என் மலர்
அமெரிக்கா
- இலங்கையை போல பாகிஸ்தானும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
- பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இன்று ஒப்புதல் அளித்தது.
வாஷிங்டன்:
இலங்கையை அடுத்து தற்போது பாகிஸ்தான் நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் அந்நாடு நிதியுதவி கோரியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் இன்று ஆலோசனை நடத்தியது. பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு 1.17 பில்லியன் டாலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் 7 மற்றும் 8வது தவணையாக பாகிஸ்தான் 1.1 பில்லியன் டாலர்களைப் பெற்றுக் கொள்ளும் என தெரிகிறது.
- ஆண்டி முர்ரே முதல் சுற்றில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை வீழ்த்தினார்.
- ரஷியாவின் மெத்வதேவ் அமெரிக்க வீரர் ஸ்டீபன் கோஸ்லோவை வீழ்த்தினார்.
நியூயார்க்:
ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவுடன் மோதினார்.
இதில், முர்ரே 7-5, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதேபோல், ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் ஸ்டீபன் கோஸ்லோவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-2, 6- 4, 6- 0 என்ற செட்கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.
- ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் நிலவுக்கு அனுப்பப்படமாட்டார்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று மாலையில் ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இனி செப்டம்பர் 2ம்தேதி செலுத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் அன்றைய தினம் ராக்கெட் செலுத்தப்படுமா? என்பதை நாசா உறுதிப்படுத்தவில்லை.
பாதுகாப்பு எப்போதும் முக்கியம் என்று கூறி உள்ள நாசா, ராக்கெட்டின் மூன்றாவது என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணி நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.
ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படமாட்டார்கள். சோதனை முயற்சியாக மனிதர்களை போன்ற பொம்மைகளை ஓரியன் விண்கலத்தில் அனுப்ப உள்ளனர். மனித பொம்மைகளை நிலவுக்கு கொண்டு செல்லும் ஓரியன் விண்கலம், கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
- உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 60 கோடியை கடந்துள்ளது.
- உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 64.85 லட்சமாக உயர்ந்துள்ளது.
நியூயார்க்:
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. பல அலைகளாக பரவி வரும் இந்த தொற்று தற்போதும் லட்சக்கணக்கானவர்களை தினமும் பாதித்து வருகிறது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 9.41 கோடிபேர் பாதிக்கப்பட்டு, 10.43 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2-ம் இடத்தில் உள்ள இந்தியாவில் 4.43 கோடி பேர் தொற்றால் பாதித்து உள்ளனர். 3.46 கோடி பாதிப்புகளை கொண்ட பிரான்ஸ் 3-ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 60 கோடியை கடந்துவிட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 60 கோடியே 4 லட்சத்து 49 ஆயிரத்து 934 பேர் கொரோனா தொற்றால் பாதித்து இருப்பதாக அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 64.85 லட்சமாக உயர்ந்துள்ளது.
- ஐக்கிய நாடுகள் சபை தலைவராக இருந்து வருபவர் அப்துல்லா ஷாஹித்.
- 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை தர உள்ளார்.
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அப்துல்லா ஷாஹித் 2 நாள் அரசுமுறை பயணமாக ஆகஸ்ட் 28 தேதி இந்தியா வருகை தர உள்ளார்.
இந்த வருகையின்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.
- ஒரு பெண்ணுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.
- மெக்சிகோவை சேர்ந்த பெண் என்று தெரிய வந்துள்ளது.
டெக்சாஸ்:
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதி ஒன்றில் 4 இந்திய பெண்கள் கார் நிறுத்தும் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு பெண் அவர்களை பார்த்து ஆவேசமாக கூச்சலிட்டார். இந்தியாவில் தான் எல்லா வசதியும் இருக்கிறதே பிறகு ஏன் அமெரிக்கா வந்தீர்கள் என்று கத்தினார்.
திடீரென அவர் இந்திய பெண்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார். அதில் ஒரு பெண்ணுக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. 3 பெண்கள் லேசான காயம் அடைந்தனர்.
இந்திய பெண்கள் தாக்கப்பட்டதை ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். 5 நமிடம் ஓடும் அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார். அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் மெக்சிகோவை சேர்ந்த பெண் என்று தெரிய வந்துள்ளது.
- ஐ.நா.சபையில் ரஷியாவிற்கு எதிராக நடந்த ஓட்டெடுப்புகளை இந்தியா புறக்கணித்தே வந்தது.
