என் மலர்tooltip icon

    ஜப்பான்

    • சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
    • அனைத்து சீன பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஜப்பான் அரசு கூறியது.

    டோக்கியோ:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவித்தார்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • ஜப்பானில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
    • இறப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது.

    டோக்கியோ :

    ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதே வேளையில் இறப்புகள் அதிகம் இருப்பதால் அங்கு மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு அந்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 604 பிறப்புகளும், 14 லட்சத்து 39 ஆயிரத்து 809 இறப்புகளும் பதிவாகின. இந்த நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.

    அதன் ஒரு பகுதியாக குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யென் (சுமார் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம்) மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த மானியத்தை 80 ஆயிரம் யென் (சுமார் ரூ. 49 ஆயிரம்) உயர்த்தி 5 லட்சம் யென் (சுமார் ரூ.3 லட்சம்) ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த தகவலை அந்நாட்டின் நிதி மந்திரி கட்சுனோபு கட்டோ தெரிவித்தார்.

    • ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
    • கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது. இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். பறவை காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக மாகாணம் முழுவதிலும் சுமார் 3 லட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

    இதே போல் கோஹிமா மாகாணத்திலும் பறவை காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜப்பானில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருவதும் இதுவரை 33 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • ஜாக் மா திடீரென மாயமானார்.
    • ஜாக் மா பொதுவெளியில் தோன்றாமல் போனார்.

    டோக்கியோ :

    சீனாவை சேர்ந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் நிறுவனர் ஜாக் மா. இவரது நிறுவனத்தின் மீது அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஜாக் மா கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷாங்காய் நகரில் நடந்த ஒரு வர்த்தக மாநாட்டில் சீன அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    இந்த சம்பவத்துக்கு பின் ஜாக் மா திடீரென மாயமானார். பல மாதங்கள் அவர் பொதுவெளியில் தோன்றாமல் போனார். அதை தொடர்ந்து சீன அரசு அவரை கைது செய்ததாகவும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின.

    எனினும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் 100 ஆசிரியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஒரு சந்திப்பில் ஜாக் மா தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே சமயம் அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்தது. இந்த நிலையில் ஜாக் மா ஜப்பானில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் கடந்த 6 மாதங்களாக தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜாக் மாவுக்கு நெருக்கமானவர்கள் வழங்கிய தகவல்களை மேற்கோள்காட்டி பிரபல ஜப்பான் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

    ஜாக் மா ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் தங்கியிருப்பதாகவும், அவர் அடிக்கடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு சென்றுவருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

    • வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்தது.
    • வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்தார்.

    டோக்கியோ:

    கம்போடியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தென் கொரிய அதிபருடனும், ஜப்பான் பிரதமருடனும் முத்தரப்பு உச்சி மாநாடு நடத்தி, பேசியபோது, அவர்கள் வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

    இதற்கு பதிலடி தருகிற வகையில், நேற்று காலை வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறுகிய அளவிலான ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பான் பிரத்தியேக பொருளாதார மண்டலம் பகுதியில் அந்த ஏவுகணை பறந்தது போய் விழுந்தது என்று கடலோர காவல்படை கூறியது. இது ஜப்பானுக்கு அருகே, அதாவது வடக்கு ஹொக்கைடோவில் உள்ள ஒரு தீவில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவில் உள்ளது.

    இந்நிலையில், வடகொரியாவுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியாவுக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவித்தோம். இதுபோன்ற செயல்களை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்

    • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளது.
    • ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தோபாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது

    டோக்கியோ:

    சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை நிலைகுலையச் செய்கின்றன. சில நேரங்களில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.

    இந்நிலையில், ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தோபாவில் இன்று மதியம் 1.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தோபாவில் இருந்து 84 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 அலகாக பதிவாகியிருந்தது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    • மகளிர் ஒற்றையர் பிரிவில் திருவள்ளூரைச் சேர்ந்த மனீஷா தங்கப் பதக்கம் வென்றார்.
    • கலப்பு இரட்டையர் பிரிவில் ஈரோட்டைச் சேர்ந்த ருத்திக் ரகுபதி வெண்கலம் வென்றார்.

    டோக்கியோ:

    மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.

    இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை மனீஷா ராமதாஸ் உடன் ஜப்பான் வீராங்கனை மாமிகோ டொயோட்டா மோதினார். இதில் ஜப்பான் வீராங்கனையை 21-15, 21-15 என வீழ்த்தி மனீஷா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

    இதேபோல், கலப்பு இரட்டையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ருத்திக் ரகுபதி 2 வெண்கல பதக்கங்களை வென்றார்.

    மேலும் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

    • வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து கண்காணித்து வருவதாக தென் கொரியா தகவல்
    • அமெரிக்காவுடனான ஒருங்கிணைப்பில் தயார் நிலையில் தென் கொரிய ராணுவம்.

    டோக்கியோ:

    அமெரிக்கா, தென்கொரியா கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த 1-ந்தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. 


