என் மலர்
பிரிட்டன்
- இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- ஐந்தாவது நாள் ஆட்டம் இடைவிடாத மழை காரணமாக தாமதமாக தொடங்கியது.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 393 ரன்களும், ஆஸ்திரேலியா 386 ரன்களும் எடுத்தன.
7 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது நாளில் பெரும்பகுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டன. 32.4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து தொடர்ந்து பேட்டிங் செய்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் இங்கிலாந்து அணி 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐந்தாவது நாள் ஆட்டம் காலை 11:00 மணிக்கு (பிற்பகல் 3:30 மணி ) தொடங்குவதாக இருந்தது. ஆனால் இடைவிடாத மழை காரணமாக, ஆடுகளம் முழுமையாக மூடப்பட்டது.
இதையடுத்து மதிய உணவுக்குப் பிறகு போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் முதலில் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இதில், டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இறங்கிய மார்னஸ் 13 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்களும், ஸ்காட் போலாந்து 20 ரன்களும், டிராவிஸ் ஹெட் 16 ரன்களும், கேமரூன் கிரின் 28 ரன்களும் எடுத்தனர்.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் விளையாடிய உஸ்மான் கவாஜா 197 பந்துகளில் அரை சதம் அடித்து 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர், அப்ரம் அலெக்ஸ் கேரி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 87 ஓவரில் பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் களத்தில் இருந்தனர்.
87.3 ஓவரில் 15 ரன்கள் எடுத்தார் வெற்றி என்ற இலக்குடன் இருவரும் விளையாடினர்.
இதில், பேட் கம்மின்ஸ் 44 ரன்களும், நாதன் லயன் 16 ரன்களும எடுத்தனர்.
இறுதியில், 92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.
- உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார்.
லண்டன் :
இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், இந்திய வம்சாவாளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தாய் உஷா தயாரித்த இந்திய இனிப்புகளை (பர்பி) உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்றை ரிஷி சுனக் தற்போது வெளியிட்டு உள்ளார். உக்ரைன் அதிபர் கடந்த மாதம் இங்கிலாந்து சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பாக ரிஷி சுனக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் எனது சொந்த ஊரான சவுதாம்டனுக்கு சென்றிருந்தேன். இது குறித்து எனது பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் இதை அறிந்து அவர்கள் வருத்தமடைந்தனர். என்னை பார்க்க வர முயன்றனர், ஆனால் முடியவில்லை.
எனது அம்மா கொஞ்சம் இந்திய இனிப்புகளை (பர்பி) தயாரித்து எனக்காக வைத்திருந்தார். ஆனால் அப்போது தர முடியவில்லை. பின்னர் கால்பந்து போட்டி ஒன்றை பார்க்க சென்றபோது, அதை என்னிடம் கொடுத்தார்.
இதில் விந்தை என்னவென்றால், அதன்பிறகு நான் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தேன். நானும், அவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு பசி எடுத்தது. அதனால், நான் அவருக்கு என் அம்மாவின் பர்பியில் சிலவற்றைக் கொடுத்தேன். அதைப்பார்த்து அம்மா சிலிர்த்து போனார்.
இவ்வாறு ரிஷி சுனக் அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளார்.
- இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 273 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- 4ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் சதமடித்து 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கவாஜா 141 ரன்னும், அலெக்ஸ் கேரி 66 ரன்னும், டிராவிஸ் ஹெட் 50 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு, ஒல்லி ராபின்சன் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
7 ரன்கள் முன்னிலையுடன் 2-ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் ஜோடி நிதானமாக ஆடியது.
அணியின் எண்ணிக்கை 61 ஆக இருக்கும்போது வார்னர் 36 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய லாபுசேன் 13 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 6 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா வெற்றி பெற 174 ரன்கள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 7 விக்கெட் தேவை. எனவே இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி அட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கியது.
