என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த கெர்சன் பிராந்தியத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
    • கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனே வெளியேறுங்கள் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கீவ்:

    உக்ரைனிடம் இருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

    சட்ட விரோதமாக இணைக்கப்பட்ட 4 பிராந்தியங்களையும் ரஷியாவிடம் இருந்து மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த 4 பிராந்தியங்களிலும் ரஷிய அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார்.

    இந்நிலையில், ரஷியா ஆக்கிரமித்த கெர்சன் நகரில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ரஷிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    கெர்சன் நகரின் மீது உக்ரைன் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது. எனவே கெர்சன் நகர மக்கள் நெய்பர் ஆற்றின் வழியாக படகுகள் மூலம் ரஷியாவின் அதிகாரப்பூர்வ எல்லைக்குள் வந்து சேரவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • மின்சாரத்தை மக்கள் கவனமாக பயன்படுத்தினால் வரும் நாட்களில் மின் தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும்.
    • தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    உக்ரைன் மீதான போர் தாக்குதலை ரஷிய ராணுவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதில் தலைநகர் கிவ் உள்பட பல நகரங்களில் கடுமையான மின்தடை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "ரஷியாவின் தாக்குதலில் 40 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    மின் உற்பத்தியை சரி செய்ய முயற்சி நடக்கிறது. மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று முதல் அத்தியாவசியமில்லாத மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    மின்சாரத்தை மக்கள் கவனமாக பயன்படுத்தினால் வரும் நாட்களில் மின் தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும்" என்றார்.

    உக்ரைனில் உள்ள முக்கிய மின் நிலையங்கள் ரஷியாவின் தாக்குதலில் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால் அந்நகரம் இருளில் மூழ்கியுள்ளது.

    உக்ரைனின் சில பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    • உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போரில் தற்போது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
    • ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது இப்போது மிகவும் பொருத்தமானது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போரில் தற்போது மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    குறிப்பாக தலைநகர் கிவ்வில் சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கிடையே உக்ரைன் நகரங்கள் மீது டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த டிரோன்கள், ஈரானில் தயாரிக்கப்பட்டதாகும். காமிகேஸ் என்று பெயரிடப்பட்ட ஈரான் டிரோன்கள் மூலம் உக்ரைனில் குடியிருப்பு பகுதிகள், மின் உற்பத்தி நிலையங்கள், குடிநீர் விநியோக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை ரஷியாவுக்கு வழங்கவில்லை என்று ஈரான் மறுத்துள்ளது.

    இந்த நிலையில் ஈரானுடனான தூதரக உறவை துண்டிக்க உக்ரைன் ஆலோசித்து வருகிறது.

    உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா கூறும்போது, "உக்ரைனில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் டிரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதற்கான ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

    உக்ரைனுடனான உறவுகளை அழித்ததற்கு ஈரான் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஈரானுடனான தூதரக உறவுகளை துண்டிக்கும் முன் மொழிவை உக்ரைன் அதிபரிடம் சமர்ப்பித்துள்ளேன்.

    உக்னிரையர்களை கொல்ல ரஷியாவுக்கு உதவியதற்காக ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்துகிறோம்.

    ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதார தடைகள் விதிப்பது இப்போது மிகவும் பொருத்தமானது.

    ஈரானின் நடவடிக்கைகள் மோசமானவை. வஞ்சகமானவை. அவர்கள் (ஈரான்) போரை ஆதரிக்கவில்லை என்றும், எந்த தரப்பினரையும் தங்களது ஆயுதங்களால் ஆதரிக்க மாட்டோம் என்றும் கூறி இருந்தனர். ஆனால் அரை அவர்கள் மீறி விட்டனர் என்றார்.

    இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது கடந்த 10-ந்தேதி முதல் ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களால் உக்ரைனில் உள்ள 30 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மிகப்பெரிய மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

    தொடர் தாக்குதல்களால் ரஷிய அரசுடனான பேச்சு வார்த்தைக்கு இனி இடமில்லை என்றார்.

    • இன்று அதிகாலை கிவ் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.
    • கிரீபியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக கிவ் நகரில் ஆவேச தாக்குதல் நடத்தப்பட்டது.

    உக்ரைன் தலைநகர் கிவ்வில் கடந்த 10-ந் தேதி ரஷிய படைகள் ஒரே நாளில் 84 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 14 பேர் பலியானார்கள். ரஷியாவின் வசமுள்ள கிரீபியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதற்கு பதிலடியாக கிவ் நகரில் ஆவேச தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் கிவ் நகரில் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது.

