என் மலர்tooltip icon

    ஸ்பெயின்

    • தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
    • தாக்குதலில் பலியானவர் டியாகோ வலென்சியா என்பதும் அவர் டிலா பால்மா தேவாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான அல்ஜெசிராசில் உள்ள ஒரு தேவாலயத்தில் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது மர்மநபர் ஒருவர் கத்தியுடன் தேவாலயத்துக்குள் நுழைந்தார். அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கினார்.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அந்த நபர் அருகில் உள்ள தேவாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். பாதிரியார்கள் உள்பட பலர் காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை மடக்கி பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மர்மநபரை கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

    அதேவேளையில் தாக்குதல் நடத்திய நபர் 25 வயதான மொராக்கோ நாட்டை சேர்ந்தவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில் பலியானவர் டியாகோ வலென்சியா என்பதும் அவர் டிலா பால்மா தேவாலயத்தில் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

    படுகாயம் அடைந்த பாதிரியார் அன்டோனியா ரோட்ரிக்ஸ் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதல் தொடர்பாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும் போது, 'பயங்கரமான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

    இந்த தாக்குதல் சம்பவத்தில் இந்த பயங்கரவாத தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதை பயங்கரவாத சம்பவமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

    • சமீப காலமாக உடல் நலப்பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார்.
    • மூட்டு பிரச்சினை உள்ளிட்டவற்றால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றார்.

    ரோம் :

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். நேற்று முன்தினம் தனது 86-வது பிறந்த நாளை கொண்டாடிய இவர், சமீப காலமாக உடல் நலப்பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு பிரச்சினை உள்ளிட்டவற்றால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றார்.இந்தநிலையில் ஸ்பெயின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த போப் பிரான்சிஸ், தான் 2013-ம் ஆண்டு போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களிலேயே, உடல் நலப்பிரச்சினையை முன்வைத்து பதவி விலகல் கடிதம் கொடுத்ததாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'எனது பணி துறத்தல் கடிதத்தை அப்போதைய வாடிகன் வெளியுறவு செயலாளர் டார்சிசியோ பெர்டோனிடம் ஏற்கனவே கொடுத்து விட்டேன். அதாவது மருத்துவ காரணத்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ எனது கடமைகளை செய்ய முடியாமல் போனால், இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தேன்' என தெரிவித்தார்.

    வாடிகன் வெளியுறவு செயலாளர் பதவியில் இருந்து டார்சிசியோ பெர்டோன் பின்னர் விலகியதால், அந்த கடிதத்தை தற்போதைய செயலாளர் பியட்ரோ பரோலினிடம் ஒப்படைத்திருப்பார் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.வாடிகன் வரலாற்றில் மிக அரிய நிகழ்வாக முந்தைய போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் பதவி விலகி இருந்தார். அதை போப் பிரான்சிஸ் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று வந்த ஒரு லெட்டர் குண்டு வெடித்தது.
    • அமெரிக்க தூதரகத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர்

    மாட்ரிட்:

    ஸ்பெயின் நாட்டில் முக்கிய தலைவர்களை மிரட்டும் வகையில் அனுப்பப்பட்ட லெட்டர் குண்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் லெட்டர் குண்டு கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன்பின்னர் நேற்றும் இன்றும் 4 குண்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. அவை அனைத்தும் செயலிழக்கச் செய்யப்பட்டன. இதையடுத்து பொதுத்துறை அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே தலைநகர் மாட்ரிட்டில் உள்ள உக்ரைன் தூதரகத்திற்கு நேற்று வந்த ஒரு லெட்டர் குண்டு வெடித்தது. கடிதங்களை கையாளும் ஊழியர் காயமடைந்தார். வெடிகுண்டு வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தூதரகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மாட்ரிட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு பை கிடந்தது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தபால் பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்ற வெடிபொருட்களை ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சகம், ஸ்பெயினில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய செயற்கைக்கோள் மையம் மற்றும் உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட கையெறி குண்டுகளை தயாரிக்கும் ஆயுத தொழிற்சாலை ஆகியவற்றிற்கு அனுப்பியிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    • இறுதி போட்டியில் தைபே வீரரிடம், தமிழக வீரர் தோல்வி.
    • இந்த தொடரில் இதுவரை வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது வீரர் சங்கர் முத்துசாமி.

