என் மலர்
தோஷ பரிகாரங்கள்
ஒரு சில சாபங்களை தவிர்த்து மற்ற சாபங்களை பற்றி பலருக்கு தெரியாத நிலையில் பல வகையான சாபங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண் சாபம்: பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும் என்கிறார்கள்.
பிரேத சாபம்: இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். இதனால் ஆயுள் குறையும் என்கிறார்கள்.
பிரம்ம சாபம்: நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் மறைப்பது இதனால் பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால் படிப்பு இல்லாமல் போகும் என்கிறார்கள்.
பூமி சாபம்: ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது என்பது உண்மை.
விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும் எனவே எச்சரிக்கை.
தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
சர்ப்ப சாபம்: பாம்புகளை கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும் என்கிறார்கள்.
பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
கோ சாபம்: பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
குலதெய்வ சாபம்: இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.

கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழி சிவாலயத்தில் விநாயகரை தரிசித்து வழிபட்டால், பொருள் வளத்துடன், பாவங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பகோணம் அருகில் உள்ளது, திருவலஞ்சுழி சிவாலயம். இங்குள்ள விநாயகரை இந்திரன் பூஜித்ததாக தல வரலாறு சொல்கிறது. கடல் நுரையால் செய்த விக்கிரகம் என்பதால், இந்த விநாய கருக்கு கைகளால் தொட்டு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. சங்கு கொண்டு அபிஷேகம் நிகழ்த்தப்படுகிறது.
விநாயகருக்கு பச்சைக் கற்பூரம் சாத்தி வழிபடுகிறார்கள். ‘சுவேதம்’ என்பதற்கு ‘வெண்மை’ என்று பொருள். கடல் நுரை வெண்மை நிறம் கொண்டது என்பதால், இத்தல விநாயகர் ‘சுவேத விநாயகர்’ என்று பெயர் பெற்றுள்ளார். காவிரி வலமாக சுழன்று செல்வதால், இந்தத் திருத்தலத்திற்கு ‘திருவலஞ்சுழி’ என்ற பெயர் ஏற்பட்டது.
இங்குள்ள இறைவனின் பெயர் ‘வலஞ்சுழிநாதர்.’ அம்பாளின் திருநாமம் ‘பெரியநாயகி.’ இத்தல விநாயகரை தரிசித்து வழிபட்டால், பொருள் வளத்துடன், பாவங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ராமகிரி வாலீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவரை வேண்டிக்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு வாலீஸ்வரர் சன்னிதியை விட, காலபைரவரின் சன்னிதியே பெரிதாக உள்ளது. நின்ற கோலத்தில் காலபைரவர் காட்சிதருகிறார். அவருக்கு எதிரே அவருடைய வாகனமான நாயின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது.
இந்தக் கோவிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள்.
‘திருக்காரிக்கரை’ என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார். சிவபெருமானுக்கு முன் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
சென்னை - திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.

திருவள்ளூர் பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் தலத்தில் வழிபட்டால் திருமண தடை தரும் தோஷங்கள் உடனடியாக விலகும் என்பது ஐதீகம்.
சென்னையில் இருந்து மேற்கே 55 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம் உள்ளது. இந்த ஊரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் தலம் பல்வேறு தனித்துவமான சிறப்புகளைக் கொண்டது. விஜயநகர மன்னர்களால் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் லட்சுமி நரசிம்மரும், மரகதவல்லி தாயாரும் எழில்வாய்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்கள். நரசிம்மர் சுமார் 7 அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கிறார். சரணாகதி தத்துவத்தை அவர் காட்டியபடி உள்ளார்.
அதுபோல தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் மரகதவல்லி தாயாரும் சரணாகதி தத்துவத்தையே வெளிப்படுத்துகிறார். இந்த ஆலயத்தில் வழிபாடு செய்யும் போது பக்தர்களுக்கு ஒருவித மன அமைதி கிடைப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.அதற்கு முக்கிய காரணம் நரசிம்மர், தனது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி, சாந்த சொரூபமாக காட்சி தருவதுதான். தாயார், நரசிம்மரை அணைத்தப்படி பக்தர்களை பார்த்தப்படி உள்ளார். தமிழ்நாட்டில் இத்தகைய லட்சுமி நரசிம்ம வடிவத்தை வேறு எங்கும் காண இயலாது.
பொதுவாக நரசிம்மர் கோவில்களில் தாயாரின் பெயர் அமிர்தவல்லி அல்லது நரசிங்கவல்லி என்று இருக்கும். ஆனால் பேரம்பாக்கம் தலத்தில் மரகதவல்லி என்று அழைக்கப்படுகிறாள். இத்தலத்தில் வழிபட்டால் திருமண தடை தரும் தோஷங்கள் உடனடியாக விலகும் என்பது ஐதீகம். சென்னையில் இருந்து இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் ஸ்ரீபெரும்புதூருக்கு முன்னதாக சவிதா மருத்துவமனையை கடந்ததும் வரும் வலது பக்க சாலையில் சென்றால் பேரம்பாக்கத்தை எளிதில் சென்றடையலாம். பூந்தல்லி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.

