search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zelenskiy"

    • கிறிஸ்துமஸுக்குள் படைகளை ரஷியா வாபஸ் பெற வேண்டும்.
    • படைகளை வாபஸ் பெற்றால், அது நம்பகமான முடிவை உறுதி செய்யும்.

    கீவ்:

    ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷியா முன்னெடுக்க வேண்டும். மாஸ்கோ தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும். உக்ரைனில் இருந்து தனது படைகளை ரஷியா வாபஸ் பெறச் செய்தால், அது போருக்கு நம்பகமான முடிவையும் உறுதி செய்யும்.

    இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் ரஷியா இதை செய்யக் கூடாது என்பதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. மேலும் போரை தொடர நவீன டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு, ஜி7 அமைப்பு நாடுகள் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ரஷிய ராணுவம் வெளியேறிய நிலையில், கெர்சன் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
    • உக்ரைன் பொதுமக்கள் மற்றும் வீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    கீவ்:

    உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின. அந்த நகரின் முக்கிய இடங்களில் பறந்த ரஷிய கொடிகளை கீழே இறக்கிய உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு கொடியை ஏற்றினார்கள்.

    இந்நிலையில் கெர்சன் நகரை ஆக்ரமித்த போது, ரஷிய ராணுவம், 400 க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். புலனாய்வாளர்கள் ரஷிய போர்க் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், இறந்த உக்ரைன் பொதுமக்கள் மற்றும் படைவீரர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக ரஷிய வீரர்கள் மற்றும் கூலிப்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ×