என் மலர்
உக்ரைன்
- அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 35 ஆனது.
- மாயமான 35 பேரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீவ்:
உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது.
இந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
இத்தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறினார்.
இந்நிலையில், உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மாயமான 35 பேரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் அழிந்துவிட்டன
- அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 29 ஆனது.
கீவ்:
உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது.
இந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
இத்தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறினார்.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்த தாக்குதல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் அழிந்துவிட்டன
- குடியிருப்பில் வசித்த 40க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது தெரியவில்லை
கீவ்:
உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. நேற்று இரவு டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல வாகனங்கள் தீப்பற்ற எரிந்தன. குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது.
இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் அழிந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறி உள்ளார்.
- உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உடலில் கையெறி குண்டு ஒன்று துளைத்துக்கொண்டு மார்பு பகுதியில் சிக்கியது.
- மின்சார கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் கையெறி குண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது
கீவ் :
ரஷியா-உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இருநாட்டு ராணுவ வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் போரின்போது உக்ரைன் ராணுவ வீரர் ஒருவரின் உடலில் கையெறி குண்டு ஒன்று துளைத்துக்கொண்டு மார்பு பகுதியில் சிக்கியது.
இதயத்துக்கு அருகில் சிக்கிய அந்த கையெறி குண்டு எந்த நேரத்திலும் வெடித்துவிடும் அபாயம் இருந்ததால், அறுவை சிகிச்சையின்போது வெடித்துவிட்டால் என்ன ஆவது என்ற அச்சத்தில் டாக்டர்கள் ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை செய்ய தயங்கினர். அதேசமயம் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குண்டை அகற்றாமல் விட்டால், குண்டு வெடித்து, அந்த வீரர் உடல்சிதறி இறக்கும் அபாயம் நிலவியது.
இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான டாக்டர் ஆண்ட்ரி வெர்பா மிகவும் துணிச்சலுடன் அந்த ராணுவ வீரருக்கு அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தார். அவரது பாதுகாப்புக்காக வெடிகுண்டு நிபுணர்கள் 2 பேர் அறுவை சிகிச்சை நடந்த அறையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
மின்சார கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் கையெறி குண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் டாக்டர் ஆண்ட்ரி வெர்பா அவற்றை பயன்படுத்தாமல் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து ராணுவ வீரரின் மார்பில் இருந்து கையெறி குண்டை அகற்றினார். இதையடுத்து அங்கு தயாராக இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை செயலிழக்க செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் ராணுவ வீரர் நலமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான சூழலில் துணிச்சலாக உயிரை பணயம் வைத்து ராணுவ வீரரை காப்பாற்றிய உக்ரைன் டாக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
- நீண்ட தூர ஏவுகணைகள் மூலம், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் ஊடுருவி தாக்க முடியும்.
- மேற்கத்திய நாடுகள் அதிக அளவிலான கனரக ஆயுதங்களை வழங்காவிட்டால், போர் பல ஆண்டுகள் நீடிக்கும்.
கீவ்:
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி உள்ளது. ஆனாலும் போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தென்படவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இருதரப்பும் நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேற்கததிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் ஆயுத விநியோகத்தை அதிகரித்தால், குறிப்பாக நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை அதிகமாக வழங்கினால், இந்த ஆண்டு போரில் வெற்றிபெற முடியும் என உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கேலோ பொடோலியாக் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:-
100 கிலோ மீட்டருக்கும் அதிகமான இலக்கை தாக்கும் சக்தி கொண்ட ஏவுகணைகளால் மட்டுமே, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை துரிதப்படுத்த முடியும், இந்த சூழ்நிலையானது இலையுதிர்காலத்தில் போரை முடிவுக்கு கொண்டுவரும்.
நீண்ட தூர ஏவுகணைகள் மூலம், ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் ஊடுருவி ரஷிய ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்க முடியும். அமெரிக்கா கடந்த ஆண்டு உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை வழங்கியது. அவை சுமார் 80 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஏவுகணைகளை செலுத்தக்கூடியவை. இது பல போர் முனைகளில் போரை உக்ரைனுக்கு சாதகமாக மாற்றியிருக்கிறது.
