என் மலர்tooltip icon

    இத்தாலி

    • களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்துவருகிறது.
    • இந்தத் தொடரில் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோத உள்ளார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் டாமி பால் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரரான மெத்வதேவ் வெளியேறினார். ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்ஸ் வீரர் முல்லருடன் மோதினார்.

    இதில் முல்லர் 3-6 என முதல் செட்டை இழந்தார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய முல்லர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரூப்லெவ் வெளியேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் 1 வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
    • மற்றொரு போட்டியில் பெலாரசின் சபலென்கா காலிறுதிக்கு முன்னேறினார்.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான போலந்தின் இகா ஸ்வியாடெக், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கெர்பரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் காலிறுதியில் மேடிசன் கீஸ் உடன் மோத உள்ளார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் சபலென்கா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை 4-6, 6-1, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    ரோம்:

    களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலியின் பிரான்செஸ்கோ பாஸாரோ-மேட்டியோ அர்னால்டி ஜோடியுடன் மோதியது.

    இதில் ஆரம்பம் முதலே போபண்ணா ஜோடி அபாரமாக செயல்பட்டது. இறுதியில், போபண்ணா ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி ஜோடியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான செர்பியாவின் ஜோகோவிச், சிலி நாட்டின் அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் மோதினார்.

    இதில் தொடக்கம் முதலே டபிலோ அதிரடியாக ஆடினார். இதனால் டபிலோ 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    • எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர்.
    • 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலியில் உள்ள பிரபல சுற்றுலா நகரமாக வெனிஸ் விளங்குகிறது. ஏரிகளால் சூழ்ந்த இந்த நகரம், அதன் இயற்கையான அமைப்புக்கும், கலை கட்டுமானத்திற்கும் பெயர் போனதாக விளங்குகிறது. பல்வேறு கால்வாய்களை உள்ளடக்கிய இந்த நகரில் படகு போக்குவரத்து சேவைவே முக்கிய போக்குவரத்து அம்சமாக உள்ளது.

    எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நகர நிர்வாகம் கட்டண நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.

    வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க ஒருநாள் கட்டணமாக 447 ரூபாய் (5 யூரோ) வசூலிக்கப்பட உள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும்.

    உக்ரைன் மீது ரஷியா மூன்றாவது ஆண்டாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது உக்ரைனில் உள்ள கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரம் மிகப்பெரிய மின்சார உற்பத்தி நிலையம் மீதான தாக்குதலை உக்ரைனால் எதிர்கொள்ள முடியாமல் போனது.

    நேற்று 8 மாடி கட்டடம் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இத்தாலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது உக்ரைன்- ரஷியா போர், இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் ஈரான் தாக்குதல் ஆகியவை குறித்து ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் ஜி7 நாடுகளில் வெறியுறவுத்துறை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது "உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு சிஸ்டங்களை உடனடியாக வழங்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் இந்த போர் ரஷியாவுக்கு சாதமாக சாய்ந்து விடும். ரஷியாவில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை தாக்கி அழிக்க பேட்ரியாட் ஏர் பாதுகாப்பு ஏவுகனை சிஸ்டம்ஸ் இல்லை என்றால், உக்ரைனில் உள்ள மின்சார் சிஸ்டங்கள் அழிக்கப்படும். எந்தவொரு நாடும் வீடுகளில், தொழிற்சாலைகளில், போரின் முன்னணி களத்தில் மின்சாரம் இல்லாமல் சண்டையிட முடியாது" என்றார்.

    இந்த பேச்சுவார்த்தையின் போது இத்தாலி வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனியோ டஜானி "உக்ரைன் தோல்வியடைந்தால் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் புதின் அமரமாட்டார்" என்றார். மேலும், ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார தடைக்கு அழைப்பு விடுத்தார்.

    • இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • ல் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ரோம்:

    இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி, வாடகைத் தாய்மை முறை மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார். தலைநகர் ரோமில் இளைஞர்களுக்கான மாநாடு நடந்தது.

    இதில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது, "வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்" என்றார்.

    ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.

    • கடவுள் ஆணையும் பெண்ணையும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார்.
    • அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னைக் கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது.

    பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், பாலின கொள்கை மனித கண்ணியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என வாடிகன் தெரிவித்துள்ளது.

    மேலும், கருக்கலைப்பு மற்றும் கருணைக்கொலை ஆகியவை என அனைத்தும் மனித வாழ்க்கைகான கடவுளின் கொள்கையை மீறுவதாகும்.

    கடந்த ஐந்து மாதங்களாக பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு, போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கண்ணியம் தொடர்பாக 20 பக்கம் கொண்ட கண்ணியம் தொடர்பான அறிவிப்பை வாடிகனின் கோட்டுபாடு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

    பாலின கோட்பாடு அல்லது ஒரு பாலினத்தை சேர்ந்தவர் இன்னொரு பாலினத்தை சேர்ந்தவராக மாற முடியும் என்பதை தொடர்ந்து கடுமையாக நிராகரித்து வருகிறது. கடவுள் ஆணையும் பெண்ணையும் உயிரியல் ரீதியாக வேறுபட்ட, தனித்தனியான உயிரினங்களாகப் படைத்தார். அதை மாற்ற முயற்சிக்கக் கூடாது அல்லது தன்னைக் கடவுளாக்க முயற்சிக்கக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எந்தவொரு பாலின மாற்ற தலையீடு, விதிப்படி கருத்தரித்த தருணத்திலிருந்து நபர் பெற்ற தனித்துவமான கண்ணியத்தை அச்சுறுத்துகிறது.

    • கடந்த 2022-ல் குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது.
    • சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ரோம்:

    ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுதொடர்பாக அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி கடந்த 2022-ல் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் 6.7 ஆக இருந்தது. ஆனால் 2023-ல் இது 6.4 சதவீதமாக சரிந்துள்ளது. இதன்மூலம் சுமார் 14 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அதேசமயம் வெளிநாடுகளில் இருந்து இத்தாலிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி அங்கு குடியேறி உள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 53 லட்சமாக உயர்ந்துள்ளது. எனினும் மக்கள்தொகை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அவர்கள் உதவியாக இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் கூறுகின்றன.

    • 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார்.
    • முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஸ்டர் தவக்காலத்தையொட்டி போப் பிரான்சிஸ் 12 பெண் கைதிகளின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து அவர்களது பாதங்களை கழுவியதை நினைவு கூறும் வகையில் இந்த சடங்கு நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. ரோம் நகரில் உள்ள சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவினார். பின்னர் கைதிகளின் பாதங்களுக்கு அவர் முத்தமிட்டார். வழக்கமாக இதற்கு முன்பு போப் பதவி வகித்தவர்கள் வாடிகன் தேவாலயத்தில் தான் இதனை கடைபிடிப்பார்கள்.

    ஆனால் இதனை மாற்றி போப் பிரான்சிஸ் முதன் முறையாக ஜெயிலில் இந்த புனித சடங்கை நடத்தி உள்ளார். இதேபோல முன்பு முதியோர் இல்லங்கள், மருத்துவனைகளிலும் இந்த நிகழ்ச்சி கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×