    இந்நிலையில் வட கொரியா மீண்டும் இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதன் கிழக்குக் கடல் பகுதியில் ஏவியது. அந்த ஏவுகணைகள் ஜப்பான் கரையோர பகுதியில் கீழே விழுந்ததாக அந்நாட்டு கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இதையடுத்து விமானங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவுறுத்தி உள்ளார்.

    சந்தேகத்திற்கிடமான ஏவுகணைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்யவும், எந்தவொரு தகவலையும் மக்களுக்கு விரைவாகத் தெரிவிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். வடகொரியா ஏவுகணை வீச்சு தொடர்வதால் ஜப்பானில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    வடகொரியா ஏவுகணை வீச்சு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தயார் நிலையில் இருப்பதாகவும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வட கொரியாவின் அச்சுறுத்தலால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. 

    • ஜப்பான் நாட்டின் மீது பறந்த ஏவுகணையால் ஜப்பான் அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
    • வடகொரியா இன்று ஏவியது பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட இந்த ஆண்டு நாட்டின் 23 வது ஏவுகணை சோதனை ஆகும்.

    வாஷிங்டன் வட கொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியது, இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது. இதை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்தது.

    2017ம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வட கொரிய ஏவுகணை இதுவாகும். அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவப் பயிற்சிக்கு மத்தியில், 10 நாட்களில் தென்கொரியாவின் ஏவுகணை வீசப்பட்டு உள்ளது.

    தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் கூறியதகவல்படி, ஏவுகணை வட கொரியாவின் சீனாவுடனான மத்திய எல்லைக்கு அருகிலுள்ள முப்யோங்- ரியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 7:23 மணியளவில் ஏவப்பட்டது. இது பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பானின் தோஹோகு பகுதியில் அதிகபட்சமாக 1,000 கிலோமீட்டர் (621 மைல்) உயரத்தில் 20 நிமிடங்களுக்கு சுமார் 4,600 கிலோமீட்டர்கள் (2,858 மைல்கள்) பறந்து சென்றதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்த ஏவுகணை சோதனையை கடுமையாக கண்டித்ததோடு, வட கொரியாவின் சமீபத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை "மோசமானது" என கூறினார்.

    ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜப்பான் கூறியது. வடகொரியாவில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவுகணை ஏவப்படுவதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த விரும்புவதால், எதிர் தாக்குதல் திறன் உள்ளிட்ட எந்த விருப்பங்களையும் நிராகரிக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா கூறினார்.

    தென் கொரியா தனது இராணுவத்தை மேம்படுத்துவதாகவும் நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் கூறி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் ஒரு அறிக்கையில் கூறியதாவது;- ஜப்பான் மீது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தும் வடகொரியாவின் "ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" முடிவை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த நடவடிக்கை ஸ்திரமின்மை மற்றும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை வடகொரியா அப்பட்டமாக புறக்கணிப்பதை காட்டுகிறது என கூறி உள்ளார். வடகொரியா இன்று ஏவியது பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் உட்பட இந்த ஆண்டு நாட்டின் 23 வது ஏவுகணை சோதனை ஆகும்.

    • அமெரிக்காவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஏவுகணை சோதனை நடத்தியது.
    • வடகொரியா இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

    டோக்கியோ:

    தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

    வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 30-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளது.

    இந்நிலையில், வட கொரியா மேலும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது என ஜப்பான் நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அப்பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவை விட்டு நேற்று வெளியேறிய சில மணி நேரங்களுக்குள் வடகொரியா 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது குறிப்பிடத்தக்கது.

    • டோக்கியோ விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
    • முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே (63), ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. ஷின்சோ அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் பாசமிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையே, ஜப்பான் அரசு ஏற்பாடு செய்திருந்த ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். அதன்பின், இருநாட்டு தலைவர்களும் பேசினார்கள்.

    முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் நினைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து அவர் ஜப்பான் பிரதமரை சந்தித்தார்.

    இந்நிலையில், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

    • டோக்கியோ விமானநிலையத்தில் பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார்.
    • ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை நினைவுகூர்கிறது இந்தியா.

    ஜப்பானில் நீண்டகாலமாக பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது63). கடந்த ஜூலை மாதம் இவர் தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதையொட்டி இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கபட்டது. அபேயுடன் பிரதமர் மோடி நட்புணர்வை பேணி வந்தார். பிரதமர் மோடி வெளியிட்டு இருந்த இரங்கல் செய்தியில் பாச மிகு நண்பர் என குறிப்பிட்டு இருந்தார்.

    இந்தநிலையில் ஷின்சோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சிக்கு இன்று ஜப்பான் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதை ஏற்று பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டு சென்றார். டோக்கியோ விமானநிலையத்தில் அவரை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷி வரவேற்றார். பின்னர் இருநாட்டு தலை வர்களும் பேசினார்கள்,

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இந்த சந்திப்பு நடந்தது. கடந்த முறை ஜப்பான் வந்த போது நீண்ட நேரம் அபேயுடன் உரையாடினேன். இந்தியா அவரை இழந்து தவிக்கிறது. அவர் இல்லாதததை இந்தியா உணர்கிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்து உள்ளார்.

    ×