என் மலர்tooltip icon

    மற்றவை

    • மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும், கல்வி தகுதி தேவை இல்லை.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, மதுரையிலுள்ள வக்ப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்ப டவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும்.தமிழ்நாட்டில் வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு மதுரை மாவட்டத்திலுள்ள வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும். தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயதிலிருந்து 45 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (எல்.எல்.ஆர்.) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும், கல்வி தகுதி தேவை இல்லை. மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 110 வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால் 1.பேஷ் இமாம், 2.அரபி ஆசிரியர்கள், 3.மோதினார் 4.முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் மானியத் தொகை வழங்கப்படும்.

    ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமான சான்று, புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று, சாதி சான்று, ஓட்டுநர் உரிமம் / எல்.எல்.ஆர்., வங்கி கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி. குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்புகண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல்/விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார்.
    • ஆங்காங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்தவாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை!

    அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.

    எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.

    'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.

    இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம்பெண்களோடு இணைந்து ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர். இதுதான் காட்சியமைப்பு.

    கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    அவர் கண்களுக்குள் தேவாரம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின.

    எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு.

    கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து, தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார்.

    கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை!

    "தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ? எடுத்துச் சொல் அன்னையே, வேண்டிக்கொள்கிறேன் உன்னையே !"

    புன்னகைத்தாள் தமிழன்னை!

    பொருத்தமான வரிகளை பொங்கி வரச் செய்தாள் கண்ணதாசன் உள்ளத்தில் !

    மாணிக்க வாசகர் எழுதிய வரிகள், கண்ணதாசன் மனதுக்குள் வந்து ஆடின.

    மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார். ஆங்காங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்தவாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

    அங்கே சில மங்கையர் வண்ணக் கோலப்பொடி இடிக்கிறார்கள். அப்படி தாள லயத்தோடு உலக்கையை இடிக்கும்போது அவர்கள் பாடும் பாடல் இது :

    "முத்தணி கொங்கைகள் ஆட ஆட

    மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்

    சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்

    செங்கயற் கண்பனி ஆட ஆடப்

    பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்

    பிறவி பிறரொடும் ஆட ஆட

    அத்தன் கருணையொ டாட ஆட

    ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"

    ஆஹா, ஆஹா !

    தேனினும் இனிய இந்த தித்திக்கும் தமிழை தேடி எடுத்து தனக்குத் தந்த தமிழன்னையை நோக்கி மகிழ்வுடன் புன்னகை செய்தார், கரம் கூப்பி வணங்கினார் கண்ணதாசன்.

    அப்புறம் என்ன ?

    எம்.எஸ்.விஸ்வநாதனை நோக்கி சொன்னார் கண்ணதாசன். "விச்சு, இது சரியா இருக்குமா பாரு."

    "சொல்லுங்க கவிஞரே!"

    "கட்டோடு குழலாட ஆட ஆட

    கண்ணென்ற மீனாட ஆட ஆட

    கொத்தோடு நகையாட ஆட ஆட

    கொண்டாடும் மயிலே நீ ஆடு!"

    "ஆஹா" என்றார் எம்.எஸ்.வி.

    கண்ணதாசன் தொடர்ந்தார் :

    "பாவாடை காற்றோடு ஆட ஆட

    பருவங்கள் பந்தாட ஆட ஆட

    காலோடு கால்பின்னி ஆட ஆட

    கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!"

    பொங்கி வரும் பூரிப்பில் கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி.

    காலத்தை வெல்லப் போகும் ஒரு பாடல் அந்த அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்க, வந்த தன் வேலை முடிந்ததென எவருக்கும் தெரியாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் தமிழன்னை.

    அவள் சென்ற திசை நோக்கி கை கூப்பி தொழுதார் கண்ணதாசன் :

    "வட்டிக் கணக்கே

    வாழ்வென் றமைந்திருந்த

    செட்டி மகனுக்கும்

    சீர்கொடுத்த சீமாட்டி!

    தோண்டுகின்ற போதெல்லாம்

    சுரக்கின்ற செந்தமிழே

    வேண்டுகின்ற போதெல்லாம்

    விளைகின்ற நித்திலமே

    உன்னைத் தவிர

    உலகில்எனைக் காக்க

    பொன்னோ பொருளோ

    போற்றிவைக்க வில்லையம்மா!

    என்னைக் கரையேற்று

    ஏழை வணங்குகின்றேன்!"

    நானும் வணங்குகின்றேன்

    கண்ணதாசனை !

    தமிழ்த்தாயின் தனிப் பெரும் தவப் புதல்வனை !

    -ஜான்துரை ஆசிர் செல்லையா

    • உள்ளே நெருப்பையும் வெளியில் சிரிப்பையும் வைத்துக் கொண்டு கவியரசு எழுதிய பாடல் புகழ்பெற்ற பாடலானது.
    • கம்போஸிங்க் முடித்து வந்த கவியரசு ஒரு மார்வாடியிடம் பணம் வாங்கி வந்து, உடனே கோர்ட்டில் கட்டிவிட்டு ஜப்தியிலிருந்து வீட்டை மீட்டினார்.

