என் மலர்
இஸ்ரேல்
- தரைவழி தாக்குதலுக்கு முன் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம்
- மேற்கு கரை பகுதியிலும் தாக்குதலை நடத்தியுள்ளது
இஸ்ரேலுக்கும்- பாலஸ்தீனத்தின் காசா முனைப் பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையடுத்து போர் பிரகடனத்தை இஸ்ரேல் அறிவித்தது.
காசா மீது தொடர்ந்து 16-வது நாளாக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். காசாவுக்குள் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இஸ்ரேல் எல்லையில் வீரர்களை குவித்து உள்ளது.
இதையடுத்து வடக்கு காசாவில் இருந்து பொது மக்களை தெற்கு காசாவுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. லட்சக்கணக்கானோர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில் காசா மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. தரைவழி தாக்குதலுக்கு முன்பாக காசாவில் வான்வழி தாக்குதல்களை முடுக்கிவிட போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படைகளின் செய்தித்தொடர்பாளர் டேனியல் ஹகரி கூறும்போது, காசாவில் பாதுகாப்பு ஆட்சியை மாற்றுவதற்கான, மூன்று கட்ட நடவடிக்கையின் 2-ம் கட்டத்துக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
தரைவழி தாக்குதலுக்கு முன்பாக சிறந்த சூழ்நிலையை உருவாக்க காசா மீதான தாக்குதல்கள் முடுக்கி விடப்பட உள்ளது. சிறந்த சூழ்நிலையில் அடுத்த கட்ட போரில் நுழைய இருக்கிறோம்.
வான்வழி தாக்குதல்களை அதிகரிக்கிறோம். இதன் மூலம் காசாவுக்குள் நுழையும் போது ஆபத்தை குறைக்கிறோம். நாங்கள் காசா பகுதிக்குள் நுழைவோம், ஹமாஸ் அமைப்பினரின், உள்கட்டமைப்புகளை அழிப்பதற்காக செயல்பாட்டு மற்றும் தொழில்முறை பணியை தொடங்குவோம் என்றார்.
இதன் மூலம் காசா மீதான வான்வழி தாக்குதல் தீவிரமடையும் சூழல் உள்ளது.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் அங்கு இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளது.
இந்த நிலையில் மேற்கு கரையில் உள்ள மசூதி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள அல்-அன்சார் மசூதி மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மசூதியில் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினர் தஞ்சமடைந்து இருந்தனர். அவர்கள் தாக்குதல்கள் நடத்த திட்டமிடுவதற்கு அங்கு இருந்தனர் என்றும், இதனால் மசூதி வளாகத்தின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
- பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த இரண்டு அமெரிக்க பெண்களை ஹமாஸ் விடுவித்தது
- இந்த நடவடிக்கையால் காசா மீதான தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என இஸ்ரேல் பதில்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, 200-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது.
அதன்பின் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே பிணைக்கைதிகள்- கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்ள கத்தார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், மறுபக்கம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பிடித்துவைத்துள்ள பிணைக்கைதிகளில் தாய் மற்றும் மகள் என இரண்டு அமெரிக்கர்களை ஹமாஸ் விடுவித்தது.
இந்த நிலையில் மேலும் இரண்டு பேரை அதன்அடிப்படையில் விடுவிக்க தயாராக இருந்தோம். ஆனால், இஸ்ரேல் அவர்களை பெற மறுத்துவிட்டது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதேவேளையில், ஹமாஸின் பொய் பிரசாரத்தை நாங்கள் குறிப்பிடமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன மக்களை மீட்க அனைத்து வழிகளிலும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
- மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர்.
- புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்த சூழலில், வடக்கு காசாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர். புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.