- அதன் சிதைந்த பாகத்தை காண சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்முழ்கி கப்பல் மாயமானது.
லண்டன்:
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலாகக் கருதப்பட்ட டைட்டானிக் 1912-ம் ஆண்டு இங்கிலாந்தின் தென் கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் சவுதாம்டனிலிருந்து, நியூயார்க்கிற்கு பயணித்தது. அப்போது அட்லாண்டிக் கடலில் பனிமலையில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 1,600 பேர் பலியாகினர்.
பல்வேறு கட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 1985-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் பகுதியிலிருந்து 400 மைல் தென்கிழக்கே நியூபவுன்ட்லாண்ட் தீவு அருகே கடலுக்கு அடியில் 4 கி.மீ. ஆழத்தில் சிதைந்து போயிருந்த கப்பலின் முன்பாகம் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தைப் பார்வையிட சில சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்ற நீர்மூழ்கி கப்பல் திடீரென மாயமானதாக பி.பி.சி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நீர்மூழ்கி கப்பலில் 5 சுற்றுலா பயணிகள் சென்றிருக்கலாம் என தகவல் வெளியானது. மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது.
7 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி இன்று 4-ம் நாள் ஆட்டத்தின்போது சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஒல்லி போப் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் தலா 46 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், பேர்ஸ்டோ 20 ரன்கள், மொயீன் அலி 19 ரன், ஒல்லி ராபின்சன் 27 ரன்கள், ஜேம்ஸ் ஆண்டர்சன் 12 ரன் என ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
- பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார்.
- தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருபவர் பிரித் விகால் (வயது 20) இந்தியாவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அங்கு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றார்.
அப்போது இதில் 20 வயது இளம்பெண் ஒருவரும் கலந்து கொண்டார். அவர் நன்றாக மது அருந்தினார். போதை தலைக்கேறியதால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை. இதை பார்த்த பிரித்விகால் அந்த பெண்ணை கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வந்தார். பின்னர் தனது கையில் அந்த பெண்ணை சிறிது தூரம் தூக்கியபடி தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார்.
அங்கு போதையில் இருந்த பெண்ணை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பிரித் விகால் பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து அந்த பெண் எழுந்தார். அப்போது தான் உடுத்தியிருந்த உடைகள் களைந்து கிடப்பதையும், உடலில் ரத்த காயங்கள் இருந்தது கண்டும் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் பிரித் விகாலை கைது செய்தனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவர் போதையில் இருந்த இளம்பெண்ணை கையிலும், தோளிலும் தூக்கி சென்ற காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பான விசாரணை இங்கிலாந்து கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கில் பிரித்விகாலுக்கு 6 ஆண்டு 9 மாதங்கள் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
- பிரதமர் ரிஷி சுனக் சட்ட விரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.
- அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்டவிரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து கைதுசெய்தார்.
லண்டன்:
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார்.
இந்நிலையில், தற்போது புல்லட் புரூப் ஆடையுடன் களத்தில் இறங்கிய பிரதமர் ரிஷி சுனக் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து கைதுசெய்தார்.
அதிகாலையில் அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் அலசி ஆராய்ந்தார்.
இந்த தேடுதல் வேட்டையில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை டுவிட்டரில் பகிர்ந்த ரிஷி சுனக், இந்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அப்பாவி அகதிகளை சிரமத்திற்கு ஆளாக்குவதாக எதிர்மறையான கருத்துக்களும் பலதரப்பில் எழுகின்றன.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 393 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
- ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.
ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அலெக்ஸ் கேரி 66 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கவாஜா 141 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், மொயீன் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 7 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. ஜாக் கிராலி 7 ரன்னுடனும், பென் டக்கெட் 19 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
- ஒரு குடியிருப்பில் அரவிந்த் சசிகுமார், 3 பேருடன் தங்கி இருந்தார்.
