என் மலர்tooltip icon

    உக்ரைன்

    • ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது.
    • புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர்.

    இதன் காரணமாக ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது. ரஷியா தொடர்ந்து நடத்திவரும் மும்முனை தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன.

    பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷியபடைகள் வான் வழியாகவும், கடல் வழியாகவும் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மின் கட்டமைப்புகள், மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உக்ரைன் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில் வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. இதில் மின் கட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஏவுகணை வீச்சில் சேதவிவரம், உயிர் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு, பிரான்ஸ் அமைச்சர் பயணம்
    • ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் ஆயுதங்களை வாங்க, பிரான்ஸ் உதவி

    கீவ்:

    உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இதை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் போலந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் லெகோர்னு, தமது பயணத்தின் ஒரு பகுதியாக உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ளார்.

    அப்போது, உக்ரைனுக்கு மேலும் ராணுவ ரீதியான ஆதரவை பிரான்ஸ் தொடர்ந்து வழங்கும் என்று அவர் அறிவித்தார். பிரான்ஸ் வழங்கும் 200 மில்லியன் யூரோ மதிப்பிலான நிதியுதவி மூலம், ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைன் ஆயுதங்களை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும் என்றும், மேலும் உக்ரைன் ராணுவத்திற்கு, பிரான்ஸ் ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஜி 20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.
    • அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச், அக்டோபரில் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 300 நாட்களை கடந்துள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

    உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

    இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    உக்ரைனில் அமைதி நிலவ உதவவேண்டும். ஐ.நா.வில் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்ததற்கு நன்றி.

    ஜி 20 மாநாட்டின் இந்தியாவின் தலைமை பொறுப்பு வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

    ஏற்கனவே அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மார்ச் மற்றும் அக்டோபரில் பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது.
    • எல்லாமே விரைவில் சிறந்ததாக முடிவடையும் என்பதை உறுதிப்படுத்த முயல்வோம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்கியது. இப்போர் 10 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது.

    கிழக்கு உக்ரைனில் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகிறது.

    இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் அமெரிக்கா சென்றார். அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். மேலும் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது போரில் நாங்கள் சரண் அடைய மாட்டோம் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களின் இலக்கு இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம்.

    எல்லாமே விரைவில் சிறந்ததாக முடிவடையும் என்பதை உறுதிப்படுத்த முயல்வோம். எல்லா மோதல்களும் ஏதோ ஒரு வகையில் முடிவடையும். உக்ரைன் எவ்வளவு வேகமாக புரிந்து கொள்கிறார்களோ அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

    விரோதங்கள் அதிகரிப்பு நியாயமற்ற இறப்புகளுக்கு வழிவகுக்கிறது என்று நான் பலமுறை கூறியுள்ளேன். எவ்வளவு முரண்பட்ட கருத்து கொண்டவர்களாக இருந்தாலும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்து கொள்கிறார்கள். இந்த உணர்வு நம்மை எதிரிப்பவர்களுக்கு எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும் போது, "ரஷியாவின் கவலைகளுக்கு உக்ரைன், அமெரிக்கா செவி சாய்க்க வில்லை. ரஷியாவை பல வீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை ஒரு போர்க் களமாக பயன்படுத்துகிறது" என்றார்.

    • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜெலன்ஸ்கியை சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிவ்:

    உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜெலன்ஸ்கியை சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய பிறகு ஜெலன்ஸ்கியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். மேலும் அமெரிக்க பாராளுமன்றத்திலும் ஜெலன்ஸ்கி உரையாற்றலாம் என்று கூறப்படுகிறது.

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது.
    • கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.

    கீவ்:

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதத்துக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்தப் போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது. அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது.

    இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கே அமைந்த பக்முத் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கி பயணம் மேற்கொண்டார். அங்கு போரில் தீரத்துடன் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டும் பரிசுகளும் அளித்து கவுரவித்தார்.

    • உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
    • மின்சாரத்தை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களை கடந்து விட்டது. உக்ரைன் மீதான தாக்குதலை தற்போது ரஷியா தீவிரப்படுத்தி உள்ளது.

    உக்ரைன் தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்குள்ள மின் இணைப்புகள் மற்றும் தண்ணீர் இணைப்புகளை குறி வைத்து ரஷியா தாக்குதல் நடத்துகிறது. நேற்று முன்தினம் கிவ் நகர பகுதிகளில் சுமார் 70 ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

    இதனால் பல இடங்களில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. சுமார் 6 லட்சம் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தற்போது அங்கு கடும் குளிர் நிலவுவதால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். தண்ணீர், மின்சாரம் இல்லாமல் முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறும்போது, தலைநகர் கிவ்வில் வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் விநியோகமும் சரிசெய்து தரப்பட்டு உள்ளது. மீதமுள்ள வீடுகளிலும் மின் விநியோகத்தை சரிசெய்யும் பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

    மின்சாரத்தை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    • உக்ரைன், ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
    • ரஷிய ராணுவம் பிடித்த நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது.