    பாவமன்னிப்பு படப் பாடல் கம்போஸிங்கில் கண்ணதாசன் அமர்ந்திருக்கிறார். சிவாஜி பாட வேண்டிய பாடலுக்கான சூழ்நிலையை சொல்கிறார் இயக்குநர் பீம்சிங். மெல்லிசை மன்னரும் டியூனை தயாராக வைத்துள்ளார். அப்போது ஒரு போன் கால் கண்ணதாசனுக்கு வருகிறது எழுந்து சென்று கவியரசு போனில் பேசுகிறார். பேசியவர் கவியரசுவின் கணக்காளர் ஒரு வருத்தமான செய்தியை கண்ணதாசனுக்கு சொல்கிறார்.

    கவிஞர் அவர்களே... நீங்கள் தனியாரிடம் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்ய கோர்ட்டிலிருந்து தவாலி வந்து நோட்டீஸை ஒட்டி விட்டார்... வீதியெல்லாம் கேட்குமளவு தமுக்கடித்து கொண்டிருக்கிறார்கள். ஏதாவது வழி செய்யுங்கள்.

    அதிர்ந்து போன கவியரசு அமைதியாக வந்து அமர்கிறார். கவியரசுக்கு ஏதோ மோசமான தகவல் வந்துள்ளது. அநேகமாக இன்று கம்போஸிங் இருக்காது என்று முடிவு செய்து அனைவரும் புறப்பட தயாராகின்றனர்.

    ஆனால் கவியரசு, மெல்லிசை மன்னரிடம் "தம்பி..டியூனைச் சொல்"என்கிறார். எம்.எஸ்.வி.டியூனைச் சொல்கிறார். உடனே அருவி போல பாடல் வரிகளை சொல்கிறார்..

    "சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

    நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்.."

    அனைவரும் பாடலை பாராட்டுகின்றனர். உள்ளே நெருப்பையும் வெளியில் சிரிப்பையும் வைத்துக் கொண்டு கவியரசு எழுதிய அந்தப் பாடல் புகழ் பெற்ற பாடலானது.

    கம்போஸிங்க் முடித்து வந்த கவியரசு ஒரு மார்வாடியிடம் பணம் வாங்கி வந்து, உடனே கோர்ட்டில் கட்டிவிட்டு ஜப்தியிலிருந்து வீட்டை மீட்டினார்.

    கவியரசுவின் பல கண்ணீர் கதைகளிலிருந்துதான் நாம் கேட்டு ரசிக்கும் பல தத்துவப் பாடல்கள் உருவாயின.

    -ஜெயதேவன்

    • மாத சம்பளம் கிடைத்தவுடன் வீட்டிற்கு இனிப்புகள் வாங்கி செல்லுங்கள். வீட்டிற்கு இனிப்பு வாங்கி செல்வது என்பது சுபச்செலவு.
    • சம்பளம் வாங்கிய கிழமை வெள்ளிக்கிழமையாக இருந்தால் அன்று வாங்க வேண்டிய மிக முக்கியமான பொருட்களில் கல் உப்பும் ஒன்று.

    நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு பணத்தை சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். வாங்கிய சம்பளம் எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒவ்வொரு முறையும் முதல் செலவு செய்யும் பொழுது கவனமாக பார்த்து செய்வதும் முக்கியமாகும்.

    சம்பளம் வாங்கியவுடன் முதல் வேலையாக இந்த பொருட்களுக்கு செலவு செய்தால் வீட்டில் சுபிட்சம் நிலைத்து நிற்கும் என்கிறது சாஸ்திரம். அப்படி சம்பளம் வாங்கியவுடன் வாங்க வேண்டிய முதல் பொருள் என்னவாக இருக்கும்? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...

    ஒவ்வொரு மாதமும் நீங்கள் சம்பளம் வாங்கும் பொழுது பணத்தை உள்ளங்கையில் வைத்துகொண்டு, மகாலட்சுமி படத்தை பார்த்து இந்த பணம் நல்ல வழியில் செலவாக வேண்டும், வீண் விரயங்கள் ஏற்படக்கூடாது என்று மனமார மகாலட்சுமி தாயாரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

    சம்பளம் வாங்கிய உடன் மகாலட்சுமிக்கு உகந்த மல்லிகை பூக்களை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்து வரவும். இப்படி செய்வதால் மகாலட்சுமியின் பூரண அருள் உங்களுக்கு இருக்கும். மாத சம்பளம் கிடைத்தவுடன் வீட்டிற்கு இனிப்புகள் வாங்கி செல்லுங்கள். வீட்டிற்கு இனிப்பு வாங்கி செல்வது என்பது சுபச்செலவு.

    பின்னர் அதிலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து வாங்க வேண்டியது மஞ்சள் ஆகும். மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூள் எதுவாக இருந்தாலும் வாங்கலாம்.

    மஞ்சள் மங்களகரமான பொருட்களில் ஒன்று. மேலும் குடும்பத்தில் சுபிட்சத்தை கொடுக்கக் கூடியதாகும். மஞ்சள் தூளை வாங்கி வந்து எவர்சில்வர் டப்பாவில் போட்டு நான்கைந்து மிளகுகளை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் வண்டுகள் வராமல் இருக்கும். சமையலுக்கு இல்லை என்றாலும், சாமிக்கு வாங்கும் மஞ்சள் கூட வாங்கலாம். ஏதாவதொரு முறையில் மஞ்சள் வாங்குவது நல்லது.

    மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது பசு என்பது எல்லோருக்கும் தெரியும். சம்பள பணத்திலிருந்து முதல் தொகையை எடுத்து பசுமாட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஏதாவதொரு பொருளை வாங்குங்கள். பசுமாட்டில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், வெண்ணெய் இப்படி எந்த பொருளை வாங்கினாலும் சரிதான்.

    சம்பளம் வாங்கிய கிழமை வெள்ளிக்கிழமையாக இருந்தால் அன்று வாங்க வேண்டிய மிக முக்கியமான பொருட்களில் கல் உப்பும் ஒன்று. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்குவது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். அதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

    கல் உப்பு, பால் பொருட்கள், இனிப்பு, மஞ்சள் ஆகிய இந்த நான்கு விஷயங்களில் எது உங்களால் முடியுமோ! ஒவ்வொரு மாதமும் அதனை முதல் செலவாக செய்து வந்தால் வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிரம்பி, வரவுக்கு மிஞ்சிய செலவுகள் எல்லாம் நடைமுறையில் இருந்து மாறி சேமிப்பு வளரும்.. செல்வம் பெருகும்..!

    -சிவபாலா

    • கல்வெட்டுகளில் ‘சந்திரகாந்தக்கல்’ என்று குறிப்பிடப்படும் ஒருவகைக் கற்களால் கட்டியதால்தான் இந்தக் குளிர்ச்சி நிலை என்று கூறப்பட்டுள்ளது.
    • தொழிற்நுட்பத்தில் பழந்தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுகிறது.

    கங்கைகொண்ட சோழீசுவரர் கோவில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.

    கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் இராசேந்திரன் அமைத்து அங்கு இக்கோவிலையும் கட்டினார்.

    1000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டிய இக்கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்று பார்த்தால், அதன் உட்புறச் சுவர்கள் எல்லாவற்றிலுமிருந்து தண்ணீர், வியர்வைபோல முத்து முத்தாய், வடிவதைக் காணலாம். கர்ப்பக்கிரகம் 10 டன் A/c போட்டது போன்று குளுமையாக இருக்கும். கடும் கோடையில்கூட அந்தக் குளிர்ச்சி மாறாது. இன்றுவரை குளிர்ச்சியாகவே இருக்கிறது.

    கல்வெட்டுகளில் 'சந்திரகாந்தக்கல்' என்று குறிப்பிடப்படும் ஒருவகைக் கற்களால் கட்டியதால்தான் இந்தக் குளிர்ச்சி நிலை என்று கூறப்பட்டுள்ளது. தொழிற்நுட்பத்தில் பழந்தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுகிறது.

    -ப்யாரிப்ரியன்

    • மாணவர்களுக்கு ஞானம், அறிவு தொடர்பாக வித்தியாசமான முறையில் பகவான் ராமகிருஷ்ணர் விளக்கினார்.
    • ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள்.

    பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது. அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது? என்று குருவிடம் கேட்டனர்.

    அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்கவில்லை.

    இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை.

    பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.

    அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார்.

    முதல் மாணவனைப் பார்த்து, "நான்போய் வந்த அறையினுள் மூன்று டம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு டம்ளர் பாலை பருகிவிட்டு வா'' என்றார்.

    அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று டம்ளர்களில் பால் இருந்தது. தங்க டம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.

    அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் டம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான். ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.

    மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி டம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது. எனக்கு வெண்கல டம்ளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு இளப்பமானவனா? எந்தவிதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்?' என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின.

    ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை!

    பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து, "பாலைக் குடித்தீர்களா" என்றார். முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், "தங்கத் டம்ளரில் பால் குடித்தேன். நான் மிகவும் கொடுத்து வைத்தவன், குருவே!'' என்றான்.

    இரண்டாவது மாணவன், "எனக்கு தங்கத் டம்ளரில் பால் கிடைக்கவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் வெள்ளி டம்ளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது, குருஜி'' என்றான்.

    மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. அதனூடேயே அவன், மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருஜி. எனக்கு வெண்கலத் டம்ளரில்தான் பால் கிடைத்தது'' என்றான்.

    பகவான் ராமகிருஷ்ணர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டபின் பேச ஆரம்பித்தார். மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று டம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால்தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை.

    பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு.

    பால் ஊற்றி வைத்திருக்கும் டம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி ஆகிய அனைத்தும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்!

    பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு. அதில் உள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம்.

    ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள். பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண்சட்டியில் ஊற்றிக்கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்''

    நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரேமாதிரியான மனோநிலையை எட்டியிருப்பீர்கள்!''

    பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது...

    • அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.
    • கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

    நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

    உஷ்ணத்தால் பித்த நோய்களும்,

    காற்றினால் வாத நோய்களும்,

    நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

    நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் எளிய வழியை கூறுகிறார்.

    ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

    கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

    அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, மேல் தோலை மட்டும் நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

    கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

    கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், சிறுநீர் குழாய்களில் உண்டாகும் புண், சிறுநீர் எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

    "காலை இஞ்சி,

    கடும்பகல் சுக்கு

    மாலை கடுக்காய் .....மண்டலம் உண்டால்

    விருத்தனும் பாலனாமே.-

    காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

    -அருளானந்தர்

    • டி.எம்.எஸ், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் இத்தகைய வரிசையில் இணைத்து சிந்திக்க வைக்கும் குரல்வளம் மலேசியாவுக்கு.
    • ஆனாலும் கிராமத்தின் சுத்தமான காற்றும், பொங்கிவரும் நதியின் உற்சாகமும், தென்மேற்குப் பருவக்காற்றின் குளிர்ச்சியும் கொண்டு தனித்த வகைமையுடைய பாடல்கள் மலேசியா வாசுதேவனுடையது.

    இன்டர்வெல் நேரம். வகுப்பறையிலிருந்து பிள்ளைகள் வெளியேறியிருந்தனர். எனக்குள்ளிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் வெளியே வந்தான். செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா! பாடினான். 'சார் நீங்க பாடுவீங்களா?' வியப்பாக கேட்டாள் என் மாணவி நிவேதா. 'ஏய் நீ எப்போ வந்த?' 'நீங்க ஆரம்பித்தபோதே வந்துட்டேன்' சிரித்தாள். எனக்கு வெட்கம் வந்தது.

    நான் தனிமையின் பாடகன். எஸ்பிபி, ஜேசுதாஸ், மலேசியா யாரும் இல்லாதபோது நானே பாடி, நானே கேட்பேன். என்னால் மட்டுமே கேட்க முடிபவைதான் என் பாடல்கள்.

    ஒரு பாடகனாக வேண்டும் எனும் என் கனவு கடைசிவரை பலிக்கவே இல்லை.

    அப்போது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

    பள்ளிக்கூடம் விட்டுவந்த ஒரு நாள் மாலை. இன்று சினிமாவுக்கு போகிறோம் என்றாள் அம்மா. அண்ணன்கள் மாட்டு வண்டியை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.

    ஸ்ரீமுஷ்ணம் லஷ்மி டாக்கீஸில் படம் பார்க்கப்போவது கொண்டாட்டம். அன்றைய படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. கோட் சூட் போட்ட எம்ஜியார் இல்லை. நம்பியார் இல்லை. துப்பாக்கி இல்லை. வாள் சண்டை இல்லை. பிழியப் பிழிய அழும் சிவாஜி இல்லை. 'பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி' அலங்காரத் தமிழ் இல்லை.

    ஏதோ எங்கள் தெருவில் நடக்கும் கதைபோலவே இருந்தது. மயிலுக்கு எங்கள் அஞ்சலைகள் சாடை. பதினாறு வயதினிலே. என் சினிமா ரசனையை கலைத்துப் போட்ட படம். அதில்தான் 'செவ்வந்தி பூமுடிச்ச சின்னக்கா'வை கேட்டேன்.

    கொல்லைக்கு போகும்போது, குருவி விரட்டும்போது, நடவு கட்டு கலைக்கும்போது, ராத்திரியில் மோட்டார் கொட்டகைக்கு தண்ணீர் பாய்ச்சப் போகும்போது எல்லாம் செவ்வந்திப் பூமுடிச்ச சின்னக்காதான்.

    எங்கள் பதின் பருவத்தை நிரப்பிய அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன். என்பதையெல்லாம் +2 வில்தான் புரிந்து கொள்ள முடிந்தது.

    அப்போது சினிமா கொட்டகைகளுக்கு முன் பாட்டு புத்தகம் விற்பார்கள். நாலணா இருக்கும். அதில் பாடல் வரிகளுக்கு முன்பு ஆண் குரல், பெண் குரல் என்றிருக்கும்.

    ஜேசுதாசுக்கு கந்தர்வக் குரல். எஸ்பிபி குரலில் நிறைய பெண்மையின் சாயல். தமிழ் சினிமாவில் எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இரண்டு ஆண் குரல்கள். ஒன்று டிஎம்எஸ் உடையது. மற்றொன்று மலேசியாவுடையது.

    மலேசியா மலையாளி. ஆனாலும் தமிழில்தான் அதிகம் பாடினார். பிறமொழிகளில் பாடியது வெகு சொற்பம். இதிலும் டிஎம்எஸ்ஸோடு பொருந்துகிறார்.