அல் ஆலி மருத்துவமனையில் நடந்த தாக்குதலை போன்று வேறு சம்பவம் நடந்து விடாமல் தடுக்கவும், அல்-குத்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பாதுகாக்க, அவர்களை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில், சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் என அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி ஆடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அது 2 பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் உரையாடல் என கூறப்படுகிறது. அதில், மருத்துவமனை மீது ஏவப்பட்ட ராக்கெட் அவர்களுடைய குழுவினருடையது என அவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறும்போது, முதல்கட்ட விசாரணையின்படி, மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. ஆனால் அது தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்தன என தெரிய வந்துள்ளது என்று கூறினார். இந்த தாக்குதலில், 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தனர் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
- 7-ந்தேதி தாக்குதலின்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது ஹமாஸ்
- அமெரிக்காவைச் சேர்ந்த இருவரை ஹமாஸ் விடுவித்ததை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது
ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அதோடு பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் சிலரை கொலை செய்ததாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
மற்றவர்கள் நிலைமை என்ன? எனத் தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இருவரை நேற்று விடுதலை செய்துள்ளனர். இந்த தகவலை இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த தாய் மற்றும் இளம் வயது பெண் எனத் தெரியவந்துள்ளது. இருவரிடமும் ஜோ பைடன் டெலிபோன் மூலம் பேசியுள்ளார். அப்போது, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை ரிலீஸ் செய்ய கத்தார், இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருந்து, அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் பிணைக்கைதிகள் இருவரை ரிலீஸ் செய்த போதிலும், காசாவின் மத்திய பகுதியில் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
- ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.
தொடர்ந்து 14-வது நாளாக மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.
தொடர்ந்து கூறும்போது, லெபனான் பகுதியில் இருந்து ஏவப்பட்ட 9 ராக்கெட்டுகளில் 4 ராக்கெட்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியது. இஸ்ரேல் படைகளை நோக்கி, பீரங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் லெபனானில் இருந்து ஏவப்பட்டன என இஸ்ரேல் படைகள் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து, லெபனானின் எந்த பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் ஏவப்பட்டதோ, அந்த பகுதியை இலக்காக கொண்டு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன.
பீரங்கிகளை பயன்படுத்தி ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பும் தாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆளில்லா விமானம் உதவியுடன் பயங்கரவாத பிரிவு ஒன்றையும் தாக்கி அழித்தோம் என இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
- சவுதி- இஸ்ரேல் உறவுகளை கெடுக்கவே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
- பயங்கரவாத தாக்குதலில் ஈரானின் பங்கை, வரும் நாட்களில் வெளியிடுவோம்.
இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் அமைப்புக்கும் போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், " ஹமாஸ், ஹிஸ்புல்லாவிற்கு பணமும், ராணுவ உதவியும் கொடுப்பது ஈரான் தான்.
பயங்கரவாத தாக்குதலில் ஈரானின் பங்கை, வரும் நாட்களில் வெளியிடுவோம்.
சவுதி- இஸ்ரேல் உறவுகளை கெடுக்கவே இந்த தாக்குதல் நடந்துள்ளது" என்றார்.
- இரண்டாம் உலக போரின் இறுதி கட்டத்தை சர்ச்சில் "இருண்ட காலம்" என கூறினார்
- இறையாண்மையை காக்க இஸ்ரேலுடன் இங்கிலாந்து துணை நிற்கும்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகிய இருவருக்கும் இடையேயான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இரண்டாம் உலக போர் தீவிரமாக நடைபெற்ற காலகட்டத்தில் தனது நாட்டின் இறையாண்மையை குறித்து முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்த அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், "இது இருண்ட காலம்" என வர்ணித்ததை குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, தற்போதைய நிலையை "இது இஸ்ரேலின் இருண்ட காலம் மட்டுமல்ல; உலகத்தின் இருண்ட காலம்" என கூறியுள்ளார்.