முன் வினை கர்மாக்கள், பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் அகலும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

* ஜென்ம நட்சத்திரம் அன்று அகத்திக் கீரையை பசுவிற்கு கொடுத்து தடவிக் கொடுப்பது.
* அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்தல் மற்றும் சூரிய காயத்ரி மந்திரம் படித்தல்.
* எறும்புக்கு பச்சரிசி போடுதல் (பச்சரிசி மாவில் கோலம் போடலாம்).
* சங்கடம் தீர சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது.
* ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடுவது.
* வீட்டுத் துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்தல்
* காகத்திற்கு கருப்பு எள் கலந்த சோறு வைத்தல்.

நவகிரக தோஷம் நீங்க பல்வேறு பரிகாரங்கள் இருந்தாலும் சில எளிய பரிகாரங்கள் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியவை. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
* காய்ச்சாத பசும்பாலை ஏதேனும் ஒரு கோவிலுக்கு, 15 நாட்கள் கொடுத்தல். வெள்ளி டம்ளர்களை நீர் அருந்த பயன்படுத்துதல் சுக்ரனை பலப்படுத்தும்.
* நீலம் மற்றும் பச்சை ஆடைகளை தவிர்த்தல், சனி மற்றும் புதன் பாதிப்பில் இருந்து விலக்கும்.
* தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிவதால் குருவருள் கிடைக்கும்.
* கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போட்டால், சந்திரனின் பலனைப் பெறலாம்.
* வீட்டில் சூரியனுக்குரிய யாகங்கள் செய்வதும், தினமும் சூரியனுக்கு நீர் படைப்பதும் சூரிய பலத்தை அதிகரிக்க செய்யும்.
* தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தை கூட்டும்.
* 16 நாட்கள் கோவிலில் கொள்ளு தானம் செய்வது கேது பிரீதிக்கு உகந்தது.
* அனுமனை அனுதினமும் வணங்கினால் சனியால் ஏற்படும் சங்கடங்கள் அகலும்.
* இரவில் ஒரு கைப்பிடியளவு பச்சைப்பயிறை நீரில் இட்டு, மறுநாள் அதனை புறாக்களுக்கு உணவாக அளித்தால் புதனால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
* வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு புல் அளித்தால் சுக்ரனின் அனுக்கிரகம் கிடைக்கும்.
நாடி ஜோதிடர் பாஸ்கர், வடவள்ளி.

சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.
ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 மற்றும் லக்னம் ஆகிய இடங்களில் ராகு- கேதுக்கள் இருந்தால், உங்களுக்கு சர்ப்ப தோஷம் உள்ளது என்று பொருள். நீங்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.
திருப்பாம்புரம் என்னும் திருக்கோவில் பேரளம் அருகில் உள்ளது. இங்கு பாம்புரநாதர் - வண்டார்குழலி அம்மன் அருள்பாலித்து வருகிறார்கள். சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கர்வம் காரணமாக, பலம் இழந்து கீழே விழுந்து, இத்தல ஈஸ்வரனை வழிபட்டு மீண்டும் பலம் பெற்று சிவபெருமானை போய்ச் சேர்ந்தது.
எனவே இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இத்தலத்திற்கு உண்டு.