    டி.எம்.எஸ், சி.எஸ்.ஜெயராமன், திருச்சி லோகநாதன் இத்தகைய வரிசையில் இணைத்து சிந்திக்க வைக்கும் குரல்வளம் மலேசியாவுக்கு. ஆனாலும் கிராமத்தின் சுத்தமான காற்றும், பொங்கிவரும் நதியின் உற்சாகமும், தென்மேற்குப் பருவக்காற்றின் குளிர்ச்சியும் கொண்டு தனித்த வகைமையுடைய பாடல்கள் மலேசியா வாசுதேவனுடையது.

    வெத்தல வெத்தலயோ, பொதுவாக எம்மனசு தங்கம், ஒத்த ரூபா ஒனக்குத் தாரேன், கண்ணத் தொறக்கணும் சாமி போன்ற பாடல்களை குத்துப்பாடல்கள் என்று சொல்ல மனம் வரவில்லை. துள்ளிசைப் பாடல்கள். கிராமத்து ரசனையில் பச்சக்கென்று அவை ஒட்டிக்கொண்டன.

    கிராமியம், நகைச்சுவை, நையாண்டி இவைதான் என்றில்லை. சோகத்துக்கும் அவர் குரல் அத்தனை பாந்தம். பட்டு வண்ண ரோசாவாம், பொன்மானைத் தேடி நானும் பூவோடு வந்தேன், பூங்காத்து திரும்புமா? போன்றவை சோகமும் தத்துவச் சாயலும் கொண்டவை. காலம் அழிக்க விரும்பாதவை.

    மேற்கத்திய இசைப் பின்னணி கொண்ட, கிளாசிக் வகைமையிலும் புகுந்து விளையாடினார். அடி ஆடு பூங்கொடியே,

    இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது, கோவில் மணி ஓசை தன்னில் போன்ற பாடல்கள் இளைஞர்களை கிறுக்குப்பிடிக்க வைத்திருந்தன.

    டிஎம்எஸ்ஸுக்குப் பிறகு சிவாஜியின் உதட்டில் கச்சிதமாக மலேசியாவால்தான் உட்கார முடிந்தது.. எம்ஜிஆருக்கு பாடவிரும்பினார். இளையராஜா இசையமைப்பதாக இருந்த படமொன்று கைவிடப்பட்டது.

    ரஜினியும் மலேசியா குரலும் செமர்த்தியாக சிங்க்கானது. தியேட்டர்கள் திருவிழாக்கொண்டாடின.

    இளையராஜாதான் மலேசியாவை உச்சத்தில் கொண்டு சேர்த்தார். கமர்ஷியலும் ஜீனியஸ் தன்மையையும் இணையப் பெற்றவர்கள் இருவரும்.. மலேசியா குரல் மட்டுமல்ல மனமும் இனிமையானது. கவிதைப் புத்தகமெல்லாம்கூட எழுதி வெளியிட்டார்.

    திரையிசைச் சூழல் மாறிய நேரம். மலேசியாவுக்கு சரியாக வாய்ப்புகள் அமையவில்லை. பாலு விக்கிற பத்தும்மா, உன் பாலு ரொம்ப சுத்தம்மா'வில் ஆரம்பித்தவர். விஷ்ணு விஷாலின் பலே பாண்டியாவில் கடைசியாக ஒரு பாடலை பாடினார்.

    கைவிடப்படும் துயரம் எல்லா கலைஞர்களையும் கவ்விக் கொள்கிறது. நமது ஞாபக அடுக்குகளில் ஒரு மர்ஃபி ரேடியோ இருக்கிறது. அது இருக்கும்வரை செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்காவும், மலேசியாவும் அழியப்போவதில்லை!

    - கரிகாலன்

    • 20.13 கோடி வருடங்களுக்கு முன் திடீர் எனக் கரியமில வாயு பூமியில் அதிகம் தோன்றுகிறது.
    • காரணம் விண்கல் அல்லது பெரிய எரிமலை வெடிப்பால் இருக்கலாம். பூமியில் சுமார் 70 இருந்து 75 சதவிகித உயிரினங்கள் மாண்டன.

    சுமார் 45 கோடி வருடங்களுக்கு முன்பு நம் பூமியில் எரிமலை வெடிப்பு அதிகம் நிகழ்ந்தால் ஒரு பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமியில் உள்ள உயிரினங்களில் 57 சதவிகிதம் அழிந்தது. இந்த காலம் புழுக்கள் அதிகம் வாழ்ந்த காலம்.

    பின்னர் 7.5 கோடி வருடங்கள் பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் பூமியில் அமைதி நிலவியது. நண்டு, நத்தைகள் அதிகம் வாழ்ந்த காலம் இது.

    திடீர் என 36 கோடி வருடங்களுக்கு முன் 70 சதவிகித உயிரினங்கள் அழிந்தது. இது எப்படி நடந்தது எனச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. எரிமலை வெடிப்பு அல்லது விண்கல் விழுந்து இந்தப் பெரும் அழிவு நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

    பின்னர் சுமார் 11.5 கோடி வருடங்கள் பூமியில் அமைதி நிலவியது. பல மீட்டர் சுற்றளவு கொண்ட நத்தைகள் இருந்த நேரம்.