நேதன்யாகுவுடனான சந்திப்பு நிறைவடைந்ததும் பேசிய ரிஷி சுனக் தெரிவித்ததாவது:
இஸ்ரேல் தற்போது அதன் வரலாற்றில் முதல்முறையாக இருண்ட காலகட்டத்தை (darkest hour) சந்தித்து வருகிறது. தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு நிச்சயம் உண்டு. சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தன் தேச இறையாண்மையை காக்க இஸ்ரேல் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் இங்கிலாந்து துணை நிற்கும். ஓரு நீண்ட போருக்கு இஸ்ரேலுக்கு நீடித்த ஆதரவு தேவைப்படுகிறது. உங்களுடன் இந்த இருண்ட காலத்தில் நண்பனாக துணை நிற்பதில் பெருமையடைகிறேன். உங்களுடன் ஒன்றுபட்டு நிற்கிறோம். நீங்கள் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும்; நீங்கள் வெல்வதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்.
இவ்வாறு ரிஷி சுனக் தெரிவித்தார்.
இஸ்ரேல் சுற்றுப்பயணம் முடிந்ததும் ரிஷி சுனக், சவுதி அரேபியா செல்ல உள்ளார்.
- போர் தீவிரமாக 13-வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது
- ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு ஈரான் நிதியுதவி செய்கிறது
கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை மிருகத்தனமாக கொன்று குவித்தனர். இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர்.
உலகையே அதிர வைத்த இந்த கொடூர சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.
மிகவும் தீவிரமாக 13-வது நாளாக இப்போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், இப்போர் குறித்து இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினரான ஷாரன் ஹெஸ்கல் (Sharren Haskel) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
பல இஸ்ரேலியர்களை ஹமாஸ் மிருகத்தனமாக கொன்றுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டிலிருந்து காசா பகுதியை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும். நாம் நம்பும் மதிப்பு வாய்ந்த பண்புகளின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இது. சுதந்திர உலகத்தின் ஜனநாயகத்திற்கும் பயங்கரவாத தீமைக்குக்கும் இடையே நடக்கும் போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
பயங்கரவாத எனும் பாம்பின் தலையாக ஈரான் செயல்படுகிறது. அந்த தலையான ஈரானை நாம் வெட்ட வேண்டும். ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இரு அமைப்புகளுக்கும் ஈரான் நிதியுதவி செய்து வருகிறது. அனைத்து இஸ்ரேலியர்களும் ஒற்றுமையாக உள்ளனர்.
அனைத்து கட்சியினரும் அரசாங்கத்தின் பக்கம் நிற்கிறோம். பாலஸ்தீன பொதுமக்களும் ஹமாஸ் அமைப்பினரால் துன்பப்படுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரை காத்து கொள்ள மனித கேடயமாக பொதுமக்களை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பை முடித்து புறப்பட்டார்
- இன்றும் என்றும் உங்களுடன் இருக்கிறோம் என்றார் சுனக்
கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை மிருகத்தனமாக கொன்று குவித்தனர். இதில் குழந்தைகள், பெண்கள், முதியவர்களும் அடங்குவர்.
உலகையே அதிர வைத்த இந்த கொடூர சம்பவத்திற்கு பழி வாங்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பல நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.
மிகவும் தீவிரமாக 13-வது நாளாக இப்போர் தொடர்ந்து நடந்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். அவர் பயணம் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் சென்றுள்ளார்.
இஸ்ரெலின் டெல் அவிவ் நகர் வந்திறங்கிய ரிஷி சுனக் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார். முன்னதாக இஸ்ரேல் அதிபரையும், ஹமாஸ் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்தித்தார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் உள்ள தனது அதிகாரபூர்வ கணக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில் ரிஷி சுனக், தெரிவித்திருப்பதாவது::
இன்றும் என்றும், நானும் இங்கிலாந்தும் உங்களுடன் இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு என்றும் நாங்கள் எதிராக இருக்கிறோம். தனது குழந்தைகள் தன் கண் முன்னாலேயே வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படுவது பயங்கரமான, தாங்க முடியாத துன்பம். தங்களின் உயிருக்கு உயிரானவர்களை பயங்கரவாதிகளிடம் பறி கொடுத்தவர்களை சந்தித்து பேசினேன். நாங்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகளை பத்திரமாக மீட்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம். நான் அதிபர் ஐசக் ஹெர்சக்கை சந்தித்தேன். ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலின் போது இஸ்ரேலில் உள்ள இங்கிலாந்து மக்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பிற்காக அவரிடம் நன்றி தெரிவித்தேன். காசாவில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் பேசினேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ரேச்சல் பயங்கரவாதிகளை கண்டு சிறிதும் அஞ்சவில்லை
- ரேச்சல் அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ, குக்கி பிஸ்கெட் வழங்கி உபசரித்தார்
கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய பெரும் தாக்குதலில் பல இஸ்ரேலியர் கொல்லப்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் தப்பித்துள்ளனர்.
