்கிற பரமாத்மாவை, கமலவல்லி எனும் ஜீவாத்மாவாக இருந்து, மன்னருக்கு மகளாக் அவதரித்து, திருமணம் புரிந்து கொண்டவளின் திருக்கோயில் இது. உறையூர் மன்னனின் இளவரசியாக மகாலக்ஷ்மியே அவதரித்த ஒப்பற்ற பூமி இது என்கிறது ஸ்தல புராணம்.
இங்கே கல்யாண விமானம் எனப்படும் கமல விமானத்தில் கோயில் கொண்டு தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அழகு ததும்பத் தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் கமலவல்லி நாச்சியார். வெளியூர் அன்பர்களுக்கு, இது கமலவல்லி நாச்சியார் கோயில். கமலவல்லித் தாயார் கோயில். ஆனால், உள்ளூர்க்காரர்கள், திருச்சிவாசிகள்... நாச்சியார்கோயில் என்றுதான் சொல்லுகிறார்கள்.
இங்கே உள்ள விமானம் கல்யாணவிமானம் என்பது போல் இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. சூரிய புஷ்கரணி என்றும் போற்றப்படுகிறது.
கமலவல்லி நாச்சியாரின் திருநட்சத்திரம்... ஆயில்யம். எனவே மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. அதேபோல், பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, ஆயில்ய நட்சத்திர நாளில், ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கன் இங்கே உறையூர் நாச்சியார்கோயிலுக்கு வருவார். அப்போது இருவருக்கும் திருமண வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.
இந்த திருமண வைபவத்தை நேரில் வந்து தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம். அதேபோல், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரநாளில், கமலவல்லி நாச்சியாரை மனமுருக வேண்டிக்கொண்டால், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தாயாரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்தால், அவர்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். வழக்கில் வெற்றிகிடைத்து இனிதே வாழ்வார்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆயில்ய நட்சத்திர நாளில், நாச்சியார்கோவில் கமலவல்லி நாச்சியாரை வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பிரிந்த தம்பதி கூட விரைவில் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்.
- ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம்.
- ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம். ஐந்தாமிடம் காதலைக் குறிக்குமிடம். ஒன்பதாமிடம் மதம் மற்றும் இனத்தைப் பற்றிக் கூறுமிடம்.இந்த இடங்களும் இந்த இடத்தின் அதிபதிகளும் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம்.
இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை ஆசை விருப்பம் காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 2,5,7,11-ம் பாவகங்கள் சம்பந்தம் பெற்றால் நிச்சயம் காதல் திருமணம் நடைபெறும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலோ காதல் திருமணம் நடைபெறும்.
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் குறைந்தால் கலப்பு திருமணம் நடைபெறும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து, ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.
- கும்பகோணத்தில் நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை அகல என்று பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஆலயங்கள் இருக்கின்றன.
- கும்பகோணத்தில் எந்த பிரச்சனை தீர எந்த கோவிலை வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் ஆலயங்கள் கொண்ட நகரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் காஞ்சிபுரமும், கும்பகோணமும் முக்கியமானவை. இந்த இரண்டு நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றிலும் கும்பகோணம் தோஷங்களைப் போக்கும் ஆலயங்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. இங்கு நவக்கிரக தோஷம் நீங்க, திருமணத் தடை அகல என்று பலவிதமான பிரச்சினைகளுக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. குழந்தைப் பிறப்பு முதல் சதாபிஷேகம் வரை பலனடைய கும்பகோணத்தில் கோவில்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கரு உருவாக (புத்திரபாக்கியம்) - கருவளர்ச்சேரி
கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற - திருக்கருக்காவூர்
நோயற்ற வாழ்வு பெறுவதற்கு - வைத்தீஸ்வரன் கோவில்
ஞானம் பெற - சுவாமிமலை
கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்
எடுத்த காரியம் வெற்றி பெற - பட்டீஸ்வரம்
உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோவில்
செல்வம் பெறுவதற்கு - உப்பிலியப்பன் கோவில்
கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்
இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி
பெண்களுக்கு ருது பிரச்சினை தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை)
திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி
நல்ல கணவனை அடைய - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் உடனாய மங்களாம்பிகை
மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - திருவலஞ்சுழி
பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி
கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்
பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்
எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்
நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்
- மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.