    சாண்டேன்டர்:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, தைபே வீரர் குவோ குவான் லின்னை எதிர்கொண்டார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியின் 21-14, 22-20 என்ற கணக்கில் சங்கர் தோல்வியடைந்தார். இதன் மூலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் அவரது கனவு தகர்ந்தது. இந்த தொடரில் வெள்ளப்பதக்கம் வென்ற நான்காவது இந்திய வீரர் என்ற பெருமை அவர் பெற்றுள்ளார். 


    இதற்கு முன்னர் இந்தியா சார்பில் அபர்ணா போபட் (1996), சாய்னா நேவால் (2006) மற்றும் சிரில் வர்மா (2015) ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தனர். எனினும் சாய்னா மட்டுமே கடந்த 2008 ஆண்டு உலக ஜூனியர் பேட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • அரையிறுதி போட்டியில் தாய்லாந்து வீரரை தோற்கடித்தார்.
    • 2016 ஆண்டுக்கு பிறகு இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர்.

    சாண்டேன்டர்:

    19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டின் சாண்டேன்டர் நகரில் நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி போட்டி ஒன்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமி, உலக தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பனிட்சாபோன் தீரரட்சகுலுடன் மோதினார்.

    இதில் 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சங்கர் முத்துசாமி தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியின் மூலம், 2016க்கு பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய பேட்மிண்டன் வீரர் என்ற பெருமையை சங்கர் முத்துசாமி பெற்றார்.

    முன்னதாக கடந்த 2008 ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    • அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கவனிக்க போவதாக தகவல்.
    • அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.

    மேட்ரிட்:

    ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் பணிகளை கவனிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

    நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்பிய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ஸ்பெயின் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்பெயின் நாட்டில் 2வது கட்டமாக வெப்ப அலை வீசி வருகிறது.
    • சுவாச கோளாறு, இதய நோயால் பாதிக்கப் பட்டவர்களே அதிகம் உயிரிழப்பு.

    மாட்ரிட் :

    ஸ்பெயின் நாட்டில் தற்போது உச்சகட்ட கோடை காலம் நிலவி வருகிறது. இந்த கோடையில் கடந்த ஜூன் மாதம் 11ந் தேதி முதல் ஒரு வாரம் முதல் கட்ட வெப்ப அலை வீசியது. 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையில் 829 பேர் இதில் சிக்கி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தற்போது அந்நாட்டில் 2வது கோடை வெப்பஅலை வீசி வருகிறது. ஜூலை 10 ந் தேதி தொடங்கிய கடந்த 19ந் தேதிவரை பதிவான வெப்பம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1047 ஆக உயர்ந்துள்ளது.

    உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயதிற்கு உட்பட்டவர்கள். சுவாச கோளாறு மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் உயிரிழந்தாக ஸ்பெயின் வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் பீ ஹெர்வெல்லா தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
    • மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது.

    பாரிஸ்:

    ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தநிலையில், தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    கோடை வெப்பம் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தீ பரவி வரும் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் இருந்து சுமார் 14,000 பேர் நேற்று வெளியேற்றப்பட்டனர். அங்கு 1,200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர். 10000 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருக்கும் காட்டுத்தீயில், மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

    • இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர் 2 இரண்டு கோல்கள் அடித்தார்.
    • 9-12வது இடங்களுக்கான போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.

    எஸ்டாடி டெர்ரசா:

    15-வது மகளிர் உலக கோப்பை ஆக்கிப் போட்டிகள் ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகின்றன.  ஸ்பெயினின் எஸ்டாடி டெர்ரசா நகரில் நேற்று நடைபெற்ற 9-12வது இடங்களுக்கான போட்டியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டது.

    இதில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் நவ்நீத் கவுர் 2 கோல்களும், தீப் கிரேஸ் எக்கா ஒரு கோலும் அடித்தனர். ஜப்பான் தரப்பில் யூ அசாய் ஒரு கோல் போட்டார்.

    முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை 3-2 என்ற கோல் கணக்கில்  வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. 

    • எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளதாக நேட்டோ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
    • ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் பேச்சு

    மாட்ரிட்:

    நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது. சைபர் தாக்குதல்கள் முதல் பருவநிலை மாற்றம் வரை, பெரும் அதிகாரப் போட்டி மற்றும் எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நேட்டோ அமைப்பை ரஷியா மற்றும் சீனா கடுமையாக சாடி உள்ளன. எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், எந்த பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம், என ரஷிய அதிபர் புதின் எச்சரித்தார். நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என சீனா குற்றம்சாட்டி உள்ளது.

    ரஷிய அதிபர் புதினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்தார்.

    ×