என் மலர்
பாகிஸ்தான்
- டாக்டர்கள் அவரை 10 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
- லாகூர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கில் ஆஜராக சக்கர நாற்காலியில் வந்தார்.
லாகூர்:
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் (வயது 70) கடந்த நவம்பர் மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் காலில் காயம் அடைந்தார். அதில் இருந்து மெதுவாக குணமடைந்து வந்த அவர், தன் மீதுள்ள வழக்குகளில் ஜாமீனை நீட்டிப்பதற்காக கோட்டுகளில் நேரில் ஆஜராகி வருகிறார். 2 நாட்களுக்கு முன்பு அவர் லாகூர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கில் ஆஜராக சக்கர நாற்காலியில் வந்தார்.
அப்போது அங்கு நின்ற கூட்டத்தினர் அவரை நெருக்கித் தள்ளியதில் மீண்டும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக அவரது கட்சியினர் நேற்று குற்றம் சாட்டினர். பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறி உள்ளனர். டாக்டர்கள் அவரை 10 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து இம்ரான்கான் தரப்பில் ஐகோர்ட்டில் ஒரு முறையீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் "தனக்கு எதிராக 3-வது படுகொலை முயற்சி (கோர்ட்டு சம்பவம்) நடந்துள்ளது. எனவே எனது பொது வெளிப்பாட்டைத் தவிர்ப்பதற்காக தனக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். வழக்குகள் அனைத்தும் அரசியலுக்காக புனையப்பட்டவை" என்று கூறி உள்ளார்.
- கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. மசூதிகள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ் தான் எல்லையில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்க தலைவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் தளபதி அப்துல் ஜபா ஷா கொல்லப்பட்டார். மேலும் இரண்டு தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர். மேலும் சட்ட அமலாக்க முகவர் மதக்குழுக்களை மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 336 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் 337 ரன்கள் எடுத்து வென்றது.
ராவல்பிண்டி:
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 336 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 129 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் சாட் பவுஸ் அரை சதமடித்து 51 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். கேப்டன் லாதம் 98 ரன்னில் வெளியேறினார்.
பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் கடந்த ஆட்டத்தைப் போலவே சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் 65 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பாகிஸ்தான் 48.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 2-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.
- சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 500 வெற்றி கண்டுள்ளது.
- 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 500 வெற்றி கண்ட மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.
இந்த வரிசையில் 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 539 வெற்றிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 288 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 291 ரன்கள் எடுத்து வென்றது.
ராவல்பிண்டி:
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 2-2 என சமனிலையில் முடிந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 115 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் வில் யங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 86 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ராப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பகர் சமான் சிறப்பாக ஆடி சதமடித்து 117 ரன்னில் வெளியேறினார். இமாம் உல் ஹக் 60 ரன்னிலும், பாபர் அசாம் 49 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ரிஸ்வான் 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆட்ட நாயகன் விருது பகர் சமானுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 193 ரன்கள் எடுத்தது.
- அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 98 ரன்கள் எடுத்தார்.
ராவல்பிண்டி:
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தானும், 3வது போட்டி முடிவில்லாமலும், 4வது போட்டியில் நியூசிலாந்தும் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 98 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இப்திகார் அகமது 36 ரன்னும், இமாத் வாசிம் 31 ரன்னும் எடுத்தனர்.
நியூசிலாந்து சார்பில் டிக்னர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் 4 விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்து நியூசிலாந்து திணறியது.
அடுத்து இறங்கிய சாப்மேன் அதிரடியாக ஆடினார். அவருடன் ஜோடி சேர்ந்த நீஷம் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-2 என சமன் செய்தது நியூசிலாந்து அணி.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது சாப்மேனுக்கு அளிக்கப்பட்டது.
- உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார்.
- படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் (பயங்கரவாத எதிர்ப்பு துறை) நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும், அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமா அல்லது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கூறினார்.
மேலும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார்.
படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளும் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தெரிவித்தார்.
- இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
- கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்லாமாபாத் :
பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்தது.
இதனையடுத்து இந்திய சேனல்களை ஒளிபரப்புவதை நிறுத்துமாறும், மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய வழங்குவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
லாகூர்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லோத்ரன் மாவட்டம் துன்யாபூர் நகரில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. பின்னர் சறுக்கிய லாரி, சாலையோரம் உள்ள குடிசைகள் மீது பாய்ந்தது. குடிசைகளில் வசித்தவர்களில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடலை மீட்டதுடன், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
- 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் கணவாய் அருகே டோர்காம் நெடுஞ்சாலையில் லாரிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த 20 லாரிகள் மண்ணுக்குள் புதைந்தன.
இந்த நிலச்சரிவில் சிக்கி ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சில லாரிகளில் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
- முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது.
- கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். அவர் 49 பந்தில் 64 ரன் எடுத்தார்.
லாகூர்:
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது டி20 போட்டி லாகூரில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. கேப்டன் டாம் லாதம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 49 பந்தில் 64 ரன்னும், டேரில் மிட்செல் 33 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து, விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இப்திகார் அகமது, பஹீம் அஷ்ரப் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது.
இப்திகார் அகமது அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 24 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் அவுட்டானார். இதனால் நியூசிலாந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து சார்பில் நீஷம் 4 விக்கெட்டும், மில்னே, ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் உள்ளது.
- கடவுளை அவமதித்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ, நபிகள் நாயகத்திற்கு எதிராகவோ பேசுவோர் மீது கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், மத நிந்தனை செய்ததாக சீன நாட்டவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைபர் பாக்துன்க்வா மாகாணம் அப்பர் கோகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர்மின் நிலையத்தில் சீன நாட்டைச் சேர்ந்த டியான் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் கடவுளை அவமதித்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று தொழிலாளர்கள் வாராந்திர தொழுகைக்கு சென்றபோது அவர் அவதூறான கருத்துக்களைக் கூறியதாக கூறப்படுகிறது. சரியாக வேலை நடக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலாளர் டியானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து டியான் கைது செய்யப்பட்டு, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடத்தக்கது.