- இந்த கோவிலின் தல வரலாறு என்பது வரலாற்று பின்னணி கொண்டது.
திண்டுக்கல் என்றாலே நம் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். இதன் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது கோட்டை மாரியம்மன் கோவில். இந்த கோவிலின் தல வரலாறு என்பது வரலாற்று பின்னணி கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆட்சி செய்த காலத்தில், மன்னர் திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் திண்டுக்கல் மலைக்கோட்டை இருந்து வந்தது. திப்பு சுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் போர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த காலகட்டத்தில் வீரர்கள், தங்களின் காவல் தெய்வமாக மாரியம்மனை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆரம்ப காலத்தில் மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்ட இந்த கோவில் காலப்போக்கில் மலைக்கோட்டையை பின்னணியாக கொண்டதால், கோட்டை மாரியம்மன் கோவில் என்று மக்கள் அழைக்க தொடங்கினர். கேட்ட வரங்களை, கோட்டை மாரியம்மன் அருளுவார் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
பல்வேறு சிறப்புக்கு சொந்தமான இந்த கோவிலில், ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் அம்மனுக்கு பூத்த மலர் பூ அலங்காரம், கொடியேற்றம், பூச்சொரிதல் விழா, பூக்குழி இறங்குதல், தேரோட்டம், தசாவதாரம், ஊஞ்சல் மற்றும் தெப்ப உற்சவம் என பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த ஆண்டு மாசித்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பூக்குழி இறங்குதல், தேரோட்டம், ஊஞ்சல், தெப்ப உற்சவம், மஞ்சள் நீராட்டு ஆகிய உற்சவங்கள் நடக்க உள்ளது.
பொதுவாக கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைக்கும் பக்தர்கள் அந்த வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அக்கினி சட்டி எடுத்தல், அலகு குத்துதல், அங்கபிரதட்சணம் செய்தல், கரும்பு தொட்டில் கட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இதுமட்டுமின்றி திண்டுக்கல் நகர மக்களின் காவல் தெய்வமாக இருந்து வரும் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசி திருவிழா திண்டுக்கல் மாவட்டத்திலேயே சிறப்பு மிக்க மாசி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோவில்களில் தசாவதாரம் கொண்டாடப்படும் ஒரே கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் என மும்மதத்தவரும் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வருகை தருவது கூடுதல் சிறப்பு. இதனால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் திகழ்கிறது என்றால் அது மிகையில்லை.
- திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில்.
- அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.
ஊடல் இல்லாத உறவுகளே இல்லை. ஊடலும் அதற்குப் பிறகான சமாதானமும் இன்னும் புரிதலையும் நெருக்கத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்தும். இந்த ஊடல் இறைவனுக்குள்ளேயே நிகழ்ந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருக்கும் ரங்கனுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடலும் அதன் பிறகான புரிதலும் விவரிக்கும் புராணம், நாம் அறிந்ததுதானே.
அந்தக் காலத்தில் பரந்துவிரிந்த சோழ தேசத்தின் தலைநகரம் உறையூர். இந்தப் பகுதியில், நந்தசோழன் எனும் மன்னன் ஆட்சி செய்துவந்தான். குறைவற நல்லாட்சி புரிந்து வந்தான். இறைப்பணியிலும் ஈடுபட்டு, சிறந்த பக்திமான் என்று பேரெடுத்தான். ஆனால் என்ன, அள்ளியெடுத்துக் கொஞ்சி மகிழ, ஒரு வாரிசு இல்லை அவனுக்கு.