    இன்று அதிகாலை கிவ் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் தாக்குதல் எச்சரிக்கைக்கான சைரன் ஒலி எழுப்பப்பட்டது. உடனே மக்கள் பாதுகாப்பு இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் நடந்த இடங்களுக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்றனர்.

    இதுகுறித்து கிவ் பிராந்திய கவர்னர் ஒலெக்சி குலேபா கூறும்போது, "தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதல் நடந்தது" என்றார். தாக்குதல் நடத்திய டிரோன்கள் ஈரான் தயாரித்த காமிகேஸ் டிரோன்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிவ்வில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கி இருந்த நிலையில் மீண்டும் தாக்குதலை நடத்தி உள்ளன.
    • உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது தொடர்பாக ஐ.நா. சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் சரமாரியாக ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

    கிவ்வில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கி இருந்த நிலையில் மீண்டும் தாக்குதலை நடத்தி உள்ளன.

    ரஷியாவின் கிரீமியா தீபகற்பத்தில் உள்ள பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் உக்ரைன் தலைநகரில் ஆவேச தாக்குதலை நடத்தியது. கிவ் நகரை நோக்கி ஒரே நாளில் 84 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 14 பேர் பலியானார் கள். 97 பேர் காயம் அடைந்தனர்.

    கிவ் நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஐ.நா. சபை அவசரமாக கூடியது. போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியா தன்னுடன் இணைத்து கொண்டது தொடர்பாக ஐ.நா. சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதில் உக்ரைன் தூதர் செர்ஜி பேசும்போது, ரஷியாவை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறும்போது, "வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் பொதுமக்கள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்துவதன் மூலம் அல்லது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை நோக்கி தாக்குதல் நடத்துவதன் மூலம் ரஷியா, தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதை வலுவான வழிகளில் தடுக்கப்பட வேண்டும்" என்றார்.

    • உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது
    • அங்கு குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    கீவ்:

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் நேற்று முன்தினம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாலத்தில் குண்டுவெடித்ததற்கு உக்ரைன் மீது குற்றம்சாட்டிய மறுநாளே இந்த உக்கிரமான தாக்குதலை ரஷியா அரங்கேற்றி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் உக்ரைனில் உள்ள நிலை குறித்து தூதரகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.

    • குண்டு வெடிப்பையடுத்து பாதுகாப்பை பலப்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
    • உக்ரைன் தலைநகரில் குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில், உக்ரைன் தரப்பு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

    ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவை ரஷியாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலத்தின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து இடிந்து விழுந்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷியா குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    கிரீமியா பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை பயங்கரவாத நடவடிக்கை என்று ரஷிய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார். அத்துடன் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார். ரஷியா-கிரீமியா இடையே உள்ள கியாஸ் குழாய் இணைப்பு, மின் இணைப்பு ஆகியவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்த புதின் அறிவுறுத்தினார்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. குறைந்தபட்சம் 5 இடங்களில் குண்டு வெடித்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் விரைந்தன.

    பாலத்தில் குண்டுவெடித்ததற்கு உக்ரைன் மீது குற்றம்சாட்டிய மறுநாளே இந்த உக்கிரமான தாக்குதலை ரஷியா அரங்கேற்றி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனை உலகத்தில் இருந்து அழிப்பதற்கு ரஷியா முயற்சிப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    கீவ் தவிர மேலும் பல நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகம் கூறி உள்ளது.

    • உக்ரைன் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
    • கெர்சன் பிராந்தியத்தில் ரஷிய படைகளுக்கு பின்னடைவு.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங்களை கைப்பற்றியதுடன் அதை தனதாக்கிக் கொண்டது. இந்த நிலையில் தற்போது போரில் உக்ரைன் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ரஷிய படைகள் சில ஆக்ரமிப்பு பகுதிகளில் இருந்து பின் வாங்கி வருகின்றன.

    தெற்கில் உள்ள கெர்சன் பிராந்தியத்தில் 2,400 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றி உள்ளன. இது ரஷிய ராணுவத்திற்கு பின்னடவாக கருதப்படுகிறது. இந்நிலையில் ரஷியாவின் புதிய ராணுவ ஜெனரலாக செர்ஜி சுரோவிகின்னை நியமித்து ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோயிகு உத்தரவிட்டுள்ளார்.