உலகையே உலுக்கிய அத்தாக்குதல் நடைபெற்ற அன்று இஸ்ரேலில் ஒரு வீட்டிற்குள் 5 ஹமாஸ் அமைப்பினர் நுழைந்தனர். அங்கு ரேச்சல் எட்ரி மற்றும் அவர் கணவர் டேவிட் வசித்து வந்தனர். இருவரையும் அவர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்தனர்.

ஒரு கையில் கையெறி குண்டும், மறு கையில் துப்பாக்கியையும் வைத்து கொண்டு அவர்கள் இருவரையும் கொன்று விட போவதாக மிரட்டினர்.
இந்நிலையில் வெளியே சென்றிருந்த காவல்துறை அதிகாரியான அவரது மகன் அவர்கள் வீட்டு வாசல் வரை வந்து விட்டார். உள்ளே பயங்கரவாதிகள் இருப்பதனால் மகன் வந்தால் நேர கூடிய ஆபத்தை குறித்து எச்சரிக்க நினைத்த ரேச்சல், அவரை உள்ளே வர விடாமல் சைகை மூலமாக கையை மென்மையாக உயர்த்தி 5 விரல்களை விரித்து காட்டினார்.
காவல் அதிகாரியான அவர் மகன் உடனடியாக சுதாரித்து கொண்டார். தொலைவில் சென்று தனது மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அவரை ஒதுங்கி நிற்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தி பணய கைதிகளை மீட்கும் கமாண்டோவினர் வரவழைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தங்களை மீட்கும் அதிரடி படையினர் வரும் வரையில் ரேச்சல் அந்த பயங்கரவாதிகளுடன் பேசி கொண்டிருந்தார். அவர்களுக்கு ரேச்சல், காபி மற்றும் குக்கீஸ் பிஸ்கட் ஆகியவை வழங்கி உபசரித்தார். மேலும் பேச்சை வளர்க்க அரபி மொழி குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்து நேரத்தை கடத்தினர்.
அதிரடி படையினர் திட்டமிட்டபடி வந்து அந்த பயங்கரவாதிகளை கொன்று இத்தம்பதியினரை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து ரேச்சல் தெரிவித்ததாவது:
அவர்கள் பசியுடனிருந்தனர். பசி இருந்தால் கோபம் அதிகரிக்கும். எனவே நான் அவர்களை உபசரித்து முதலில் பசியாற்றினேன். அவர்கள் என் குழந்தைகளை குறித்து கேட்கும் போது பேச்சை மாற்றுவேன். நீரிழிவு நோய்க்கான இன்சுலின் செலுத்தி கொள்ள வேண்டும் என அடிக்கடி சொல்லி கொண்டிருந்தேன். அவர்களுக்கு குடிநீர், கோக் ஜீரோ அனைத்தும் வழங்கினேன். எனக்கு நீங்கள் அரபி மொழியை கற்று கொடுத்தால் நான் உங்களுக்கு எங்கள் ஹீப்ரூ மொழியை கற்று தருவதாக கூறி சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டிருந்தோம். இது ஒரு வாழ்வா சாவா பிரச்சனை என நான் நன்கு உணர்ந்திருந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், இஸ்ரேலின் போர் வியூகம் குறித்து பேசவும், இப்போர் அண்டை நாடுகளுக்கு பரவுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசிக்கவும், நேற்று இஸ்ரேலுக்கு அவசர பயணமாக வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கி தப்பித்தவர்களை சந்தித்தார்.
தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த ஹமாஸ் பயங்கரவாதிகளை கண்டு அஞ்சாமல் அவர்களை சாதுரியமாக கையாண்டு தப்பித்த 65 வயதான ரேச்சல் எட்ரியை சந்தித்த பைடன் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை கட்டியணைத்து அவரது அறிவு கூர்மையை பாராட்டினார்.
சுமார் 20 மணி நேரம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் தம்பதியர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.
- ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேலுக்கு பயணம் செய்வார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அதன்படி ஜோ பைடன் நேற்று இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து டெல் அவிவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் ஜோ பைடனும், பெஞ்சமின் நேதன்யாகுவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது ஜோ பைடன் பேசுகையில், "நேற்று காசாவில் உள்ள ஆஸ்பத்திரி மீது குண்டு வீசப்பட்ட சம்பவத்தை அறிந்து நான் மிகுந்த வருத்தமும் ஆத்திரமும் அடைந்தேன். நான் பார்த்தவற்றின் அடிப்படையில், இந்த தாக்குதல் மற்ற குழுவினரால் நடத்தப்பட்டதாக தெரிகிறது, நீங்கள் (இஸ்ரேல்) அல்ல" என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஒரு எளிய காரணத்திற்காக இங்கே இருக்கிறேன். அமெரிக்கா எங்கு நிற்கிறது என்பதை இஸ்ரேல் மக்களும் உலக மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) ஐ.எஸ். பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள். தீமைகள் மற்றும் அட்டூழியங்களைச் செய்துள்ளனர். இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையானதை அமெரிக்கா உறுதி செய்யும்.
உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற ஜனநாயக நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும் ஒரு மதிப்பு உள்ளது. மேலும் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை இஸ்ரேல் தரப்பிலும் பார்க்கிறார்கள்" என்றார்.
மேலும் அவர் காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா வழங்கும் என அறிவித்தார்.
அதன் பின்னர், போர் நடந்து வரும் மிகவும் இக்கட்டான சூழலில், இஸ்ரேலுக்கு வந்து தனது ஆதரவை தெரிவித்ததற்கு ஜோ பைடனுக்கு பெஞ்சமின் நேதன்யாகு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தற்போது நடந்து வரும் போர் நாகரிக சக்திகளுக்கும் காட்டுமிராண்டித்தனத்தின் சக்திகளுக்கும் இடையிலான போர் என விவரித்தார். மேலும் இஸ்ரேலின் பின்னால் அணிதிரளுமாறு இதர நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதனிடையே போரில் இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு அரபு நாடுகளின் ஆதரவைக்கோர ஜோ பைடன் திட்டமிட்டிருந்தார். அதற்காக, ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மானில் அரபு நாடுகளின் தலைவர்களுடன் உச்சி மாநாட்டை நடத்த இருந்தார்.
ஆனால், காசா ஆஸ்பத்திரி மீது நடந்த குண்டுவீச்சின் காரணமாக ஜோ பைடன் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதை ஜோர்டான் வெளியுறவு மந்திரி அய்மன் சபாதி தெரிவித்தார்.
இதனிடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் உதவும் வகையில் மேலும் சில போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்ப அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கப்பல்களை அமெரிக்கா அனுப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் காசா பகுதிக்கு குறைந்த அளவிலான மனிதாபிமான உதவிகளை வழங்க எகிப்தை அனுமதி அளிக்க இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
- போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
- குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசிய ஜோ பைடன், இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய நெதன்யாகு, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை விட ஹமாஸ் மிகவும் மோசமானது என்றார். கடந்த 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு 1,400 இஸ்ரேல் மக்களை கொன்றுள்ளது என்றும், குழந்தைகளைக் கூட ஹமாஸ் அமைப்பினர் கொலை செய்துள்ளனர் என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.
மேலும் இந்த கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு வருகை தந்து தனது ஆதரவை தெரிவித்ததோடு, இஸ்ரேல் மக்களுக்கு என்றும் துணை நிற்போம் என உறுதியளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிப்பதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.






