என் மலர்tooltip icon

    இத்தாலி

    • இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி தனது 86 வயதில் காலமானார்
    • தனது சொத்துக்களை காதலி உள்பட பலருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்

    ஐரோப்பிய நாடான இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் கடந்த மாதம் காலமானார். இறந்தபின் அவரது உயில் வாசிக்கப்பட்டபோது, அவர் தனது சொத்துக்களில் ரூ. 905,86,54,868 (100 மில்லியன் யூரோ) தனது காதலியான மார்டா ஃபாசினா (33) என்பவருக்கு விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

    பெர்லுஸ்கோனியின் சொத்து மதிப்பு, இந்திய பண மதிப்பில் சுமார் 54 ஆயிரம் கோடி ரூபாய் (6 பில்லியன் யூரோ) என மதிப்பிடப்பட்டுள்ளது.

    பெர்லுஸ்கோனி தொடங்கிய ஃபோர்சா இடாலியா (Forza Italia) கட்சியின் துணைத் தலைவரான ஃபாசினாவுக்கு, மார்ச் 2020-ல் பெர்லுஸ்கோனியுடன் தொடர்பு ஏற்பட்டது.

    இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், பெர்லுஸ்கோனி மரணப்படுக்கையில் அவரை தனது மனைவி என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், 2018 பொதுத்தேர்தலிலிருந்து இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

    பெர்லுஸ்கோனியின் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் அவரது இரண்டு மூத்த குழந்தைகளான மெரினா மற்றும் பியர் சில்வியோவால் நிர்வகிக்கப்படும். நிர்வாகப் பதவிகளை வகிக்கும் இவர்கள் ஏற்கனவே குடும்ப பங்கில் 53% பங்கு வைத்திருக்கின்றனர்.

    இது மட்டுமன்றி தனது சகோதரர் பாவ்லோ என்பவருக்கு சுமார் 900 கோடி ரூபாய் (100 மில்லியன் யூரோ) மற்றும் அவரது கட்சியை சேர்ந்த செனட்டரும், மாஃபியா கும்பலுடனான தொடர்புக்காக சிறைவாசம் அனுபவித்தவருமான மார்செல்லோ டெல்'உட்ரி என்பவருக்கு சுமார் 270 கோடி ரூபாய் (30 மில்லியன் யூரோ) விட்டுச்சென்றிருக்கிறார்.

    ஊடக அதிபர், தொழிலதிபர் மற்றும் பிரதம மந்திரி என பல தசாப்தங்களாக இத்தாலிய பொது வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய கோடீசுவரரான பெர்லுஸ்கோனி, ஜூன் 12 அன்று தனது 86-வது வயதில் ரத்த புற்று நோயினால் காலமானார்.

    அவரது உயில் சென்ற வாரம் அவரது ஐந்து குழந்தைகள் மற்றும் பிற சாட்சிகள் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. உயிலில், அவர், "எனது மொத்த சொத்தில், பங்குகள் (Share) அனைத்தையும் எனது குழந்தைகள் மெரினா மற்றும் பியர் சில்வியோ ஆகியோருக்கு சமமாக விட்டுச்செல்கிறேன்.

    மீதமுள்ள அனைத்தையும் எனது 5 குழந்தைகளான மெரினா, பியர் சில்வியோ, பார்பரா, எலியோனோரா மற்றும் லூய்கி ஆகியோருக்கு சமமாக கொடுக்கிறேன். மிகுந்த அன்புடன், உங்கள் தந்தை" என எழுதியிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    பெர்லுஸ்கோனி 3 முறை இத்தாலியின் பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் உள்ளே டிரைவர் படுத்துக்கொண்டு இயக்குவது வீடியோவில் தெரிகிறது.
    • காரின் மேல் பகுதி மட்டும் வெளியே தெரியும்.

    தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து விட்ட இந்த காலக்கட்டத்தில் கார் தயாரிப்பிலும் பல்வேறு புதுமைகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இத்தாலியில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார் தொடர்பான வீடியோ டுவிட்டரில் வெளியாகி பயனர்களை வியப்படைய செய்துள்ளது.

    அந்த காரில் டயர்கள் கிடையாது. தரையில் பாம்பு போல ஊர்ந்து செல்லும் இந்த கார் உலகின் மிகச்சிறிய கார் என சமூக வலைத்தள பயனர்களால் அழைக்கப்டுகிறது. இந்த காரை உருவாக்கும் முழு செயல்முறையும் யூடியூப் சேனலான Carmagheddon-ல் காட்டப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ளே டிரைவர் படுத்துக்கொண்டு இயக்குவது வீடியோவில் தெரிகிறது.

    காரின் மேல் பகுதி மட்டும் வெளியே தெரியும். ஆனால் கண்ணாடியின் கீழ் பகுதி, என்ஜின் இருக்கும் முன் பகுதி மற்றும் பொருட்கள் வைக்கப்படும் பின் பகுதி என அனைத்தும் காணவில்லை. மேலும் டயர் கூட இல்லாமல் இயங்கும் இந்த காரை மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த கார் எப்படி இயங்குகிறது என்பது குறித்தும் வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வடிமைத்த வாலிபர்களுக்கு சமூக வலைத்தள பயனர்கள் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • போப் பிரான்சிஸ் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார்.
    • செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார்.

    வாடிகன்சிட்டி :

    குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்த போப் பிரான்சிஸ் (வயது 86) ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    இந்த அறுவை சிகிச்சைக்கு பின் வேகமாக குணம் அடைந்த அவர், கடந்த 16-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வாடிகன் திரும்பினார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், நேற்று வரை அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. எனினும் நேற்று அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் தனது வழக்கமான ஞாயிறு உரையை நிகழ்த்தினார். இதில் கலந்து கொண்ட ஏராளமானோர், போப் ஆண்டவரை கைதட்டி வாழ்த்தினர். அப்போது ஆஸ்பத்திரியில் இருந்தபோது தனக்கு உதவிய மற்றும் தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு போப் ஆண்டவர் நன்றி தெரிவித்தார்.

    போப் ஆண்டவர் தனது உரையில் கிரீஸ் நாட்டு கடற்பகுதியில் சமீபத்தில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார். மேலும் உகாண்டாவில் பள்ளிக்கூடத்தில் நடந்த தாக்குதலையும் கண்டித்தார்.

    • போப் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.

    ரோம் :

    போப் பிரான்சிஸ் குடல் அடைப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த 7-ந் தேதி இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அவரது உடல்நலம் வேகமாக தேறி வருவதாக டாக்டர்கள் கூறினர்.

    இந்தநிலையில் ஆபரேஷன் முடிந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பினார். அவர் முன்பை விட தற்போது நலமுடன் உள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் செர்ஜியோ அல்ச்பீரி தெரிவித்துள்ளார்.

    • போப் பிரான்சிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து பேசும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.
    • ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் செல்கிறார்.

    போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும், அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என்றும் வாடிகன் அறிவித்தது.

    போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புரூனி, போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். சிக்கல்கள் எதுவுமின்றி போப் ஆண்டவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருவதாக கூறிய புரூனி, மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து வருகிற நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், போப் பிரான்சிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்து பேசும் புகைப்படத்தை வாடிகன் வெளியிட்டுள்ளது.

    அதில், போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அறையின் அருகே உள்ள குழந்தைகளுக்கான புற்றுநோய் வார்டை வீல் சேரில் சென்று பார்வையிட்டு குழந்தைகளிடம் பேசியது தெரிந்தது.

    டிஸ்சார்ஜ்க்கு பிறகு ஜூலை மாதம் முழுவதும் போப் ஓய்வில் இருக்க உள்ளார். அதன்பிறகு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு போர்ச்சுகல் செல்லவுள்ளார். தொடர்ந்து, ஆகஸ்டு 31ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை மங்கோல்யா செல்ல திட்டமிட்டுள்ளார்.

