என் மலர்
இத்தாலி
- கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
- விமானங்கள் பாதுகாப்பு நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது.
தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
3,330 மீட்டர் (10,925 அடி) உயரம் கொண்ட இந்த எரிமலை வருடத்திற்கு பல முறை வெடித்து, சாம்பலை மத்திய தரைக்கடல் தீவில் கரைகிறது. கடைசியாக பெரிய அளவில் எரிமலை வெடிப்பு கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலால், பிரபல சுற்றுலாத் தலமான கேடானியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் பாதுகாப்பு நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை ரத்து செய்யப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- இந்தத் தொடரில் எலீனா ரிபாகினா சாம்பியன் பட்டம் வென்றார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினாவும், உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினாவும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ரிபாகினா எளிதில் வென்றார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டில் 1-0 என ரிபாகினா முன்னிலை பெற்றிருந்தபோது கலினினாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
கலினினா போட்டியில் இருந்து வெளியேறியதால் ரிபாகினா இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் ரூனே இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, நார்வே வீரர் காஸ்பர் ரூட்டுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை காஸ்பர் ரூட் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஹோல்ஜர் ரூனே அடுத்த இரு செட்களையும் வென்றார்.
இறுதியில், ரூனே 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் முன்னணி வீரரான ஜோகோவிச்சை தோல்வி அடையச் செய்தவர் ஹோல்ஜர் ரூனே என்பது குறிப்பிடத்தக்கது.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் உக்ரைன் வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ரஷியாவின் குடர்மெடோவா, உக்ரைனின் அன்ஹெலினா கலினினாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் கலினினா முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை குடர்மெடோவா 7-5 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை கலினினா 6-2 என கைப்பற்றினார்.
இறுதியில், கலினினா 7-5, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதேபோல் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா, லாத்வியாவைச் சேர்ந்த ஆஸ்டா பென்கோவுடன் மோதினார். இதில் ரிபாகினா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.
- மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ரோம் :
இத்தாலி நாட்டின் வடக்கு பகுதியான எமிலியா ரோமக்னாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கனமழை காரணமாக அங்கு ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. எனவே அங்கு தயார் நிலையில் இருந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஆயிரக்கணக்கான மக்களை அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். எனினும் இந்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பலர் மாயமானதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியி செர்பிய வீரர் ஜோகோவிச், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை ரூனே வென்றார். இதற்கு பதிலடியாக ஜோகோவிச் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரூனே வென்றார்.
இறுதியில், ரூனே 6-2, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
முன்னணி வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து இத்தாலியன் ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதேபோல, மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், செர்பியாவின் லாஸ்லோ ஜெரியுடன் மோதினார். இதில் காஸ்பர் ரூட்
6-1, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசிய வீராங்கனை டோனா வெகிக்குடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, செக் வீராங்கனை கரோலினா முசோவாவுடன் மோதினார். இதில் படோசா
6-4, 7-6, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் குடியரசு வீராங்கனை மார்கெடா வாண்ட்ரூசோவாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோசனுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் பேபியன் 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்றார். உலகின் நம்பர் 2 வீரரான கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் இத்தாலியில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரிபாகினா, ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ரஷியா வீராங்கனை அன்னா கலின்ஸ்கயாவுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ரிபாகினா 4-3 என முன்னிலை பெற்றிருந்த போது அன்னா கலின்ஸ்கயா காயத்தால் விலகினார். இதனால் ரிபாகினா 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோவுடன் மோதினார். இதில் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- வாகனங்கள் தீப்பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
- தீயணைப்பு படையினர் வாகனங்களில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மிலன்:
இத்தாலியின் மிலன் நகரின் மத்திய பகுதியில் இன்று குண்டு வெடித்ததுபோன்ற பயங்கர சத்தம் கேட்டது. சாலையோரம் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு வேன் வெடித்து சிதறி தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீப்பிடித்தன. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வாகனங்களில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. வேன் பற்றி எரியும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது.