ஏழேழு பிறவிக்கும் நாம் கணவன் மனைவியாகவே வாழவேண்டும் என்று வாழும் தம்பதியர் அதை நிறைவேற்றிக் கொள்ள இப்பிறவியிலேயே சிறந்த பரிகாரம் உள்ளது.
நம் பாரம்பரியத்தில் திளைத்து, ஆகம விதிகளுக்கு கட்டுப்பட்டு கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராய் வாழ்வதை அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இறைவனது அருளாலேயே இல்வாழ்க்கைத்துணை அமைந்திருக்கிறது என்று நம்மிடம் இருபாலரும் சொல்வதையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஏழேழு பிறவிக்கும் நாம் கணவன் மனைவியாகவே வாழவேண்டும் என்று வாழும் தம்பதியர் அதை நிறைவேற்றிக் கொள்ள இப்பிறவியிலேயே வழியிருக்கிறது.
மூன்று கடல் .. மூன்று நதி இணையும் இடங்களை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறோம். சிறப்பிலும் சிறப்பாக, உயர்விலும் உயர்வாக கருதப்படும் அலகாபாத் பிரயாக்ராஜ் (Allahabad Prayagraj) என்னும் இடத்தில் நீராடினால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவம் நீங்கும் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, மனமொத்த தம்பதியர் ஏழேழு பிறவிக்கும் தம்பதியராக இருக்க வேண்டி செய்யும் பரிகாரமும். பெரும்பாலான தம்பதியருக்கு இத்தகைய பரிகார முறைகள் பற்றிய விவரங்கள் தெரியாது எனினும் அங்கிருக்கும் ஞானிகள், பரிகார பூஜை செய்பவர்கள் முன் வந்து தம்பதியரிடம் இதைச் சொல்லி செய்ய சொல்கிறார்கள்.
புனித நீராடிய தம்பதியர் வரிசையாக அமர வைக்கப்படுகிறார்கள். கணவனின் மடியில் மனைவி அமரவேண்டும். மனைவியின் கூந்தலை கணவன் சீவி கூந்தலின் நுனியை கத்தரிக்க வேண்டும். இந்த நுனி புண்ணிய நதியான கங்கையில் போடப்படுகிறது. பிறகு மனைவி கணவனுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து பாத பூஜை செய்ய வேண்டும். மனைவி கணவனின் காலை பிடித்தபடி எத்தனை பிறவிகள் நான் எடுத்தாலும் நீங்களே என் கணவானாக அமைய வேண்டும்.. என மனமார இறைவனிடம் நான் யாசித்து கேட்கும் இது நடக்க வேண்டும். இது சத்தியம்.. என்று சொல்ல வேண்டும்.
கணவன் மனைவியின் மீது தலைவைத்து எனக்கு மீண்டும் மனித பிறவி வாய்க்குமானால் என் வாழ்வில் இரண்டற கலந்து என் இன்பத்திலும் துன்பத்திலும் சமபங்கு கொண்டு மனமொத்து துணையாய் இருக்கும் நீயே என் மனைவியாக வரவேண்டும். நான் வணங்கும் இறைவன் எனக்கு துணைபுரிய வேண்டும் இது சத்தியம் என்று சொல்லவேண்டும். இப்படி வரிசையாக தம்பதியரை உட்காரவைத்து பூஜை செய்ய அங்கு ஆட்கள் உண்டு. அவர்கள் மந்திரம் சொல்ல சொல்ல தம்பதியர் பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அவர்கள் விரும்பும் தட்சணையை காணிக்கையாக செலுத்துவார்கள்.
அடுத்த பிறவியிலும் மனிதனாக பிறப்போம்... நாமே இணைந்திருப்போம் என்னும் நம்பிக்கையுடன் திரும்பும் தம்பதியரின் மனதுக்குள் அக்கணமே ஒரு உறுதியான பந்தம் உருவாகும். அதுவரை அவர்களுக்குள் இருந்த சிறு பிணக்குகளும் அதற்கு பின் வரும் அவர்களது காலங்களில் சிறிதும் இருக்காது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. புண்ணியத் தலங்களுக்கு சென்று வந்த பிறகான அவர்களது மணவாழ்வு அன்பை அதிகரிக்கும். அவர்கள் இருவருக்கும் இடையே அன்பு மட்டுமே பிரதானமாக இருக்கும். ஆன்மிக விஷயங்களில் இருவரும் இணைந்து கவனம் செலுத்துவார்கள்.
தங்களால் இயன்றால் இப்போதே பிரயாக்ராஜ் புண்ணியதலத்துக்கு செல்லுங்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் தீர்க்கவே முடியாத சிக்கல்கள் கூட தீர்ந்து, ஆதர்சன தம்பதியராய் வாழ்வீர்கள்.

ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெற்றும் வாழலாம். மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
புதன் : மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஜோதிடரிம் ஜாதகத்தைக் காண்பித்து, உரிய பரிகாரங்களைச் செய்து பார்த்த பிறகும் பலன் கிடைக்காமல் போகலாம். சிலர் " நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன" என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள்.
இதற்கு பரிகாரத்தை தவறாக செய்வது கூட காரணமாக இருக்கலாம். செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை தவிர செய்யக்கூடாதவைகளும் உண்டு.
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.
செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. திருமணத்திற்கு பிறகு பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் முதல் குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.
இதை பின்பற்றினால் பரிகாரம் நல்ல பலனளிக்கும்.

திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது
உப்பை செல்வத்தை அள்ளி தரும் தேவதையான மஹாலட்சுமியுடன் ஒப்பிடுவார்கள். நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு நம் ஆத்மாவை போன்றது. கடலில் நீராடுவது சகல தோஷங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை. இன்றும் திருஷ்டி கழிக்க, உப்பு சுற்றிப்போடுவது நடைமுறையில் உள்ள ஒரு வழக்கமாகும். உப்பு கெட்ட சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி, கெட்ட அதிர்வுகளை எதிர்க்கும் ஆற்றல்கொண்டது
வெள்ளிக்கிழமை வீட்டில் உப்பு வாங்கி வைத்தால் செல்வம் சேரும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.அதாவது வெள்ளிக்கிழமையன்று உப்பு வாங்கினால் பணம், சொத்துக்கள் உள்ளிட்ட செல்வங்கள் சேரும் என்று அர்த்தமாகும்.
நாம் எல்லோரும் நம்மை சுற்றியும் நாம் வசிக்கும் இடத்திலும் தீய சக்திகள் இருப்பதை விரும்பமாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம், பதட்டதை அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் வீட்டில் ஏழ்மை நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
உப்பு நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
உப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை நிலை விலகி செல்வ செழிப்போடு வாழ வழி வகுக்கும்.
1 இம்முயற்சியை ஞாயிறுகளில் மட்டும் செய்ய வேண்டாம். இந்த முயற்சியை செய்ய நீங்கள் கடல் உப்பை நீருடன் கலந்து அதை வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடுமாம்.
2. ஒரு டம்ளர் நீரில் ஒரு சிட்டிகையளவு உப்பு சேர்த்து அதை வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து விடவேண்டும்.இது வீட்டில் இருந்து ஏழ்மை விலக செய்யும்.
3 உள்ளங்கையளவு உப்பு எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் போட்டு அதை குளியலறையின் ஒரு மூலையில் வைத்துவிடவும். இந்த உப்பை சீரான இடைவேளையில் நீங்கள் மாற்ற தவறக் கூடாது. இது வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்தி குறைந்து, ஏழ்மை நீங்க உதவுமாம்.
4.சிவப்பு துணியில் உப்பு சேர்த்து கட்டி வைக்கவும். அதை வீட்டின் நுழைவாயில் பகுதியில் கட்டி தொங்கவிடவும்.இது வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தி நீங்கவும், நல்ல அதிர்வுகள் நிறையவும் உதவும்.
5. சாப்பிடும் இடத்தில் உப்பு வைப்பது செல்வசெழிப்பு அதிகரிக்க உதவும். வீட்டில் செல்வம் நிறைந்து இருக்க உதவும்.
6 குளிக்கும் டப்பில் ஒரு கைப்பிடிகடல் உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் குளிப்பதால், நீங்களே கெட்ட சக்திகள் நீங்குவதை உணர முடியும்.

கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடவும் மரபு வழியிலான மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் கோவிலாக தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.
கல்வியில் ஆர்வமின்றி இருக்கும் மாணவர்களுக்கு, கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்கவும், மாணவர்களுக்கான நினைவுத்திறனை அதிகரிக்கவும், தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிடவும் மரபு வழியிலான மூலிகை மருந்தைப் பிரசாதமாகத் தரும் சிறப்புமிக்கக் கோவிலாக கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், வடக்கு பரவூரில் (வடக்கன் பரவூர்) அமைந்திருக்கும் தட்சிண மூகாம்பிகை கோவில் திகழ்கிறது.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட இக்கோவிலில் தாமரை மலர்கள் நிரம்பிய குளத்தின் நடுவில் அமைந்திருக்கும் கருவறையில் மூகாம்பிகை அமர்ந்த நிலையில் இருக்கிறார். இங்கிருக்கும் மூகாம்பிகை தட்சிண மூகாம்பிகை என்று அழைக்கப் பெறுகிறார்.
தங்களுடைய பிள்ளைகளின் கல்வி சிறப்பாக அமைய விரும்பும் பெற்றோர், விஜயதசமி நாளில் இக்கோவிலுக்கு வந்து, தங்கள் பிள்ளைகளின் கல்வித் தொடக்கத்திற்கான (வித்யாரம்பம்) சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர். இவ்வழிபாட்டின் போது, பெற்றோர் இங்கிருக்கும் மூகாம்பிகையை வணங்கித் தங்கள் குழந்தையின் விரல் கொண்டு அரிசியில் எழுத வைக்கின்றனர். இதனை “எழுத்துநிரித்து” என்றும் கூறு கிறார்கள். இந்நாளில் இசை, நடனம், ஓவியம் போன்ற சில சிறப்புக் கலைப் பயிற்சிகளின் தொடக்கத்திற்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில், பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப இக்கோவிலில் கல்வி தொடக்க வழிபாடு செய்யப்படுகிறது.
இக்கோவிலில் வழிபடும் மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிப்பதுடன், தேர்வில் அதிக மதிப்பெண்களும் கிடைக்கும் என்கிறார்கள். இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட சிறப்புக் கலைப் பயிற்சிகளில் தேர்ச்சியடைய விரும்புபவர்கள், இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்து பயனடைகின்றனர்.
நீங்காத நோயுடையவர்கள், செய்யும் செயல்களில் தடை காண்பவர்கள் இத்தலத்தில் தரப்படும் அர்ச்சனைப் பொருட்களைப் பெற்று, பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை அர்ச்சகரிடம் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் பிரசாதத் தட்டை, கோவில் முன்பு அதற்கென வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் செலுத்த வேண்டும். இப்படிச் செய்பவர்களுக்குச் சிறந்த பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இக்கோவிலில் மூகாம்பிகைக்குத் தினமும் இரவு மரபு வழியில் தயாரிக்கப்படும் “மூலிகை மருந்து” படைத்து வழிபாடு நடைபெறுகிறது. மறுநாள் காலையில், இந்த மூலிகை மருந்தை வாங்கி அருந்தும் மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும் என்பதுடன், மாணவர்களின் கல்வி மீதான சோம்பல் நீங்கி, ஆர்வம் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து குருவாயூர் செல்லும் சாலையில் 25 கிலோ மீட்டர் தொலைவில், வடக்கன் பரவூர் (வடக்குப் பரவூர்) எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவி லுக்கு செல்ல எர்ணாகுளம், குருவாயூர் நகரங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.