சமீபத்தில் இதேபோன்ற பிரெஞ்சு ஏவுகணை அமைப்புகளை உக்ரைன் பெற்றுள்ளது. ஆனால், US ATACMS ஏவுகணைகளை வழங்கும்படி அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இது சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடியது.
இந்த ஏவுகணை அமைப்புகள் மூலம், கிழக்கு உக்ரைன் மற்றும் 2014 இல் ரஷியாவால் இணைக்கப்பட்ட கருங்கடல் தீபகற்பத்தில் உள்ள டான்பாஸ் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து ரஷிய ராணுவ உள்கட்டமைப்பையும் அழிக்க முடியும்.
நாங்கள் ரஷியாவைத் தாக்க மாட்டோம், தற்காப்புப் போரை நடத்துகிறோம். ஆனால் அதிக அளவிலான மேற்கத்திய கனரக ஆயுதங்களை வழங்காவிட்டால், இந்த போர் பல ஆண்டுகள் நீடிக்கும்.
உக்ரைனுக்கு கவச வாகனங்கள், குறிப்பாக ஜெர்மனின் லியோபார்ட்ஸ் மற்றும் பீரங்கிகள் போன்ற கனரக பீரங்கி வாகனங்கள் தேவைப்படுகிறது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் விரைவில் ஆயுதங்களை அனுப்பும் பணியை விரைவுபடுத்தக்கூடும். ஏனெனில் இந்த ஆயுதங்கள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். அமெரிக்காவின் பேட்ரியாட்ஸ், அல்லது பிரான்சின் க்ரோடேல் போன்ற புதிய விமான எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள், உக்ரைனின் எரிசக்தி உற்பத்தி மையங்களுக்கு எதிரான ரஷிய வான் தாக்குதல் அச்சுறுத்தலை விரைவில் தடுக்க முடியும்.
ஆயுதங்கள் வரப்பெற்றால் ஒரு மாத கால இடைவெளியில் எங்கள் வான் பகுதியை மூடிவிடுவோம். தற்போது ரஷியாவால் ஏவப்படும் ஏவுகணைகளில் 75 சதவீத ஏவுகணைகளை உக்ரைன் சுட்டு வீழ்த்துகிறது. விரைவில் 95 சதவீத ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- உக்ரைன் தலைநகர் கிவ் அருகில் உள்ள மஜீல்லா நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர்.
- ரஷியபடையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதமாக நடத்தி வரும் தாக்குதல் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த போரால் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் ஆர்த்தோடெக்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரஷியா அறிவித்த 36 மணி நேர போர் நிறுத்தம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.
இதைதொடர்ந்து மீண்டும் ரஷியா தனது தாக்குதலை தொடங்கி உள்ளது. உக்ரைன் வீரர்களும் அவர்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.
உக்ரைன் தலைநகர் கிவ் அருகில் உள்ள மஜீல்லா நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் ரஷிய வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஷியபடையினர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கிழக்கு உக்ரைனில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.
உக்ரைன் வீரர்களின் தற்காலிக ராணுவதளத்தின் மீது அடுத்தடுத்த ராக்கெட்டுகளை வீசினார்கள். இதில் ராணுவமுகாம் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தது. ரஷியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு 600 உக்ரைன் வீரர்கள் இறந்ததாக ரஷியா தெரிவித்து உள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என கிராம டோர்லக் மேயர் தெரிவித்து உள்ளார்.
ஒரு புறம் இருநாடுகளுக்கும் இடையே சண்டை நடந்து வந்தாலும் மறுபுறம் சிறை பிடிக்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் பணியும் நடந்து வருகிறது. உக்ரைனில் சிறைபிடிக்கப்பட்ட 50 ரஷிய வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதேபோல் ரஷிய படைகளிடம் சிக்கிய 50 உக்ரைன் வீரர்களையும் அந்த நாடு விடுவித்து இருக்கிறது. இதுவரை 36 முறை கைதிகள் பரிமாற்றம் நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது.
- உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கீவ் :
ரஷியா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷிய அதிபர் புதினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷிய படைகளுக்கு அவர் உத்தரவிட்டார். ரஷிய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷியா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை.
இந்த நிலையில் ரஷியாவின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் எனவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷியா பலமுறை புறக்கணித்துள்ளது. அவர்கள் இப்போது கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் ரஷியாவின் தந்திரம் இது.
புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷியா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது என்பது முழு உலகமும் அறிந்ததே. ரஷிய துருப்புக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்போது அல்லது வெளியேற்றப்படும்போது போர் முடிவடையும்" என்றார்.
- ரஷியாவின் போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.
- கிராமடோர்ஸ்க் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்
கீவ்:
உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் அறிவித்து உள்ளார். உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ரஷிய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், புதினின் போர்நிறுத்த உத்தரவை மீறி கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் இன்று தாக்குதல் நடத்தி உள்ளன. போர்நிறுத்தம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் நேரத்திற்குப் பிறகு கிழக்கு உக்ரைனில் உள்ள முன்னணி நகரமான பாக்முட்டில் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், பாக்மூட்டில் இருந்தும் எதிர்தரப்பினரை நோக்கி ஷெல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கிராமடோர்ஸ்க் மீதும் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் ஜனாதிபதி நிர்வாகத்தின் துணைத் தலைவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்ததாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
- போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது.
- உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும்.
கீவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டை நெருங்கி விட்டது. ஆனாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்களும் ரஷியாவை எதிர்த்து சளைக்காமல் போராடி வருகின்றனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் ரஷியா தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது ரஷியா மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது.
இந்தநிலையில் உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 36 மணி நேர போர்நிறுத்தத்தை ரஷிய அதிபர் புதின் அறிவித்து உள்ளார். உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்துமஸ் சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக இன்று நண்பகல் முதல் நாளை நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ரஷிய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக போர் நிறுத்த அறிவிப்பை ரஷியா வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா கூறியதாவது.
உக்ரைனில் ரஷியா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போது தான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும். போர் முடிவு பிரகடனம் ரஷியாவின் தந்திரமாகும். போரை முடிவுக்கு கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷியாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- செல்போன் சிக்னல் மூலம் வீரர்களின் இருப்பிடத்தின் தொலைவுகளை எதிரிகள் கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர்
- ஏவுகணை தாக்குதலில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷிய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷிய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 89 ரஷிய வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட அதி நவீன ஹிம்ராஸ் ரக ஏவுதள வாடம் மூலம் அந்த ஏவுகணைகள் வீசப்பட்டு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. உக்ரைன் தாக்குதலில் ரஷிய வீரர்கள் பலியானதை ரஷியாவும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் ரஷிய வீரர்கள் செல்போன்களை பயன் படுத்தியதால் அதன் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும் போது, உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் 89 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தியதே முக்கிய காரணமாக அமைந்து விட்டது. செல்போன் சிக்னல் மூலம் வீரர்களின் இருப்பிடத்தின் தொலைவுகளை எதிரிகள் கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர் என்றனர்.
இந்த ஏவுகணை தாக்குதலில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.
- ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இரு தரப்பும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் முடிவுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷிய வீரர்கள் உயிரிழந்தனர். ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் டோனெட்க்ஸ் மாகாணத்தில் உள்ள மகிவ்கா நகரில் ரஷிய வீரர்களின் தற்காலிக ராணுவ தளத்தில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்ட ஹிம்ரஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன. ஹிமர்ஸ் ராக்கெட் லாஞ்சரில் இருந்து 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 2 ராக்கெட்டுகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மகிவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 400 ரஷிய வீரர்கள் உயிரிழந்ததாகவும், 300 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
- ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது.
- புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது.
கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி 11 மாதங்கள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. ரஷியாவை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போராடி வருகின்றனர்.
இதன் காரணமாக ரஷியா கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் படை மீண்டும் மீட்டது. ரஷியா தொடர்ந்து நடத்திவரும் மும்முனை தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன.
பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷியபடைகள் வான் வழியாகவும், கடல் வழியாகவும் ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக மின் கட்டமைப்புகள், மின் நிலையங்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் உக்ரைன் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்து செய்தியில் வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த சூழ்நிலையில் புத்தாண்டு பிறந்த அரை மணி நேரத்தில் கிவ் நகரம் மீது ரஷிய படைகள் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. இதில் மின் கட்டமைப்புகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை வீச்சில் சேதவிவரம், உயிர் சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.