    சுமார் 25.2 கோடி வருடங்களுக்கு முன் ஒரு பெரிய எரிமலை வெடிப்பால் பூமியிலிருந்த 83% உயிரினங்கள் செத்து மடிந்தன. இதில் கடலில் வாழ்ந்த உயிரிகளும் தரையில் வாழ்ந்த உயிரினங்களும் அடக்கம்.

    பின்னர் 4 கோடி ஆண்டுகளுக்குப் பூமியில் அமைதி நிலவியது. இந்த காலத்தில் ஆமை மற்றும் முதலை போன்ற உயிரினங்கள் உருவாகிய காலம்.

    20.13 கோடி வருடங்களுக்கு முன் திடீர் எனக் கரியமில வாயு பூமியில் அதிகம் தோன்றுகிறது. காரணம் விண்கல் அல்லது பெரிய எரிமலை வெடிப்பால் இருக்கலாம். பூமியில் சுமார் 70 இருந்து 75 சதவிகித உயிரினங்கள் மாண்டன.

    பின்னர் சுமார் 14.5 கோடி வருடங்கள் பூமியில் அமைதி நிலவியது. இந்த காலத்தைப் பயன்படுத்தி ஊர்வன இனத்தைச் சார்ந்த டைனோசர்கள் பூமியில் பல்கிப் பெருகின. இதன் கட்டுப்பாட்டுக்குள் பூமி இருந்து எனலாம்.

    சுமார் 6.6 கோடி வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் பூமியைத் தாக்க 75% உயிரினங்கள் செத்து மடிந்தன. டைனோசர் கூட்டம் கூண்டோடு செத்து மடிந்தன.

    6.6 கோடி வருடங்களாகப் பூமி அமைதியாக இருந்து வருகிறது. பறவைகளும் பாலூட்டிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தித் தழைக்க ஆரம்பித்தது. மனிதன் பூமியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது போல் தோற்றம் உள்ளது. இதற்குக் காரணம் மக்கள் தொகை தான். தொழில்நுட்பம் வளர்ந்த நிலையில் பூமியில் இப்போது சுமார் 790 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

    அடுத்து என்ன நடக்கும்; எப்போது நடக்கும் எனத் தெரியாது. சுமார் 6.6 கோடி ஆண்டுகளாக இது போன்ற பெரிய பிரச்சினை இன்றி பூமி அமைதியாக உள்ளது. ஆனால் அடுத்து மேல் கூறிய ஐந்து பேரழிவு போல் ஏதாவது ஒன்று வரவாய்ப்பு அதிகம் என்றே தோன்றுகிறது.

    அதாவது சராசரியாக சுமார் 9.5 கோடி வருடங்களுக்கு ஒரு முறை இந்த பூமியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது . மிகவும் குறைந்த பட்சமாக 4 கோடி வருடத்திலும் அதிக பட்சமாக 14.5 வருடத்திலும் பூமியில் பேரழிவு நடந்திருக்கிறது. ஏது எப்படியோ?அடுத்து என்ன நடக்குமோ? எப்போது நடக்குமோ?

    என்ன பேரழிவு நடந்தாலும் எப்போது நடந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது மனிதர்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆழ்கடலில் வாழ்ந்து வரும் சுறா மீன்கள் பல பேரழிவையும் எதிர் கொண்டு இன்றும் கம்பீரமாக வலம் வருவது மகிழ்ச்சியான செய்தி. மனித இனத்திற்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

    இந்த கேள்வி அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இந்த பூமியில் தோன்றிய உயிரினங்களின் வகைகளில் 95 சதவிகிதம் மேற்கண்ட காரணங்களால் இன்று இல்லை.

    - பேராசிரியர் சி சுதாகர்

    • 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
    • ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர்.

    தஞ்சை பெரியகோவிலின் பெருமை வாய்ந்த வரலாறு அதன் சுற்றுசுவர்களில் பொறிக்கப்பட்டு இருந்தும் கூட, உள்ளூர் மக்கள் பெரிய கோவிலை ஆவணப்படுத்த தவறி விட்டார்கள். 1860-க்கு முன்னர் கோவிலின் வரலாறு யாருக்கும் தெரியாத நிலையிலேயே 800 ஆண்டுகளாக இருந்து வந்தது...

    1858-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் தஞ்சையின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்ட பிறகு, புனித பீட்டர்ஸ் பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்த, ஆங்கிலேய கிருத்துவ பாதிரியார் மற்றும் தலை சிறந்த தமிழ் அறிஞருமாகிய ஜி.யூ.போப், பெரிய கோவிலை ஆவணப்படுத்துமாறு கோரப்பட்டார்.

    அதன் விளைவாக தஞ்சை பெரிய கோவில், ஒரு சோழ மன்னரால் கட்டப்பட்டது என்று ஆவணப்படுத்திய முதல் நபர் அவர்தான். உள்ளூர் அறிஞர்களிடமிருந்து விசாரித்ததில் பெரிய கோயில் "காஞ்சிபுரத்து காடுவெட்டி சோழர்" என்பவரால் கட்டப்பட்டது என்பதை அறிந்து அவர்கள் சொன்னதை வைத்து வெளியிட்டார்.

