என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே மேஷ ராசிக்காரர்கள் இவர் சிரசினை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும். மேஷம் தலை, ரிஷபம் கழுத்து, மிதுனம் தோல் புஜம், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி குறி, துலாம் தொடை, விருச்சிகம் முட்டி, தனுசு மகரம் முட்டியின் கீழ்பகுதி, கும்பம் கனுக்கால், மீனம் பாதம் ஆகிய பகுதிகளை பார்த்து கும்பிட்டால் தோஷம் தீரும்.

    நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமானால் விளக்கினை கால பைரவர் சன்னதியில் ஏற்றிவிட்டு கோவிலினை 18 சுற்றுகள் அல்லது 8 சுற்றுகள் சுற்றி வர வேண்டும். இந்த வழிமுறையினை 12 ஞாயிற்று கிழமை, 3 தேய்பிறை அஷ்டமி தினங்களில் கடைபிடித்தால் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.

    குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பைரவர் திருமேனியின் முன்னாள் மிளகை சிறுதுணியில் சிறுமூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

    வளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூஜித்து வந்தால் செல்வம் குறையாது.

    நம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம்.
    வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முயற்சி செய்தவுடன் கிடைக்கிறது. பலருக்கு காலதாமதமாக கிடைக்கிறது. வெகு சிலருக்கு கிடைத்தாலும் கை நழுவிப் போய்விடுகிறது. பலர் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகிறார்கள். சில மகாபாக்யவான்கள் பிறக்கும்போது சகல யோகத்துடன் பிறக்கிறார்கள். வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால் நமக்கு துன்பம்.

    நம்முடைய அனைத்து இயக்கங்களுக்குமே கிரக அமைப்புகள்தான் காரணம் என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலமும், நம் அனுபவத்திலும் உணர்ந்து வருகிறோம். நல்ல யோகமான திசைகள் நடக்கும்போது எல்லா விஷயங்களும் சாதகமாகவும், மளமளவென்றும் கூடிவரும்.

    யோகமான திசையில் சில கெட்ட ஆதிபத்ய புக்திகள் வரும் நேரத்தில் திடீர் சறுக்கல்கள், எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படும். திடீர் விபத்துகள், மருத்துவ செலவுகள், கைப்பொருள் இழப்பு போன்றவை எல்லாம் 6, 8, 12-ம் அதிபதியின் திசா, புக்தி, அந்தரங்களில் ஏற்படலாம். லக்னம், ராசியில் நீச்ச கிரகம் வந்து அமரும்போது காரியத்தடை, வீண் வம்புகள், மனச்சஞ்சலம், பொருள் நஷ்டம் போன்றவை வந்து நீங்கும்.

    பட்ட காலிலே படும் என்று சொல்வார்கள். அதுபோல கெட்ட திசைகள், நீச்ச அம்சம் உள்ள திசைகளில்தான் இந்த கண் திருஷ்டி, பொறாமை போன்றவை ஒன்று சேர்ந்து வரும். கிரக திசா புக்தி அமைப்புகள் வலுவாகவும், யோகமாகவும் இருந்தால் திருஷ்டியின் வேகம் தணிந்து விடும். கிரக சுபபார்வை நமக்கு அரணாக இருந்து காக்கும் என்பது அனுபவ உண்மையாகும்.
    ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.
    காவிரியும், பவானியும் கண்ணுக்கு தெரியாத அமுத நதியும் கூடும் பவானி கூடுதுறையில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை சங்கமேஸ்வரர் என்றும், தேவியை வேதநாயகி என்றும் அழைக்கிறார்கள். 2 ஆறுகளுக்கிடையே தீபகற்பமாக இருக்கும் பவானி நகரம்தான் ஈரோடு மாவட்டத்திலேயே மிகப்பழமையான நகரம் ஆகும். ஆங்கிலேய காலத்தில் ஈரோடு மாவட்டப்பகுதிகளை நிர்வாகம் செய்த ஆங்கிலேயே கலெக்டர்கள் பவானியிலேயே தங்கி இருந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கி இருந்த மாளிகைகள் இன்றும் பவானி கோவில் அருகே உள்ளன.