    கீவ்:

    உக்ரைன், ரஷியா இடையிலான போர் 10 மாதமாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை அந்நாட்டு ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

    இதற்கிடையே, ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 60 முதல் 70 வரையிலான குண்டுகளை வீசியதாகவும், மின்நிலையங்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெற்றது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
    • ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது.

    கிவி:

    ரஷியா-உக்ரைன் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    ரஷிய ராணுவம் பிடித்த உக்ரைன் நகரங்களை உக்ரைன் ராணுவம் மீண்டும் மீட்டு வருகிறது. இதில் சில நகரங்களை மீண்டும் பிடிக்க ரஷிய ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

    இதற்காக ரஷிய ராணுவத்தில் புதிதாக 2 லட்சம் வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக உக்ரைன் அதிகாரிகள் கூறும்போது, ரஷியாவை எதிர்க்க தேவையான ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறோம்.

    இனி வரும் நாட்களில் எங்கள் தாக்குதல் உக்கிரமாக இருக்கும். அதனை எதிர்கொள்ள ரஷியா, கூடுதல் வீரர்களை ராணுவத்தில் சேர்த்து வருகிறது. அதன்படி இப்போது வரை 2 லட்சம் வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கலாம் என நம்புகிறோம். அவர்கள் மூலம் கிவி நகரை தாக்க திட்டமிட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • உக்ரைன் நிலவும் குளிரில் உறைந்து போகும் ரஷிய ராணுவ வீரர்கள்.
    • குளிரில் இருந்து பாதுகாக்கும் உடைகள் இல்லாமல் தவிப்பு.

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் குளிர் காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கோரி கெமரோவோ ஒப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷிய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் வெளியிட்ட வீடியோ டுவிட்டரில் வைரலாகி உள்ளது. 


    அந்த வீடியோவில் ரஷிய ராணுவ தளபதி செர்ஜி தெரிவித்துள்ளதாவது: நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 247வது படைப்பிரிவின் போர் பயிற்சியாளராக இருக்கிறேன், கெமரோவோ பிராந்தியத்தின் ஆளுநரான செர்ஜி யெவ்கெனிவிச்சிடம் நான் முறையிட விரும்புகிறேன்.

    நீங்கள் எங்களுக்கு அனுப்பிய வீரர்கள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் உள்ளனர். அவர்களிடம் மருந்து பொருட்கள் எதுவும் இல்லை. அவர்கள் கிட்டத்தட்ட பாதுகாப்பாக இல்லை, அவர்களிடம் இரண்டு உடல் கவசங்கள் மட்டுமே உள்ளன.

    உக்ரைன் பிரதேசத்தில் மிகவும் குளிராக இருக்கிறது. அந்த குளிரில் இருந்து பாதுகாக்கும் வெப்ப உள்ளாடைகள் வீரர்களிடம் இல்லை, அதனால் குளிரால் அந்த இளம் வீரர்கள் உறைந்து போகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ டுவிட்டரில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், உக்ரைனுக்கு குளிர் கால அவசர உதவியாக கூடுதலாக 1.1 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க ஐரோப்பிய ஆதரவு நாடுகள் உறுதியளித்துள்ளன. ரஷியாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில் உக்ரைன் அதிபர் ஜென்ஸ்கி விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.

    • மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    • ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    கீவ்:

    அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது.

    மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

    ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    இந்தநிலையில்,  தலைநகர் கீவ்வில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஐந்து முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பல ட்ரோன்களை இடைமறித்து உக்ரைன் படைகள் முறியடித்துள்ளன. இந்த தாக்குதல்களில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது. 

    • கிறிஸ்துமஸுக்குள் படைகளை ரஷியா வாபஸ் பெற வேண்டும்.
    • படைகளை வாபஸ் பெற்றால், அது நம்பகமான முடிவை உறுதி செய்யும்.

    கீவ்:

    ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் மாநாட்டில் காணொலி மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது:

    உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக ரீதியான தீர்வை ரஷியா முன்னெடுக்க வேண்டும். மாஸ்கோ தனது துருப்புக்களை கிறிஸ்துமஸுக்குள் வெளியேற்ற வேண்டும். உக்ரைனில் இருந்து தனது படைகளை ரஷியா வாபஸ் பெறச் செய்தால், அது போருக்கு நம்பகமான முடிவையும் உறுதி செய்யும்.

    இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் ரஷியா இதை செய்யக் கூடாது என்பதற்கான காரணம் எதுவும் எனக்கு தெரியவில்லை. மேலும் போரை தொடர நவீன டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை உக்ரைனுக்கு, ஜி7 அமைப்பு நாடுகள் வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×