- முதன்முறையாக இந்தியா ரஷியாவிற்கு எதிராக ஓட்டளித்தது.
ஐ.நா:
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்த பிறகு, ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராக இதுவரை நடந்த ஓட்டெடுப்புகளை இந்தியா புறக்கணித்தே வந்தது.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி ஐக்கிய நாடுகள் சபையில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக உரையாற்ற அழைப்பு விடுக்க வேண்டி ஓட்டெடுப்பு கொண்டு வரப்பட்டது. இதில் வழக்கமாக இந்தியா புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சியிடம் கூறுகையில், ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றுவதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. அதற்கு நாங்கள் ஆதரவு மட்டுமே அளித்தோம். அவர் ஏற்கனவே இருமுறை உரையாற்றியுள்ளார் என தெரிவித்தார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
- இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.
நியூயார்க்:
செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (35). உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், வருகிற திங்கட்கிழமை தொடங்க இருக்கிற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜோகோவிச் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்க ஓபனில் விளையாட இந்த முறை என்னால் நியூயார்க்குக்கு பயணிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
- துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி யார்? என்று தெரியவில்லை.
- துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி யார்? என்று தெரியவில்லை.
சிகாகோ:
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிகாகோவில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகே ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது.
இங்கு நேற்று மதியம் மர்மமனிதன் ஒருவன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டான். பின்னர் அவன் வாகனத்தில் ஏறி தப்பி விட்டான்.
இந்த துப்பாக்கிசூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 15 வயது சிறுவன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி யார்? என்று தெரியவில்லை.
அவனை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் இறங்கி உள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.
- 2-வது முறையாக அவர் கொரோனோவால் பாதிக்கபட்டு உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஜில் பைடன் டெலோவெலில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டார். ஏற்கனவே இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார்.
தற்போது 2-வது முறையாக அவர் கொரோனோவால் பாதிக்கபட்டு உள்ளார். ஜோபைடைனுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
- அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
- அமெரிக்க தூதரகத்தில் பலர் இடம் பெற்று உள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அமெரிக்க நிறுவனங்களில் பல தமிழர்கள் உயர்ந்த பதவிகளை வகித்து வருகின்றனர்.
இப்போது அரசு உயர் பதவிகளும் அவர்களை தேடி வந்துள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு முதல் அந்த நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை அதுவும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் இருந்து வருகிறார்.
அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்களிப்பு அதிகம்.
இந்த நிலையில் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோபைடன் தனது நிர்வாகத்தில் 130-க்கும் மேற்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்களை நியமித்து உள்ளார். அந்நாட்டின் பல்வேறு துறைகளில் அவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்க தூதரகத்தில் பலர் இடம் பெற்று உள்ளனர். வெளியுறவு துறை துணை தொடர்பாளராக வேதாந்த் பட்டேல் உள்ளார். கரீமா வர்மா டிஜிட்டல் இயக்குனராக பதவி வகித்து வருகிறார். இந்த பதவிக்கு நியமிக்கபட்ட முதல் பெண் இவர் ஆவார்.
இதற்கு முன்பு அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் தனது நிர்வாகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 80 பேரும் அதற்கு முன்பு இருந்த ஒபாமா நிர்வாகத்தில் 60 பேரும் உயர் பதவிளில் இருந்தனர். தற்போது அதனை முறியடிக்கும் வகையில் ஜோபைடன் 130 பேரை நியமித்து சாதனை படைத்துள்ளார்.
- கடந்த 8-ந்தேதி டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
- டிரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்கள் அடங்கிய 11 பெட்டிகள் கைப்பற்றப்பட்டது.
வாஷிங்டன் :
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியபோது அரசு தொடர்பான பல ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றாதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுப்பற்றி அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் கடந்த 8-ந்தேதி புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். டிரம்ப் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரகசிய ஆவணங்கள் அடங்கிய 11 பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக எப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கைப்பற்றப்பட்டவை ரகசிய ஆவணங்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் உரிய தகவல் தெரிவிக்காமல் தனது வீட்டில் சோதனை நடத்திய விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறைக்கு எதிராக புளோரிடா கோர்ட்டில் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் நோக்கங்களுக்கானது என்றும் அடுத்த ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தனது வீட்டில் இருந்து கைப்பற்றபட்ட ஆவணங்கள் மீதான நீதித்துறையின் விசாரணையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.