திருமாலின் மீது மாறா பக்தி கொண்டிருந்த மன்னனின் மனநிலையை, ஏக்கத்தை அறியாமலா இருப்பார் மகாவிஷ்ணு? அவனின் பக்தியில் மகிழ்ந்த பரமன், தன் இல்லாள் மகாலக்ஷ்மியையே மன்னனுக்கு மகளென அவதரிக்கச் செய்தார். தாமரைத் தடாகத்தில், தாமரை மலர் மீது தங்கமென ஜொலித்த குழந்தையைக் கண்டான். குதூகலமானான். அரண்மனைக்குக் கொண்டு வந்தான். ராணியிடம் கொடுத்து மகிழ்ந்தான். நெகிழ்ந்து போனாள் அரசி. 'கமலவல்லி' எனப் பெயர் சூட்டி வளர்த்தார்கள்.
உலகத்துக்கே நாயகியான மகாலக்ஷ்மி, சோழ தேசத்தின் இளவரசியாக வளர்ந்தாள். வலம் வந்தாள். தன் துணைவனான பரம்பொருளுடன் மகாலக்ஷ்மியும் சேரும் தருணமும் வந்தது.
வேட்டைக்காரனைப் போல் வந்தான் அரங்கன். அதுவொரு பலாச வனம். அங்கே தன் தோழியருடன் இருந்த கமலவல்லி, அரங்கனைக் கண்டாள். அவனழகில் தேஜஸில் மயங்கினாள். மகளின் கலக்கத்தையும் வாட்டத்தையும் காதலையும் கண்டு செய்வதறியாது தவித்தான் மன்னன்.
ஆட்டத்தை முடித்துக்கொள்ள திருவுளம் கொண்டான் அரங்கன். அன்றிரவு... மன்னனின் கனவில் அரங்கன் வந்தான். தன் தேவியையே மகளாக வளர்த்து வந்தாய் எனும் உண்மையைச் சொல்லியருளினார் அரங்கன். 'சந்நிதிக்கு அழைத்து வா' எனப் பணித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்து போனான் மன்னன். திருவரங்கம் இருக்கும் திசை நோக்கி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.
விடிந்ததும் பரந்தாமனின் அருளுரைப்படி, மணமகள் போல் மகளை, மகாலக்ஷ்மியை அலங்கரித்து, அரங்கநகருக்கு ஊர்வலமாய் அழைத்து வந்தான். சந்நிதியில் நின்ற கமலவல்லியை, தனக்குள் ஐக்கியப்படுத்தி, மன்னனுக்கு அருளினார் அரங்கன். தன் பக்திக்கும் குணத்துக்கும் இறைவன் வழங்கிய கொடை என்று நெக்குருகிய மன்னன், உறையூர் வந்த கையுடன்... ஓர் ஆலயம் அமைக்கத் தீர்மானித்தான்.
மகாலக்ஷ்மியே மகள் கமலவல்லியாக அவதரித்ததால், அவளின் நினைவாகவே ஆலயம் அமைத்தான் மன்னன். மகாலக்ஷ்மியை மகளாக வளர்த்தவனாயிற்றே. அரங்கனை தன் மாப்பிள்ளையாகவே பாவித்து பூஜித்தான். அதனால்தான், இங்கே உள்ள பெருமாளுக்கு அழகிய மணவாளன் என்றே திருநாமம் சூட்டி மகிழ்ந்தான். தாயாரின் திருநாமம்... சொல்லவா வேண்டும். கமலவல்லி நாச்சியார்.
திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில். அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.
உரிய வயது வந்தும், இன்னும் திருமணமாகவில்லையே என்று கலங்கித் தவிப்பவர்களுக்கு, கமலவல்லித் தாயார் கல்யாண வரத்தைத் தந்தருள்கிறார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மாதந்தோறும் வருகிற ஆயில்யம் நட்சத்திர நாளில், வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார் கமலவல்லித் தாயார்.
தொடர்ந்து, கமலவல்லித் தாயாரை வணங்குங்கள். மணமாலை தோள் சேரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவில்.
- சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் அடையலாம் என்பது ஐதீகம்.
குழந்தை இல்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அருளும் வைணவ கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நீங்கா புகழுடன் விளங்குவது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவில்.
மழலை செல்வம் இன்றி தவிப்பர்கள் கட்டாயம் வந்து செல்ல வேண்டிய முக்கிய தலமாக கருதப்படும் நீடாமங்கலம் சந்தானராமரை மனமுருகி வேண்டினால் நிச்சயம் மழலை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நீடாமங்கலம் நகரில் மையப்பகுதியில் உள்ள இந்த கோவில் இறைவன், மன்னர் தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் அருளினார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் பாடல் பெற்ற இக்கோவிலின் எதிரில் தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் சிறப்பு வாய்ந்த திவ்யமூர்த்தி எழுந்தருளிய இந்த கோவில் பெருமையை மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை-பூவினுள் பதுமம் போலும், புருடருள் திருமால் போலும், காவினுள் கற்பம் போலும், கலைகளுள் ஞானம் போலும், ஆவினுள் சுரரான் போலும், அறத்துள் இல்லறம் போலும், நாவினுள் மெய்நா போலும், நாட்டினுள் சோழநாடு போலும் என்ற பெருமையுடைய வெண்ணாறு, கோரையாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் யமுனாம்பாள்புரம் என்கிற நீடாமங்கலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது என பாடியுள்ளாா்.
மாதந்தோறும் ஆழ்வார் திருநட்சத்திரத்தில் சேவாகாலம் சாற்றுமுறை, தி்ருமஞ்சனம், புனர் பூச நட்சத்திரத்தில் திருமஞ்சனம், மூல நட்சத்திர வழிபாடு, சுவாதி நட்'சத்திர வழிபாடு, சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை, ஆயில்யம் வழிபாடுகள், ரோகிணியில் அந்தந்த சன்னதிகளில் திருமஞ்சனம், ரோகிணி நட்சத்திரத்தில் புத்ர சந்தானகோபால ஹோமம் நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் சந்தானகோபால ஜெபம் செய்து சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் அடையலாம் என்பது ஐதீகம்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்து அங்கிருந்து தஞ்சை செல்லும் பஸ்சில் நீடாமங்கலத்துக்கு வந்து சந்தானராமரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் செல்லும் பஸ் அல்லது ரெயிலில் பயணித்து நீடாமங்கலத்தில் இறங்கி சந்தானராமரை தாிசிக்கலாம்.
- வாழ்க்கை முழுவதுமே கற்றல் நடந்து கொண்டே இருக்கிறது.
- வீட்டில் படிக்கும் வரை என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.
வீட்டுமனை வாங்கி புதிய வீடு கட்டுபவர்களுக்கு வீட்டில் படிக்கும் அறைகளை யார் யாருக்கு எங்கே? கட்டலாம் என்று கேள்வி எழும். முதலில் வீட்டில் படிக்கும் வரை என்று ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். சொந்த வீடாக நீங்கள் கட்டும்போது இதை முதலில் கவனியுங்கள்.
வாழ்க்கை முழுவதுமே கற்றல் நடந்து கொண்டே இருக்கிறது. படிக்கும் அறையின் அளவு உங்கள் தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம்.
படிக்கும் அறை வடக்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். படிக்கும் குழந்தைகளோ பெரியவர்களோ கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து படிக்கும்படி இருப்பது நலம்.
தென்மேற்கு அதாவது குபேர மூலையில் அமைந்துள்ள படுக்கையறையில் பெரியவர்கள் குடும்பத் தலைவன் தலைவி அறையாக இருப்பது நலம். திருமணமான இளம் தம்பதியினர்களுக்கும் தென்மேற்கு படுக்கையறை சிறப்பை சேர்க்கும்.
வீட்டில் உள்ள வயதானவர்களும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்குமான அறையை வடகிழக்கு திசையில் அமைக்கலாம். வீட்டில் விருந்தினர்கள் வரும்போது அவர்களை தங்க வைக்க வடமேற்கு திசையில் விருந்தினர் அறை அமைக்கலாம்.
