என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது.
    • எல்லாமே விரைவில் சிறந்ததாக முடிவடையும் என்பதை உறுதிப்படுத்த முயல்வோம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. இப்போர் 10 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.

    கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். மேலும் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது போரில் நாங்கள் சரண் அடைய மாட்டோம் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களின் இலக்கு இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம்.

    எல்லாமே விரைவில் சிறந்ததாக முடிவடையும் என்பதை உறுதிப்படுத்த முயல்வோம். எல்லா மோதல்களும் ஏதோ ஒரு வகையில் முடிவடையும். உக்ரைன் எவ்வளவு வேகமாக புரிந்து கொள்கிறார்களோ அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

    விரோதங்கள் அதிகரிப்பு நியாயமற்ற இறப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று நான் பலமுறை கூறியுள்ளேன். எவ்வளவு முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து கொள்கிறார்கள். இந்த உணர்வு நம்மை எதிரிப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, "ரஷியாவின் கவலைகளுக்கு உக்ரைன், அமெரிக்கா செவி சாய்க்க வில்லை. ரஷியாவை பல வீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை ஒரு போர்க் களமாக பயன்படுத்துகிறது" என்றார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜெலன்ஸ்கியை சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜெலன்ஸ்கியை சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். மேலும் அமெரிக்க பாராளுமன்றத்திலும் ஜெலன்ஸ்கி உரையாற்றலாம் என்று கூறப்படுகிறது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது.
    • கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதத்துக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்தப் போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது. அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கே அமைந்த பக்முத் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கி பயணம் மேற்கொண்டார். அங்கு போரில் தீரத்துடன் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டும் பரிசுகளும் அளித்து கவுரவித்தார்.

    • உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • மின்சாரத்தை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களை கடந்து விட்டது. உக்ரைன் மீதான தாக்குதலை தற்போது ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது.

    உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்குள்ள மின் இணைப்புகள் மற்றும் தண்ணீர் இணைப்புகளை குறி வைத்து ரஷியா தாக்குதல் நடத்துகிறது. நேற்று முன்தினம் கிவ் நகர பகுதிகளில் சுமார் 70 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

    இதனால் பல இடங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சுமார் 6 லட்சம் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தற்போது அங்கு கடும் குளிர் நிலவுவதால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். தண்ணீர், மின்சாரம் இல்லாமல் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறும்போது, தலைநகர் கிவ்வில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகமும் சரிசெய்து தரப்பட்டு உள்ளது. மீதமுள்ள வீடுகளிலும் மின் விநியோகத்தை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

    மின்சாரத்தை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
    • ரஷிய ராணுவம் பிடித்த நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது.

    கீவ்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் 10 மாதமாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை அந்நாட்டு ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 60 முதல் 70 வரையிலான குண்டுகளை வீசியதாகவும், மின்நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெற்றது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
    • ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது.

    கிவி:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக உக்ரைன் அதிகாரிகள் கூறும்போது, ரஷியாவை எதிர்க்க தேவையான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறோம்.

    இனி வரும் நாட்களில் எங்கள் தாக்குதல் உக்கிரமாக இருக்கும். அதனை எதிர்கொள்ள ரஷியா, கூடுதல் வீரர்களை ராணுவத்தில் சேர்த்து வருகிறது. அதன்படி இப்போது வரை 2 லட்சம் வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கலாம் என நம்புகிறோம். அவர்கள் மூலம் கிவி நகரை தாக்க திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உக்ரைன் நிலவும் குளிரில் உறைந்து போகும் ரஷிய ராணுவ வீரர்கள்.
    • குளிரில் இருந்து பாதுகாக்கும் உடைகள் இல்லாமல் தவிப்பு.

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் குளிர் காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கோரி கெமரோவோ ஒப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷிய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் வெளியிட்ட வீடியோ டுவிட்டரில் வைரலாகி உள்ளது. 