    பிற்காலத்தில் தான் முழு உண்மை தெரிய வந்தது... 1887 ஆம் ஆண்டு, ஈ. ஜே. ஹுல்ஸ் என்ற ஒரு ஜெர்மன் தொல்பொருள் ஆய்வாளரை தஞ்சை பெரிய கோவில் பற்றி அதிகாரபூர்வமாக ஆவணம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

    ஹுல்ஸ் புகைப்படம் எடுப்பதில் வல்லவர், இதற்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் மாவட்ட ஆட்சியாளராக பணியாற்றியவர். அவர்தான் பெரிய கோவிலின் பூர்வீகத்தை 800 ஆண்டுகளுக்குப் பிறகு, நம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டியவர். முழு அத்தியாயமும் பெரிய கோவிலின் அடிவாரத்தில் செதுக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து, இந்த மாபெரும் பிரஹதீஸ்வரர் ஆலயம் 1010 ஆம் ஆண்டில், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டதாக உலகுக்கு கூறினார்!

    இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாக கருதப்பட்டது. இதன் மூலம் தான் தமிழர்களின் பழங்கால செழிப்பும், வளமும் உலகிற்கு தெரிய வந்தது. பெரிய கோவில் பற்றி அவர் எடுத்த புகைப்படங்கள், பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் நன்கு பாதுகாக்கப்படுகின்றன.

    1000 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த பெரிய கோவில் பூகம்பங்கள், படையெடுப்புகள், திருட்டு, சூறை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தாங்கி இன்று வரை கம்பீரமாக நிற்பது ஒரு மாபெரும் அதிசயம்.

    800 ஆண்டுகள் தொடர்ச்சியாக படையெடுப்பு, சண்டை... 1279ல் பாண்டியர்கள் தஞ்சாவூரை இரண்டு முறை படையெடுத்து கைப்பற்றினர். தஞ்சாவூர் சோழர் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. 1335ல் மாலிக் கஃபூரின் படைகளால் கடும் சோதனைக்கு உட்பட்டது. 1335ல் தில்லி சுல்தான் படையெடுப்பு.. 1350 முதல் 1532வரை தேவராயாவின் விஜயநகரின் ஆதிக்கம்... 1532முதல் 1673 வரை நாயக்கர்கள் ஆட்சி.. 1674முதல் 1855 வரை மராட்டியர் ஆட்சி.. 1855 முதல் 1947 வரை ஆங்கிலேயர்கள் ஆட்சி..

    1772 ஆம் ஆண்டில், கோவிலின் நுழைவு கூடம் பிரெஞ்சு படைவீரர்கள் தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டது. 1773 முதல் 1779 வரை ஆங்கிலேய படை சிறிய கோட்டையின் வடக்கு பகுதியை தங்குமிடமாக பயன்படுத்தினர். (தற்போதைய பதிவு அலுவலகம் / சிவ கங்கா பூங்கா இருக்கும் இடம் ).

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரிய கோவில், பார்ப்பதற்கு கருப்பாக இருக்கும். அதன் பிறகு தான் கரும் பாசி படிந்த, கோவிலின் முகப்பு கற்கள் "சாண்ட் பிளாஸ்டிங்" முறையில் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் இளஞ்சிவப்பு கிரானைட் கல் மேலும் நன்றாக தெரிய வந்தது. இதன் காரணமாகத்தான் பெரிய கோவில் தோற்றம் பிரகாசமாக மாறியது.

    1995 உலக தமிழ் மாநாட்டின் போது, திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் அவர்கள் பெரிய கோவிலின் வெளிப்புற ஒளி விளக்குகளை வடிவமைத்தார். அது மேலும் பிரகாசம் ஊட்டியது. கடந்த 15 வருடங்களாக 5 வருடத்திற்கு ஒரு முறை ரசாயன முறையில் கோபுர சிற்பங்கள் சுத்தம் செய்யப்படுகின்றன.

    பெரிய கோவில் கட்ட உபயோகப்படுத்திய இளஞ்சிவப்பு கிரானைட் கற்கள் கிள்ளுகோட்டையின் தென்மேற்கு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது. தற்போதைய நந்தி சிற்பம், நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டது. இது பெரம்பலூர் பச்சமலை அடிவார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

    கோவிலின் மேல் உள்ள உருண்டை வடிவம் கொண்ட கலசம் போல இருக்கும் சிகரம் (கல் குவிமாடம்/ Dome) ஒரே கல்லில் வடிவமைத்தது அல்ல.. ஆறு பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்ட சிகரம் என்பதினை நேரில் பார்த்த ஆய்வாளர்கள் தெளிவு படுத்தியுள்ளனர்.

    -எஸ்.பி.அந்தோணிசாமி

    • ஆடு, மாடு போன்றவற்றின் குட்டிகளும் கன்றுகளும் பிறந்த ஒரு மணிநேரத்துக்குள் நிற்கவும், நடக்கவும் பழகிவிடுகின்றன. கன்றெல்லாம் கையில் சிக்காமல் குதித்து ஓடும்.
    • மூளை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான ந்யூரான் இணைப்புகளை உருவாக்கி மூளையை முழு வளர்ச்சிக்குக் கொண்டு வருகிறது.