- நம்முடைய நட்சத்திரத்திற்கு உரியதாக தேர்ந்தெடுத்து வழிபடும் போது, கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
- உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு பலன் பெறுங்கள்.
ஒவ்வொருவரும் ஆலயங்களுக்குச் செல்லும் போதும், வீட்டில் பூஜை அறையில் இறைவனை வழிபடும் போதும், மலர்களை வைத்து வழிபடுவார்கள். அந்த மலர்களை நம்முடைய நட்சத்திரத்திற்கு உரியதாக தேர்ந்தெடுத்து வழிபடும் போது, கூடுதல் பலன்கள் கிடைக்கும். இங்கே 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மலர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி உங்கள் நட்சத்திரத்திற்குரிய மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட்டு பலன் பெறுங்கள்.
அஸ்வினி - சாமந்தி
பரணி - முல்லை
கார்த்திகை - செவ்வரளி
ரோகிணி - பாரிஜாதம்
மிருகசீரிடம் - ஜாதிமல்லி
திருவாதிரை - வில்வப் பூ
புனர்பூசம் - மரிக்கொழுந்து
பூசம் - பன்னீர் மலர்
ஆயில்யம் - செவ்வரளி
மகம் - மல்லிகை
பூரம் - தாமரை
உத்திரம் - கதம்பம்
அஸ்தம் - வெண் தாமரை
சித்திரை - மந்தாரை
சுவாதி - மஞ்சள் அரளி
விசாகம் - இருவாட்சி
அனுஷம் - செம்முல்லை
கேட்டை - பன்னீர் ரோஜா
மூலம் - வெண்சங்கு மலர்
பூராடம் - விருட்சி
உத்திராடம் - சம்பங்கி
திருவோணம் - செந்நிற ரோஜா
அவிட்டம் - செண்பகம்
சதயம் - நீலோற்பலம்
பூரட்டாதி - வெள்ளரளி
உத்திரட்டாதி - நந்தியாவட்டம்
ரேவதி - செம்பருத்தி
- கடன் ஏற்படும் காலம் ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தை வைத்து கணிக்கலாம்.
- நஷ்டம், பணத்தடை , தொழில் வேலை தடை, வெறுப்புகள் அதிகரிக்கும்.
கடன் ஏற்படும் காலம் ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் உள்ள செவ்வாய், கேது இருக்கும் இடத்திற்கு, கோட்சார சனி வரும் காலங்களில், ஜாதகரை கடன், வாங்க வைத்து, கடன் பிரச்சினைகளில் சிக்க வைப்பார். மேலும் அசிங்கம் அவமானம் எதிரிதொல்லை, விபத்து, உயிர் கண்டம் மருத்துவ செலவுகள், வம்பு, வழக்கு உருவாகும். குடும்பத்தினர், நண்பர்கள், சகோதர, சகோதரிகள், உறவினர்கள் ஜாதகரை வெறுப்பார்கள்.
இதனால் ஜாதகர் தனிமை படுத்தப்படுவார். மேலும் நஷ்டம், பணத்தடை , தொழில் வேலை தடை, வெறுப்புகள் அதிகரிக்கும். ஜாதகருக்கு இடம் மாற்றம் ஏற்பட்டு, ஊர் மாற்றம், வெளிமாநிலம், வெளிநாடு செல்ல நேரும். பலரை தனிமை சிறையில் வைக்கும். இந்த காலகட்டத்தில் ராகு,கேது, சனி, செவ்வாய் தசைகள், 6, 8, 12 மற்றும் அதன் அதிபதிகள் தொடர்பு பெற்ற தசைபுத்திகள் நடந்தால் கடனால் சிரமம் உண்டாகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னம் லக்னாதிபதி,ராசி, ராசிஅதிபதி,தன, லாப ஸ்தானம் சுபத்தன்மையுடன் இருக்க வேண்டும். மேலும் லக்னாதிபதி, ராசிஅதிபதி, தன, லாப ஸ்தான அதிபதி ஆட்சி, உச்சிம், நட்பு, கேந்திரம் கோணத்தில் பலம் பெற்று இருந்தால், அந்த ஜாதகர் எவ்வளவு பெரிய கஷ்டம் பிரச்சினைகளை சந்தித்தாலும், எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவார். இவர்களுக்கு பெரிய சிக்கல் கூட சிறிதாக தெரியும்.