    அதுபோல் முதன்முதலாக போக்குவரத்தை சீரமைக்க போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டதும் பவானியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பவானியில் உற்பத்தி செய்யப்படும் பவானி ஜமுக்காளம் உலகத்தரம் வாய்ந்தது. இங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் ஜமுக்காளங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் சங்கமேஸ்வரர் எழுந்தருளி இருக்கும் கூடுதுறையில் நீராடினால் சகல தோஷங்களும், பாவங்கள் நீங்கும் என்பது மக்களின் நெடுங்கால நம்பிக்கை.

    சங்கமேஸ்வரர் கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல்லவர் கால சிற்பங்களும், பாண்டியர் தொடர்பான குறிப்புகள், சோழர் கால பட்டயங்களும் உள்ளன. கோவில் திருப்பணிகள் நடைபெற்றதால் பல கல்வெட்டுகள் மறைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கோவில் வசந்த மண்டபத்தின் நடுவில் தாமரை மலர் சிற்பம் உள்ளது. அதனை சுற்றி பெண்கள் நாட்டியம் ஆடும் காட்சியும், சிவபெருமான் தாண்டவ கோலத்தில் காளியுடன் நடனம் ஆடும் காட்சியும் சிற்பமாக வடிக்கப்பட்டு உள்ளன. அதுபோல் பிரம்மன், திருமால், முருகன் தும்புரு ஆகியோர் இசைக்கருவிகளை வாசிப்பதுபோன்ற காட்சிகளும் உள்ளன.

    தூண்களில் சிவபெருமானின் பல்வேறு தோற்றங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. இங்கு அம்மன் ஆராட்டு கட்டில் 1804-ம் ஆண்டு கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் வில்லியம் கேரோ வழங்கியதாகும்.

    பழமை குன்றாமல் புதுப்பொலிவு பெற்றுவரும் பவானி நகரில் செல்லியாண்டி அம்மன் உள்பட பல்வேறு சிறப்பு பெற்ற வேறு கோவில்களும் உள்ளன.
    கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்குவாதங்கள் மூலம் மன நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட்டால், அந்த தம்பதியர்கள் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால் வருத்தங்கள் அகலும்.
    திருமணமானவர்களில் பலரும் தங்களின் வாழ்க்கையை இன்பமயமாகவே வாழ்கிறார்கள். ஆனால் சிலருக்கு விவாகம் என்பது விவகாரமாகவும், இன்னும் சிலருக்கு விவாகரத்திலும் முடிந்து விடுகிறது.

    கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, தாம்பத்திய உறவில் சிக்கல், வாக்குவாதங்கள் மூலம் மன நிம்மதியில்லாத வாழ்க்கை ஏற்பட்டால், அந்த தம்பதியர்கள் கல்யாண நவக்கிரகத்தை வழிபட்டால் வருத்தங்கள் அகலும். வாழ்க்கை வளமாகும்.

    சிவகங்கை மாவட்டம் கீழ்ச்சிவல்பட்டி அருகில் உள்ள ஆவினிப்பட்டி மற்றும் காரைக்குடி அருகில் உள்ள மானகிரி மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருநீலக்குடி ஆகிய ஊர்களில் கல்யாண நவக்கிரகங்கள் உள்ளன. அங்கு சென்று வழிபட்டால் தம்பதியர் களுக்குள் வரும் தகராறுகள் தீரும்.

    சுய ஜாதகப்படி யோக பலம் பெற்ற நாளில் சென்று நவதான்ய தானம் கொடுத்து நவக்கிரகங்களுக்கு வஸ்திரம் அணிவித்து அர்ச்சனை செய்து முறைப்படி வழிபட்டு வருவது நல்லது. இந்த வழிபாட்டின் மூலம் கல்யாண வாய்ப்புகளும் கைகூடும்.

    பொதுவாக ஜாதக ரீதியாக பார்க்கும்போது எந்த தோஷங்கள் திருமண தாமதத்தை ஏற்படுத்துகிறது? அதற்கான பரிகாரங்கள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இன்றைய நவ நாகரீக உலகில் திருமணத் தடைகள், தாமதங்கள் ஆண் பெண் என இருபாலருக்கும் பெரும் வருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக ஜாதக ரீதியாக பார்க்கும்போது எந்த தோஷங்கள் திருமண தாமதத்தை ஏற்படுத்துகிறது? அதற்கான பரிகாரங்கள் என்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    செவ்வாய் தோஷம் தவிர  ராகு, கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம், புணர்ப்பு தோஷம் ஆகிய தோஷங்களும் திருமண தாமதத்துக்கு காரணமாக அமைகின்றது.