    அந்த வீடியோவில் ரஷிய ராணுவ தளபதி செர்ஜி தெரிவித்துள்ளதாவது: நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 247வது படைப்பிரிவின் போர் பயிற்சியாளராக இருக்கிறேன், கெமரோவோ பிராந்தியத்தின் ஆளுநரான செர்ஜி யெவ்கெனிவிச்சிடம் நான் முறையிட விரும்புகிறேன்.

    நீங்கள் எங்களுக்கு அனுப்பிய வீரர்கள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் உள்ளனர். அவர்களிடம் மருந்து பொருட்கள் எதுவும் இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட பாதுகாப்பாக இல்லை, அவர்களிடம் இரண்டு உடல் கவசங்கள் மட்டுமே உள்ளன.

    உக்ரைன் பிரதேசத்தில் மிகவும் குளிராக இருக்கிறது. அந்த குளிரில் இருந்து பாதுகாக்கும் வெப்ப உள்ளாடைகள் வீரர்களிடம் இல்லை, அதனால் குளிரால் அந்த இளம் வீரர்கள் உறைந்து போகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ டுவிட்டரில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், உக்ரைனுக்கு குளிர் கால அவசர உதவியாக கூடுதலாக 1.1 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க ஐரோப்பிய ஆதரவு நாடுகள் உறுதியளித்துள்ளன. ரஷியாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

    • மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    • ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    கீவ்:

    அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது.

    மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில்,  தலைநகர் கீவ்வில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஐந்து முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல ட்ரோன்களை இடைமறித்து உக்ரைன் படைகள் முறியடித்துள்ளன. இந்த தாக்குதல்களில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. 

    • கிறிஸ்துமஸுக்குள் படைகளை ரஷியா வாபஸ் பெற வேண்டும்.
    • படைகளை வாபஸ் பெற்றால், அது நம்பகமான முடிவை உறுதி செய்யும்.

    கீவ்:

    ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷியா முன்னெடுக்க வேண்டும். மாஸ்கோ தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும். உக்ரைனில் இருந்து தனது படைகளை ரஷியா வாபஸ் பெறச் செய்தால், அது போருக்கு நம்பகமான முடிவையும் உறுதி செய்யும்.

    இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் ரஷியா இதை செய்யக் கூடாது என்பதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. மேலும் போரை தொடர நவீன டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு, ஜி7 அமைப்பு நாடுகள் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது.
    • கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்த போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது.

    அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்தார்.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்துள்ளது.
    • உக்ரைன் நாட்டின் தூதரகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    கீவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

    இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல உக்ரைன் நாட்டின் தூதரகங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று முன்தினம் விலங்குகளின் கண்கள் அடங்கிய பார்சல் கிடைத்தது. ஆனால் அதில் வெடிக்கும் பொருள் எதுவும் இல்லை. இதையடுத்து மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்தை போலீசார் சுற்றி வளைத்தனர், மோப்ப நாய்களுடன் அந்த பகுதியை தேட ஆரம்பித்தனர்.

    இதுதொடர்பாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒலெக் நிகோலென்கோ கூறுகையில், ஒரு வினோத திரவத்தில் ஊற வைக்கப்பட்ட பார்சல்கள் ஹங்கேரி, நெதர்லாந்து, போலந்து, குரோஷியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள உக்ரைன் தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேபிள்ஸ் மற்றும் கிராகோவில் உள்ள பொது தூதரகங்களுக்கும், ப்ர்னோவில் உள்ள தூதரகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட அனைத்து தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை பலத்த பாதுகாப்புடன் இருக்க உக்ரைன் வெளியுறவு மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

    • உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது.
    • போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

    கீவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பு ராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.

    இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சுமார் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக் இதுபற்றி தெரிவிக்கையில், "மூத்த ராணுவ அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காயமடைந்த துருப்புகளின் எண்ணிகையும் கணிசமாக உள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது" என்றார்.

    ×