இதற்கு மாறாக லக்னமும் பலம் இழந்து, லக்னாதிபதி, ராசி அதிபதி, தன, லாப ஸ்தானம் பலம் குறைந்து இருந்தால், இவர்கள் வாழ்நாள் முழுவதும் சிக்கல், பிரச்சினை, கஷ்டங்களை அனுபவிப்பர். தினம் தினம் இவர்கள் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கும், இவர்களுக்கு சின்ன விசயம் கூட பெரிதாக தெரியும், சின்ன விசயத்தை கூட போராடித்தான் பெற வேண்டியது வரும்.
ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்களை ஜாதகத்தையும், தசா புத்தியையையும் வைத்துதான் தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஒரு சம்பவம் எப்போது நடைபெறும் எப்படி நடைபெறும் என்பதை கோட்சார கிரகங்களே தீர்மானிக்கிறது. ஒருவரின் சுய ஜாதகத்தில் 2, 11-ம் அதிபதி 6-ம் அதிபதியை விட. வலுத்து இருந்தால் கடன் கண்டிப்பாக தீரும்.
6-ம் அதிபதி தசை புத்தியில், 11-ம் அதிபதி அந்தரத்தில் கடன் தீரும்.கோட்சாரத்தில் அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு, கேதுக்கள் 6-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் காலங்களில் கடன் நிவர்த்தியாகும். பரிகாரம் பிறவிக் கடனை குறைக்க முயல்பவர்களுக்கு பொருள் கடன் இருக்காது. எனவே பெற்றோர்களையும் பெரியோர்களையும் மதிக்க வேண்டும்.
கோட்சாரத்தில் ராசிக்கு ஒன்பதாமிடத்துடன் கோட்சார குரு, சனி சம்பந்தம் பெறும் காலங்களில் ஆதரவில்லாத வயோதிக தம்பதிகளின் தேவையறிந்து உதவி செய்ய கெடு பலன்கள் குறையத்துவங்கும். தீராத தீர்க்க முடியாத பிறவிக்கடனில் அல்லல்படுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சித்தர்களையும், அண்ணாமலையாரையும் வணங்க வேண்டும். மீள முடியாத பொருள் கடனில் தவிப்பவர்கள் செவ்வாய் கிழமை கிரிவலம் வந்து அணணாமலையாரை தரிசிக்க வேண்டும்.
- ஒருவரிடம் இருந்து பெற்ற அன்பும் உதவியும் கூட கடன் தான்.
- பெற்றோர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வாழ வேண்டும்.
பிறவிக்கடன்பூமியில் ஜனனமாகும் அனைத்து உயிர்களும் பிறக்கும் போது கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்து வருகிறது. அதே போல் பூமியை விட்டுச் செல்லும் போதும் கர்ம பந்தம் அல்லது கர்மவினையை மட்டுமே தன்னுடன் எடுத்துச் செல்ல முடியும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் உள்ள இடைபட்ட காலத்தில் மட்டுமே கர்மவினையை கலைந்து கர்ம பந்தத்தை அதிகரிக்கச் செய்ய முடியும்.
