என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார்.
    • ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார்.

    ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக் கட்சி பெரும்பான்மை இழந்ததையடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (64) தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக சனே டகாய்ச்சி பதவியேற்றதை தொடர்ந்து அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    அதனை தொடர்ந்து ஜப்பான் பாராளுமன்ற கீழவையில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளை பெற்று சனே டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து மேலவையில் நடைபெறும் ஓட்டெடுப்பிலும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதால் ஜப்பானின் புதிய பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்தே, ஜப்பான் நாட்டின் 104-வது பிரதமராக அவர் பதவி ஏற்க உள்ளார். இதன்மூலம் ஜப்பான் அரசியல் வரலாற்றில் பதவியேற்க உள்ள முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை சனே டகாய்ச்சி பெறுகிறார்.

    ஜப்பானின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் டகாய்ச்சி, மறைந்த பிரிட்டிஷ் பிரதமர் மார்கெரட் தாட்சரை தமது ரோல் மடலாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா காயம் காரணமாக காலிறுதியில் விலகினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, ரொமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டின் உடன் மோத இருந்தார்.

    ஆனால் இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரொமேனியா வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, நெதர்லாந்தின் சூசன் லாமென்ஸ் உடன் மோதினார்.

    காலில் காயத்தால் அவதிப்பட்ட போதும் சிறப்பாக ஆடிய ஒசாகா 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
    • ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஜப்பானின் நவோமி ஒசாகா, சக நாட்டு வீராங்கனையான சோனோபே வாக்னா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஒசாகா 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, மொனாக்கோவின் ஹியூகோ நைஸ்-பிரான்சின் ரோஜர் வாஸ்லின் ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய ஹியூகோ நைஸ்-ரோஜர் வாஸ்லின் ஜோடி 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது. போபண்ணா ஜோடி தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், காஸ்பர் ரூட்டுடன் மோதுகிறார்.

    • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இதில் ரோகன் போபண்ணா ஜோடி காலிறுதியில் வெற்றி பெற்றது.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.

    இதில் சிறப்பாக ஆடிய போபண்ணா ஜோடி 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • ஆளுநர் தேர்தலில் 2ஆம் பிடித்த நிலையில், மேல்சபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
    • தோல்வி விரக்தியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென பதில் கொடுத்து வருகிறது. தகவல் பெறுவதற்காகவே ஏ.ஐ. பயன்படுத்தி வந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கட்சி ஏ.ஐ.-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.

    தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.

    The Path to Rebirth என் கட்சி கடந்த ஜனவரியில் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஆவார். அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதிக்கிறது.

    2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.

    எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது. கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
    • இன்றைய போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    டோக்கியோ:

    உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் இன்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்று நடந்தது. இதில் ஏ பிரிவில் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

    பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே சிறப்பாக செயல்பட்டார்.

    84.50 மீட்டர் தொலைவை கடந்து ஈட்டியை வீசினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில், அவர் தனது முதல் வாய்ப்பில் 84.85 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.

    இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறியுள்ளார்.

    • மனம் உடைந்த சடோமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் விடுப்பில் சென்றார்.
    • நீண்ட காலம் கோமா நிலையில் இருந்த அவர், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (வயது 25) என்ற இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.

    முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை அவர் சந்தித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரை, நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய் விசாரணைக்கு அழைத்தார். அப்போது அவரை 'நாய்' என்ற பொருளில் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சடோமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் விடுப்பில் சென்றார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் தற்கொலைக்கு முயன்றார். அவருடைய பெற்றோர் சடோமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர், சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். நீண்ட காலம் கோமா நிலையில் இருந்த அவர், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக அவருடைய பெற்றோர், தங்கள் மகளின் இந்த நிலைக்கு காரணம் அவர் வேலை பார்த்த நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும்தான் என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த டோக்கியோ மாவட்ட கோர்ட்டு, இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.90 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அழகு சாதன உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய், தனது பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதையடுத்து அவருக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் மிட்சுரு சகாயும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சடோமியின் குடும்பத்தினரிடம் அந்த நிறுவனம் மன்னிப்பும் கோரியது.

    • ஜப்பானில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
    • இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர்.

    டோக்கியோ:

    உலகிலேயே வயதானவர்கள் அதிகம் வசிக்கும் நாடு ஜப்பான். அங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ம் தேதி முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முதியோர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

    1963-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு தொடங்கியது. அப்போது 100 வயதானவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருந்தது. அதன்படி, இந்த ஆண்டுக்கான புள்ளி விவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் 100 வயதானவர்களின் எண்ணிக்கை சுமார் 1 லட்சமாக அதிகரித்துள்ளது. அவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.

    இந்த ஆண்டில் மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். அவர்களுக்கு பிரதமர் கையால் வாழ்த்து மடல், பரிசுத்தொகை மற்றும் வெள்ளிக்கோப்பை ஆகியவை முதியோர் தினமான நாளை வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டகாமரோ புகோகா கூறுகையில், உலகின் மற்ற பகுதிகளில் சாப்பிடும் உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இதற்கு மாற்றாக மீன், காய்கறி போன்ற ஆரோக்கியமான உணவுகளை ஜப்பானிய மக்கள் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். நடைபயிற்சியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால்தான் மற்ற நாடுகளை விட ஜப்பானிய முதியவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர் என்றார்.

    ×