    • போப் பிரான்சிஸ் குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார்.
    • கடந்த 7-ந் தேதி அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    ரோம் :

    போப் பிரான்சிஸ் (வயது 86) குடல் அடைப்புகளாலும், வலியாலும் அவதிப்பட்டு வந்தார். எனவே அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 3 மணி நேரம் குடல் அறுவை சிகிச்சை நடந்தது.

    அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதாகவும், அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார் என்றும் வாடிகன் அறிவித்தது. போப் ஆண்டவரின் உடல்நிலை குறித்த விவரங்களை நேற்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட வாடிகன் செய்தி தொடர்பாளர் மாட்டியோ புரூனி, போப் பிரான்சிஸ் இரவில் நன்றாக ஓய்வெடுத்ததாகவும், பகலில் பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.

    சிக்கல்கள் எதுவுமின்றி போப் ஆண்டவர் தொடர்ந்து உடல் நலம் தேறி வருவதாக கூறிய புரூனி, ஆஸ்பத்திரியில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து வருகிற நாட்களில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

    • ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், அதன் தொடர்புடைய நுரையீரல் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றார்.
    • முதன்முதலாக 1994இல் பிரதமராக பதவியேற்ற பிறகு 2011ம் வருடம் வரை நான்கு அரசாங்கங்களை வழிநடத்தினார்.

    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தனது 86வது வயதில் காலமானார். பாலியல் வழக்குகளிலும், ஊழல் குற்றச்சாட்டுகளிலுமிருந்து மீண்டு வந்த அவர் மிலன் நகரின் சான் ரஃபேல் மருத்துவமனையில் இறந்ததாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    ஏப்ரல் மாதம் நாட்பட்ட ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், அதன் தொடர்புடைய நுரையீரல் நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெற்றார். அதன்பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    பெர்லுஸ்கோனி, முதன்முதலாக 1994-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். 2011ம் வருடம் வரை நான்கு அரசாங்கங்களை பிரதமராக வழிநடத்தினார்.

    செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு, இத்தாலியின் மேலவையான செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பிரதம மந்திரி ஜியோர்ஜியா மெலோனியின் கீழ் கூட்டணியில் இணைந்த மைய-வலது ஃபோர்ஜா இத்தாலிய கட்சியின் தலைவராக பெர்லுஸ்கோனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கப்பலில் 22 பேர் இருந்துள்ளனர்
    • மீட்கப்பட்ட கப்பல் இத்தாலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது

    துருக்கி சரக்கு கப்பல் ஒன்று பிரான்ஸ்க்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களுடன் கப்பலுக்குள் நுழைந்தனர். கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 பேரை மிரட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர்.

    அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் கப்பலில் மறைந்து இருக்கும் நபர்களை போலீசார தேடிவருகின்றனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர்.

    நப்லேஸ் பகுதியின் தெற்கு பகுதியில் இருக்கும் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களில் சிலர் ஆயுதமேந்தி இந்த செயலில் ஈடுபட்டதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

    கப்பலை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதை இத்தாலி பாதுகாப்பு மந்திரி உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தினார்.
    • இவரின் செய்கையை கவனித்து வந்த சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கில்டாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு எம்பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகன் ஃபெடரிகோவை அழைத்து வந்திருந்தார். பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.

    குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்பி-யை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    "அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்," என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி பதவியேற்றார். பெண் எம்பிக்கள் தங்களது கைக்குழந்தைகளை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி கடந்த நவம்பர் மாதம் வழங்கப்பட்டது. பெண் பிரதமர் பதவி வகிக்கும் இத்தாலியின் எம்பிக்களில் பெரும்பாலானோர் ஆண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • போப் பிரான்சிஸ் குடலில் தொடர்ச்சியாக வலியை அனுபவித்து வருகிறார்.
    • லேப்ரோடமி என்பது அடிவயிற்றைத் திறந்து செய்கிற அறுவை சிகிச்சை ஆகும்.