ஒரு மனிதனுக்கு வினை அதிகரித்தாலும் குறைந்தாலும் தன்னுடைய கர்மப் பதிவில் தொடர்புடைய உயிர், பொருள் காரகத்துவங்களிடம் மட்டுமே வாழ்நாள் இருக்கும். பூமியில் கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்தாலும் ஒருவருடைய கர்மப் பதிவில் சில குறிப்பிட்ட உறவுகள், நட்புகள் பழக்கத்தில் இருக்கும். மனிதர்களை சுற்றி உள்ள பொருள் காரகத்துவங்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்கும் உரிமையை தந்த பிரபஞ்சம் ஏன் உயிர் காரகத்துவங்களான தாய், தந்தை,சகோதரர், சகோதரி, மனைவி,கணவன், பிள்ளைகளை, தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் வழங்கவில்லை.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் கர்மாவோடு தொடர்புடைய உறவுகளால் ஒன்றை நாம் பெற்றுக் கொள்கிறோம், அல்லது இழக்கிறோம். இந்த கர்மாவின் தொடர்ச்சியில் சில உறவுகள் கர்ம பந்தமாகிறது. பல உறவுகள் கர்ம வினையாகிறது. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.இந்த கொடுக்கல் வாங்கலே 'ருண பந்தம்' எனப்படுகிறது. ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல. ஒருவரிடம் இருந்து பெற்ற அன்பும் உதவியும் கூட கடன் தான். ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்பிற்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால் ருண பந்தம் கர்ம வினையாக மாறி பிறவி தொடர்ந்து கொண்டே இருக்கும்.மிகச் சுருக்கமாக பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையில் இருந்து தவறும் போது பிறவிக் கடன் தீராது.
பிறவிக் கடனை எளிதில் தீர்க்க முடியாது. மீண்டும், மீண்டும் அவர்களுடன் பிறந்து அன்பால் உடல் உழைப்பால் பிரதி உபகாரம் செய்தால் மட்டுமே பிறவிக் கடனை தீர்க்க முடியும். ஒரு மனிதன் உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்களுக்கு கூட பிறவிக் கடனை திரும்பச் செலுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெறலாம். ஆனால் நம்மை பெற்ற, நமக்கு உடலும், உயிரும் கொடுத்த தாய், தந்தைக்கு செலுத்த வேண்டிய பெற்ற கடனை யாராலும் எளிதில் தீர்க்க முடியாது. லக்னம், ஐந்தாமிடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானம், ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
பிறவிக் கடன் முற்றிலும் சரி செய்யப்பட்டு விட்டால் மறுபிறவி எடுக்க முடியாது. மனிதர்களாய் இந்த பிறவியில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் தீர்க்க முடியாத பிறவிக் கடனில் நீந்துபவர்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போது போதிய வசதி வாய்ப்பு இருந்தும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தவறியவர்கள் மறுபிறவியில் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இன்றி வறுமையில் வாழ்வார்கள்.
பெற்றோர்களை தன் சுய நலத்திற்காக தனக்கு அடிமையாக நடத்துபவர்கள் மறு பிறவியில் அடிமைத் தொழில் செய்து கஷ்ட ஜீவனம் நடத்த வேண்டி வரும். பெற்றோர்களை சுமையாக கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் மறு பிறவியில் வீடு, வாசலை இழந்து தவிப்பார்கள்.பெற்றோர்களை மதிக்காமல் குல மரபை கடைபிடிக்கத் தவறியவர்கள் மறுபிறவியில் பிறந்த குலம், குலதெய்வம் தெரியாமல் அவதிப்படுவார்கள்.
ஜனன கால ஜாதகத்தில் ஆறாமிடம் மற்றும் ஒன்பதாமிடத்திற்கு சம்பந்தம் இருப்பவர்கள் தீராத, தீர்க்க முடியாத பிறவிக் கடனை அதிகம் சுமக்கிறார்கள். உயிருடன் வாழும் பெற்றோர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து வாழ வேண்டும். இறந்த பிறகு எத்தனை முறை ஊரை கூட்டி திதி கொடுத்து விருந்து போட்டு தங்கள் பாசத்தை வெளிக்காட்டினாலும் பயன் இல்லை. இந்த வகை பித்ரு தோஷம் எவ்வளவு திதி, தர்பணம் கொடுத்தாலும் போகாது என சாஸ்திரம் கூறுகிறது.