- வீட்டில் அரவிந்த் சசிகுமார் உடலில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
லண்டன்:
கேரள மாநிலம் பனம்பில்லி நகரை சேர்ந்தவர் அரவிந்த் சசிகுமார் (வயது 37). இவர் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் உள்ள சவுத்தாம்படன் வே பகுதியில் தங்கி பணியாற்றி வந்தார். ஒரு குடியிருப்பில் அரவிந்த் சசிகுமார், 3 பேருடன் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் அரவிந்த் சசிகுமார் உடலில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை உடன் தங்கியிருந்த கேரளாவை சேர்ந்த சல்மான் சலீம் (23) கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அரவிந்தை சல்மான் சலீம் கொலை செய்துள்ளார். சமீபத்தில் லண்டனில், ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மன்னர் 3-ம் சார்லஸ் நவம்பர் 14-ந் தேதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
- மன்னரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டன் :
இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸ் வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பிறகு கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். எனவே மன்னரின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மொத்தம் 1,171 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 52 சதவீதத்தினர் தங்கள் வேலை செய்யும் துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியவர்கள் என்றும் 11 சதவீதத்தினர் சிறுபான்மை இனத்தை சேந்தர்வர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பட்டியலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி டாக்டர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்திய வம்சாவளி பட்டியலில், டாக்டர் பர்விந்தர் கவுர் அலே, பேராசிரியர் புரோகார் தாஸ்குப்தா, தொழிலதிபர் அனுஜ் சண்டே மற்றும் ஹினா சோலங்கி, பல்வீர் மோகன் பல்லா, ரேகேஷ் சவுகான், கைலாஷ் மல்ஹோத்ரா, பல்பீர் தில்லான் மற்றும் குல்தீப் சிங் தில்லான் உள்ளிட்டோர் உள்ளனர்.
- அபாரமாக கேட்ச் பிடித்த பிராட்லி கர்ரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்சுகளில் ஒன்று தனது டுவிட்டரில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.
லண்டன்:
நடப்பு ஆண்டின் டி20 பிளாஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் சசக்ஸ் ஷார்க்ஸ் மற்றும் ஹேம்ப்ஷைர் ஹாக்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹேம்ப்ஷைர் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சசக்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்தது. ஆலிவர் கார்ட்டர் 64 ரன்னும், ரவி போபரா 30 ரன்னும், மைக்கேல் பர்கஸ் 26 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைக் கொண்டு ஹேம்ப்ஷர் அணி ஆடியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழந்து ஹேம்ப்ஷர் அணி 177 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லியான் டாசன் அரைசதம் அடித்து 59 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோ வேதர்லி 33 ரன்னும், பென்னி ஹோவல் 25 ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், சசக்ஸ் அணியின் வீரர் டைமல் மில்ஸ் வீசிய 14-வது ஓவரின் 5-வது பந்தில் பென்னி ஹோவல் சிக்சர் அடிக்க முயற்சித்தார். டீப் ஸ்கொயர் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி வேகமாக ஓடி வந்து பறந்து சென்று ஒரு கையால் பந்தைத் தாவிப் பிடித்து லியான் டாசனை ஆட்டமிழக்க செய்தார்.
அபாரமாக கேட்ச் பிடித்த பிராட்லி கர்ரிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்சுகளில் ஒன்று தனது டுவிட்டரில் தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 393 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
- 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலியா 311 ரன்கள் எடுத்துள்ளது.
பர்மிங்காம்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.
ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், சாக் கிராலி 61 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், ஹசில்வுட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 14 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டேவிட் வார்னர் 9 ரன்னில் அவுட்டானார். லாபுசேன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஸ்மித் 16 ரன்னில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
4-வது விக்கெட்டுக்கு இணைந்த கவாஜா- டிராவிஸ் ஹெட் ஜோடி 81 ரன்கள் சேர்த்த நிலையில், ஹெட் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். கிரீன் 38 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 126 ரன்னும், அலெக்ஸ் கேரி 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