    செவ்வாய் தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1,2,4,7,8, ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும்.செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1,2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தில் மட்டுமே திருமணம் செய்து வைக்க வேண்டும்.

    ராகு-கேது தோஷம்

    லக்னம், 2,7,8, ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

    மாங்கல்ய தோஷம்

    இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். அதாவது லக்னத்துக்கு 8-ஆம் இடத்தில் சூரியன், ராகு, கேது,சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8ஆம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி ஆகும். 8 ஆம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தியாகும்.

    சூரிய தோஷம்

    ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2,7,8, ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்கும்போது இருதாரயோகமும், வீடு தள்ளி 42 பாகைக்கு மேல் இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது.

    களத்திர தோஷம்

    களத்திர ஸ்தானம் என்னும் 7ஆம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண தாமதம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரியோகம் பெறுவது,கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும். ஜாதகத்தில் லக்னத்துக்கு 7ஆம் வீட்டில் இரண்டு அதற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அது கட்டாயம் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

    திருமண தோஷங்கள் நீக்கி மங்கல வாழ்வைத் தரும் திருவிடந்தை

    சென்னைக்கு அருகில் மகாபலிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவிடந்தை திருத்தலம் . எத்தகைய திருமண தோஷங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் தீர்த்து திருமண வாழ்க்கையை உறுதி செய்யும் அற்புதமான பரிகாரத் தலமாக விளங்குகிறது திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் திருத்தலம்.

    திருவிடந்தை திருத்தல மண்னை மிதித்து நித்திய கல்யாணப் பெருமாளை கண்குளிர தரிசனம் செய்து திரும்பும் கன்னிப் பெண்கள், திருமணம் ஆகாத இளைஞர்கள் தங்களின் தோஷம் நீங்கப் பெறுகிறார்கள். அடுத்த முறை திருமணக் கோலத்தில் தம்பதியினராக பெருமாளை சேவிக்க வருகிறார்கள்.
    திருமணத்தடை இருப்பவர்கள் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் தலத்துக்கு வந்து கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    தைரியமும் வீரமும் கொடுப்பவர் அனுமன். பிரம்மச்சரியாக வாழ்பவர்களுக்கு விருப்பமான கடவுளும் அனுமன் தான். ஆனால் பிரம்மச்சாரி என்று போற்றும் அனுமன் திருமணக்கோலத்தில் காட்சித்தரும் திருத்தலம் சென்னை செங்கல்பட்டு சாலையில் தைலாவரத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் திருத்தலம்.

    கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் சூரியன் அனுமனுக்குக் கற்றுத் தந்தார். அனைத்தையும் திறமையாக கற்றுக்கொண்ட அனுமனுக்கு “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டம் பெறும் ஆசை இருந்தது. ஆனால் இந்தப் பட்டம் பெறுபவர்கள் குடும்ப வாழ்வை மேற்கொண்டிருக்க வேண்டும் என்பது நியதியாக இருந்ததால் அனுமன் மணம் புரிய சம்மதித்தார். அனுமன் விரும்பிய பட்டத்தை அளிக்க விரும்பிய சூரிய பகவான் தன்னுடைய மகளான சுவர்ச்சலா தேவியை தன் சிஷ்யனான அனுமனுக்கு மண முடித்து வைத்தார் என்று சூரிய புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  
     
    ஆஞ்சநேயரின் திருமணக்கோலத்தைத் தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இத்தலத்தில் மூலவரான ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனி சன்னிதியில் உற்சவராக தன்னுடைய தேவியும் சூரிய புத்திரியுமான சுவர்ச்சலா தேவியுடன் பத்மபீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர். சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். 
     
    வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பாக காதலித்தவர்களும் தங்களது துணையுடன் இத்தலத்துக்கு வந்து வேண்டுதல் வைக்கிறார்கள். ஆஞ்சநேயரின் சம்மதத்தைப் பெற்றால் அவரது அருளால் பெற்றோர்களின் சம்மதமும் மனமுவந்து கிடைக்கிறது என்கிறார்கள் இங்கு வரும் காதல் புரிந்து தம்பதியரான புதுமண  தம்பதியர்.
     
    திருமணத்தடை இருப்பவர்களும் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள். 
    108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் கண்திருஷ்டி நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் உள்ளது திருவிடந்தை. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தத் தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம் இது!

    இந்த தலத்தில் உள்ள தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்கநாதர் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசி மாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு.

    இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இந்தப் பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்ஸவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் கண்திருஷ்டி நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்!

    ஜாதகத்தில் நவகிரகங்கள் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சூரிய கிரகத்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
    ஜாதகத்தில் நவகிரகங்கள் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு தருவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் சூரிய கிரகத்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

    சூரிய பகவான் ஒரு ஜாதகரின் தந்தைக்கு உரிய கிரகமாக இருக்கிறார். ஒரு நபரின் ஜாதகத்தில் சூரிய பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு இருக்குமானால் அந்த ஜாதகர் சென்ற பிறவியில் தனது தந்தைக்கு உணவிடாமல் பட்டினி போட்டு, அவரின் சாபத்தை பெற்று இப்பிறவியில் புத்திர பாக்கியம் அமையாமல் அவதிப்பட நேருகிறது.

    உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்த பின் சூரிய கிரகத்தால் தான் புத்திர பாக்கியம் இல்லாத நிலை உண்டாகியது என்பது உறுதியானால், கீழ்கண்ட பரிகாரத்தை செய்து உங்களின் சூரிய தோஷத்தை போக்கி வெகு விரைவில் குழந்தை பாக்கியத்தை பெறலாம். 100 கிராம் தரமான கோதுமையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    அந்த கோதுமையை ஒன்பது பாகங்களாக பிரித்துக் கொண்டு, ஒரு தூய்மையான வெள்ளைத் துணியை எடுத்து, ஒன்பது துண்டுகளாக பிரித்து இந்த ஒன்பது பாக கோதுமையை, அந்த ஒன்பது துண்டுகளாக இருக்கும் துணியில் போட்டு பொட்டலமாக முடிந்து கொள்ள வேண்டும். பிறகு ஒன்பது துணி முடிப்புகளை உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்து விட வேண்டும்.

    அதில் ஒரு முடிப்பை இரவில் கணவன் – மனைவி இருவரும் தங்கள் படுக்கையில், இருவருக்கும் சேர்த்து ஒரே தலையணைக்கு அடியில் வைத்து விட்டு உறங்க வேண்டும். மறுநாள் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் மனைவி கை, கால், முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைத்த அந்த துணி முடிப்பை கையில் வைத்துக் கொண்டு, சூரிய பகவானை மனதில் நினைத்து சூரிய பகவானே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருள வேண்டும் என ஒன்பது முறை மனதார துதித்து வழிபட வேண்டும். இப்படி வழிபட்டு முடிந்ததும் அந்த முடிச்சை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.

    இதே போல் மீதமுள்ள முடிச்சுகளை வைத்து ஒவ்வொரு நாளும் வழிபாடு செய்ய வேண்டும். பத்தாவது நாள் காலையில் கணவன் – மனைவி ஆகிய இருவரும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, ஒன்பது கோதுமை பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு, ஓடும் ஆற்று நீர் அல்லது கண்மாயில் யாரும் பார்க்காதபோது போட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்வதால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூரிய தோஷம் நீங்குகிறது. இந்தப் பரிகாரம் செய்த 45 நாட்களுக்கு பிறகு மனைவி வயிற்றில் கரு உருவாக சூரிய பகவான் அருள்புரிவார்.
    பரந்த விரிந்த இந்த பூமியில் சொந்தமாக வீட்டை கட்டி வாழக்கூட நிலம் இல்லாமல் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிலம் மற்றும் வீடு பெரும் யோகத்தை தரும் “ஸ்ரீ வராக மூர்த்தியை” பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
    பரந்த விரிந்த இந்த பூமியில் சொந்தமாக வீட்டை கட்டி வாழக்கூட நிலம் இல்லாமல் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நிலம் மற்றும் வீடு பெரும் யோகத்தை தரும் “ஸ்ரீ வராக மூர்த்தியை” பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