    ரோம் :

    போப் பிரான்சிஸ் (வயது 86), தள்ளாத வயதிலும், உடல் நலக்குறைவுக்கு மத்தியிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் 'சியாட்டிகா' நரம்பு வலியால் அவதிப்பட்டு வருவதால் சக்கர நாற்காலியையும், வாக்கரையும் ஓராண்டு காலத்துக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்.

    இந்தநிலையில், நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து நேற்று அவர் வாடிகன் செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் தன்னைக் காண வந்த பொதுமக்களைச் சக்கர நாற்காலியில் வந்து சந்தித்து அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

    அதையடுத்து அவர் ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வாடிகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் பல நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டியதிருக்கும் என அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகின்றன.

    இளம் வயதிலேயே போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் ஒரு நுரையீரலில் சிறிய பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    போப் ஆண்டவருக்கு நடக்க உள்ள குடல் அறுவை சிகிச்சை பற்றி வாடிகன் கூறும்போது, "போப் பிரான்சிஸ் குடலில் தொடர்ச்சியாக வலியை அனுபவித்து வருகிறார். அவருக்கு குடல் அடைப்பு பிரச்சினைக்காக லேப்ரோடமி மற்றும் அடிவயிற்று சுவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது" என தெரிவித்துள்ளது.

    லேப்ரோடமி என்பது அடிவயிற்றைத் திறந்து செய்கிற அறுவை சிகிச்சை ஆகும். இந்த அறுவை சிகிச்சை, அவரது பிரச்சினைகளை அறுவை சிகிச்சை நிபுணர் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும்.

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் முந்தைய வடுவில் இருந்து உருவான குடலிறக்க பிரச்சினையால் அவதியுறுவதாகவும் தெரிய வந்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு போப் ஆண்டவர், இதே ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவரது பெருங்குடலில் 33 செ.மீ.அளவுக்கு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது. அப்போது அவரது பெருங்குடலில் வீக்கம் ஏற்பட்டதுடன், குறுகலாக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது. அவர் 10 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார்.

    இப்போதும் அவர் பல நாட்கள் ரோம் ஜெமெல்லி ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
    • சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது.

    வாடிகன்:

    இத்தாலி வாடிகன் நகரில் உலக பிரசித்தி பெற்ற புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள்.

    இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் தேவாலயத்துக்கு வந்தார். திடீரென அவர் உக்ரைனில் நடந்து வரும் போரை எதிர்ப்பதாக கூறி தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். இதைபார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் அந்த வாலிபர் தனது உடலில் கைவிரல் நகத்தால் கீறி ஆவேசத்துடன் சத்தம் போட்டார். தனது முதுகு பகுதியில் உக்ரைனில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பெயிண்டால் எழுதி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி அறிந்ததும் இத்தாலி போலீசார் அங்கு விரைந்து வந்து நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது. வாலிபரின் நிர்வாண போராட்டத்தை சுற்றுலா பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    • அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது.
    • வழக்கமான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை.

    வாடிகன் சிட்டி :

    போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86) இந்த வாரம் முழுவதும் நெருக்கமான பணி அலுவல்களை கொண்டிருந்தார். குறிப்பாக நேற்று முன்தினம் இத்தாலி நாட்டு ஆயர்கள் மாநாடு, பள்ளி அறக்கட்டளை சந்திப்பு மற்றும் பல்வேறு உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

    அவருக்கு நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்விலேயே இருந்தார். எனவே வழக்கமான நிகழ்ச்சிகளை அவர் ரத்து செய்து விட்டார். இதில் முக்கியமாக, வழக்கமான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை. அவரது உடல் நலம் குறித்து மேலதிக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    ×