    உக்ரைன் உடனான போரில் ஈடுபட்டுள்ள ரஷிய கூட்டுப் படைகளுக்கு செர்ஜி தலைமை தாங்கி வழி நடத்துவார் என ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷெகோவ் செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக ரஷியாவின் கிழக்கு ராணுவ பிராந்திய தளபதியாக அவர் பணியாற்றினார் என்றும் சிரியாவுடனான போரில் ரஷிய ராணுவத்தினரை வழிநடத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் ரஷிய ராணுவத்தை அவமானத்தில் இருந்தும் காப்பாற்ற முடியும்.
    • உக்ரைனுக்கு எதிராக போரிட மறுக்கும் ரஷிய வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்த வரும் நிலையில், ரஷிய ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுமாறு உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக ரஷிய மொழியில் பேசி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆயுதங்களை கீழே போடும் ரஷிய ராணுவ வீரர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆயுதங்களை கைவிடுவதன் மூலம் ரஷிய வீரர்கள் தங்கள் நாட்டை இன்னும் சோகத்தில் இருந்தும், ரஷிய ராணுவத்தை அவமானத்தில் இருந்தும் காப்பாற்ற முடியும் என்றும் அவர் கூறினார். உக்ரைனுக்கு எதிராக போரிட மறுக்கும் ரஷிய வீரர்களுக்கு பாதுகாப்பு மற்றும் போர் குற்றவியல் வழக்கில் இருந்து நீதியை பெற்றுத் தருவோம் என்றும் ரெஸ்னிகோவ் குறிப்பிட்டுள்ளார்.

    • ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும்படியும், பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
    • உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் ரஷியா அதிபர் புதினிடம், போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 7½ மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தி யங்களை ரஷியா தன் நாட்டுடன் இணைப்பதாக அறிவித்தது.

    ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும்படியும், பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாறும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் ரஷியா அதிபர் புதினிடம், போரை முடிவுக்கு கொண்டுவர இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதற்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் பாராட்டுக்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலை பேசியில் பேசினார்.

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் நிலவரம் குறித்து மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது பகைமையை முன்கூட்டியே நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான பாதையை தொடர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

    ராணுவம் மூலமான தீர்வு எதுவும் இருக்க முடியாது என்று அவர் தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா பங்களிக்கும். உக்ரைனில் உள்ள அணுசக்தி நிலையங்களுக்கு ஆபத்து ஏற்படுவது பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பேரழிவை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்தார்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய பிரதமருடன், உக்ரைன் பகுதிகளில் ரஷியா வாக்கெடுப்பு நடத்தியது பற்றி அதிபர் ஜெலன்ஸ்கி விவாதித்தார்.

    உக்ரைனின் பிராந்தி யங்களை சட்ட விரோதமாக இணைக்க முயற்சிக்கும் ரஷியாவின் முடிவுகள் யதார்த்தத்தை மாற்றாது என்று தெரிவித்துள்ளது.

    • ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும்.
    • உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தன.

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. அதன்பின் சில பகுதிகள் ரஷியாவிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது.

    இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனின் கிழக்கில் உள்ள லைமன் நகரை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தன. அந்த நகரை மீட்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். அந்த நகரை உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷிய படைகள் பின் வாங்கின.

    டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷியா பயன்படுத்தி வந்தது. ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும். அங்குள்ள லைமனை உக்ரைன் படைமீட்டுள்ளது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதற்கிடையே ரஷிய அதிபர் புதினின் ஆதரவாளரான செச்சினியா பிராந்திய தலைவர் கதிரோவ் கூறும்போது, "எனது தனிப்பட்ட கருத்துப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறைந்த பாதிப்பு கொண்ட அணு ஆயுதத்தை உக்ரைனில் பயன்படுத்து வதை ரஷியா பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

    • உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போர் 7 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
    • உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டன.

    கார்கிவ்: 

    ரஷியா உக்ரைன் இடையேயான போர் 7 மாதங்களை தாண்டி நீடித்து வரும் நிலையில் உக்ரைன் படைகள் கிழக்கு பகுதியில் வலுவான எதிர்த்தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய ஆக்ரமிப்பில் இருந்த பல பகுதிகளை மீண்டும் அந்த படைகள் கைப்பற்றிய நிலையில், ஒரு காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நகரமாக இருந்த லைமனில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் டாஸ் மற்றும் ஆர்.ஐ.ஏ.செய்தி நிறுவனங்கள் இதை கூறியுள்ளன. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகருக்கு தென்கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் லைமன் நகரம் உள்ளது. ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக உள்ள லைமன், தரைவழி தகவல் தொடர்பு மற்றும் தளவாடங்களை கொண்டு செல்வது ஆகிய இரண்டிற்கும் ரஷ்ய படைகளுக்கு ஒரு முக்கியமான தளமாக இருந்தது.

    முன்னதாக உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அதிபர் புதின் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    ×