    மனித இனத்தில்தான் குழந்தைகள் முதலில் குப்புற விழுந்து, தவழ்ந்து, பின் நடக்க என ஒரு வருடம் ஆகிவிடுகிறது. ஏன் இந்த வேறுபாடு?

    ஏன் மனிதக் குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்துக்குள் நிற்கவோ ஓடவோ முடிவதில்லை?

    காரணம் மூளை தான்..

    ஒரு ஆதிக் குரங்கு வகையில் இருந்து மெல்ல மெல்ல மனித இனத்தின் மூதாதையர்களும், பிற பெருங்குரங்குகளும் பிரிகையில், நம் மூதாதைகளின் குழுச் செயல்பாடு, சிக்கலான சிந்தனை அமைப்பு ஆகியவற்றைச் சாத்தியமாக்க மூளை அளவும், அதனையொட்டி மண்டையோட்டின் அளவும் பெரிதானது.

    ஆனால் இதில் பெண்ணினத்துக்கு மிகப்பெரிய சிக்கல் ஒன்று உண்டு. இந்தப் பெரிய மண்டையோடு பிரவசத்தின்போது இடுப்பெலும்பின் நடுவே புகுந்து வெளிவர முடியாது. இது தாய் சேய் உயிருக்கு ஆபத்து.

    ஏதோ ஒரு மரபணுப் பிறழ்வில் மண்டையோட்டின் எலும்புகள் முழுக்க ஒட்டும் முன்னர், மூளையின் எல்லா இணைப்புகளும் கச்சிதமாக அமைக்கப்படும் முன்னர் பிரசவம் நிகழ்ந்தது. மண்டையோடு இறுகாமல் நெகிழ்வாக இருப்பதால் இடுப்பெலும்புக்குள் புகுந்து குழந்தையால் வெளிவர முடிகிறது.

    பிள்ளைப்பேற்றுக்குப் பின்னர் கவனம் அதிகம் தேவைப்பட்டாலும் தாய் சேய் இறப்பை இது கணிசமாகக் குறைத்ததால், இயற்கை மண்டையோடு ஒட்டுமுன்னர் பிறந்தலை தெரிவு செய்தது. தொடர்ந்து மனித இனத்துக்குள் அந்த விரைவுப் பிரசவம் நிகழும் மரபணுக்கள் பரவி, நாளடைவில் அதுவே நடைமுறையாகவும் ஆனது.

    மனிதக் குழந்தைகள் பிறந்தபின்னர் மண்டையோட்டின் எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டி இறுகுகின்றன. மூளை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான ந்யூரான் இணைப்புகளை உருவாக்கி மூளையை முழு வளர்ச்சிக்குக் கொண்டு வருகிறது.

    இது எல்லாம் கச்சிதமாக நிகழ நேரம் எடுத்துக்கொள்வதுதான், மனிதக் குழந்தைகள் நிற்கவும் நடக்கவும் தாமதமாக காரணம். ஒரு வகையில் இது குறைப்பிரசவம்தான். இல்லையெனில் நம் இனமே இல்லை.

    -கே. சிவராமன்

    • புற்றுநோய்கள் மார்பு, எலும்பு, குடல் போன்று பலவிதங்களில் வரலாம்.
    • ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வைத்திய முறைகள் உண்டு.

    கீமோதெரபி இல்லை. ரேடியேசன் இல்லை. சத்திர சிகிச்சை இல்லை. எதுவும் இல்லை. சாதாரணமான ஒரு மருந்து கொடுக்கப்பட்டு புற்று நோயாளிகள் குணப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். வெவ்வேறு விதப் புற்றுநோய்களையுடைய 14 பேருக்குச் செய்த ஆராய்ச்சியின் முடிவு, மருத்துவ உலகையே துள்ளிக் குதிக்க வைத்திருக்கிறது.

    மருத்துவ வரலாற்றிலேயே புற்றுநோய் நூறு சதவீதம் முழுமையாக முதன்முறையாக நீக்கப்பட்டிருக்கிறது. புற்றுநோய்கள் மார்பு, எலும்பு, குடல் போன்று பலவிதங்களில் வரலாம். ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு வைத்திய முறைகள் உண்டு. ஆனால், இந்த மருந்து அனைத்துவிதப் புற்று நோய்களையும் இல்லாமல் செய்திருக்கிறது என்பது நம்ப முடியாத அதிசயம்.

    'Dostarlimab' என்னும் மருந்து 500 மில்லிகிராம் அளவில் மூன்று வார இடைவெளியில் ஆறு மாதங்களுக்கு நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட அனைவருக்கும் புற்றுநோய்க் கலங்கள் முழுமையாக இல்லாமல் அழிக்கப்பட்டன. வேறு எந்தவித வைத்தியமும் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. நிஜமாகவே மகிழ்ச்சியடைய வேண்டிய அற்புதமான நிகழ்வு இது. 'அறிவியல் நின்று வெல்லும்'

    -ராஜ்சிவா

    ×