    புராண காலத்தில் இரண்யாட்சகன் எனும் அரக்கன் பூதேவி எனும் பூமி தாயை கொண்டு போய் கடலுக்குள் மறைத்து வைத்து, அவனும் அங்கேயே இருந்து விட்டான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள், காக்கும் கடவுளான அந்த மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். அப்போது இரண்யாட்சகனை வதம் புரிய காட்டு பன்றியான “வராக” அவதாரத்தை எடுத்தார் திருமால்.

    ஏனெனில் இரண்யாட்சகன் தவமியற்றி சிவ பெருமானிடம் தனக்கு பன்றியை தவிர வேறு எந்த ஒரு விலங்கினாலும் மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தை பெற்றான். பன்றியை குறைத்து மதிப்பிட்டு இரண்யாட்சகன் இத்தகைய வரத்தை பெற்றதால், அந்த காட்டு பன்றியின் உருவம் கொண்டு கடலுக்குள் சென்று, காட்டு பன்றியின் வாயில் இருக்கும் தந்தம் போன்ற பற்களால், இரண்யாட்சகனை குத்தி கொன்று பூமி தாயை கடலுக்குள் இருந்து மீட்டெடுத்தார் வராக அவதாரம் தரித்த மகாவிஷ்ணு.

    பல காலமாகவே விஷ்ணுவின் வராகமூர்த்தி வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் இந்திய நாட்டை ஆட்சிபுரிந்த இஸ்லாமியர்களின் பண்பாட்டு தாக்கத்தால் இந்த வராகமூர்த்தி வழிபாடு சில காலம் வழக்கிழந்தது. தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது இந்த வழிபாட்டு முறை. நமது பாரத நாட்டில் குறைந்த அளவிலேயே தான் வராக மூர்த்திக்கு கோவில்கள் உள்ளன. அதில் மிகவும் புகழ் பெற்ற வராக மூர்த்தி கோவில் “திருப்பதி- திருமலையில்” இருக்கும் “ஸ்ரீ ஆதி வராக சுவாமி” திருக்கோயிலாகும்.

    அந்த நாராயணனுக்கே தங்கிக்கொள்ள பூமி தானம் அளித்த அந்த திருமலை வராக மூர்த்தியை செவ்வாய் கிழமையன்று வழிபாடு செய்வதால், ஆதி வராக சுவாமியின் அருளையும் நவகிரகங்களில் “பூமி காரகனாகிய” “செவ்வாய் பகவானின்” அருளையும் பெற்று தந்து, நமக்கு வந்து சேர வேண்டிய பூர்வீக நிலங்கள் நமக்கு கிடைக்கும். மேலும் புதிய நிலங்கள் மற்றும் புதிய வீடுகளை கட்டுவதற்கான நேரம் கூடி வரும்.
    தனித்தன்மைமிக்க திருத்தலமாக விளங்கும் நட்சத்திர கிரி சுப்ரமணியசுவாமி கோவில் 27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
    தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகனுக்கு அகிலம் எல்லாம் எண்ணற்ற திருத்தலங்கள். குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனின் திருமாளிகைகள்தான். ஆனாலும், அவற்றிலெல்லாம் வேறுபட்டு, தனித்தன்மைமிக்க திருத்தலமாக நட்சத்திர கிரி சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. வளத்தாலும், வனத்தாலும் எழில்பொங்கும் ஜவ்வாது மலையில் பிரவாகமாகி, வங்கக்கடலில் சங்கமமாகும் செய்யாற்றின் கரையோரமாக இக்கோயில் உள்ளது. மலையே மகேசனாக அருள்தரும் திருவண்ணாமலையில் கலசப்பாக்கம் அருகே வில்வாரணி நட்சத்திரகிரியின் மலையின் நாயகனாக வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி  அருள்பாலிக்கிறார்.

    முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இக்கோயில் கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருகின்றனர். 27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும், முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு இந்த கோயிலை தவிர வேறெங்கும் இல்லை. வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோயில். எனவேதான் இக்கோயிலுக்கு நட்சத்திர கிரி கோயில் எனும் சிறப்பு பெயரும் வந்தது. 27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரத் தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் ஆகியன இக்கோயிலின் ஆன்மிக வரலாற்றை விளக்குகின்றன.

    சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கும். எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட, என்னை வந்து சேருங்கள்’ எனக்கூறி அருள்புரிந்தார்.

    கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இக்கோயிலின் தல விருட்சமான வில்வமரத்தில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவோருக்கு, குழந்தைப்பேறு கிடைக்கிறது. திருமணத் தடை நீங்கும். துயரம் தீரும். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான மலேசிய முருகர் சிலை வழிபடுவோரை வியப்பில் ஆழ்த்துகிறது. இக்கோயில் திருவண்ணாமலைவேலூர் சாலையில் கலசப்பாக்கத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவிலும், போளூரில் இருந்து 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
    குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.
    மனிதர்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் தாம் செய்யும் செயல்கள் விருத்தியுடையதாக இருக்க வேண்டும் என்பதே. ஒரு சிலருக்கு காரிய சித்தி, காரிய விருத்தி இருந்து கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு சிறு செயலை சாதிப்பது கூட, குதிரைக்கு கொம்பு முளைத்தது போல் ஆகிவிடும். அது ஏன் ஒரு சிலர் செய்யும் செயல் மட்டும் விருத்தியாகிறது? என்ற ரகசியம் தெரிய வேண்டுமா.

    காரிய விருத்தி நேரம் என்று ஒரு குறிப்பிட்ட கால நேரம் தினமும் உண்டு. அதனை குளிகை நேரம் என்பார்கள். அந்த குளிகை நேரம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

    பலருக்கு தினமும் ராசி பலன் பார்க்கும் வழக்கம் உண்டு. அது பத்திரிகையோ, வார இதழோ, காலண்டரோ, டி.வி.யோ எதுவாக இருந்தாலும் குளிகை நேரம் என்று ஒன்றை குறிப்பிடுவதைக் காண முடியும். ராகு காலம், எம கண்டம் தெரிந்த அளவு, பலருக்கும் குளிகை நேரம் பற்றி தெரிந்திருக்காது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் ‘குளிகன்’ என்றும், இரவில் ஒரு குழந்தை பிறந்தால் ‘மாந்தி’ என்றும் சொல்லப்படுகிறது. குளிகன் என்பவர் சனி மற்றும் ஜோஷ்டா தேவியின் புதல்வன்.

    வாரத்தில் இருப்பது 7 நாட்கள். ஆனால் 9 நவக்கிரகங்கள் உள்ளன. 7 கிரகங்களுக்கு 7 நாட்கள் சென்று விடும். ஆனால் ராகு, கேதுவுக்கு கிழமை கிடையாது என்பதால், தினமும் 1½ மணி நேரம் ராகு காலம், எம கண்டமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அது போலத் தான் குளிகனுக்கும் தினமும் 1½ மணி நேரம் பிரித்துக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த குளிகை காலத்தில் செய்யும் செயல்கள், பெரும் வளர்ச்சி பெறும் என்பதால், அசுப காரியங்களை தவிர்த்து விடுவதுடன், வாழ்வில் திரும்பவும் நடைபெறவே கூடாத சுப நிகழ்வையும் இந்த நேரத்தில் செய்யக் கூடாது.

    குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்கள், குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியைக் கொடுத்தால், அந்த கடன் விரைவில் அடைபட்டுவிடும். கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள், அல்லது சனிக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் ஒரு பகுதியை செலுத்தினால் அந்த கடன் எளிதில் குறைந்து விடும். பெரிய பாக்கி இருக்கும் போது, சிறிய தொகையை வாங்க மறுப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட நிலையில் வீட்டில் சிவப்பு நிற உண்டியல் அல்லது சிவப்பு நிறத் துணியில், தினமும் குளிகை நேரத்தில் பணம் கொடுக்க வேண்டியவரின் பெயரை உச்சரித்து கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வர வேண்டும். குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் சம்பந்தப்பட்டவரிடம் கொடுத்து பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கடன் அடைபடுவதை கண் முன் காணலாம்.

    குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும், தொடர்ந்து நடைபெற்று அந்தக் குடும்பமே செழிக்கும். குளிர்விக்கும் தன்மையைக் கொண்ட குளிகன், ஒவ்வொரு நாளிலும் நல்ல காரியங்களைத் தொடங்கவே உருவாக்கப்பட்டது என்று ஒரு புராண கதையே உண்டு.

    குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனி பகவானை வணங்கும்போது மனதில் குளிகனையும் எண்ணி வழிபடலாம்.

    குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கினால், அது வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், அசுப காரியங்களுக்கு இது பொருத்தம் இல்லாததாகவும் கருதப்படுகிறது.

    குளிகை நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்தால், அது எந்தத் தடையும் இல்லாமல் நடப்பதுடன், நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே தொட்டதைத் துலங்கச் செய்யும் குளிகன் என்ற மாந்தியின் நேரத்தை பயன்படுத்தி காரிய விருத்தி, காரிய சித்தி பெறுங்கள்.

    செய்யக்கூடியவை

    குளிகை நேரத்தில் செய்யக் கூடிய செயல்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம். சுபச் செயல்களான நகை, நிலம், வீடு, வாகனம் வாங்குவது. பத்திரப்பதிவு செய்வது. புதிய தொழில் தொடங்குவது. வங்கிக் கணக்கில் பணம் போடுவது. அடமானப் பொருளை மீட்பது போன்ற காரியங்களை குளிகை நேரத்தில் தாராளமாகச் செய்யலாம். மேலும் விவசாயப் பணிகளான விதை விதைத்தல், நாற்று நடுதல், மகசூல் அறுவடை செய்தல் போன்ற செயல்களையும் செய்யலாம். இந்த கால நேரத்தில் வீட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் உண்டியலில் தினமும் பணம் போட்டு வந்தால், சேமிப்பு மலை போல் வளரும். புதிய ஆடை, ஆபரணங்கள் அணியலாம். பிறந்தநாள் கொண்டாடலாம். ஆயுள் ஹோமம் செய்யலாம்.

    செய்யக்கூடாதவை

    குளிகை நேரத்தில் செய்யக் கூடாத சில செயல்களையும் இங்கே பார்ப்போம். பெண் பார்க்கச் செல்வது, திருமணம் செய்தல், வேலைக்கு முயற்சி செய்வது, நேர்காணல்களை சந்திப்பது போன்றவற்றை குளிகை நேரத்தில் தவிர்க்க வேண்டும். அது போல் கடன் வாங்குவது, வீட்டை மாற்றுவது, சவ அடக்கம் போன்ற அசுப நிகழ்ச்சியை இதுபோன்ற நேரத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதே போல் நோய்க்கு மருத்துவரை அணுகுவதற்கும் இது சரியான நேரம் அல்ல. கொடிய நோய்க்கு முதன் முதலில் மருந்து எடுத்துக் கொள்ளவும் இந்த நேரம் சரியானது கிடையாது.
    பாவ வினையால் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.
    மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

    வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

    மேலும் அறிக : திதியில் பிறந்தவர்களே அனைவரும் திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.

    சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

    அசுவினி: நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.அடுத்து

    பரணி: நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.

    கிருத்திகை: நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.அடுத்து

    ரோகிணி: நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

    மிருகசீரிடம்: நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

    திருவாதிரை : நட்சத்திரம் சித்தர் இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.

    புனர்பூச: நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

    பூசம்: நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.

    ஆயில்யம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.

    மகம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

    பூரம்: நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

    உத்திரம்: நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

    அஸ்தம்: நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

    சித்திரை: நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

    சுவாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

    விசாகம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.

    அனுஷம்: நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.

    கேட்டை: நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

    மூலம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

    பூராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

    உத்திராடம்: நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

    திருவோணம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

    அவிட்டம்: நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.

    சதயம்: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

    பூராட்டாதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

    உத்திரட்டாதி: நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

    ரேவதி: நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது,

    மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள்.

    ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள். சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்
    ×